Tuesday, June 8, 2021

என்ன தான் நடக்குது த.நா.மி.வாரிய மின் கட்டண முறைகளில்: கவிஞர் தணிகை

 என்ன தான் நடக்குது த.நா.மி.வாரிய மின் கட்டண முறைகளில்: கவிஞர் தணிகை







எங்களுடைய கட்டணம் நேற்று 07.06.2021ல் கணக்கெடுக்கப் பட வேண்டியது...கடந்த மாத கட்டணத்தையே கட்டுவதற்கு இந்த மாதம் 15 .06.2021 வரை கட்டலாம் என்றார்கள், மேலும் 31.06.2021 வரை கூட கட்டலாம் என்ற பேச்சும் நிலவுகிறது...இதெல்லாம் பரவாயில்லை மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைதான்.

இவர்கள் இந்த ஆண்டு இப்போது கணக்கெடுப்பதற்கும் மாறாக 2019 மே மாதத்தில் எடுத்த கட்டணத்தை இந்த மாதத்திற்கு கட்ட வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்து கொண்டிருக்கிறது.

தாறுமாறு தர்பாராக ஏதோ தப்புந் தவறுமாக அதிகமாக‌ எல்லாம் வருவதாக எல்லாம் பயனீட்டாளர்கள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு மாற்று என்னவென்றால் அவர்கள் வந்து கணக்கிட வில்லை எனில் நுகர்வோர் தாங்களாகவே மீட்டர் ரீடிங் எடுத்து கொடுத்தால் அதை ஏற்கிறோம் என்றார்கள்...

அப்படி எடுத்துக் கொடுக்கும் போது ஒரு கடிதம் எழுதி அதில் கட்டணப் பயன்பாட்டைக் குறித்துக் கொண்டு வந்து அதைக் கட்டி விடுவதாக உறுதி கொடுக்க வேண்டும் என்று ஒரு தகவல்...

காலை முதல் எங்களுடைய மின் கட்டணத்தை சீர் செய்து கட்டி வருவதற்கு 3 முறை நான் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செல்ல வேண்டியதானது. இத்தனைக்கும் எங்கள் உதவி மின் பொறியாளர் அலுவலகம் அடுத்த வீதியில் தான் இருக்கிறது...வெளியூர்க்காரர்கள் என்ன செய்வார்கள்?

இத்தனைக்கும் உதவிபொறியாளர் AE TNEB அலுவலர் எனது தொடர்பில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு கேட்டுச் சென்ற எனக்கே முதலில் லைன்மேன் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றார்(கள்). சரி என்று வீடு வந்து எனது கடிதத் தலைப்புடன் மின் கட்டண பயன்பாடு, முன் அவர்கள் குறித்திருந்த இரண்டு மாதத்துக்கு முன்பிருந்த பயன்பாடு, யாவற்றையும் குறித்துக் கடிதம் எழுதிக் கொண்டு சென்றேன்.

அங்கே ஒரு தற்குறி மக்களுள் ஒருவர்தான், மீட்டர் எண் எல்லாம் போட வேண்டும் என்று தனக்குத் தெரியும் என்று வேறு அறிவுரை செய்து கொண்டிருந்தது மற்றவர்களிடம்... எஸ்.சி. நெம்பர் இருந்தால் போதுமே இதெற்கெதற்கு மீட்டர் நெம்பர் எல்லாம் என எனக்குள் சுறீர் என்ற கேள்வி பிறந்தது..

கடிதம் எழுதிக் கொண்டு மின் பயன்பாட்டை குறித்துக் கொண்டு முதலில் மின் பயன்பாட்டை பதிவு செய்து கொள்ள ஒரு வரிசை.

அதில் மக்கள் எப்படி போனால் என்ன என சமூக இடைவெளி எல்லாம் இல்லாமலே...

அதே நேரத்தில் அதே இடத்தில் மற்றொரு பக்கம் நியாய விலைக்கடைப் போராட்டத்தில் காவல் துறையின் இடையூறு தேவைப்பட்டிருக்கிறது கூட்டத்தை சீர் படுத்த‌

அதில் சிலர் நிறைய எண்களுடனான  பட்டியலையே கொண்டு வந்திருந்தார்கள், ஒரு பெண்  தொழிற்பேட்டையின் எண்களை எல்லாம் கொண்டு வந்திருந்தார் ஒரே கடிதத்தில் பட்டியலிட்டு.. ஒருவர் என்ன கயிறு கட்டி இருந்தாலும் எந்த கவுண்டர் இருந்தாலும் நான் ஒரு வி.ஐ.பி என உள்ளே சென்று உரையாடியபடி இருந்தார். அதே ஈர வெங்காயத்துக்காகவே அனைவரும் வெளியே இருக்கிறார்கள் என்பதை அவர் பொருட்படுத்தாமல்... அதனால் வேறு தாமதமாகிக் கொண்டு இருந்தது.

மக்களும் புரியாமல் கட்டணம் கட்ட இருக்கும் ஒரு வரிசை, மின் கட்டணப் பதிவீடு செய்ய மற்றும் ஒரு வரிசை , கடிதம் எழுதி வர வேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே சிலர் தடுமாறிக் கொண்டிருந்தனர். 

கூட்டம் குறைவாகவே இருந்தாலும் ஒழுக்க நெறி இல்லாமல் இருக்கும் நபர்களாகவே பெரும்பாலும் இருந்தனர். நம்மைப் போன்ற சிலரே இடைவெளி விட வேண்டும் ஒருவருடன் ஒருவர் மோதக்கூடாது என்ற சிந்தனையில் இருந்தவ‌ர். அந்த அலுவலகம் இருக்கும் சந்தும் மிகக் குறுகிய சந்து... அதில் அதிகம் பேர் நிற்கவும் முடியாது இதனிடையே வாகனத்தில் வேறு ஓரிருவர் அதே வழித்தடத்தில் தாம் செல்வோம் என...

ஒரு அம்மா யார் முன் இருந்தால் என்ன என எவரையும் சட்டை செய்யாமல் இந்த செயல்பாட்டில் பெண் வேறு,ஆண் வேறு என அது அதன் வேலையை முடித்தால் போதும் என அரைகுறையாக சரியாக எழுதாத பேப்பர்களைக் கொண்டு வந்து பேப்பரில் பேனா கொடுங்கள், எழுதிக் கொடுங்கள் எனக் கேட்டு கவுண்டரில் உள்ளே கையை நீட்டியது , அந்த இருக்கையை பார்த்துக் கொண்டிருந்தவர்,ஒரு அரை மணி நேரம் ஆகும் அம்மா என அந்த அம்மா பேப்பரை வாங்கி வைத்துக் கொண்டு நாளைக்குத்தான் கணக்கு ஏறும் என வழி அனுப்பி வைத்தார்.

இப்படி ஒரு ஒழுங்கு முறைக்குள் அடங்கா மக்கள் இவர்களை வைத்து என்ன திட்டம் செய்தாலும் அதை நிறைவேற்ற இரும்புக் கரம் கொண்டு சட்ட திட்டங்களை அமல்படுத்த வேண்டும் இல்லையேல் கொஞ்சம் நெக்கு விட்டாலும் இவர்கள் திருந்தவே போவதில்லை... அவரவர் ஒழுக்கம் பேண எல்லாம் காவலர் தேவை நிர்வாகம் தேவை எனில் இந்த நாட்டை யார் தான் காப்பாற்ற முடியும்? ஒழுக்கமில்லாமல் சுதந்திரம் இல்லை என்ற நமது தத்துவ வேதாந்தி முன்னால் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி  ஆசிரியர் இராதாகிருஷ்ணன் சொல்லியதை நாம் ஒவ்வொரு கணமும் பொது இடங்களில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனது பணியை சரியாக நிறவேற்றி பதிவீட்டை செய்து பின் எப்படியோ அரை மணி ஒரு மணி நேரத்துக்கும் பின் வீடு வந்து இரண்டாம் முறைக் குளித்து விட்டு காலை உணவை முடித்துக் கொண்டு சரியான சில்லறையாக எடுத்துக் கொண்டு எங்களைச் சார்ந்த இரண்டு பில்லையும் கட்டி வந்து சேர்ந்து மறுபடியும் ஒரு குளியல்...

2019 மே மாத பில்லான ரூ. 50, ரூ 50 எனக் கட்டி விடுங்கள் கடைசித் தேதி 28.06.2021 என குறுஞ்செய்தியாக இரண்டு சர்வீஸ் இணைப்பு எண்ணுக்கும் வந்திருந்தது... கட்டி முடித்து வந்த பின் அந்த செய்தியை எனது செல்பேசி தெரிவித்திருந்தது.

இதற்கு மாற்றாகத் தான் காலையில் இருந்து 3 முறை நான் உதவி மின் பொறியாளர் அலுவலகம் சென்றிருந்தது.

நாங்கள் கட்டிய தொகை ரூ. 95,+260க்கு நாங்கள் அப்டேட் செய்து விட்டோம்...தலைவலி அடுத்த ஆகஸ்ட் மாதம் வரை இல்லை, இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்...

எனக்கு குறித்துக் கொண்டவர் மின் குறிப்பேட்டு விவர அட்டையில் ஏதோ தாமே அவர்கள் இலாகவினர் வந்து மின் பயன்பாட்டு குறியீட்டு அளவை எடுத்துச் சென்றது போல வழக்கம் போல  அவர்களாக வந்து கணக்கெடுத்தது போல 07.06.2021 தேதியில் நான் குறித்து தந்திருந்த விவரங்களை முன் தேதியிட்டு குறித்து தந்தார் ஆனால் நான் எனது கடிதத்தில் இன்றைய தேதி  அதாவது 08.06.2021 அதுவும் சுமார் 9.30 மணியளவில் காலையில் எடுக்கப் பட்ட மின் பயன்பாட்டு அளவு இது என்பதற்கு மாறாக...

பெட்டி நிரம்பி விட்டது, கை எல்லாம் வலிக்கிறது என பணம் வாங்கிப் போடும் இருக்கையில் இருந்தவர் தனது சக  அலுவலகத் தோழியிடம் சொல்லியபடி இருந்தார்... கை விரல்களை வளைத்துப் பிடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

ஆக அரசு அலுவலர்கள் ஒரு புறம்,இந்த விவரம் தெரியாமல் ,அடங்க மறுத்து திரியும் மக்கள் மறுபுறம், ஒழுக்கம் மீறிய வெற்று பந்தாப் பேர்வழிகள் உள்புறம் என 

இந்த த.நா.மி.வாரிய கணக்கெடுப்பு இல்லா இன்றைய நடைமுறை, கட்டணம் செலுத்தல் கோவிட்...19 இரண்டாம் அலையின் நீட்சியை இன்னும் அதிகப் படுத்தி விடும் போலான முறையில் செயல்படுகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது.

வீடு வீடாக அவர்களே சென்று வீட்டுக்காரர்களையே கணக்கெடுக்கச் சொல்லி வாங்கி பயன்படுத்தி இருந்தாலும் இந்தளவான தொல்லைகளை தவிர்த்திருக்கலாம். 

அது சரி எவர் செத்தால் என்ன எவர் வாழ்ந்தால் என்ன எவருக்கென்ன ?

அரசும் நிர்வாகமும் நடந்தால் சரி என்கிறீர்களா?

அரசு இன்னும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்...சரியான முறையில் தாம் ஸ்டாலின் தலைமையில் இருக்கும் அரசு சென்று கொண்டிருப்பதாக நாங்களும் மக்களும் நம்பிக் கொண்டிருக்கிறோம்...

ஒரு நாளில் எத்தனை முறை மின் வெட்டு செய்வீர்கள்? கணக்கே இன்றி வரையறையே இன்றி எங்கள் மேட்டூர் பகுதிகளில் அடிக்கடி நிகழும் மின்வெட்டை சகிக்க முடியவில்லை.... எங்கள் வீட்டு மின் சாதனப் பொருட்கள் எல்லாம் செயல்  இழக்கின்றன....தி.மு.க அரசாட்சிக்கு வந்தால் மின் வெட்டு இப்படித்தான் இருக்கும் என அ.இ.அ.தி.மு.க தேர்தல் பிரச்சார உரையில் சொல்லியதை நீங்கள் நினைவு வைத்து அதற்கு மாற்றை ஏற்படுத்துங்கள் மறுபடியும் இது ஒரு சாதாரண மனிதனின் வேண்டுகோள் முதல்வருக்கு....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை...

பி.கு: மாதா மாத மின்சாரக் கட்டண கணக்கீட்டு முறை வரும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்னதாக நினைவு அது எப்போதிருந்து அமலாகும்?...ஒரு வேளை எனக்கு நினைவுப்பிறழ்தல்கள் வழக்கம் போல உண்டே அதே போலா இதுவும்...





No comments:

Post a Comment