வாட்ஸ் அப் தளங்களில் வருபவை பகிர்பவை யாவும் உண்மையல்ல: கவிஞர் தணிகை
1.ரீல் விடுகிறார்கள். ரியலாக பகிர்வதைவிட.(TRY TO POST AND SHARE REAL NOT ADD REELS)
2.எது உண்மை எது பொய் என பிரித்தறியத் தெரியாதார்க்கு இவை பேரிடர் தரும். WASTE OF TIME
3.செய்தி ஊடகங்கள், அரசியல், சினிமா மற்றும் தொலைக்காட்சி அதன் தொடர்கள் யாவற்றிலும் இடம் பெறும் பெரும்பாலானவர்கள் வல்லுனர்கள் அல்ல. பள்ளிகள் சென்று படிப்பதை கை விட்டவர்கள்.
4. எழுதுவது, படிப்பதை மற்றும் தாய் மொழியில் கையெழுத்திடுவது தெரிவது கூட தேவையற்றது என வாய்வீச்சு பேசி வருகிறார்கள்.
6. ஊடகத்தை பயன்படுத்தும் அல்லது ஊடகம் பயன்படுத்தும் எல்லாருமே அண்ணாவாகவும், கருணாநிதிகளாகவும், காமராசர்களாகவும், எம்.ஜி.ஆர்களாகவும். ஜெயலலிதாக்களாகவும் ஆகி விட முடியாது.
7.திரைத் துறை மற்றும் தொலைக்காட்சித் தொடர் வியாபாரங்கள் மிகவும் உச்சத்தில் சென்று கொண்டிருப்பது அபாயகரமானது. எல்லாமே என்.எஸ்.கே ஆகவும் எம்.ஆர். ராதாவாகவும், பட்டுக் கோட்டையாகவும் இருக்க வழி இல்லை.
8. எதிர் வரும் இளந்தலைமுறை போதையில் இருந்து மீண்டாக வேண்டிய நிர்பந்தம் இருக்கையில் நமது கதாநாயகர்கள் வன்முறை நாயகர்களாக போலிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொழிலில் முகம் தெரிந்து விட்டால் ஒரு நாளைக்கு சுமார் 15,000 ரூபாய் வருவாய் ஈட்ட முடிகிறது என அதன் பக்கம் சாய்ந்து வரும் இளம் பட்டாளம் அதிக பார்வையாளர்களைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் கை கோர்த்து வரும் நிலையில் மேலும்அதிலும் கேரளத்து பைங்கிளிகள் ஆதிக்கத்துடன் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்... என தமிழ் கூறும் நல்லுலகம் சீரழிந்து வருகிறது. தொழில்கள் நசிந்து வருகின்றன
9. மஞ்சள் தூளில் பல் துலக்க சொல்வது பல் காறையை போக்கவில்லை மாறாக பல் வண்ணம் பற்றி கவலைப் படாதார்க்கு ஒரு கிருமி நாசினியாக பயன்படலாம்.
10. ரவையில் குலோப் ஜாமூன் செய்யச் சொல்வது சரிவரவில்லை என ஒரு இளம் பெண் கூவியிருக்கிறார்.
10. கறிவேப்பிலை அதிகாலை வெறும் வயிற்றில் உண்பது பெருமருந்து என்றார் தமிழருவி மணியன் ஆனால் அது பக்க விளைவை ஏற்படுத்தி உடல் சூட்டை வயிற்றுச் சூட்டை பெருக்க காரணியானது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
11. சிவகுமார் போன்றோர் நல்லபடியாக ஆக்க பூர்வமான செய்திகளைச் சொல்கின்றனர். அதை எவரும் கேட்க இல்லை. அவர் பல்லில் காபி பட்டே 65 ஆண்டுகள் ஆகியது என்கிறார் மற்ற நல்ல பழக்க வழக்கங்கள் உடைய 81 வயது திரையுலக மார்க்கண்டேயன் கெட்ட பழக்கம் ஏதுமில்லை தன்னிடம் என கட்டியங் கூறுகிறார்.
WHATS APP SHARING ARE MOSTLY FAKE AND REPEATED: KAVIGNAR THANIGAI
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment