Sunday, October 2, 2016

எம்.எஸ்.தோனி தமிழில்: கவிஞர் தணிகை.

எம்.எஸ்.தோனி தமிழில்: கவிஞர் தணிகை.

Image result for ms dhoni

3 மணி நேரத்துக்கும் மேல் இந்தப் படம் ஓடிக்கொண்டிருப்பதை இன்னும் சிறிது அந்தக் காதல் காட்சிகள்,பாடல் காட்சிகளை இறுக்கி இருந்திருந்தால் இன்னும் சிறந்த படமாகி இருக்கும்.

எம்.எஸ்.தோனியின் வாழ்வு இத்தகையதா என்னும் வியப்படைய வைக்கிறது. கால் பந்து கோல் கீப்பராக விளையாடுவதைப் பார்த்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அவனை மட்டைப் பந்துக்கு அதாங்க கிரிக்கெட்டுக்கு ஆட இன்னொரு பையனை அனுப்பி தாஜா செய்வதில் ஆரம்பிக்கிறது படம்...இவரின் வாழ்வில் இவரை நேசிக்கும் அனைவருமே இவரது வெற்றியில் வேதனையில் முன்னேற்றத்தில் சோதனையில் பங்கு கொள்கிறார்கள் படத்தின் இறுதி வரை அனைவருமே தொடரும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதே இதன் வெற்றிக்கு ஒரு அடையாளமாகக் கொள்ளலாம்
Image result for msdhoni movie


நல்ல அப்பாவாக அனுபம் கெர், குடியிருப்புக்கும், கிரிக்கெட் ஆடுகளத்திற்கும் நீர் விநியோகிக்க வேண்டிய வேலையில். இப்படி சாதாரண குடும்பத்தில் அன்பே உருவான தாய் கடவுள் பக்தி நிரம்பியவள், ஒரு அரிய சகோதரி பூமிகா... நல்ல நண்பர்கள் நல்ல‌
ஆசிரியப் பெருமக்கள் இப்படி எல்லாமே நன்றாக இருந்தும் காலம் இவரை நல்ல வாய்ப்புகள் கிடைப்பதிலிருந்து உயரத் தூக்கிப் பிடித்து அந்த வாய்ப்புகள் எத்தகையவை அதற்கு நீ எவ்வளவு தகுதி படைத்தவன் என்று போராட வைத்திருக்கிறது.

சச்சின் டென்டுல்கரிடம் ஆட்டோகிராப் பெற்று தமக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு கொடுக்கும் நிலையில் இருந்த தோனி சச்சினையும் உள்ளடக்கிய இந்திய அணிக்கு எப்படி தலைமை ஏற்று உலகக் கோப்பை வெல்கிறார் என்பது கதை.

சாரி கதையல்ல வாழ்க்கை...அதற்குள் எத்தனை தாக்கங்கள், ஏற்றங்கள் இறக்கங்கள்...எந்த வாய்ப்பும் கிடைக்காமல் ரெயில்வேத் துறையில் டிக்கட் கலெக்டராக பணி புரிவது பின் அதை உதறிவிட்டு தமக்கு உகந்த துறை கிரிக்கெட் தாம் என வீட்டுக்கு வந்து தந்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது, அதே தந்தை இவரின் வெற்றிக்குப் பிறகு தமது முடிவு எவ்வளவு தவறானது என தம்மை திருத்திய நிலையில் மகனின் வெற்றி கண்டு புளகாங்கிதமடைவது...

எவ்வளவோ முயன்றும் ஒரு முக்கிய போட்டியில் கலந்து கொள்ள விமான நிலையம் வரை சென்று விமானம் சென்று விட அதிகாலை ஆரம்பிக்கும் ஒரு போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தோல்வி விரக்தியில் துவள்வது...

ஒரு காதலியைப் பெற்று வீறு கொண்டு எழுந்து  தமது அடையாளம் பெற்று காதலியைத் தேட காதலி இறந்திருப்பது தெரிய வர அது பங்களாதேசத்திடம் தோல்வியாய் வெளித் தெரிய காரணமாவது...அதன் பின் தம்மை நிரூபித்து காப்டனாகி அணியை தமது வழிக்குத் திருப்ப கிரிக்கெட் போர்டை கிரிக்கெட் வாரியத்தை பணிய வைத்து தம் வழிக்கு கொண்டு வருவது...

அதன் பின் ஒரு பெண்ணை மணந்து கொள்வது... இப்படி தனிப்பட்ட வாழ்வும் கிரிக்கெட் பொது வாழ்வும் அதில் கிடைக்கும் ஏராளமான புகழும் வெற்றியும், வலியும், வேதனையும், சோதனையும், எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய் நன்றாகவே படம் செல்கிறது.

இந்த தோனி, கணித மேதை இராமானுஜன் போன்ற படங்கள் சினிமாத்துறைக்கே நல்ல வரவுகள். நல்ல அறிகுறிகள். இது போன்ற படங்கள் சினிமாத் துறையின் ஆழம், நீளம், அகலத்தை மாற்ற வேண்டும், மாரியப்பன் தங்கவேல் பற்றி கூட தமிழர் எவராவது படம் எடுக்க முன் வர வேண்டும். எனக்கு அந்த வாய்ப்பிருந்தால் செய்து விடுவேன். மகிழ்வேன். இது போன்ற படங்களை எல்லாம் அனைவரும் காணச் செய்ய வேண்டும். தேர்தலுக்கு குவார்ட்டரும் கோழி பிர்யாணியும் 500ம் ஆயிரமும் தருவதற்கு பதிலாக நாட்டில் இலவசமாக காணச் செய்ய கட்சிகளும் அரசுகளும் முன் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்ச கட்டணத்தில் ஏன் இலவசமாகவும் கூட.

Image result for msdhoni movie

எம்.எஸ். தோனியை ஒரு டாக்குமென்டரி படமாக இன்றி ஒரு பொழுதுபோக்கும் படமாக அனைவருக்கும் பிடிக்கும் விதமாக வியாபாரப் படமாக இதை கொண்டு வந்ததே பெரும் வெற்றி எனச் சொல்லலாம்.

இந்த படம் 50+ பெறலாம் இதை சொன்ன விதத்திற்காகவும் அனைத்து இளைஞர்க்கும் பயன்படும் என்பதற்காகவும், மது போன்ற விஷயத்தை நீக்கி நல்ல இளைஞரை உருவாக்க உதவுவதற்காகவும் ஆனால் கிரிக்கெட் மட்டுமே இந்தியாவின் விளையாட்டு அல்ல என இதன் நாயகனே ஷட்டில் ஆடுவதையும், கால்பந்து ஆடுவதையும் காட்டுவது அனைத்து விளையாட்டுக்கும் அவர் ஆதரவானவர் எனத்தெரிவதால் முடிவில் சில செயல் நடவடிக்களை இவர் மேற்கொண்டு அனைத்து விளையாட்டுக்கும் நல்லது செய்வது போல முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்.

மேலும் வாழும் ஒரு விளையாட்டு வீரரின் சரிதம் இப்படிப்பட்ட சரித்திர சினிமாக மாற்றம் பெற்றிருப்பது ஒரு ஆரோக்யமான விஷயம் மட்டுமல்ல வரவேற்கத் தக்க மாற்றம்.வெற்றியும் பெற்ற படமாக இது இருக்கிறது. துணிச்சலான நல்ல முயற்சி. தோனியைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

ஒரு விக்கெட் கீப்பராக பயிற்சி பெறுபவர் எப்படி ஒர் பேட்ஸ்மேனாக ஒரு காப்டனாக, உலகக்கோப்பை வெல்லும் நாயகனாக மாறுகிறார் என்ற வாழ்க்கைக் கதை. சொல்லப் போனால் கபில் தேவை விட முன்னேறிய கிரிக்கெட்டில் கபிலுக்கும் பின்னால் மீண்டும் ஒரு ஒரு நாள் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த நாயகனை அனைவரும் பாராட்டுகிறார்கள். பாராட்டத்தான் வேண்டும் . நாமும் செய்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment