Thursday, June 17, 2021

தணிகை தடுப்பூசி போட்டுக் கொண்ட கதை: கவிஞர் தணிகை

 தணிகை தடுப்பூசி போட்டுக் கொண்ட கதை: கவிஞர் தணிகை



முதலில் கல்லூரியில் இருந்து 10 செவிலியர்களும் நானும் டீன் மற்றும் நிர்வாகத்தின் உத்தரவுப் படி நாட்டாண்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் சேலம் இணைச் சுகாதார இயக்குனர் அலுவலகத்திற்கு கூட்டம் கவனிக்கச் சென்றோம். அரசு அலுவலர்கள் அவர்கள் வழக்கப் படி தடுப்பு மருந்து கொடுப்பதை பிரமாதமாக எடுத்துரைத்தனர்...


கல்லூரியில் ஒரு தடுப்பூசி மையம் அமைக்கலாமா என்ற நிலை மாறி அது இணைச் சகோதர கல்லூரிக்கு மாற்றி அமைக்கப் பட்டது.


 மருத்துவர்கள், நிர்வாகிகள் அனைவரும் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். எனைப் போல பாதி பேர் அதை எப்படி தவிர்க்கலாம் என யோசித்துப் பார்த்து போடாமல் இருந்தோம் என்னதான் டீன் அவர்களும், நிர்வாக அலுவலரும், மருத்துவமனையின் முதுநிலை மேலாண்மை நிர்வாகியும் சொன்ன போதும்.


ஒருக் கட்டத்தில் நிறைய பேர் இறந்த செய்திகளும் வந்து தாக்கின.

எனதருமை நண்பர்கள் சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைகளின் படுக்கைகள் வரை சென்று வந்தனர் பல நாட்கள் அவர்களுடைய அனுபவம் செய்திகளாக எங்கள் காதுகள் வரை எட்டின. அதிலும் எனது நண்பர் அமீன் பாஷாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமான நோய்த் தாக்குதலும் அதிலிருந்து துணிச்சலுடன் மீண்டு மறு வாழ்வுக்கு மீண்ட வரலாறும் குறிப்பிடத் தக்கவை.


இது ஒரு உலகளாவிய மருத்துவ வியாபாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்வுகளாகவே இருந்த போதிலும் சாதாரண மனிதர்கள் பிழைக்க குறைந்த பட்சம் உயிர் விடாமல் இருக்க தற்காலிக தடுப்பூசிகள் அவசியம் என்றும் அப்படி போட்டுக் கொண்ட போதும் அவர்கள் தற்காப்பு நடவடிக்கைகளே காக்கும் என்ற நிலைப்பாடும் எல்லா அலைகளுக்கும் தடுப்பரணாக ஒரு தடுப்பூசி தயாரிக்கும் பணி நிறைவடைந்தால் அதை ஓரிரண்டு ஆண்டுகளில் மறுபடியும் உலகு பயன்படுத்த நேரிடும் என்பவை யாவும் செய்திகள்.


மரணம் வரை கொண்டு செல்லாது என எல்லாராலும் அறிவுறுத்தப் பட்டதால் நானும் தடுப்பூசி போட முயன்றேன்.

அதன் கதை தான் இது...கல்லூரியில் சுலபமாக போட்டுக் கொண்டிருக்கலாம் ஆனால் அப்படி போட்டுக் கொண்டிருந்தால் இவ்வளவு அனுபவம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அனுபவமே கடவுள் என்பார் கவிஞர் கண்ணதாசன்.


அரட்டை அரங்கப் பேச்சரங்கில் தேர்வு பெறுவார்க்கு 6 மாதம் கணினி பயிற்சி இலவசம் என தாரையில் ஒரு பயிற்சிப் பள்ளி சொல்லியது போகவில்லை,

நேருயுவக் கேந்திரத்தில் கணினி பயிற்சி தந்தார்கள்...போக வர இருந்தும் போகவில்லை

ஆனால் கணினிப் பணி எனக்கு எழுத உதவுகிறது...


தங்கை இந்தி இந்திப் பண்டிட் பாலசுப்ரமணியம் என்னும் எனதருமை வரலாற்று ஆசிரியரிடம் சென்றார் அவர்க்கு அது பயன்பட்டதாக இல்லை...

கற்றுக் கொள்ள மறுத்த எனக்கு இந்தியா எங்கும் சுற்றும் பணி...தேவைப்பட்டது ஆனால் கற்கவில்லை.


அதே போல செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்காமல் இருந்த நாங்களே ஊசி போட வாய்ப்பை மருத்துவக் கல்லூரியில் வழங்கினர், செல்லவில்லை

சரி இளம்பிள்ளை பொது சுகாதார மையத்திற்கு நேரம் குறித்து வரச் சொன்னார்கள் செல்லவில்லை.

அப்படியே கொஞ்ச காலம் போயிற்று...


நான் முதலில் கல்லூரி விடுமுறை இடைவெளியில் முழு ஊரடங்கின் போது நடந்தால் எட்டி விடும் தூரத்தில் உள்ள கோம்பூராங்காடு பொது சுகாதார மையத்தை அணுக விசாரிக்க நடைப்பயிற்சியின் போது துணைவியுடன் சென்றேன்...அங்கிருந்த பெண் எப்போதும் காலை சுமார் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் வந்து பாருங்கள் என்றார்.


எந்தவிதமான பதிவும் அனுமதிச் சீட்டு போன்ற எந்தவித அங்கீகாரமும் வந்து போனதற்கும் தரவில்லை.

மறு நாள் காலை சென்றேன்...கயிறு கட்டி அதில் ஒரு கணினியால் அச்சடிக்கப் பட்டு இன்று ஊசி போடுவது இல்லை என்று கட்டி வைத்திருக்க பார்த்து விட்டுத் திரும்பினேன்.


திரும்பும் போது அருகே உள்ள எனது குடும்ப நண்பர்கள் வீட்டில் நண்பர் குருவை தடுப்பூசி'/ தடுக்காத ஊசி போட வேண்டும் எனக்கு கொஞ்சம் தெரிவி காலையின் நான் வரத் தேவையிருக்காது என்றேன்.


ஒரு நாள் ...இரண்டாம் தவணை போடுவதற்கும், உங்களுக்கு எல்லாம் இல்லை என்றார்கள் நான் யார் என்று அறியாமலேயே ...


உடனே அங்கிருந்த சுகாதார மையத்தின் மருத்துவரை அணுகி என்னைப் பற்றி நான் ஒரு சுகாதார முன் களப் பணியாளர் எனக்கு அவசியம் வேண்டும் என்றேன், கல்லூரிக்கு சென்றால் நான் தான் முதல்வனாக நின்று மக்களை எல்லாம் சந்தித்தாக வேண்டும் என்ற நிலை, மேலும் பொதுப் பேருந்தில் தினமும் சுமார் 4 மணி நேர பயணம் பணிக்காக...எனவே தேவை உணர்ந்தேன்...


அவர் இத்தனைக்கும் எனது வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் தம்பி மகன் என்பதும், அவர் எங்களது குழுமத்தின் கல்லூரியில் தாம் பயின்றவர் என்பதும் செய்திகளாகத் தெரிந்தன...


நாளை வாருங்கள் பார்ப்போம் என்றார், மறு நாள் செல்ல அன்று ஊசி வரவில்லை என பதில்


அதை அடுத்து மற்றொரு நாள் சென்று ஒன்று அனுமதிச் சீட்டு தரும் ஏற்பாடையாவது செய்து தரவேண்டும் இல்லையேல் வரிசையாக வருவார்க்கு உரியபடி முன் பின் வந்தவர்க்கேற்ப வழங்க வேண்டும் முதலில் வந்தவர்க்கு முதல் ... என இருக்க வேண்டும் எனச் சொல்லி விட்டு


அங்கு அத்தனை பேரும் வரிசையில் நின்றிருக்க அரசியல் கட்சி பிரமுகர்கள் இருவர் மிகவும் ஒய்யாரமாக தங்கள் மனைவி மார்களுடன் உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்திருந்தனர்...


வெளியில் நிற்பார் எல்லாம் மனிதராக இருப்பதாக அவர்களுக்குத் தெரியவில்லை

உடனே நான் மருத்துவரிடம் மறு நாள் வரச் சொன்னவரிடம் தொடர்பு எண் கேட்க அவரோ முன் எழுதி ஒட்டப்பட்டிருந்த நிலவழித் தொடர்பு எண் குறித்துக் கொள்ளச் சொல்ல, நான் அதைப் பற்றி எனது முதல் சந்திப்பிலேயேக் கேட்டதற்கு அந்தப் பெண் அங்கிருந்தவர் நிலவழி தொடர்பு பேசியை எவருமே எடுக்க மாட்டார்கள் பயனில்லை என்றாரே எனக் குறிப்பிட்டேன்


உடனே ஒரு தொடர்பு எண்ணைக் குறிப்பிட்டார், அது யாருடையது எனக் கேட்டேன் பெயர் தந்தார் அது மருந்தாளுனர் பெயர்...அவர் நல்ல மனிதர் போதுமான முறையில் பொறுப்புடன் பேசி உதவி வர அந்த முதல் நாளிலேயே நங்கவள்ளி சென்றால் போட்டுக் கொள்ளலாம் என்றனர்.8 கி.மீ தள்ளி எல்லாம் சென்று போட்டுக் கொள்ள வாகனம் இல்லை நான் இங்கேயே போட்டுக் கொள்கிறேன் என்றேன்...


மறு நாள் மறுபடியும் முற்றுகை அப்போது மருந்து இல்லை இங்கே வராது வேண்டுமானால் உங்களுக்கு கோவி ஷீல்ட் போட நான் ஏற்பாடு செய்வதாக இரண்டு  நண்பர்கள் என்னுடன் இருசக்கர வாகனத்தில் வர...ஒருவர் என்னை அழைத்துச் செல்லும் எனது அன்புத் தம்பி பாலா அவர் மின்வாரியத்தில் முன்களப் பணியாளர், மற்றொருவர் ஒரு கல்லூரியின் முதல்வர் அவர் மகா எளிமையாக வந்திருந்தார், அவருக்கும் எனக்கும் நீண்டகால நட்பு தேசிய சேவை மாணவர் பணிகள் மூலம்...எல்லாம் சென்றோம் செவிலியரை சந்தித்தோம். சகோதரி நல்ல நிலையில் தாம் இருந்தார்.


வழிகாட்டினார்...ஆனால் அன்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எவருக்கும் போட வேண்டாம் என்று...மேலும் நாங்கள் அலுவலக ரீதியாக மட்டுமே வேண்டும் என்றும் செய்தி சொல்லி இருந்தோம்.


அங்கேயும் வேலை நடக்க வில்லை...மீண்டும்...நங்கவள்ளியிலும் வேலை நடக்கவில்லை என்று திரும்பினோம்


அதை அடுத்த மறு நாள் உள்ளூரிலேயே  11 மணி வாக்கில் வந்து ஊசி போட இருக்கிறார்கள் கேட்பவர்க்கு சொல்லுங்கள் என்றார் ஒரு வீட்டுக்கு வந்து ஆக்ஸிஜன் மற்றும் வெப்ப நிலையை அறிந்து செல்லும் இளைஞர்...


அந்த நாளில் எவருமே வரவில்லை...அன்று மாலை மீண்டும் குரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது நாளை ஒவ்வொரு மையத்துக்கும் 150 கோவிஷீல்ட், ,40 கோவேக்சின் பொது மக்களுக்கு என,, சேலம் கேம்ப் 300, சந்தைதானம்பட்டி 150 அதே போல 40 , நங்கவள்ளி 300 இப்படி பல ஊர்களிலும் பட்டியல் செய்தியாகத் தெரிவிக்கப்பட்டிருக்க‌ Covi Shiled result is 90% Covaxin 81% But covi Shield price is very less than Covaxin...

அதை அடுத்த நாளான இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வது போல 4 மணி வாக்கில் விடியலில் எழுந்து எல்லா முறைமைகளையும் முடித்து விட்டு 6 மணி சுமாருக்கு கோம்பூராங்காடு சென்றால் அங்கே எனக்கு முன்பே சுமார் 60 பேர்...அவர்களை விட்டு விட்டு இடத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்ற சிலர் இப்படி கட்டிய கயிறுக்கு வெளியே 10 பேர் கடந்து நான் 

 அதிகாலை 4 மணியில் இருந்தே காத்திருக்கிறார்கள் என்றார்கள். எனக்கும் பின் இருந்த பெண் உறுதியாக கிடைக்கும் என்றால் நான் பாருங்கள் இன்று இரவு 2 மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன் என்றார். நான் இங்கேயே வந்து படுத்துத் தூங்கிக் கொள்வது இரவெல்லாம் என்றேன்.

சுமார் 8.30 மணிக்கு அறிவிப்பு பலகையில்

18 வயதுக்கு மேற்பட்டு 45 வரை 150 கோவி ஷீல்ட்

இரண்டாம் தவணைதாரர்க்கு 12 covaxin

முதல் தவணை போட்டுக் கொள்ள விரும்பும் 45 வயதை மீறியவர்க்கு 18 என்றும் 


அனைவர்க்கும் அறிவித்தனர்...


அதே நேரம் மீதி இருக்கும் நபர்களுக்கு இல்லை போகலாம் என்றதும் அதுவரை ஒரே வரிசையில் இருந்தாரில் பலர் பின் இருக்க சிலர் முன்னே சென்று நின்று கொண்டனர்...காவலர் அதை முடிந்த வரை சரி செய்ய முயன்று வந்தார் எனினும் அது சரியாக வில்லை. வரிசை இரண்டு சிறு வரிசைகளும் ஒரு நீண்ட வரிசையும் என மூன்று வரிசையாகியிருந்தது...


மருத்துவரும் வந்து விட்டார்.


என் போன்றோர்க்கு மறுபடியும் இல்லை என்றார்கள்... ஆனால் கபாலீஸ்வரர் கோவிலின் முட்டைக்கார கெமிகல் கம்பெனியின் அதிபர் சாமியார் வேடம் பூண்ட எனது நண்பர் கிருஷ்ணன் சிறப்பு அனுமதி அளிக்கப் பட்டு உள் புகுந்து ஊசி போட்டுக் கொண்டு சென்றார் என்னையும் அவர் பார்த்தார்,சற்று நேரம் கழிந்தது பெரியவரே போங்கள் போங்கள் என்றார் என்னைக் காவலர்.


நான் சென்று மருத்துவரை அணுகினேன், அவரோ காவலரை அணுகச் சொன்னார், அவரையும் அணுகினேன் அவரும் எனது அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு பதில் சொல்வதற்குள் அவரை பிறர் அழைக்க உள் சென்றார், அதன் பின் நான் மறுபடியும் அணுக, உங்களுக்குத் தான் முதலிலேயே சொல்லி விட்டேனே காத்திருங்கள் என்றார்.


நானும் வரிசையில் நின்ற இடத்தில் இருந்த நண்பரிடம் சொல்லி விட்டு தனிமையாக ஒதுங்கி அமர்ந்தேன் நிழலில் சற்று நேரம் செல்ல சிலரை தனி வரிசையாக முன்களப் பணியாளர் என்ற முறையில் 10 பேருக்கு அனுமதி நீங்கள் தாம் கடைசி என்றார்.


அந்த டீ சர்ட் போட்டவர் பின் நில்லுங்கள் என்றார்

அதன் பின் வந்தவரை எங்களுக்கும் முன் நிற்க வைத்தார்

எனக்கும் பின் வந்த ஒரு போக்குவரத்துப் பணியாளரை எனக்கும் முன் அனுமதித்தார்

கடைசியாக என்னையும் அனுமதித்தார்.


உடனே பக்கத்தில் இருந்த ஒரு நபர் மிகக் கடுமையாக பேச ஆரம்பித்தார் முதல் தவணை போடத்தான் நாங்களும் வந்திருக்கிறோம் என...இவர்களை மட்டும் ஏன் அனுமதிக்கிறீர் என்றார், முன்களப் பணியாளர் என்ற முறையில் என்றார் காவலர், நாங்களும் அரசுப் பணியாளர்தாம் என்று இவர் கூட நேற்று சரியாகப் பேசினார் இன்று இவருக்கு முன் நாங்கள் வந்து விட்டோம் என்று என்னையும் சேர்க்க ஆரம்பித்தார் தனது சாடலுக்கு.


இதற்கிடையே எனது முன் இருந்த டீ சர்ட்காரர் தனது இரு மகள்களையும் கொண்டு வந்து நிறுத்த பக்கத்து வரிசையில் இருந்த ஒரு பெண் பிடித்துக் கொண்டார் உடனே கடைசி இரண்டு பேரை நிறுத்துங்கள் என என்னையும் சேர்த்து போடாமல் நிறுத்த முயல‌


எழுதுபவரோ இவரது கார்டை வாங்கி எழுத முயன்று விட்டேன், என எனது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கியவரை எழுதாதீர் என உத்தரவளிக்க ஆள் ஆள் ஆரம்பித்துவிட்டனர்.

அதில் வேறு நான் இவர்களைப் பற்றி எல்லாம் உரிய முகத்தைக் காட்டி விடுவேன் என அவர்களுக்குத் தெரியாமல் நான் ஒன்றுமே தெரியாதார் போல அமைதியாக அதுவரை இருந்தேன்...


கடைசியாக காவலர், மருத்துவரைக் காண்பிக்க, மருத்துவர் காவலரைக் காண்பிக்க இருவரும் என்னிடம் பதில் சொல்லாமல் தவிர்த்தனர்.

அதற்குள் ஒரு வாகன ஓட்டி ஒரு பெண்ணுக்கு சார்பாக பேசி நீங்கள் எங்கிருந்து வருகிறீர் , தங்கமாபுரி பட்டணம் இவருக்கு போடுங்கள், சார் நீங்கள் தான் தினமும் காலை மாலை இங்கு தானே நடைப்பயிற்சிக்கு வருகிறீர் பின்னால் தாமே போட்டுக் கொள்ளலாமே என்றார் நுழை நரியாக.


கடைசியாக எனது ஆய்தமான நாவை நானும் சுழட்ட ஆரம்பித்தேன் , எல்லாரையும் ஒரு பிடி பிடித்தேன், அந்த நுழை நரியை நீ பேசக்கூடாது என்று தடுத்தேன்.

காவலரை, மருத்துவரை ஏன் முதலில் வருவார்க்கு முதல் என்றிருந்திருந்தால் எனக்கும் கிடைத்திருக்கும் ஏன் அல்லது அனுமதி முன் சீட்டு கூட கொடுக்கலாமே யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள், வரிசைப்படி பார்த்தாலும் முன் கள சுகாதாரப் பணியாளர் என்ற முறையிலும் எனக்கு போட்டாக வேண்டும் என்று சொல்லி சத்தம் போட ஆரம்பித்தேன்...

அதன் பின் கோவிஷீல்ட் போதும் என்றேன்...போட்டார்கள் அதன் பின் அங்கு ஒரு நொடியும் நிற்காமல் வந்து சேர்ந்தேன்...


முதல்வர் எல்லாம் கவனிக்கலாம், மருத்துவ மனையில் வரிசையில் முன் நிற்பார்க்கு இல்லை என்ற நிலையும் பின் வருவார்க்கு இருக்கும் என்ற நிலையிலும் இருக்கும் சீர் கெட்ட நிலையை சீர் படுத்த மேலும் கண்டிப்பான காவல் நடவடிக்கைகள் வேண்டும், சிறுமைத் தனங்களைப்  பொறுப்பில் இருப்பார்  செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்


மேலும் மக்களும் முன் வந்தாரை மதித்து தங்களது இடத்தை மட்டும் ஒழுக்கம் நிலவ பொது இடத்தை புனிதப் படுத்த வேண்டும் அசிங்கப் படுத்தக் கூடாது...

எங்கிருக்கிறது கோளாறு, தவறு, குற்றம் எனில் வெளிப்படைத் தன்மை இல்லா நிலையால்...நிர்வாகக் கோளாறுகளால்...


இதே நிலை நான் அடுத்த முறை எங்கு சென்றாலும் நீடித்தால் அது முதல்வருக்கு தரவேண்டிய புகார் மனுவாகவே இருக்கும்


விநியோகம் சரியில்லை

தடுப்பூசி  விநியோகம் சரியில்லை

கவனம் செலுத்த வேண்டும் ஆட்சியாளர்களே!


மக்கள் இப்போது வேண்டும் என்கிறார்கள்...பெற்று சரியாக விநியோகம் செய்து அனைவரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.








No comments:

Post a Comment