குருவை மிஞ்சிய சீடர்: கவிஞர் தணிகை
இராஜாஜி, சத்திய மூர்த்தி போன்றோர் மெத்தப் படித்தவர்கள். சத்திய மூர்த்தி ஆங்கிலத்தில் பேசினால் அனைவரும் அசந்து போவர் என்றெல்லாம் உண்டு. இவரது சீடர் தாம் காமராசர். இவர் பெரிதும் படிக்காதவர் ஆனால் அந்தந்த காலக்கட்டத்தில் என்ன என்ன நடக்கிறது அதை எப்படி கையாள்வது என்ற சமயோசித புத்தி நிரம்ப உள்ளவர். எளிமையாக பேசுவார். அதிகம் பேசாதவர் என்றும் நேரடியாக ஒரு சொல் வந்து விழும் என்றும் சொல்வார்கள். ஆனால் எதிரியையும் நேசிக்கக் கற்றவர் நல்ல பண்பாளர் நல்ல பார்லிமென்டேரியன் என்பதற்கு அறிஞர் அண்ணாவுக்கும் இவருக்கும் எதிர் அணியில் இருந்த போதும் இருந்த நல்லுறவை காரணம் காட்டி நிற்கிறது காலச் சரித்திரம். இவரை திருமணமாகதவர் இவருக்கு குடும்பம் செலவு பற்றி என்ன தெரியும் என்று பேசிய போதும் எங்கள் தலைவரை இப்படி பேசுகிறீரா உங்கள் தலைவர் என்ன பிள்ளை இல்லாதவர்தானே என அண்ணா பற்றிப் பேசிய பெண் எம்.எல்.ஏவை கடிந்து கொண்டு அவர்கள் சொல்வது சரி ஆனால் நீ பேசியது மிகவும் தவறு அவர்கள் வேதனைப் படும்படி பேசலாமா என்று நடந்து கொண்டதை வரலாறு சொல்கிறது
இவரது அப்பழுக்கற்ற தன்மை பெரியார் போன்ற எதிர் அணி தலைவர்களையும் கவரச் செய்தது. இராஜாஜியும் வேண்டாம் சத்திய மூர்த்தியும் வேண்டாம் என்ற காங்கிரஸ் காமராசரை தமிழக முதல்வராக காங்கிரஸ் தலைவராக கொண்டு வர வாய்ப்புகளை அளித்தது. இவர் அதன் பின் இந்திய காங்கிரஸ் தலைவரானதும் கிங் மேக்கர் என்று புகழப்பட்டதும் ஏற்றி விட்ட இந்திரா காந்தியின் வார்த்தைகளாலே மனம் புண்பட்டு இந்தியாவின் நெருக்கடி நிலை எமர்ஜென்ஸி காலத்தில் மறைந்து விட்டதும் ....
இந்த படிக்காத மேதை என்று பார் போற்றப் பட்ட ஏழை எளியவர்களின் மனிதர் செய்த சாதனை அதிகம். சுயம் என்ற வார்த்தையைக் கூட இவர் குறுக்கிக் கொண்டவர். இவரது பேர் ராஜாஜி சத்திய மூர்த்தி ஆகிய பெயர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி பேர் பெற்றது அதன் காரணம் கர்ம வீரர் என்ற காரணமே. தியாகம் என்று சொல்வது எளிது. அதை செய்வதுதான் மிகவும் கடினம். அதற்கு பேராற்றல் வேண்டும்.
ஏழை எளியோர்க்கு செய்ய வேண்டும் என்ற பேரு வேட்கையே இவரை அப்படியெல்லாம் செய்ய வைத்தது.
சில மனிதர்கள் பேசாவிட்டாலும் அவர்களைப் பற்றி பார் பேசும் அவர்கள் பற்றி அவர்கள் பேர் பற்றி காலம் பேசும் சரித்திரம் பேசும்.
அடுத்த குருவை மிஞ்சிய சீடர் என்ற எதிரணியிலிருந்து உண்டானவர் பற்றி எல்லாம் நான் சொல்ல வரவில்லை. அவர் அப்படி ஏதும் குருவை மிஞ்சிய சீடராகவும் இல்லை. அவர் குலம் வந்ததால் தான் நிறைய நல் முன் மாதிரிகளும் அழிக்கப் பட்டன நிறைய தீய முன் மாதிரிகளும் ஏற்பட்டன என்கின்றன காலச் சரித்திரங்கள் ஆனாலும் அவரும் நிறைய துணிச்சல் காரர்தாம். நிறைய திட்டங்கள் செய்திருக்கிறார்தாம் என்றாலும் இவர் பற்றி சொல்லும் போது சொல்ல வேண்டுமெனில் இவரின் சுயநலம் இவர் தமது மகவுக்கே கூடவிட்டு விடாத விட்டுத் தராத மாபெரும் பரந்த மனப்பான்மையும் மூப்பனாரும் கலாமும் வந்து இடைமறித்து கண்ணதாசன் வேறு அதற்கு மேல் பால்ய கால வரலாறு எல்லாம் அப்பட்டமாக சொல்லி இவரை வெளிப்படுத்தி நிற்கிறார்கள். எனவே இவர் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை காரணம் சேவை செய்வது என்பதும் சேவை செய்ய வருகிறோம் என்பதும் சுய நலத்துக்காக என்று ஆகிவிட்டால் அது மாபெரும் அவச் சொல் ஆகிவிடுகிறது. அவச் சொல்லை ஏற்படுத்தி கேரக்டர் அஸ்ஸாஸினேசன் என்பது மரணத்தை விட மாபெரும் கொடுமையானது. என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும் அத்துடன் இந்த பாம்பும் பின்னிப் பிணைந்து அவரை அவர் செய்த நல்லவற்றை மறைத்து விடுகிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லி வைத்திருக்கிறேன்.

No comments:
Post a Comment