Wednesday, June 30, 2021

இடைவெளிகள் இடவெளிகள்: கவிஞர் தணிகை

 இடைவெளிகள் இடவெளிகள்: கவிஞர் தணிகை



சண்டையிட்டாலும் நாம் சகோதரரன்றோ? நண்பர்கள் நண்பர்களே!

கண்ணுக்கு கண்ணாய் இமையாய், உடுக்கை இழந்தவன் கை போல இருக்கும் உறவுகளே நட்புகளே!

மதிப்பிற்குரிய கக்கனைப் போல நானும் ஒரு இலவச வைத்தியம் செய்தேன் ஒரு கண்ணுக்கு அப்போது பிச்சைக்காரனாக நடத்தப்பட்டேன். காலம் என்னை கைவிட்டிருந்தது. நானே பல் வேறுபட்ட முகாம் நடத்தி வந்த எனது இளமை பல்லோருக்கும் நன்மை செய்ய வைத்தது எனக்கு என்று வரும் போது கைவிரித்து விட்டது

ஏலி ஏலி லெமா செபக்தானி என்ற யேசுவைப் போல நான் கடவுளை கேட்காமல் கிடைத்ததை பயன்படுத்தி 

இரண்டாம் கண்ணுக்கு செய்த போது ஒரு மரியாதையுடன் நடத்தப் பட்டேன் நட்பும் உறவும் காரணமாக...தேர்வு செய்த நல்ல லென்ஸ் வைத்துக் கொண்டேன்.


தினைத் துணையாம் நன்றி செயினும் 

பனைத் துணையாக் கொள்வார் பயன் தெரிவார் என்பதற்கேற்ப எதையும் நான் எப்போதும் மறப்பவனல்ல... அவை எல்லாம் வேறு...  கொள்கைப் பிடிப்பு என்பவற்றுள் போலித்தனம் இருக்கக் கூடாது...



1. மது எதிர்ப்பு பூரண மதுவிலக்கு என்ற கொள்கை, மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்பதில் இருக்கிறது...மகாத்மாவின் மூத்த மகனே குடிகாரர் என்பது வேறு...அவரின் வழி வந்த பேத்தி ஒருவர் தென் ஆப்பிரிக்காவில் சுங்க வரியிலிருந்து விலக்கு வாங்கித் தருகிறேன் என ஏமாற்றி பல கோடிகள் ஏய்த்து விட்டார் என கடந்த சில வாரங்களுக்கும் முன் தென் ஆப்பிரிக்க அரசால் தண்டிக்கப் பட்டு சிறை செல்ல காரணங்கள் இருந்தன என ஒரு வழக்கின் நீதி செய்தியாக வந்திருந்தது... அதெல்லாம் வேறு அவர் எண்ணம் சொல் செயல் யாவும் நமது மானிடத்துக்காக இருந்ததால் அவர் மகாத்மா...நல்ல வேளை நாம் பரவாயில்லை நமது நட்பு, உறவு, பிறரிடம் எல்லாம் மதுவின் தீமையை சொல்லி அதிலிருந்து விலக்கியே வருகிறோம்.


2. சைவ உணவை குடும்பத்தில் கடைப்பிடிக்கிறீர்களா? நான்,எனது தங்கை, இப்போது இல்லாத நண்பர் ஒருவர், எனது மகன் , எனது தாக்கத்தில் சைவ உணவையே கடைப்பிடித்து வருகிறோம்...நீங்கள் எப்படி என நீங்கள் தாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.


3. பிச்சையிட வேண்டாம் என்கிறார் காந்தி அதில் உங்கள் நிலை என்ன?


4. காப்புறுதித் திட்டம் தேவையில்லை என்கிறார் காந்தியத்தில், நீங்கள் எப்படி? நாங்கள் எவருக்குமே வாழ்வுக் காப்புறுதித் திட்டம் ஏற்றுக் கொள்ள வில்லை அதற்கு எல்லாம் செலவு செய்து சேமிக்க எங்களிடம் ஒன்றும் இல்லை என்பதும் கூட காரணமாக நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி...



5. மதக் குறியீடுகள், சின்னங்கள் இன்னும் வேண்டுமா? நாங்கள் அதில் தெளிவாகி விட்டோம். ஆனால் எனது தாய்க் காலத்தில் எங்கள் வீட்டு முன் வைத்த சிறு விநாயகர் சிலைக்கு அனுதினமும் நீரும், நெருப்பும், சமர்ப்பித்தல் உண்டு.


6.  இலஞ்ச மறுப்பு எதிர்ப்பில் உங்கள் பணி என்ன? எனது பணி நிறைய வாங்குவதையும் கொடுப்பதையும் நான் வாழ் நாள் எல்லாம் கடைப்பிடிப்பதால் தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்றுள்ளேன்.


7. இப்போது கொரானா கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பதற்கான ஊசி என்று போடுகிறார்களே அந்த களப்பணிகளில் சென்று பாருங்கள் அதில் உங்கள் பிரதிநிதித்துவம் என்ன: எனது குரல் அவ்வப்போது அதன் நேரமையான விநியோகத்துக்காக ஒலித்தபடியே இருக்கிறது.


8. தூய்மை பாரதம் என்பதில் உச்சமாக மலம் அள்ளிய சேவையும், கழிப்பக தூய்மையும் செய்வதில் காந்தியம் உள்ளது அன்னை தெரஸாவின் சேவையும் உள்ளது அது என்னிடம் உள்ளது அதில் உங்கள் பங்கீடு என்ன?


9. கிராமியத் தொண்டில் எனது முக்கியமான 10 ஆண்டுகள் ஓடி வேண்டாத பகை  விடாத பிணி வாங்கிக் கொண்டேன் அதில் நீங்கள் எப்படி?


10 காந்தியம் + அரசியல் + ஆட்சி+  திட்டங்களில் மக்களுக்கு தேவையானதை ஆதரிப்பும், மது போன்ற திணிப்பில் எதிர்ப்பும் போராட்டமும் எடுக்கும் நிலை என்னுடையது உங்களுடையது...


11. காந்தியம் என்பது ஒரு பகுதி நேரப் பணியல்ல. வாழ்வின் பயன்.


12.சுட்டுப் பொசுக்குவது மட்டுமல்ல வன்முறை பிறர் பேசுவதை தடுப்பதும் குறுக்கிட்டு பேசுவதும் கூட‌

13. நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் மட்டும் பயன்படுத்துகிறீரா ?அஸ்கா வெண் சர்க்கரை பயன்படுத்தல் உண்டா?

14. செல்பேசி, மூடப்பட்ட அறையிலிருந்து எல்லாம் வெளியே வர வேண்டும்...

15. ஊர் உலகில் காந்தி அடையாளம் என்று காட்டிக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான மனிதராக இருந்தார் எல்லாம் நானறிவேன்.


இந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா ஊசி மருந்தைக் கண்டறிந்த சீமாட்டி , சாரா கில்பெர்ட் விஞ்ஞானிக்கு விம்பிள்டன் அரங்கில் எழுந்து நின்று கைத்தட்டலும் பாராட்டும் கிடைத்தது போல நல்லது செய்வார்க்கு கிடைப்பதில்லை...மகாத்மா புகழ் பெற அயல் நாட்டு மனிதர்களும் ஒரு காரணம்.


ஆசான் ஜி என்னும் ஒரு குரு சொல்வது போல இங்கு புகை, மது, போதை, அத்துடன் நீலரேகை காதுகள் உள் புகும் வெளித் தெரியா சத்தம் என்று இளைய சமுதாயம் மூழ்கிக் கொண்டிருக்கிறது...இதை எடுத்து எழ வைக்க வேணுமெனில் அதற்குரிய அழுத்தம் வேண்டும்...மிக வேகமாக வளரும் தாவரம் வலுவாக இருக்காது...

தியான மார்க்கத்தில் யமத்தில் சொல்லப்படும் 5 மாபெரும் அம்சங்களில் ஒரிரண்டாவது இருந்தால் தான் தியானம் செய்ய முடியும் அதே போல நான் முன்பே கூறியவற்றுள் ஒரு சிலவாவது இருந்தால் மட்டுமே நீங்கள் அல்லது நாம் போதுமான நிலையில் வளர வாய்ப்பு இருக்கும்...


அதெப்படி தலை முழுதும், ஒன்று முடியின்மை, அல்லது நரை, மீசை மட்டும் ஒரே கறுப்பாக இருக்கிறதே அதெப்படி என்றே எனக்குத் தெரியவில்லை...முடிக்கு சாயம் பூசிக் கொண்டிருக்கும் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காந்தியம் இல்லை...


உடனே எனது தொப்பியும், கண்ணாடியும் காரணமாக்கிக் கொண்டிருந்தீர், நான் எப்போதுமே ஒரு களப்பணியாளர் என்ற முறையில் அது என்னுடன் இப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கிறது...அதை எப்போது வேண்டுமானாலும் நான் கழட்டி எறிந்து உண்மையைச் சொல்ல வர முடியும்...


 உப்பென்றும் சீனியென்றும் உள் நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவாரடி கிளியே செம்மை மறந்தாரடி...

    சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாகுமோ .... இன்பமுண்டோ....

    சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தையிரங்காரடி கிளியே செய்வதறியாரடி...


நன்றி

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு.

உங்கள் விருப்பப் படி என்னை சேர்த்துக் கொள்ளும் போதும் நான் கேட்க வில்லை

விலக்கும் போதும் கேட்க வில்லை

இப்போது துணைக் குழு என்று சொல்லும் போதும் 

யார் தலைமைக் குழு என்று அறியாத போதும்... அதிக கவனம் கொள்வதில்லை...

அமைப்பு ரீதியாக , இயக்க முறைமைகளுக்கு ஏற்ப  செயல்பாடுகள் இருந்தால் மட்டுமே எதுவும் வளப்படும் வலுப்படும்... இது ஒரு மனிதன்  பின்னே அனைவரும் ஒருங்கிணைய மகாத்மாவின் பாதையாய் தெரியவில்லை...





    


No comments:

Post a Comment