Tuesday, July 7, 2020

ஷிச்சோரி: கவிஞர் தணிகை

ஷிச்சோரி: கவிஞர் தணிகை

நாம் வெற்றி பெற வைப்பதை வெற்றியை மட்டுமே போதிக்கிறோம் அதை அடைய முயற்சி செய்யச் சொல்கிறோம்
ஆனால் எல்லாவகையிலும் முயன்று தோல்வி அடைந்தால் அந்த தோல்வியிலிருந்து எப்படி மீள்வது அதன் பின் எப்படி மகிழ்வுடன் வாழ்வது என்பதை சரியாகச் சொல்லித் தராமல் விட்டு விடுகிறேமே அதுதான் இங்கு நமக்கு முன் உள்ள பிரச்சனை என நாயகன் மூலமாக இந்தப் படத்தில் சொல்லப் படுகிறது.தற்கொலை தீர்வல்லவே எனச் சுட்டிக் காட்டுகிறது
These videos of Sushant Singh Rajput playing with kids will melt ...


சுஷாந்த் சிங் ராஜபுத் இறந்தது அண்மைக் காலத்தில் கொலையா தற்கொலையா என நிறைய சந்தேகங்களை எழ வைத்த நிலையில் அவரது தந்தை இந்த வழக்கை சி.பி.ஐ எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் இதெல்லாம் ஏற்கெனவே செய்திகளை கவனிப்பார் அறிந்த செய்தியே.

இவரின் தில் பச்சேரா என்ற ஜுலை 24ல் வெளியிடப்படும் படத்தின் ட்ரெய்லர் என்ட்கேம் ஆங்கிலப் படத்தை விட 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப் பட்டது என்ற சாதனையை ஏற்படுத்தி உள்ளது. 34 வயதுக்குள்ளாகவே இந்த மனிதர் தோனி படத்தில் நடித்து பிரபலமாகி இந்திப் படங்களின் முன்னணி கதாநாயகராக வந்து விட்டவர் எப்படி இப்படி முடிந்து போனார் என்பது கேள்விக்குறியுடனான ஆய்வுக்குள்ளாகும் நிகழ்வுதான்.
Happy Birthday MS Dhoni: Fans Remember Sushant Singh Rajput as ...
இவரது ஷிச்சோரி என்ற படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது இன்று தோனியின் பிறந்த நாளில் அவரது வாழ்வின் பகுதியை வண்ணப் படமாக நம்முன் உலவ விட்ட இந்த மனிதன் அசைவற்றுப் போனபின்னும் இவரது அதிர்வலைகள் இன்றைய உலகை அசைத்து வருவது இவரது சாதனைதான்.

ஷிச்சோரி என்றால் மேலோட்டமான என்பது பொருளாம். இந்தக் கதை ஒரு நுழைவுத் தேர்வு எழுதிய இளைஞர் அந்தத் தேர்வில் தேறாததால் தற்கொலைக்கு முயன்று சாகக் கிடக்கிறார் அவரை தாயும் தந்தையும் அவரது நண்பர்களும் எப்படி உயிர்ப்பிக்கிறார்கள் உயிர்ப்பிக்க வைக்கிறார்கள் என்பதுதான் கதை. கதை ஆரம்பமே சற்று சிக்கலாக இந்தப் படத்தை ஆரம்பிக்கிறது நெருடலாக பார்க்க நேரிடுகிறது. ஆனால் அதன் பின் தந்தை அவரது கதையை கல்லூரி வாழ்க்கையை விளக்க ஆரம்பிக்கும்போது நேரம் போவதே தெரியாமல் மகிழ ஆரம்பித்து விடுகிறோம்

அதனால் தான் இந்தப் படம் செப் 2019ல் வெளி வந்திருந்தாலும் பரவாயில்லை என்று பார்க்காதார் பார்க்கட்டும் என எழுதுமளவு பாதிப்பு.அதில் ஒரு கேள்வி சரி ஒரு நுழைவுத் தேர்வில் 10 இலட்சம் பேர் எழுதுகிறார் எனில் 10ஆயிரம் பேர் தேறி உரிய இடத்தைப் பெற்று விடுகிறார் எனில் மீதமுள்ள 9 இலட்சத்து 90 ஆயிரம் பேரின் நிலை என்ன அவர்கள் எல்லாம் இப்படி தோல்வி கண்டு தற்கொலைக்கு போவதென்றால் உலகின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும்

நாம் வெற்றி பெற வைப்பதை வெற்றியை மட்டுமே போதிக்கிறோம் அதை அடைய முயற்சி செய்யச் சொல்கிறோம்
ஆனால் எல்லாவகையிலும் முயன்று தோல்வி அடைந்தால் அந்த தோல்வியிலிருந்து எப்படி மீள்வது அதன் பின் எப்படி மகிழ்வுடன் வாழ்வது என்பதை சரியாகச் சொல்லித் தராமல் விட்டு விடுகிறேமே அதுதான் இங்கு நமக்கு முன் உள்ள பிரச்சனை என நாயகன் மூலமாக இந்தப் படத்தில் சொல்லப் படுகிறது.தற்கொலை தீர்வல்லவே எனச் சுட்டிக் காட்டுகிறது

அந்த வெற்றியை கிடைக்காத என்னதான் முயன்றாலும் எட்டாத கனியாகவே இருக்கும் அந்த வெற்றிக்காக நாம் எதை எல்லாம் அதிகம் விரும்புகிறோமோ எதை எல்லாம் வாழ்வின் பிடிப்பாக வைத்திருக்கிறோமோ எதை எல்லாம்  நேசிக்கிறோமோ அதை எல்லாம் தியாகம் செய்து போராடும் போதுதான் அந்த வெற்றி நமது கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும் என்ற சூத்திரமும் சொல்லப் பட்டுள்ளது.

மது அடிமையான ஒருவர் மதுவை கைவிடுகிறார் நோய் வாய்ப் பட்டு மருத்துவ மனை வரை சென்றும் கூட தாம் நட்புக்காக எடுத்துக் கொண்ட உறுதி மொழியை காப்பாற்றுகிறார் உள சுத்தியுடன்

ஒருவர் தமது உயிரினும் இனிய காதலியுடன் பேசுவதை தொடர்பில் இருப்பதை துறக்க முனைகிறார்

ஒருவர் பாலியல் புத்தகங்கள் படிப்பது சுய இன்பம் அனுபவிப்பது என்ற செயல்பாட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கிறார்

ஒருவர் அம்மா பாசத்தையும் மறுத்து அவருடன் பேசுவதையும் நிறுத்தி வைக்கிறார்

ஒருவர் சிகெரெட் புகைப்பதை  தொடர்ந்து புகைத்து வந்தவர் நிறுத்தி முயல்கிறார் இப்படி அந்தக் கல்லூரியில் மிகவும் கேவலமாக பார்க்கப் பட்டு எப்போதும் தோற்பவர்கள் என்ற பேருடன் இருக்கும்   4 ஆம் எண் விடுதியில் தங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெரிதும் முயல்கிறார்கள் எப்படி குறிக்கோளை எட்டுகிறார்கள் என்பதுவே கதை.

அதை விட மேலும் எப்போதும் நமக்கு டங்கல், கனா,  தோனி போன்ற படங்களில் எல்லாம் கூட பொதுவாக எல்லாப் படங்களிலுமே எம்.ஜி.ஆர் பாணியில் வெற்றி பெறுவதையே காட்சிப் படுத்தி இரசிகர்களை இரசிக்க வைத்து மகிழ வைப்பதற்கு மாறாக ஒரு மாற்றாக கூடைப்பந்து கடைசியில் கூடையில் விழும் வெற்றி பெறுவார்கள் என்ற நிலையில் அது தவறி கீழே விழுந்து தோல்வி உற்றாலும் வெற்றி பெற்ற அணியினர் தாம் எப்படி வெற்றி பெற்றோம் என்பது தெரிவதாலும் இந்த தோல்வி பெற்ற அணி எப்படி எல்லாம் அதற்காக வெற்றி பெற முயன்றிருக்கிறது என்பதெல்லாம் உணர அனைவராலும் மதிக்கப் படுமளவு இவர்களுக்கு பாராட்டை பெற்றுத் தருகிறார்கள்.
IIT-Bombay to host a special screening of Chhichhore
வெற்றி பெறுகிறோம் தோல்வி பெறுகிறோம் என்பதுகூட முக்கியமல்ல அதற்காக எவ்வளவு முயல்கிறோம் உண்மையாக என்பதுதான் மிக முக்கியம் அதையும் தாண்டி வாழ்வு இருக்கிறது அந்த வெற்றி தோல்விக்காக வாழ்வை விட்டு விடக் கூடாது என்ற அரிய கருத்த பதிவு செய்கிறது.

மேலும் அந்த தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிர் பிழைத்து கல்லூரிக்குச் செல்கிறார் என்பதும் எந்தக் கல்லூரிக்கு என்பது எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படத் தேவையில்லை என்பதாக திரைப்படம் முடிகிறது

கலாம் கூட தாம் பைலட் ஆக வேண்டும் என நேர்முகத் தேர்வு சென்று அதில் 8 பேர்  தேர்வான சூழ்நிலையில் 9 ஆம் ஆளாக இருந்ததால் வெளியேறி இமயமலைச் சாரல் சென்று அங்கு ஒரு சாமியாரிடம் சென்று அவரது பேச்சைக் கேட்டு அறிமுகமாகி ஆறுதல் பெற்று அவரிடமிருந்து சில புத்தகங்களும் பரிசாகப் பெற்று திரும்பினார் என்று அவரது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். அந்த சாமியார் யார் தயானந்த சரஸ் வதியா இல்லை வேறு யாரோ என்று பேர் இப்போது நினைவில்லை எனக்கு...

படத்தில் ஒவ்வொரு நடிகரும் சும்மா கலக்கி உள்ளார்கள். செக்ஸா என்பவராகட்டும் மம்மி என்பவராகட்டும் ஆக்சிட் அணில், பேவ்டா, டெரிக் இப்படி எல்லா நடிகர்களுமே மிகவும் அருமையாக செய்திருக்கிறார்கள் சுமார் 58 கோடி வரை செலவு செய்து எடுக்கப் பட்டு 215 கோடி வரை சம்பாதித்த பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படம் . இந்தப் படத்தை சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் பார்த்திருப்பார் இதைப் பார்த்த பின்னும் தாம் உயிர் கொடுத்து உருவம் கொடுத்து நடித்த இந்தப் படத்தைப் பார்த்த பின்னும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாரா இருப்பாரா என்பது நமக்கே கூட ஐயப்பாட்டை ஏற்படுத்துவதாக இருக்கிறது.ஷ்ரத்தா கபூர் நன்றாக இணையாக செய்திருக்கிறார். நன்றாக இரசிக்க முடிந்த திருப்தியான மொழி கடந்தும் பார்க்க வேண்டிய சில பார்வகளையும் கோணங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொள்ளும் படம்

இதன் இயக்குனர் நிதேஷ் திவாரி தயாரிப்பாளர் நதியாவாலா கிராண்ட்சன் கம்பெனி போன்ற அனைத்து உழைப்பாளர்களையும் பாராட்டலாம். நல்ல மெசேஜ். நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நற்சேதி சொல்லும் தேவையான படம்.
Chhichhore box office collection day 6: Sushant Singh Rajput ...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment