பச்சை அறிக்கை சமர்ப்பிப்பு: ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களை மணக்கலாம் தென் ஆப்பிரிக்கா: கவிஞர் தணிகை
ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரே பாலினத்தாரை மணந்து கொள்ளலாம் மேலும் பல ஆண்களையும் மணந்து கொள்ளலாம் என்ற சட்ட முன் வரைவு பச்சை அறிக்கையாக சமர்ப்பிக்கப் பட்டதாகவும் அதற்கு ஆதரவு இருப்பதாகவும் சொல்லப் படுகிறது...
ஏன் அனைவரும் பிறக்கும் பிள்ளைகளும் கூட்டுக் குடும்பத்தினர் தாம் என்று சொல்லுங்களேன் என நியாயப் படுத்தலும் இருப்பதாக செய்திகள் இருக்கின்றன
மிஜோரம் போன்ற இடத்தில் கூட ஒரு பெண் பல சகோதரர்களை மணக்கும் வழக்கம் இருப்பதாக செய்தியும் ஒரு நபர் 34 மனைவிகளுடன் 84 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக ஒரே வீடு அல்ல அது ஒரு காம்ப்ளக்ஸ் அதைப் பார்க்கவே வெளி நாட்டினர் எல்லாம் வந்ததாகவும் அவர் சமீபமாக இறந்த செய்தியும் கண்டோம்.
கிறித்தவப் பிரிவில் கூட அது போன்ற ஒரு பிரிவு இருப்பதாகவும் செய்தி இருக்கிறது
பெண் வழிச் சமுதயாம் என்ற ஆரம்ப நிலைக்கே உறவு மீறிய நாகரீகத்தை எல்லாம் பின்னோக்கித் தள்ளி உறவு சகோதர சகோதரி என்பதை எல்லாம் மீறி பழைய காட்டுமிராண்டித் தனத்துக்கு இட்டுச் செல்ல உலகு பலவாறாக அரசியலமைப்பு முறையில் முயல்கிறது என்பதற்கான சான்றுகளே இவை...
ஆனால் இயற்கைக்கு முரணான இவை எல்லாம் சீர் படுத்தப் பட வேண்டியவை. குழந்தைக்கு ஒரு அடையாளமில்லாமல் எல்லா குழந்தைக்கும் டி.என்.ஏ பார்க்க வேண்டிய நிலை அல்லது அவர்கள் குடும்பம் என்ற நிலை ஆனால் அதுசீர் குலைந்தால் உலகின் ஒழுக்க நியதிகள் எல்லாமே தலைகீழாகி விடும்...
கொலை, கொள்ளை, களவு யாவுக்கும் போதை சமுதாயத்துக்கும் இது வித்திடும் என்ற நீட்டல் பார்வை எல்லாம் பார்த்தால் இந்த உலகு இப்படியான சட்டம் வழியாக எல்லாம் மனித குலத்தை எங்கு கொண்டு செல்கிறது என்றே தெரியாத போது நாம் கொரானா அலை 3ல் இருக்கிறோம்.
ஒரே பால் இன மணமே ஏற்றுக் கொள்ள முடியாத போது இதெல்லாம் எப்படித்தான் அரசு எந்த அறிவியல் பார்வையுடன் ஏற்றுக் கொள்கிறதோ என விளங்க வில்லை...எனைப் போன்ற தீனமான குரல் மனித குலத்தை அழிவிலிருந்து காக்க...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
No comments:
Post a Comment