Sunday, October 2, 2016

காந்தி ஜெயந்தி கொண்டாட்டமா திண்டாட்டமா? கவிஞர் தணிகை

காந்தி ஜெயந்தி கொண்டாட்டமா திண்டாட்டமா? கவிஞர் தணிகை


Image result for mahatma gandhi
மகாத்மாவின் 148 வது பிறந்த தினம். மை லைப் ஈஸ் மை மெசேஜ், பாவர்ட்டி ஈஸ் ஒர்ஸ்ட் பார்ம் ஆஃப்  வாய்லன்ஸ்: எனது வாழ்வுதான் நான் தரும் செய்தி, ஏழ்மை என்பதுவே வன்முறைகளில் மிகவும் கீழ்த்தரமானது.என்றெல்லாம் சொல்லியவர் எந்த செயலும் கீழ்த் தட்டு மனிதர்க்கு பயனிளிக்கிறதா என்ற கவனத்துடன் செய்யப்பட வேண்டும் என்ற மகான்.

இந்தியாவில் பணத் தாள்களில் மட்டுமே மகாத்மா இருக்கிறார்.எதுக்கு இந்த சாங்கியம் சடங்கு என்பதுதான் தெரியவில்லை. இன்று கிராம சபைக் கூட்டம் கலந்து கொள்ளுங்கள் என பிரதமர் அலுவலகத்திலிருந்து, கிராம அபிவிருத்தி அமைச்சகத்திலிருந்து செல்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப் பட்டு உள்ளது.

ஒரு முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இப்படித்தான் நானும் எனது நண்பர்களில் சிலரும் சென்றோம். பங்கெடுத்துக் கொண்டு எங்களது கருத்துகளை தெரிவித்து வந்தோம். பயனில்லை.

நாடு குடிமக்களை தட்டி விடுகிற கடமையை சரிவரச் செய்கிறது.ஆனால் பொதுமக்களாகிய நாம்தான் எதற்குமே அதற்கெலாம் தயாராகவில்லை.

ஏன் எனில் எதற்கும் தயாராக இருக்க வேண்டியவர்கள்தாம் ஒரு இடத்திற்கு சென்று துணிச்சலுடன் தமது கருத்துகளை சொல்லி வர முடிகிறது. ஏன் எனில் எல்லாமே கட்சிகளுடன், ஆளும் கட்சியுடன்
பிணைந்தபடி இருக்கிறது. ஒரு கருத்து துணிச்சலுடன் வெளிப்படையாக தெரியப்படுத்த ஆரம்பித்தால் அவர் சமுதாயத்தில் எதிரியாக சித்தரிக்கப் படுகிறார். முரண்பாடுகள் வேறுபாடுகள் இருப்பார் கூட நண்பராக இருக்க முடியும் என்ற சிறிதளவுடனான நாகரீகம் கூட இங்கு நிலவாத போது, இங்கு என்ன செய்ய முடியும்?



ஒரு நாட்டின் பிரதமராக இருந்த தூங்கு மூஞ்சி பிரதேச உணர்வுடையாரை எல்லாம் சேர்த்துக் கொண்டு உண்ணாநோன்பு என்ற பேரில் நடிக்கிறது காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக...மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எவருமே அந்த மாநிலத்தில் மதிக்கவில்லை.

Image result for mahatma gandhi

இந்நிலையில் எமது முதல்வர் செயலற்று இருக்கிறார். இவர் உண்மயிலேயே இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் பேச்சு நிலவுகிறது. 1,உச்ச நீதிமன்ற சொத்து சேர்த்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஒரு புறம், 2, உள்ளாட்சி தேர்தல் மறுபுறம், 3. காவிரி பிரச்சனை ஒரு புறம் என பலவாரியான பிரச்சனை அனைத்துக்கும் ஒரே தீர்வாக உடல் நிலை சரியில்லை என்ற காரணம் பதிலாக இவை எல்லாம் ஒரு வழியான பின்னே ஆமாம் ஒரு வழியான பின்னே நாட்டின் நிலை திரும்பும். எல்லாம் ஒரு வழிப்பாதைதானே? எல்லாருக்கும் மரணம் வரும்தானே...

Image result for mahatma gandhi



வேறு நாளில் இந்த அக்.2, தியாகிகள் தினம் வந்திருந்தால் ஒரு நாளாவது விடுமுறையாவது கிடைத்திருக்கும் என ஒரு அலுவலக தோழர்கள் சலித்துக் கொள்வதும் காதில் விழாமல் இல்லை.

ஒரு மாநிலத்திலிருந்து பக்கத்து மாநிலத்துக்கு எவரும் சென்று வரமுடியவில்லை இந்த சுதந்திர நாட்டில்.கட்டுப் படுத்த முடியாது இனியும் என வெள்ளையர் ஆட்சியை கொடுத்து விட்டு சென்ற நிலையில் பக்குவத்துக்கு வரா மனிதர்களால் நாடு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது ஒழுக்கம் இல்லாமலிருப்பார் எல்லாம் வெற்றி வாகை சூட எத்தகைய சூட்சுமங்கள் எல்லாம் கையளலாம் என  திட்டமிட்டு மக்கள் ஆட்சியை கட்சிகள் என்ற பேரில் கைப்பற்றிக் கொள்கிறார்கள்


Image result for mahatma gandhi

ஜனநாயகம் கேலிக் கூத்தாக இருக்கிறது .இதைப்பற்றி எல்லாம் நேர்மையாக எழுதவும் பேசவும் முடிவதில்லை.வெறும் சடங்காக இருக்கும் மக்களாட்சியில் வாக்குகள் விலைக்கு அல்லது கட்சி சார்ப்பாக போய் நல்லாட்சி வழங்கும் எவருக்கும் வாக்குகள் கிடைப்பதில்லை ஏன் அப்படிப் பட்டார் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் நிலையே இல்லை.

இந்நிலையில் இந்த சடங்குகள் எல்லாம் சலித்து அலுத்துப் போய்விட்டன.

அடுத்து கலாமின் 85 வது பிறந்த தினம் அக்டோபர் 15ல் வருகிறது உலக மாணவர் தினமாக ஐ.நா குறிப்பிட்டபடி...

எல்லாமே சடங்காக மாறும் முன் ஏதாவது செய்தாக வேண்டும்...ஆனால் எங்கள் ஈனஸ்வரம் வெறும் வயிற்றுக்காக , அல்லது குடும்பம் பேண அடங்கி வருகிறது...

எனவே இந்த காந்தியம் வெளி நாடுகளில் கூட சற்று கவனிப்பில் இருக்கிறது . இந்த நாட்டில் சிறு துளியிலும் கவனிப்பில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய நிலை.
Image result for mahatma gandhi


தொடர்பற்று போன ஒரு தத்துவத்துக்கு இனி தங்குமிடம் தேவையா? விழாக்கள் அவசியமா என்பதுதான் எமது கேள்விகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment