Wednesday, June 16, 2021

நண்பர்களே நண்பர்களே: கவிஞர் தணிகை.

எனக்கு  புத்தகம் எழுதுவதை விட ,காந்தியை எனது அறிமுக விலாச அட்டையில் போட்டுக் கொண்டிருப்பதை விட எனது கடித தலைப்பில் போட்டுக் கொண்டிருப்பதை விட, எல்லாவற்றையும் விட இது முக்கியத் தேவை என்று கருதியதால் செய்தேன்...நான் அப்போது எனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தனிமையில் இருந்த கோவிலில் சற்று தியானம் செய்கிற போது அந்த குழந்தையின் விளையாட்டுக் குரல் கேட்டது அதற்காக அவர்கள்அங்கிருந்து கிளம்பிப் போவதற்குள் நாம் இதை அவர்களிடம் சொல்லி விட வேண்டுமே எனச் செய்தேன்... நீங்கள் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று சென்று அவர்களிடம் சொன்னேன்...அதற்காக நான் காந்திய வழி செல்கிறேனா காந்திய வழிக்கு மாறாக செல்கிறேனா என்பதெல்லாம் தேவையா என எண்ணிப் பார்க்கிறேன்.



 நண்பர்கள் மூவருமே என் மேல் மதிப்பு மரியாதை இருப்பவர்கள் ஆதலால் எனது கருத்தை எதிர்த்து "எங்களுக்கு அதெல்லாம் தெரியும் நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம்" என்றெல்லாம் என்னை எதிர்த்து பேசவில்லை.அவர்கள் என்னைப் புரிந்து கொண்டவர்கள், நான் இந்த நாட்டை, மனிதர்களை நேசிப்பவர் என்பதெல்லாம் அவர்களுக்கு நன்கு தெரியும் நான் அவர்களையும் எந்த அளவு நேசிக்கிறேன் என்பதும் அவர்கள் அறிவார். எப்போதும் எனக்கு மரியாதை நிமித்தம் முகமன் கூறி வணக்கம் தெரிவிப்பவர்கள்... நல்ல இளைஞர்கள் அவர்களை எல்லாம் இலக்கு நோக்கி இந்த நாடு செலுத்தவதற்கு மாறாக திசை திருப்பி விட்டதற்கு அரசியல், சூழ்நிலை, குடும்ப அமைப்பு, வாழ்வுத் தேவைகள் யாவுமே காரணம் ஏன் நான் கூட ஒரு காரணமாக இருக்கலாம் இன்னும் சசிபெருமாள் போல் மதுவுக்கு எதிராக களமிறங்கி சாவுக்குத் துணியாமல் இருப்பதால்...


விளையாட்டுத் தனமாகவே சிறு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தந்தை புகைப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை செய்யத் துணிவது பேராபத்தானது. அது எதிர்வரும் தலைமுறையை அதன் பின் தொடரும் தலைமுறைகளை முற்றிலும் நாசமாக்கி விடுகிறது.


இந்த புவியில் புகைப்பதால் எப்படி காற்று மாசுபட்டு சுவாசமண்டலங்கள் பாதிக்கப் படுகின்றன எனச் சொல்லித் தர வேண்டும்


இந்த புவியில் போதைக்கு அடிமையாகும் குடும்பங்கள் எப்படி சீரழிகின்றன என்று சொல்லித் தர வேண்டும்.


இந்த புவியில் மதுவுக்கு அடிமை ஆனவர் எப்படி அதிலிருந்து மீண்டு வரவே முடிவதில்லை எப்படிப் பட்ட எழுந்து வர முடியாத மீள முடியாத பழக்கம் என்பதைச் சொல்லித் தரவேண்டும்


பாதைகளில் , சாலைகளில், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பழக்கப் படுத்திச் சொல்லித் தர வேண்டும்.


அந்த இளம் பிஞ்சுகளுக்கு நல்லது எது? கெட்டது எது? என்றும் நல்ல‌ உணவுப் பழக்கங்கள், சுகாதாரம் , ஆரோக்கியம், மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் அதன் பின் உடலை எப்படி எல்லாம் தூய்மை செய்து கொள்ள வேண்டும் தினமும் குளித்தல் என படிமானம் அதாவது பழக்கம் ஏற்படுமாறு பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவு , நினைவு ஏற்படுகின்ற தருணத்தில் இருந்து அதாவது ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள் குறைந்த பட்சம் 5 வயதில் இருந்தாவது ஆரம்பிக்க வேண்டும்...


இந்தக் கொரானா கோவிட் 19 சமயத்தில் இது தேவையா என்றெல்லாம் கேட்கக் கூடாது இது போன்ற உயிர் பயம் உள்ளக் காலக் கட்டத்தில் தாம் இதெல்லாம் மிக அவசியம்....


எனக்கு  புத்தகம் எழுதுவதை விட ,காந்தியை எனது அறிமுக விலாச அட்டையில் போட்டுக் கொண்டிருப்பதை விட எனது கடித தலைப்பில் போட்டுக் கொண்டிருப்பதை விட, எல்லாவற்றையும் விட இது முக்கியத் தேவை என்று கருதியதால் செய்தேன்...நான் அப்போது எனது நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தனிமையில் இருந்த கோவிலில் சற்று தியானம் செய்கிற போது அந்த குழந்தையின் விளையாட்டுக் குரல் கேட்டது அதற்காக அவர்கள்அங்கிருந்து கிளம்பிப் போவதற்குள் நாம் இதை அவர்களிடம் சொல்லி விட வேண்டுமே எனச் செய்தேன்... நீங்கள் இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று சென்று அவர்களிடம் சொன்னேன்...அதற்காக நான் காந்திய வழி செல்கிறேனா காந்திய வழிக்கு மாறாக செல்கிறேனா என்பதெல்லாம் தேவையா என எண்ணிப் பார்க்கிறேன்.

PART II

 காந்தி என்று நினைக்கும் போது சில நினைவாடல்களும் வந்து விழுகின்றன: 

சத்தியம், அஹிம்சை, இவையும் சத்யாக்கிரஹ முறைகளுமே காந்தியத்தின் அடிப்படை வழி, மதுவே எல்லாப் பாவங்களுக்கும் அடிப்படை என்று அவர் சொல்லி இருப்பதால். களப்பணி இல்லாத காகிதப் பணிகளும் எழுத்துகளும் எடுபடாது. போராட்ட முறை மட்டுமே எடுபடும். மற்றபடி போலித்தனங்களும், அரசின் பதவிகளும்  பணிகளும் போய்விடுமே என்பதற்காக‌ அரசியலில் ஈடுபடக் கூடாது அரசுக்கு எதிராக செயல்படக் கூடாது என்றெல்லாம் சொல்லக் கூடாது அதெல்லாம் காந்தியம் அல்ல...  அல்ல. மேலும் அவர் எல்லா இடங்களிலும் அரசை எதிர்க்கவில்லை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த போதெல்லாம் மக்களுக்கான பிரச்சனைக்காக நின்றதால். எனவே இதற்கு இடையே  எதிர் வரும் எல்லாவற்றையுமே அவர் எதிர்த்திருக்கிறார்.   காந்தியம் என்பதே அரசியல் தான். அரசியல் இல்லாமல் காந்தியம் இல்லை , காந்தியம் இல்லாமல் அரசியலும் இல்லை. இரண்டும் பிரிக்க முடியாதவை...இதைப் புரிந்து கொண்டால் சரியாக இருக்கும்.

 

எது பெரியது எது உயர்ந்தது எல்லாம் என்பதெல்லாம்  கூட அவசியமில்லை. தியாகத்தில் பெரியது சிறியது என்பதெல்லாம் கூட இல்லை. பகத்சிங், திருப்பூர் குமரன், மகாத்மா, போஸ் அனைவரின் தியாகமுமே மாசு மருவில்லாததுதான்.செயல்பாடு எல்லாம் கண்ணில் ஒற்றிக் கொண்டாடப் பட வேண்டியதுதான்.


இதில் எது சரியானது எது சிறந்தது என்பதெல்லாம் என்னால் யோசிக்கவும் முடியாதது...சொல்லப் போனால் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி பேசும்போது எப்படி ஒசாமா பின் லேடன் வருகிறார் என்பதும் மோதிலால் நேருதான் அது போன்ற ஆடையை அணிந்தவர் என்பது எல்லாம் தேவையில்லாத பேச்சின் நடைமுறைகள்...


காந்தியம் என்பது அப்பட்டமான உண்மை சத்தியம் மேல் அமர்ந்துள்ளது. அதற்கு மேல் பூச்சு, போலிப் பூச்சு எல்லாம் அவசியமில்லாதவைதான்.


திருப்பூர் குமரன் எனக்கு சொல்லித் தந்தது தியாகம் மட்டுமல்ல எனது தங்கையின் திருமணக் காலமான 1980களிலிருந்தே மொய் வைக்கும் மொய் வாங்கும் முறையை என் வாழ்விலிருந்தே விலக்கி வைத்துள்ளார்.

1997ல் எனது மணத்தில் நான் எனது விதவைத் தாயின் பேரையே முன்னிறுத்தி அழைப்பிதழ் முதல் அடித்து பெரியவர் ஒருவரை தாலி எடுத்து கொடுக்கச் சொல்லி மணம் செய்து கொண்டவன்...இதை எனது தமிழ் முறை சொல்லிக் கொடுத்தவை..

.இன்று எனக்கு கோவிலில் எவர் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் பெண்கள் உட்பட என்ற  தமிழ் அரசின் கொள்கை பிடித்திருக்கிறது, மதுவிலக்கின்மை கொண்டிருப்பது பிடிக்கவில்லை..

.காந்திய வழி என்பதே இப்படித்தான் இருக்கும். இருக்கிறது . இருந்திருக்கிறது...



எல்லாம் வாழ்வின் நடைமுறைகளில் வேண்டும். அது தான் காந்திய வழியைக் கடைப்பிடிப்பது. எழுதுவது பேசுவது மட்டுமல்ல வாழ்வின் போக்கில் அதைக் கடைப்பிடிக்கும்  அப்படிப் பட்ட நெறியாளர்களை உலகு கொண்டாடாவிட்டாலும் அவர்களுக்கு தோல்வி இருக்காது. புரிந்தவர் நெருங்கி வாழ்வர்.


எதையுமே முடிந்தால் இப்போதிருந்து கூட நீங்கள் ஆரம்பிக்கலாம் நீங்களாகப் படியுங்கள்  சிந்தித்து உணருங்கள் அது ஒளி கொடுக்கும் நல் வழிப்படுத்தும், ஊக்குவிக்கும் எழுத்துகளைக் கூட ஏடுகளைக் கூட ஊடகங்களைக் கூட அவரவர்க்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள். பிறர் கருத்துகளை வெட்ட வெளிக்கு கொண்டு வருவதை எல்லாம் தடுக்க முனைகிறார்கள் .  சிகரெட் புகைப்பவர் சிகரெட் புகைப்பது பற்றி நன்றாக பாடம் எடுக்கவும் கூடும். ஆனால் அது நடைமுறைக்கு உதவாது...

நன்றி நண்பர்களே...ஆனால் எனது கோரிக்கையை இனி நீங்கள் நிறைவேற்ற ஆரம்பித்தால் இந்த உலகு உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


நண்பர்களே நண்பர்களே: கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment