Friday, July 10, 2020

வாழ்வது ஒரு முறை: கவிஞர் தணிகை

வாழ்வது ஒரு முறை: கவிஞர் தணிகை

Joythi Paswan Cyclist took his father 1200km

மரணம் எப்படி எப்படி எல்லாம் வருகிறது என்பதை அண்மையக் காலங்களில் பார்க்கும் போது வியப்படைவதைத் தவிர வேறு வழி இல்லை.

விவசாய நிலத்தை ரொட்டேட்டர் கொண்டு மண்ணை மேலும் கீழும் சுழற்றி பதப்படுத்தி உழவுக்கு உகந்த வண்ணம் மாற்றிக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு விவசாயி...தந்தை தேநீர் அருந்தச் சென்ற வேலையில் முன் அமர்ந்து அந்த ட்ராக்டரை இயக்கி ஓட்டிக் கொண்டிருந்த நபர் காது கேளா ஊமை. பின்னால் தேநீர் அருந்தச் சென்ற தந்தையின் மகன் ( அவர் மது அருந்தியிருந்தாரா என்பது சரியாகத் தெரியவில்லை) ட்ராக்டர் ஓட ஓட ஏற  முயன்று நழுவி பின்னால் விழ கால்கள் கைகள் தலை உடல் எல்லாம் சிதறி விட்டதாக எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். பின்னால் துடித்துக் கொண்டிருந்த கை விரல்களை பார்த்த பின் தாம் அந்த ஓட்டுனர் என்ன எனப் பார்க்க ட்ராக்டர் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார்.

சில நாளைக்கும் முன் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஒருவர் சினிமா ஸ்டில்லில் பார்ப்பது போல ஒரு காலும் அவர் வாகனும் நிலத்தில் சாலையில் ஒரு பாதி சாய்ந்த நிலையில் இருக்க உடலின் மறு பகுதி கால் கை எல்லாம் காற்றில் உறைந்து நின்றபடி இருந்ததாம் விறைத்தபடி நின்றபடி இருக்கிறதாம். எப்படி இப்படி இருக்க முடியும் என்று விசாரித்தால் முன்னால் போன ட்ரக் பின்னால் உள்ள ஹுக் கம்பியால் ஆன கொக்கியில் இவரது பொறியில் பட்டு உடனே மரணம் ஏற்பட்டு உடலின் செயல்பாடு நின்று அப்படியே இருந்திருக்கலாம் அதை உணராத ட்ரக் வாகனம் சென்று கொண்டே இருந்திருக்காலாம் என்பதையும் பார்த்த ஒரு நண்பர் விவரித்தார்.

எனது மூத்த நண்பர் ஒருவர் சொன்ன உண்மைச் சேதி ஒரு ரெயில்வே கிராஸ் அருகே ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்ட நிலைக்காக கணவனும் மனைவியுமாக ஸ்கூட்டரில் வந்தவர்கள் அந்த கேட் முன் சற்று முன்னதாக நிறுத்தி நிற்க அதே நேரம் வானில் நாகத்தை தன் கால்களில் பற்றி இருந்த கழுகின் கால்களில் இருந்து போராடிய நாகம் நழுவி விழுந்து நேராக ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் தலையில் வீழுந்து நாகத்தால் கொத்தப்பட்டு அப்படியே வண்டியிலிருந்து கணவன் மனைவியின் கண்முன்னே சாய்ந்து இறந்ததாகச் சொன்னார் அதுவும் ஒரு உண்மைச் சம்பவம். ஹெல்மெட் எவ்வளவு அவசியம் பாருங்கள்...

இன்று ஒரு நண்பர் வலிப்பு மற்றும் மாரடைப்பால் இறந்ததும்,
சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்படுவதும்
கொரானா கோவிட் 19 உலக அளவில் பல்லாயிரம் இலட்சக்கணக்கான உயிர்களைக் கொண்டு செல்வதும்

ஆக மரணம் என்பது எந்தெந்த வடிவத்திலும் கற்பனைக்கெட்டா முறைகளிலும் அனுதினமும் நடந்துதான் வருகின்றன‌

தினமும் எவராவது ஒருவர் இறப்பைப் பார்த்தபடி இருந்தும் நாம் மட்டும் இறக்கவே மாட்டோம் எனும் என்னும் எண்ணம் தான் மிகப் பெரிய நகைச்சுவை என்கின்றனர் சித்தர்கள்...

எனவேதான் சாதனையாளர்கள் தமது காலத்துக்கும் பின் தமது பெயர் நிலைக்க ஏதாவது செயல்களை நிலைக்க நினைத்து தஞ்சைப் பெரிய கோவில் கட்டியதும் கல்லணை கட்டியதும்  மகாபலிபுரம் ராஜேந்திர சோழ புரம் நிறுவியதும் கலை கல்விகளில் அறிவியல் சாதனை புரிவதும் எல்லாமாக எல்லாவற்றுக்கும் மேல் மனித குலம் சிறந்து வாழ ஏதாவது செய்ய முடியுமா என்று முயல்வதும்...பஞ்சம் பசி பட்டினி வறுமை தாகம் போன்றவற்றிலிருந்து மீட்க முடியுமா என்று முயல்வதும்...

புத்தர், மார்க்ஸ், காந்தி, தெரஸா, கலாம், ஏசு ,நபி என வேறு வேறு வழிகளில் முயன்று பார்ப்பதுமாக...

சர் ஆர்தர் காட்டன் போன்றோர் நீர் வளம் மூலம் நிலவளத்தை மேம்படுத்தி மனித குலத்திற்கு ஏதாவது செய்ய நினைத்ததும்

ஒவ்வொருவரும் இறந்து போகும்போது இவர் இன்னும் சில காலம் இருந்திருக்கலாம் என்றும் அட நல்லவேளை போய்ச் சேர்ந்தானைய்யா என்பதும் பெயர்களாகி அவரது பண்பை வெளிப்படுத்துபவையாகிவிடுகின்றன.
எனவே வாழ்வது ஒரு முறைதானே ஏதாவது மனித குலத்துக்கும் ஏனைய உயிர்களுக்கும் நல்லவற்றை செய்துதான் மடிவோமே...

வாருங்கள் ஒத்த மனதுடைய தோழர்களே...சிற்பி வேலாயுதம் அன்பு வழி புதிய பயணம் வழியே அழைக்கிறார்.

நன்றி
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை



பி.கு: அன்பு நண்பர் சூரியப் பிரகாஷ் ராய் குறிப்பிட்ட படி ஜோதி பாஸ்வான் என்ற சைக்கிள் வீராங்கனை கற்பழிக்கப்பட்டு  ஒரு மாங்காய்க்காக கழுத்து அறுபட்டு சாகடிக்கப் பட வில்லை என்றும் அவர் நலமுடனே இருக்கிறார் என அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்...அவர் பேருடைய ஜோதி குமாரி என்னும் 13 வயது சிறுமி அதே தார்பங்கா என்னும் இடத்தில் இறந்திருக்கிறார் என்றும் அவரும் கற்பழிக்கப்பட்டதற்கான எந்த சுவடும் இல்லை அவர் மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்தே இறந்துள்ளார் என்றும் உறுதிப் படுத்திய செய்திகள் இருக்கின்றன. அதன் பின் அவர் மாங்காய்க்காகச் சென்று அது நடந்ததா மின் கம்பி கட்டியது சரியா பிரேதப் பரிசோதனை உண்மையான தகவல்களை தந்துள்ளதா என்பதெல்லாம் கேள்விக்குரிய ஆய்வுக்குண்டான செய்திகள்தாம். ஊடகங்கள் எல்லாம் இப்படித் தான் உள்ளன. ஒரேயடியாக நம்பிவிடுவதற்கில்லை. நேற்று ஒரு பத்திரிகையில் கல்லூரி என்பதற்கு காலுறை என்று தட்டச்சு செய்து செய்தி வெளியிட்டதையும் கவனித்தேன்.

No comments:

Post a Comment