Sunday, July 19, 2020

மதம் கடந்தவர்கள்: கவிஞர் தணிகை

மதம் கடந்தவர்கள்: கவிஞர் தணிகை



மதம் கடந்தவர்கள் என்ற வரிசையில் நிறைய மாமனிதர்கள் பற்றி சொல்லலாம். இங்கு நான் சொல்லப் புகுவது என் மனம் கவர்ந்த மதம் கடந்த சிலரைப் பற்றி மட்டுமே. வாய்ப்பு ஏற்பட்டால் மற்றவர்களைப் பற்றியும் சொல்லலாம்.

1.அன்னை தெரஸா:
98 Best Legendary's images | Apj quotes, Kalam quotes, Genius quotes

இவரை பிறப்பாலும் இவரின் வாழ்க்கை முறைகளாலும் கிறிஸ்தவர் என்கின்றனர். இவர் சார்ந்த இயக்க முறையிலான பதிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன இவர் பேர் சொல்லி இந்தியா முழுதும் ஏன் உலகெங்கும். ஆனால் இந்த மூதாட்டி சிறிய பெண்ணாக பள்ளிப் படிப்பு முடித்து ஆசிரியப் பணி புரியும்போதே தனது நாட்டிலிருந்து கொல்கொத்தாவுக்கு சேவை செய்ய வருகிறேன் என்று முடிவெடுத்துக் கொண்டே வந்தவர் அதன் பின் செவிலியர் பணியை பயிற்சி முடித்து அவர் சார்ந்த மிஷினரி பேரியக்கத்திலிருந்து விடுபட்டு தனக்காக  ஒரு தனி அமைப்பை தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு எல்லாவற்றையும் அர்ப்பணித்தவர். இவரை அவர்களது கிறித்தவ அமைப்பு கடவுளுக்கு அடுத்த நிலையில் புனிதர் என்று பட்டம் கொடுத்து பாராட்டி உள்ளது. செயின்ட். இவரது சேவை குறித்து சில வார்த்தைகளாலே சொல்ல முடியாது. எந்த நோயாளியாக இருந்தாலும் தொட்டு அணைத்து அரவணைத்து தூக்கிச் சென்று மருத்துவ சிகிச்சை செய்த மாபெரும் மனிதம். இவரது மடியில் எத்தனையோ உயிர்கள் பிரிந்துள்ளன நிம்மதியாக. இவரிடம் எத்தனையோ குழந்தைகள் பசி, பஞ்சம் பட்டினி தீர்ந்தன. எத்தனையோ நோயாளிகள் நோய் நீங்கி நலம் பெற்றனர். இவர் அவர்களை மதம் பார்த்து ஏற்றதும் ஒதுக்கியதும் இல்லை. சேவை என்பதற்கான ஒரு முழு வடிவம் இது.இலக்கணம் இவரே என்பேன்.
இவரை எனது வாழ்வில் பிடித்தமானவர்களுள் ஒருவராக வைத்துள்ளேன்.
எனது இளமையில்

ஓ! பெண்களே
உங்களில்
எவரேனும்
இன்னொரு தெரஸாவாகத்
தயாராக இருந்தால்
அவர்க்கு
செருப்பாகத் தயாராய் இருக்கிறேன்
    என்று எழுதி அதை எனது முதல் கவிதை புத்தகமாக வெளியிட்ட மறுபடியும் பூக்கும் நூலிலும் வைத்துள்ளேன்.

2.அ.ப.ஜெ.அப்துல்கலாம்:
Teachers, who didn't need a classroom | Newsmobile

 முகமதிய இனம் பிறப்பால். ஆனால் இவர் ஆகாய விமானப் படையில் விமானியாக தேர்வு பெறாமல் தவறியபோது இமாலயச் சாரலில் இந்து மத துறவியின் அன்புக்கு பாத்திரமாக விளங்கி சில புத்தகங்களை ஆறுதலாகப் பெற்றமையும், திருப்பதி முதலான எல்லா கோவில்களுக்கும் சென்ற போதும் குடியரசுத் தலைவராக சென்ற போதும் பிற மதத்தினர் கையொப்பம் இட்டுச் செல்ல வேண்டும் என்ற கட்டுப் பாட்டைக் கடைப் பிடித்தவர். சிஸ்டம் உடன் ஒத்துப் போக விரும்பும் எளிய மனிதர். கொஞ்சம் கூட கர்வம் தலைக்கனம் கொள்ளாதவர். அமரும் போது இவர் கால் மேல் கால் போட்டு எங்கும் அமர்ந்தவரில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் , நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்ற உலக மனித சகோதரத்துவத்தை  ஐ.நாவில் பேசி தாம் தமிழர் என்ற உண்மையை நிரூபித்தவர். நிறைய தமிழ் படித்தவர் எழுதியவர், கையொப்பம் தமிழில் இட்ட தமிழர் . எனக்கு தமது கைப்பட குடியரசுத் தலைவராக இருந்த போதே எழுதியவர். மக்கள் குடியரசுத் தலைவர் என்ற பேர் பெற்றவர். சில நேரம் இவர் சில சன்னிதானங்களுடன் சென்று சந்தித்த போது அவர்கள் மேலும் இவரைக் கீழும் அமர வைத்த போது நமக்கு கோபம் வந்தது. இவர் சிரித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்க விமான நிலையத்தில் இரு முறை ஆடை அவிழ்த்து சோதனை செய்யப் பட்ட போதும் கூட பதற்றம் இன்றி அவர்கள் அவர்கள் கடமையைத் தானே செய்கிறார்கள் என பொறுமை சகிப்புத் தன்மை காத்தவர்.
இவரையும் எனது வாழ்வில் மிகவும் பிடித்தமானவர்களுள் ஒருவராக வைத்துள்ளேன்.

3. மகாத்மா காந்தி:
60 Best Mother Teresa Mahatma Gandhi images in 2020 | Mother ...

பிறப்பால் இந்து. ராம் ராம் என்பது இவரது மூச்சுக் காற்று. இரகுபதி இராகவ இராஜாராம் பதீத பாவன சீத்தாரம் ஈஸ்வர் அல்லா தேரே நாம் சப்கோ சன்மதி தே பஹ்வான் என்ற பாடல் இவர் அடிக்கடி இவரது கீர்த்தனை என்றும் பஜனைகளிலும் இடம் பெற்றது .
உழைப்பாளி என்றால் அதற்கு இவரை இலக்கணம் என்று சொல்லலாம். சகிப்புத் தன்மை என்றால் என்ன என்பதற்கும் இவரிடம் ஏராளமான சான்றுகள் இவர் வாழ்வில் உண்டு. நான் இவரது நூலை எல்லாம் படித்தறிந்து வள்ளியம்மாள் கல்வி நிறுவனம் மதுரை காந்தி அருங்காட்சியகத்துடன் இணைந்தது அதில் முதல் பரிசு பெற்றுள்ளேன் 60000 பக்கம் என்றார்கள் இப்போது அது 80000 முதல் ஒரு இலட்சம் வரை உள்ளது சேர்ந்து என்கிறார்கள் அவர் இந்த உலகுக்கு எழுதிய பக்கங்கள். இவர் தொடாத துறை மிகவும் குறைவு. சமையல், மருத்துவம், பத்திரிகை, நல்லுறவுக்காக ஒவ்வொருவர்க்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுதல், ஆஸ்ரமம் நடத்தியது, அச்சு அலுவலகம்  பணி மேற்கொண்டது, ராட்டை நூற்பதற்கான நேரம், ஜெபம் கூட்டுப் பிரார்த்தனைக்கான நேரம், போராட்டம், சத்தியாக்கிரகம், உண்மை நேர்மை சத்தியம் தமிழை கற்றுக் கொண்டது, இரு கைகளாலும் எழுத தெரிந்தது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் சில கேள்விகளுக்கு எனக்குமே கூட விடை தெரியவில்லை என்றாலும் இவரும் ஒரு தனி மனிதர்தானே....ஆனால் இவர் இயக்கம் காந்தியம் தனி மனிதம் அல்ல...  வழக்கறிஞர் தொழிலில் சமாதானம் பேசி நிறைய வழக்குகளை தீர்த்து வைத்தவர். இவர் தமது குற்றத்தை எப்போதுமே மறுத்தவர் அல்ல. ஏற்றுக் கொண்டதாகவே சிறை சென்றவர். இவர் நீதிமன்றத்தில் நுழையும்போது வழக்கத்துக்கு மாறாக நீதிபதிகள் எழுந்து நின்று மரியாதை இவருக்கு செய்தது பிரபலம்.

இவர் மேல் நிறைய குற்றச் சாட்டுகளும் உண்டு: வ.உ.சிக்கு சேர வேண்டி தெ.ஆப்பிரிக்காவில் சேர்த்து அனுப்பிய தமிழர் பணமுடிப்பை கொண்டு சேர்த்தாதவர், எல்லா நிலைகளிலும் உள்ள அனைவரிடமும் பேதமின்றி  நிதி சேர்த்தவர், சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமை ஏற்க ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டும் இவரது அதிருப்தியால் சுபாஷ் தமது தந்தை நிலையில் உள்ள இவருக்கு பிடிக்காமையால் விலகி ஆந்திரத்தில் உள்ள சீத்தாரமைய்யாவை (சீத்தாராமையா / பொட்டி சீத்தாராமுலு இதில் இப்போது எனக்கு திடமாகத் தெரியவில்லை படித்து நீண்ட காலம் ஆனதால்)  தலைவராக்க வழி விட்டது...பகத் சிங் மரணத்தை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என்பது, இவரது முதல் மகனை மதுப்பிரியனாக்கி மது அடிமையாகவே விட்டு விட்டது அம்பேத்கார் சட்ட மேதையுடன் சமுதாய மேம்பாட்டு பணிகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தது ஜீவாவிடமிருந்து கற்றுக் கொண்டது வைகை நதியில் ஆடையைத் துறந்து அது முதல் ஆடை சரியாக அணியாத அரை நிர்வாணப் பக்கிரி என்று பேர் பெற்றது... இப்படி நிறைய நிறைய...காய்ச்ச மரத்தில் தான் கல்லடியும் இருக்கும். இவர் எந்த மதத்தையும் எதிர்த்தவரல்ல. இவர் இந்து என்ற போதிலும். இவர் உலகத்தின் அத்தனை மதத்தையும் மதித்தார். அத்தனை மனிதரையும் நேசித்தார்.  மகாத்மா.

தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ இவர்கள் இந்த 3 பேரும் மதத்துக்கொருவராக இருக்கிறார்கள் இவர்கள் எனது நெருங்கிய மனிதர்களாக இருக்கிறார்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment