Sunday, October 2, 2016

தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி(இராமானுஜம்) தமிழ்: கவிஞர் தணிகை

தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி(இராமானுஜம்) தமிழ்: கவிஞர் தணிகை

Image result for srinivasa ramanujan

காலத்தின் பதிவாக சரித்திரத்தை சினிமா சில நேரங்களில் குறுகிய காலத்தில் சிறந்த பதிப்பாக பாதிப்படையும் வண்ணம் செதுக்கி விடுகிறது. அப்படி ஒரு அருமையான அரிய பதிவுதான் இந்த தி மேன் ஹூ ந்யூ இன்பினிட்டி என்ற கணித மேதை இராமானுஜர் பற்றிய சினிமாவும்.

Image result for srinivasa ramanujan

இதை தமிழில் சுமார் 1 மணி 48 நிமிடம் பார்க்க 2 நாள் முயற்சி செய்து பார்த்தே முடித்து விட்டேன். பாதிப்பிலிருந்து அதன் அதிர்வலைகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா மீடியம் சில நேரங்களில் இப்படிப் பட்ட பெருநன்மைகளையும் செய்து விடுகிறது என்னதான் இலக்கிய வடிவில் புத்தகமாக படித்தாலும் கிடைக்காத உணர்வை இந்த உயிரோட்டமுள்ள சினிமா ஏற்படுத்த முடிகிறது.  சில நொடிகளில் கூட சிறந்த பதிவை உணர்வை வெளிப்படுத்த சினிமாவில் முடிகிறது.



ஹார்டி என்ற கணித மேதை சென்றிணையும் வரை அவரது தமிழக வாழ்க்கை அல்லது இந்திய வாழ்க்கை. அம்மா அவனை நாடு கடந்து செல்லக் கூடாது என அழிச்சாட்டியம் செய்கிறார். நாமகிரி அம்மன் கோவிலில் கற் தரைகளில் பார்முலாக்களை எழுதி சரி பார்த்து வரும் இராமானுஜர், மனைவியை 22 ஆம் வயதில் சேர்த்துக் கொண்டு சென்னைக்கு வேலைக்குச் செல்கிறார். அதன் பின் அங்கிருந்து இலண்டன் செல்கிறார். அங்கே போராட்டம். ஹார்டி பெரிதும் துணையாய் இருக்க இலண்டனின் ராயல் பெல்லோசிப் மற்றும் டிரினிட்டி காலேஜின் பெல்லோ சிப் இரண்டையும் பெறுகிறார். ஆனால் அதைப் பெறுவதற்குள் சரியாக சாப்பாடு கூட இல்லாமல் போராடுகிறார். அடி உதை படுகிறார். உலக யுத்தம் ஆரம்பம். உடன் பிணி காச நோய், அதாவது டி.பி தாக்குகிறது அதை எலும்புருக்கி நோய் என்றும் சொல்வார்கள்.
Image result for the man who knew infinity



அவருக்கு அப்போது உரிய வைத்தியம் கிடைக்கவில்லை. அப்போது காசநோய்க்கு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கவே இல்லை. இவர் சொல்லியபடி எல்லாமே ஏற்கெனவே இருக்கிறது அதை விஞ்ஞானிகள் கண்டு அறிகிறார்கள், கண்டு கொள்கிறார்கள், கண்டு பிடிப்பதில்லை என்ற முடிவு படத்தில் ஹார்டி மூலம் இராமானுஜம் இறந்த பிறகு சொல்லப் படுகிறது.

உங்களின் பார்முலாக்களை எப்படி டிரைவ் செய்தீர்கள், எவிடன்ஸ் இல்லாமல் அதை நிரூபிக்க முடியாது, பிரசுரிக்கவும் முடியாது என்னும் ஹார்டிக்கு இவரின் அறிவாற்றல் திகைக்க வைக்கிறது .நோயால் பாதிக்கப்பட்ட இராமானுஜம் நண்பரிடம் எல்லாம் நாமகிரி அம்மாள் எனக்கு காட்டும் வழி, அவள்தான் இரவில் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார் ஒன்று கனவாக வந்து விடை தருகிறாள், அல்லது நேரிடையாக வந்து சொல்லிச் செல்கிறாள் என கணிதப் பதங்கள் எழுதிய தாள்களை எடுத்துத் தந்து திருமணமாகாத கடவுள் நம்பிக்கை இல்லாத தம் நண்பரின் நீண்ட நாளைய தொடர்ந்த கேள்விக்கு விடை தருகிறார்.

இரண்டு பெல்லோசிப் பெற்ற பிறகு ஒரு ஆண்டு ஊர் திரும்பி அதன் பின் பணிக்கு இலண்டன் வருவதாக வாக்களித்த அவர் திரும்பி செல்லவே இல்லை 32 வயதுள் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

உயிராய் இருக்கும் துணையை சொல்வதா, கடிதம் சென்றால் நாடு திரும்ப சீக்கிரம் வரமாட்டான் என்னும்  தாய் மனைவியின் கடிதங்களை எல்லாம் வாங்கி பெட்டியில் போட்டு இரகசியமாக மறைப்பதை சொல்வதா...அப்படி அவரின் செயலைப் பார்த்த நாம் கோபம் கொள்கிறோம். தாயை வெறுக்குமளவு. ஏன் எனில் இவர் வெளி நாடு போக முன்னேற்பாடு செய்யும்போது அதை அனுமதிக்காத தாய் அவர் வெற்றி பெற்ற செய்தியை எல்லாரிடமும் காட்டி குதூகலிக்கிறார் இராமானுஜரின் மனைவியை தமது மருமகளை  சிறுமைப் படுத்தி. சராசரி பார்ப்பனக் குடும்பத்தில் நடக்கும் சிறுமைப்பாடுகள். கதை நடப்பது 1900 ஆண்டுகளில். எனவே அவை இயல்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

Image result for the man who knew infinity

டேவ் ஆனந்த் ஸ்லம் டாக் மில்லியனிரில் நடித்த அந்த நாயகன் இதில் இராமானுஜராக வாழ்ந்துள்ளார். படம் படு சீரியஸான போக்கு நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் என்னை வெகுவாக பாதித்த படம்.

இது போன்ற படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். நமது பள்ளி மாணவர்களுக்கு இவை அவசியம் பயன்படும் கல்லூரி மாணவர்களுக்கும் சாதிக்கத் துடிக்கும் அனைவர்க்கும் ஒரு பாடம் தரும். அவரின் வாழ்க்கைப் படிகளில் பல மனிதர்கள் உதவி செய்கிறார்கள் அவர்களை எல்லாம் நன்கு அறிமுகப் படுத்துகிறது.

பார்ட்டிசன் என்றும் இன்ஃபினிட்டி பற்றியும் அறிந்த இந்த மேதை குறுகிய ஆயுளில் வந்த தமது பணி முடிந்ததும் கடவுளிடம் சென்றடைந்து விடுகிறார். கடவுளால் ஆசிர்வாதிக்கப் பட்ட பிள்ளையாய்.வந்த வேலை முடிந்ததும் சில நட்சத்திரங்கள் உதிர்ந்து விடுகின்றன‌

அவசியம் பாருங்கள். வெறும் கதையாக சொல்லி மீள முடியாது. சினிமாவின் முக்கியத்துவம் இது போன்ற நாயகர்களை சரித்திரப் பதிவுகளை தருவதில் முக்கியப் பங்காகிறது.

இந்தப் படத்தைப் பாருங்கள் எனச் சொன்ன எனது இளவல் குவெயித் பிரவீன்குமாருக்கு இந்த பதிவின் மூலம் நன்றி சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.ஆனால் அப்படி நான் நன்றி சொல்வதைக் கூட வேண்டி விரும்பாத‌ உறவு எங்களுடையது....

thanks to the creators of all those who creates this good film. and thanks to Prawin kumar.

Image result for the man who knew infinity


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment