காஷ்மோரா தீபாவளிக்கு பம்பர் பரிசு: கவிஞர் தணிகை
காசு இருப்போர் அவசியம் சினிமாத் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய பார்த்து அனுபவித்து மகிழ வேண்டிய பிரும்மாண்டமான படம்..இதைப் பற்றி நிறைய பேச வேண்டி உள்ளது. டெட்லி ஸ்பிரிட் என்ற ஆங்கிலப் படத்தை தமிழில் எடுத்து தெலுங்கிலும் வெளியிட்டு வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள், தீபாவளியன்று காலை எழுந்தவுடன் முதல் விருந்தாக பார்த்து முடித்து விட்டேன். இந்த இணையதளங்கள் தான் எவ்வளவு வசதி ஏற்படுத்தி தருகின்றன எங்கும் நகராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டுவிரும்பிய படங்களை பார்க்க. .
தெலுங்குப் படங்களில் விட்டலாச்சாரியார் என்ற ஒரு மறைந்த இயக்குனர் ஆவி சம்பந்தமான படங்களை எடுத்து புகழ் பெற்றவர். ஜகன்மோகினி போன்ற படங்கள் தமிழிலும் பேர் பெற்றவை. ஆனால் அவை எல்லாம் மிகவும் கீழ்த் தரமான சிந்தனையுடன் இருக்கும்.இந்தப் படம் ஆங்கிலப் படத்துக்கு இணையாக ரிச்சாக வந்திருக்கிறது. கொஞ்சம் மம்மியை நினைவு படுத்துகிறது உருவம் கலைந்து போவதெல்லாம்... எனவே தமிழ், தெலுங்கு இரசிகர்களை கவர்ந்திழுக்க நல்ல கதையை கற்பனையை உலவ விட்டிருக்கிறார்கள்.
இன்றைய காலக் கட்டத்தில் ஆவி தொடர்பான நிறைய படங்கள் தமிழில் வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக சிகரம் தொட்டிருக்கிறது இந்தப் படம் இரு மொழிகளில் இறங்கி இருக்கிறது ஆவி உலக ஆராய்ச்சி விச் கிராப்டிஷம் எனப்படும் துறையில் பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பம் எப்படி ஆவி உலகத்துள் போய் அனுபவிக்கிறது என்று மிகவும் இரசிக்கத் தக்க வகையில் கொடுத்திருக்கிறார்கள். அதில் வழக்கப்படியான ராஜா கதை, பழி வாங்கல் கதை சுருக்கமாக ஆனால் தெளிவாக, கம்பீரமாக செய்திருக்கிறார் கார்த்தி. கொஞ்சம் சந்திரமுகி வேட்டையன், பாஹூபலியை நினைவு படுத்தினாலும் படம் சூப்பர்ப்.
ஆனால் 164 நிமிடங்கள் ஓடக்கூடிய 60 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த தமிழ் படத்தை இயக்குனர் கோகுல் நயம்பட ஒரு துளி நேரம் கூட நேரம் போவது தெரியாமல் தீபாவளி விருந்தாக்கியுள்ளார். very very interesting and time passing thriller.
கார்த்திக்கு இந்தப் படம் ஒரு மைல் கல். காமெடி, வில்லன், கதாநாயகன் என முப்பரிமான ரோல். பின்னி எடுத்து விட்டார். அதனால்தான் தெலுங்கு இரசிகர்கள் தமிழ் இரசிகர்களை விட ஒரு படி அதிகம் என்று ஒரு பேட்டியில் சொன்னார் போலும் தெலுங்கு சினிமா விசுவாசிகள் இந்தப் படத்தை லேசில் விடமாட்டார்கள்.
கலவையான வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம். பட்டிமண்டபத்தில் பெரும்பாலும் முன்பெல்லாம் இருபக்கமும் வாதங்களைக் கேட்டு முடித்து விட்டு எந்தப் பக்கமும் ஒருமித்த தீர்ப்பை தராமல் பொதுவாக சொல்லி முடிப்பது போல... ஆவி உலக ஆராய்ச்சி செய்யும் ஸ்ரீதிவ்யா ஆவி இருக்கிறதா இல்லையா என தடுமாறுவது போல எந்த தீர்வும் தராமல் இருக்கிற இந்த படத்தில் சினிமாத்தனமான நிறைய இருந்தாலும் என் ஜாய் பண்ண நிறைய இருக்கிறது.
https://youtu.be/rQUj5Mf6iiA
http://deccanreport.com/karthi-kashmora-trailer/
பிலாக் மேஜிக் என்று சொல்லப்படும் பில்லி சூனியம், மந்திரம் மாந்திரீகம், ஆவி உலக ஆராய்ச்சி, ஆவி உலகம், ராஜ் நாயக் மன்னர் ஆட்சிக் காலம் ரத்னா தேவி, பலஹீனம் பெண்கள் இப்படி சொல்லப்படுவது ஒரு புறம், விவேக் அப்பாவாக, சந்தானத்தோடு நகைச்சுவையில் ஈடு கொடுத்த ஜாங்ரி மதுமிதா தங்கையாக நடிக்க கார்த்தி படு அமர்க்களப் படுத்துகிறார். பல நடிகர்களை பின்னுக்குத் தள்ளுகிறார் நல்ல மாடுலேஷன் டையலாக் டெலிவரி. முற்றிலும் வித்தியாசமான 3 வேடம், பாஹுபலி நிறைய சிரமப்பட்டு எடுக்க ஆனால் காஷ்மோராவாக சுலபமாக கார்த்தி ஊதித் தள்ளி இருக்கிறார்.
நயன் தாரா கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது ரோலை அவர் சரியாகவே செய்திருப்பதாகச் சொல்லலாம். கிராபிக்ஸ், விசூவல் கம்யூனிகேஷனில் பின்னி இருக்கிறார்கள் முண்டமாக தலை தனியாக ஆவியாக வரும் ராஜ் நாயக், வாழும்போது மொட்டைத் தலை ராஜ் நாயக் எல்லாமே குறை காண முடியாமல் கார்த்தி அசத்தி இதில் நடித்த எல்லாரையுமே ஓவர் டேக் செய்து சினிமாப் பட உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்
கொஞ்சம் அசந்தால் நம்மையும் கார்த்தி இரசிகராக மாற்றி விடுவது போன்ற அசத்தலான நடிப்பு. சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார் பயத்தை போலியை வெளிப்படுத்தும் காஷ்மோராவாக உள்ளீடற்ற வெறும் ஏமாற்றுப் பேர்வழியாய் இருந்தபடியே எப்படி மக்களை கவர்ந்து அவஸ்தைப் பட்டு பேரும் புகழும் அடைகிறார்.
ஒரு பக்கம் பார்த்தால் நகைச்சுவையாய் அந்த பில்லி சூனிய தந்திரங்களை போலி என கேலி செய்கிறார்கள். மறுபக்கம் ஆவி உலக கதை செய்து படத்தை நன்கு நகர்த்துகிறார்கள்.
மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த படங்களில் இது முதலிடம் பெறுகிறது நல்ல பொழுது போக்குப் படம். தாரளமாக நூற்றுக்கு 55 கொடுக்கலாம். பார்க்கும் மக்களை மகிழ்வித்து இருக்கிறார்கள். எல்லாம் மறந்து சிரிக்கலாம். சிந்திக்க நினைப்பவர்களும் ஆவி உலக வாழ்வு பற்றி சிந்தித்து கேள்வி கேட்டுக் கொள்ளலாம்.
எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அளவில் படம் நன்றாக உள்ளே சென்று ஊறி விடுகிறது. கதை நல்ல நிலை. சிறந்த ஒப்பனை.நிறைய பொருட் செலவு அருமையான வசனம் சிரிக்குமளவு. நல்ல தயாரிப்பு, நல்ல பிசிறில்லாத இயக்கம், நல்ல எடிட்டிங், மேலும் விசூவல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் எல்லாமே பாராட்டும்படியாக இருக்கிறது. பாடல்கள் தேவையில்லாத படம். இசை நன்றாகவே இருக்கிறது. கேலிக்கு அளவே இல்லை மெல்லிய நகைச்சுவை படமெங்குமே இழையோடியபடியே இருக்கிறது பெரும் சிறப்பு.சண்டைக் காட்சிகள் எல்லாம் இரசிக்கும்படியாகவே இருக்கிறது
சினிமாவில் நாயகன் வில்லன் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர், நம்பியார், சிவாஜி என்ற காலத்தில் இருந்ததோடு சரி. சத்யராஜ், கமல், ரஜினி, கார்த்தி, இன்றைய நடிகர்கள் எல்லாமே அந்த உண்மை என்ற நிழலாடும் நிலையை மாயையை கிழித்து எல்லாம் நடிப்புதான் என்பதை வெளிப்படுத்தி சிறப்புப் பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் கார்த்தி வில்லனாக, நாயகனாக, ஆவியாக பிசிறில்லாத கதையில் அசத்தி உள்ளார். எடிட்டிங் குழப்பமில்லாமல் 3 கதையை ஒரே கதையில் பிணைத்துள்ளது. நன்றாக புரிகிறது.
பாஹூபலிக்கு கிடைத்த அளவு நிதி இவர்களிடம் கொடுத்தால் அதை விட ஒரு நல்ல கதையில் அதை விட இந்த அணி சிறந்த சினிமாவைத் தர முடியும் என்று சவால் விட்டிருக்கிறது. முகமது அலி சொல்லி அடிப்பாராம் ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என குத்துச் சண்டையில் இத்தனாவது ரவுண்டில் எதிரியை வீழ்த்துவேன் என்பது போல கார்த்திக்கு இந்தப் படம் ஒரு பேர் சொல்லும் ஒரு ஹிட் படம்.
காலை 9 மணிக்கே பார்த்து முடித்தாலும் இப்போதுதான் உங்களிடம் எடுத்து பதிவு செய்ய முடிந்திருக்கிறது. நன்றி வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment