Friday, July 3, 2020

(சிஸ்டமே சரி இல்லை) தனி மனிதர்களே சமுதாயத்தை பிரதிபலிக்கிறார்கள்: கவிஞர் தணிகை

(சிஸ்டமே சரி இல்லை) தனி மனிதர்களே சமுதாயத்தை பிரதிபலிக்கிறார்கள்: கவிஞர் தணிகை

Bacterial Clones Show Surprising Individuality | Quanta Magazine

சிஸ்டமே சரி இல்லை. குற்றம் செய்தவர்களை சத்தியமா விட்டு விடக் கூடாது என்றார் ரஜினிகாந்த். உடனே ஊடகங்கள் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. பிறர் சொல்லிக் கொடுப்பதை பேசி செய்வார்கள் தாமாகவே பேசும்போது அது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. தலைவர்கள் நிதானமாகவே தெளிவாகவே ஒரு முடிவெடுத்தே  பேசுவார்கள் செயல்படுவார்கள். அது போலவே எனது இந்தப் பதிவும்.எம்.ஜி.ஆர் பாடல்களை எழுதிய பட்டுக் கோட்டையை விட எம்.ஜி.ஆருக்கு பேரும் புகழும் பொருளும் அதிகம் கிடைத்தது .

இங்கு ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூரக் கொலைகளில் பரபரப்பு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க மறுபடியும் ஒரு சிறுமியின் கொடூர வன்முறை புதுக் கோட்டையில் அரங்கேறிய செய்தி வந்து விட்டது. உ.பியில் மந்திரியைக் கொன்ற கூட்டத்தினரிடம் சிக்கி 8 காவலர்கள் அதில்  ஒரு துணை ஆய்வாளரும் சுடப்பட்டுள்ளனர். கொலைகாரர்கள் கூரை மேல் ஏறி நின்று காவல் படையை துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி உள்ளனர்.

இந்தப் படுகொலைகளில் (பெனிக்ஸ்...) பயன்படுத்தப் பட்ட லத்தி இரத்தம் தோய்ந்ததைக் காணோம் என்றார்கள்,சிசிடிவி காட்சிகள் அன்றாடம் அழிக்கப்படுமாறு செய்திருக்கிறார்கள் என்றார்கள் ஆனால் இப்போது அது கொஞ்சம் கிடைத்திருப்பதாக விசாரித்து வரும் ஐ.ஜி. சங்கர் சற்று முன்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியிருந்ததை கவனித்தேன்.

 ரேவதி முக்கிய கண்ணால் கண்ட சாட்சி பயந்து கொள்கிறார்.அவரின் கணவர் சந்தோசம் கூட வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டுள்ளார். தமிழக அரசு ஒரு மாதம் விடுமுறையில் சம்பளத்தைக் கொடுத்து அவரின் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்து வருவதை தொலைக்காட்சி மற்றும் புகைப்படங்கள் சொல்கின்றன. அவரின் பெண் குழந்தை உண்மையைச் சொல்லும்மா எனச் சொல்லியதாக செய்திகள் இருக்கின்றன....உண்மைதான் இந்த சமுதாயத்தில் எப்படி எல்லாம் ஒளிந்து வாழ வேண்டிய பயந்து வாழவேண்டிய பாதுகாப்பு கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் சாட்சிகள்.

இந்நிலையில் ஒரு காவலர் அப்ரூவராக மாறப் போவதாகவும் செய்தி புதிய  தலைமுறைச் செய்திகளில் வந்தது.ப்ரண்ட் ஆப் போலீஸ் மேலும் விசாரணை இருக்கிறது என செய்திகள்... நல்ல வேளை பிரதீப் பிலிப் என்னும் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக்கும் கூட ஒரு முறை ரெஸ்பான்ஸ் செய்து ஒரு கடிதம் அனுப்பி இருந்தார் அவர்தாம் அந்த  பிரண்ட் ஆப் போலீஸ் திட்டத்தின் நாயகன்.நானும் ப்ரன்ட் ஆப் போலீஸ் ஆக உள்ளூர் காவல் நிலையம் வரை சென்று அவரது கடிதத்தைக் கொண்டு சென்று காட்டி விட்டு வெகு நேரம் காத்திருந்தேன். ஆனால் அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும் பின்னால் பார்க்காலாம் என்று ஏதோ சமாதானம் செய்து திருப்பி அனுப்பியவர்கள் அதன் பின் அதைப் பற்றி எந்தப் பேச்சையும் எடுக்க வில்லை. நானும் விட்டு விட்டேன். அது நடந்து வெகுகாலம் பல்லாண்டு இருக்கும் ஆனால் இந்த அளவு தான் நினைவு இருக்கிறது.... அவர் என்ன நோக்கத்துக்காக ஆரம்பித்தாரோ இந்த சம்பவத்தில் அவர்களும் இருக்கிறார்கள் ஆனால் நல்ல பேருடன் அல்ல.
Individualism: True and False - Foundation for Economic Education
நான் சொல்ல வருவதைச் சொல்லி விடுகிறேன் அதற்குள் எனது மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு மறுபடியும் தொடர்புக்கு வந்துள்ளது. என்னிடம் யு.பி.எஸ் வேறு தற்போதைக்கு இல்லை இன்டர்நெட் மோடம் கனக்டிவிட்டி செய்யும் அடாப்டர் வேறு அடிக்கடி போய் திடீர் திடீரென 150 ரூ சூடு போட்டு விடுகிறது . இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் எனில் நமது சிஸ்டம் சரியில்லை என்பதற்காக. அது இலஞ்ச இலாவண்ய வம்பு தும்புகளில் வெகுவாக மாட்டிக் கொண்டு உள்ளது. எமது கணினி அமைப்பு கூட சிஸ்டம் என்றுதான் சொல்லப்படுகிறது. எனக்கு போதிய வசதி இன்மையால் அதன் பசிக்கு போதிய மின்சார உணவு கிடைப்பதில்லை.

கல்வி முறை சரியில்லை என்றால் நாங்கள் எல்லாம் எதிலிருந்து படித்து வந்தோம் என்ற குரல் இருக்கிறது எழுகிறது உண்மைதான். இந்த சம்பவத்தில் காவல் துறை இருக்கிறது. இவர்கள் இளங்கலை முதுகலை படித்தவர்கள் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்களாக உள்ளனர். ஐ.பி.எஸ் படித்த கனவான்கள் எஸ்பி டி.எஸ்.பி என்ற நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு சேவகம் செய்யும் தலைமைக் காவலர், காவலர் அவர்களுடன் ப்ரண்ட் ஆப் போலீஸ். இது ஒரு துறை

அடுத்து மருத்துவக் கல்வி பயின்ற மருத்துவர் என்றால் வேறு யார் தெய்வம் என்பார்களே அந்த வெண்ணிலா என்ற மருத்துவர் அவர் மேல் உள்ள குற்றச் சாட்டுக்கு அவர் என்ன நிலையில் உள்ளார் என்றும் செய்திகளில் இன்னும் தெரிய வரவில்லை.
Biochemical Individuality - Patricia Daly
அடுத்து சட்டத்தில் தேர்ச்சி பெற்ற நீதி மன்ற நடுவர்(ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட்) அவர் பேர் சரவணன் என்று சொல்லக் கேள்வி. அவரைப் பற்றி அவர் கைது செய்யப் படுகிறாரா அல்லது என்ன விசாரணை அவர் மேல் என்று ஊடகத்தில் இன்னும் செய்திகள் பரவலாக பிரபலமாக கிடைக்கவில்லை. அவர் எப்படி சரியாக விசாரிக்காமலேயே பார்க்காமலேயே சிறைக்கு செல்ல அனுமதித்தார்.

அடுத்து சிறைக் காவலர், வார்டன் போன்றோர்  இப்படி சமூகத்தின் தூண்களான துறைகள் மெத்தப் படித்தவர்கள் இந்தக் குற்றப் பிண்ணனியில் தொடர்புடையவராக இருக்கின்றனர் என்பது ஆதாரப் பூர்வமாகி இருக்கிறது.

சிறை என்றாலும் காவல் துறை என்றாலும் அதன் மேல் பொதுஜனத்துக்கு நம்பிக்கை ஏற்படுமாறு இவை எல்லாம் இல்லை. நல்லவர்கள் காவல் துறைக்குச் செல்ல அஞ்சுகிறார்கள் அதிலும் பெண்கள் காவல் நிலைய வாசலை மிதிக்கவே பயப்படுகிறார்கள் என்பதெல்லாம் செய்திகள் இதில் உண்மை இல்லாமல் இல்லை.

ஆக அனைவர் மேலும் சட்டம் நீதி நிலைநாட்டப் படும் என்றும் சி.பி.சி.ஐ.டி . தமிழக அரசு ஆகியவை அறிக்கை கொடுத்துள்ளன. சி.பி.ஐ தனது கடமையைச் செய்யுமாம்.
Rugged Individualism Cannot Save Us. Only Enlightened Collectivism ...
 ஆக முக்கியமாக எல்லாத் துறைகளிலும் படித்த கனவான்கள்: மருத்துவம், சட்டம் , நீதி, இளங்கலை, முதுகலை எல்லாம் ஆம் எல்லாக் கல்வியும் கற்றுக் கொடுக்கப் பட்ட மனிதங்களே இவை யாவும். ஆக கல்வி என்பது இங்கு குயுக்தி குள்ளநரித் தனத் தந்திரம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது இவர்கள் படிக்காத பாமரர்களையும் சட்டம் பற்றி எல்லாம் பெரிதும் தெரியாதாரை எல்லாம் தமக்குத் தேவையான வழி வகைகளில் வழிப் படுத்திக் கொள்கிறார்கள் அல்லது கொல்கிறார்கள்...

இந்த நடைமுறைகளில் ரேவதி தலைமைக் காவலர், மதுரை உயர்நீதிமன்றக் கிளை, ஊடகங்கள் ஆகியவை பெரிதும் பாராட்டப் படும் வண்ணம் தோன்றக் காரணம் ஏற்கெனவே இருந்து வரும் நமது கட்டமைவு எப்படி நடந்து வந்து கொண்டிருக்கிறது என்ற நிலைதான். இல்லையெனில் இந்த மூன்று அம்சங்களுமே தமது கடமையைத் தான் செய்து வருகிறார்கள் என்பது விளங்கும். அவரவர் கடமையைச் செய்வதே பெரும் சாதனையாக விளங்கும் வண்ணம் அரசமைப்புகள் இயங்கி வருகிறது என்பது இவற்றின் மூலம் தெரியவருகிறது. என்றாலும் இந்த மூன்று அம்சங்களில் ஈடுபடும் மூன்று நிலையில் உள்ளார்க்கும் உலக மனித குலமே நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளது.  ஆனாலும் இழந்த அந்த 2 உயிர்களுக்கு அது போல தினமும் இரையாகிவரும் உயிர்களுக்கு இவை எல்லாம் எப்படி நீதியாக முடியும் என்றுதான் யோசிக்க வேண்டி இருக்கிறது. இது போல எண்ணிலடங்கா நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன மறைக்கப்பட்டிருக்கின்றன என்று மனித உரிமை ஆணையம் சொல்லி வருகிறது

இந்நிலையில் இதில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் என்பார் தமது வெண்ணிறக் காரில் ஏறித் தப்பித்து செல்லும்போது ஜெயங்கொண்டம் என்ற சோதனைச் சாவடியில் சி.பி.சி.ஐ.டி கடிவாளத்தால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை செய்தி வாயிலாக அறிந்தேன். விசாரிக்க வந்த நீதிமன்ற நீதிபதியையே நீ என்னடா செய்ய முடியும் என்று தரக்குறைவாகப் பேசிய தலைமைக் காவலர் முத்துராஜ் சரணடைய இருப்பதாகவும் செய்தி.அந்த நீதிபதிக்கு முகமன் கூட செய்யாத காவல் துறை உயர் பதவி அலுவலர்கள் பற்றி செய்தி பெரிதாக இல்லை. அதனிடையே நிறைய உயர் அதிகாரிகள் பதவி உயர்வும் இடமாற்றமும் நிகழ்ந்துள்ளன.

காவல்துறை டி.ஜி.பி. அறையில் மக்கள் நம் எஜமானர்கள் அவர்களின் சேவகர்களே நாங்கள் என்ற காந்தியின் வாசகம் இடம் பெற்றுள்ளதை உயர் காவல் துறை அதிகாரி ( அதிகாரி என்பதன் மறு பெயர் அலுவலர் என்பதாகும்)கூறினார் இந்த சம்பவத்துக்கும் பின். பெண்களை எப்படி நடத்த வேண்டும், சிறுவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் நன்றாக சொன்னார். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.  அவர் சொல்படி அதன் படி எல்லாக் காவலரும் காவல் துறையும் நடந்தால் உண்மையிலேயே எவ்வளவு நன்றாக இருக்கும்...
An Analysis of American Individualism Culture – haosuyawen
மன்னிக்கத் தெரிந்தவற்றை மன்னிப்பதும் அடங்காமல் ஆர்ப்பரித்து குற்றப் பிண்ணனி கொண்டாரையே தண்டிப்பதும் அதுவும் சட்டப் பிண்ணனியுடன் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவேண்டியதுமான காவல் துறைப் பணி தூய்மையாக நடக்கட்டும் ஒழுக்கம் நிலவட்டும். நற்பணி செய்வாரின் புகழ் நீடித்தோங்கட்டும்.

அந்தக் காலத்தில் சிறு சிறு குற்றங்கள் செய்வார்க்கு இந்த மரத்துக்கு இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி விட்டுப்
 போ, ஒரு குயர் பேப்பர் வாங்கிக் கொடுத்து விட்டுப் போ, என்றெல்லாம் தண்டனை கொடுத்து அவர்களை மன்னித்த காவல் நிலையம் பற்றி எல்லாம் எனது தந்தை சொல்லக் கேட்டதுண்டு.அப்போதெல்லாம் பெரிதாக எவரையுமே காவல் நிலையத்துக்கு அழைத்துக் கொண்டு எல்லாம் செல்ல மாட்டார்களாம் ஏன் எனில் பெரிதாக அப்படி எந்தப் புகாரையுமே மக்கள் கொடுக்கவும் மாட்டார்களாம். ஆனால் இந்த வழக்கை தாமாக ஒரு உயர் நீதிமன்றமே கையில் எடுத்திருக்கும் அளவு நிலை வந்திருக்கிறது.
Professor Chiye Aoki - The Neurobiological Roots Of Individuality ...
இது போன்ற செரிக்க முடியாத மனித குல இழிவான சம்பவங்கள் இனியாவது நடக்காது இருக்க இயற்கை நமக்குத் துணை புரியட்டும். ஏன் அந்தச் சூழ்நிலையில் மேல் அதிகாரிகளுக்கு இதைப் பற்றி வேறு எவருமே தெரிவிக்க முடியவில்லை அப்படித் தெரிந்திருந்தால் தடுத்திருக்கவும் உயிர் போகுமளவு நிலை இருந்திருக்காதே என அந்த உயர் காவல் அதிகாரி சொல்வது எனக்கும் கூட சரியாகப் படுகிறது. அது போன்று செய்திருந்தால் இருவர் உயிரும் போயிருக்காதோ...என்ற நப்பாசை...நடந்து முடிந்த பின்னே சித்திரத்தை மாற்றி எழுதவே முடியாதே...இவர்கள் எல்லாத் தடயங்களையும் அழிக்கும் அளவுக்கு காலக் கெடுவை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதும் செய்தி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை





No comments:

Post a Comment