Friday, June 4, 2021

கோடி ரூபாய் கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனச் சொல்வாரா? கவிஞர் தணிகை...கவிஞர் தணிகை


கோடி ரூபாய் கொடுத்தாலும் கார்த்திக் மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனச் சொல்வாரா? கவிஞர் தணிகை
 கார்த்திக் கோடி கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்காமல் எம்.ஜி.ஆர் வழி நடப்பாரா ? நடிப்பாரா?  கவிஞர் தணிகை



ஒரு வாரத்துக்கும் முன் கோடி கொடுத்தாலும் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என சிவகுமார் அவர்களின் இளைய மகன் கார்த்திக் சொல்லி இருந்ததாக செய்தி கண்டு மகிழ்ந்து ஒரு பதிவை "மறுபடியும் பூக்கும்" வலைப்பூவில் செய்திருந்தோம். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சிவகுமார் குடும்பத்துக்கு சினிமாத் துறை சார்ந்து மட்டுமல்ல பொது சமூக வாழ்வியல் மட்டத்திலும் மிக நல்ல பேரும் செல்வாக்கும் இருக்கிறது.

தமிழக இலட்சியக் குடும்பத்தின் வழி உருவான சசிபெருமாள் மதுவிலக்குப் போராளியாக இருந்து தனது இன்னுயிரை நீக்கும் முன் சென்னையில் மதுவிலக்கு கோரி உண்ணாநோன்பு இருந்த போது அவரைச் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து விசாரித்த பிரபலங்களில் சிவகுமார் முக்கியமானவர். சிவகுமாருக்கும் சசிபெருமாளுக்கும் பொது நண்பராக இருந்தவர் சசிக்குமார் என்ற ஒரு நடிகர் அவர் தீவிபத்தில் இளம் வயதிலேயே சினிமாத் துறையில் ஏறுமுகமாக இருந்த தருணத்திலேயே மாண்டது இப்போதைய இளம் வயதினர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிவக்குமார் குடும்பம் அகரம் கல்வி அறக்கட்டளை வழி செய்து வரும் கல்வித் தொண்டு உலகறிந்தது. கார்த்திக் விவசாயியாக நடித்துள்ளார். மேலும் இவர் தேர்வு செய்து இதுவரை 20 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.இவர் அமெரிக்க நியூ யார்க் நகரில் பொறியியல் மேற்படிப்பு படித்தவர் மணி ரத்தினம் சினிமா இயக்குனரிடம் உதவியாளராகவும் இருந்தவர் என்பவை எல்லாம் யாவரும் அறிந்ததே.



கண்ணதாசன் எம்.ஜி.ஆருக்காக எழுதி இருப்பார் சிலர் குடிப்பது போலே நடிப்பார், சிலர் நடிப்பது போலே குடிப்பார், சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டிலில் மயங்குவார் என சங்கே முழங்கு என்ற படத்தில் அதில் காட்சிப்படுத்தும் போது அந்த இடத்தில் இருப்பார்க்கு குடிப்பது போல காட்டியபடியும் திரையை பார்க்கும் மக்களுக்கு அதை அவர் பூந்தொட்டியில் ஊற்றி விட்டு குடிக்காதவராக இருப்பதாகவும் காட்சிகள் இருக்கும். அப்படி தனது ஒவ்வொரு செயல்பாட்டையும் காட்சியையும் உருவாக்குவதில் எம்.ஜி.ஆர்கவனம் செலுத்தி  இனத்தால் வேறானாலும்  தமிழகத்தை நாடாண்ட கதை  யாவரும் அறிவர்.

அது போல சிவகுமாரின் மகன் கார்த்திக் அவர்களும் எத்தனை கோடி கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி எடுப்பாரா?  உறுதி கொள்வாரா?

தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்பே இப்போது பதிவு பெற்று தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றமாக செயல்பட்டு வருகிறது அந்த இயக்கத்தின் இணைத்தலைவர் என்ற முறையில் அந்த இயக்கத்தின் சார்பாகவும், எனது தனிப்பட்ட மனிதரான சமுதாயப் பொறுப்பு சார்பாகவும் இந்த வேண்டுகோளை அவருக்கு வைக்கிறேன்.

ஏன் எனில்  மலையாளம், இந்தி, இப்படி பல மொழிகளிலும் மது அருந்தும் காட்சிகள் தாராளமாக இருந்தது போல இப்போது தமிழ் தொலைக்காட்சித் தொடர், சினிமா யாவற்றிலும் மிகவும் மலினமாக அது கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும், நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் மது அருந்தும் காட்சிகள் தனியாகவும் கூட்டமாகவும் இருப்பதாக காட்சிகள் உள்ளன அதுவும் பெரும் தீங்கே...

தலைமைப் பண்பு, தலைவராக வேண்டியவர்களுக்கு இது போன்ற‌ ஒவ்வொரு செயல்பாட்டிலும் மக்கள் நெருக்கம் அதிகரிக்கிறது. எனவே திரைப்பட நடிகர் கார்த்திக் எத்தனை கோடி கொடுத்தாலும் மது அருந்தும் காட்சிகளில் நடிக்காமல் மறுப்பாரா என்று கேட்பதற்கே இந்தப் பதிவு.

மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை ....மகாத்மா

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு: ரஷிய நாட்டினர் கொடுத்த ஒரு விருந்தில் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர். ஏ.பி.ஜெ அப்துல் கலாம் விஞ்ஞானியாக இஸ்ரோவில் இருந்த போது மது அளிக்கப் பட அதை அந்த டம்ளரை அருகே இருந்த சுஜாதா கையில்( எழுத்தாளரும் அறிவியல் அறிஞராகவும் இருந்த அதே சுஜாதா கையில் தான் இருவரும் கல்லூரித் தோழர்கள் நண்பர்கள்), கொடுத்து விட்டு குடிநீர் ஊற்றிய டம்ளரை ஏந்திக் கொண்டு இருந்ததாகவும் அந்த தர்ம சங்கடமான சூழ்நிலையை அவர் சமாளித்ததாகவும் அவரது நூலில் அவரே தெரிவித்திருப்பார்....

கார்த்திக் எம்.ஜி.ஆர் வழியில் குடிக்காமல் நடப்பாரா நடிப்பாரா?

  

No comments:

Post a Comment