இளம்பிள்ளை,பெருமாக் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை.
விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம் அக்டோபர் 20,25 ஆகிய நாட்களில் இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் சிறப்பாக நடைபெற்றது.766 சிறுவர் சிறுமியரும் மற்றும் பல ஆசிரியர்களும் பலனடைந்தனர்.
தமிழக அரசின் அரசுப்பள்ளிகளில் அதுவும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 455,311 பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இடம் பெற்று காணப் படுவதென்பது மிகவும் அரிது இக்காலத்தில்.
அப்படிப்பட்ட பெருமையை உடையதாக இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் விளங்குகிறது.
ஏற்கெனவே நாங்கள் ஒரு முறை இந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்காக பற்களின் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களால் அது ஒத்தி வைக்கப் பட்டது. ஒத்தி வைக்கப் படுகிறது என்றாலே நமது அகராதியில் அது மேலும் சிறப்பாக, செம்மையாக, ஆழமாக ஊடுருவி செய்யப் படும் என்பதே.
இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி , பெருமாக்கவுண்டம்பட்டி தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் அங்கிருந்த கணினி ஆசிரியர் முதற்கொண்டு அனைத்து ஆசிரியப் பெருமக்களும் நன்கு ஒத்துழைத்தனர்
எமது விநாயகா பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபிஜான் அவர்கள் அனுமதித்ததன் பேரில், சமுதாயத் துறைத் தலைவர் டாக்டர்.என்.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நாங்கள் சிறந்த 15 மருத்துவர்கள் கொண்ட குழுவினருடன் அந்தப் பள்ளிகளுக்கு 2 நாள் சென்று இந்த முகாமை நிறைவு செய்தோம்.
பள்ளிப் பிள்ளைகளுக்கு பற்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் சிறுவர் சிறுமியர்க்கு:டாக்டர் துர்கா, டாக்டர் துளசிமணி மற்றும் டாக்டர்கள் அஜின்ஸ், வீரமணிகண்டன்,விநீஸ்,கீர்த்தனா,அனுபமா,அபிதா, அனிதா, அஞ்சலி,மற்றும் சிறுவர் பிரிவை சார்ந்த 2 மருத்துவர்கள் ஆகியோர் அக்கறையுடன் சேவைப்பணி செய்தனர்.
டாக்டர் அபிதா, டாக்டர் துளஸிமணி ஆகியோர் பிள்ளைகளுக்கு பற் பாதுகாப்பு பராமரிப்பு ஆலோசனைகளும் வழங்கினர்.மேலும் சுமார் 125 குழந்தைகளை தேர்வு செய்து உடனடி மருத்துவம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெருமாக்கவுண்டம்பட்டி பள்ளியில் வரும் குழந்தைகள் தினத்தன்று கல்லூரி, அழகான சிரிப்பு, வினாடிவினா, பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல்,பொருத்தமான விடை தேர்வு செய்தல் இன்னபிற போட்டிகளை நடத்துகிறது அதில் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டது முகாம் அலுவலர் மூலம்.
மேலும் இது போன்ற சேவைப் பணி தொடர ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரும் முதல்வரைப் பற்றியும் , துறைத்தலைவர் பற்றியும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை மருத்துவர்களின் சேவைப்பணி பற்றியும் பாராட்டி நிகழ்வை ஒருங்கிணைத்தேன் வாய்ப்பளித்த ஆசிரியர்களுக்கு சில சொற்களில் நன்றி செய்தும்...
முகாம் அறிக்கையாக இந்தப் பதிவு இருக்கிறது
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment