Saturday, June 27, 2020

உண்மைக் கதை எண்:பதினா று16.ரௌத்ரம் பழகு.

உண்மைக் கதை எண்:பதினாறு: 16.ரௌத்ரம் பழகு.


bharathiyar rowthiram pazhagu song Mp4 HD Video WapWon

சரியாக ஆண்டு நினைவில்லை. அனேகமாக 1988 வாக்கில் இருக்கும் என எண்ணுகிறேன். எனது விதவைச் சகோதரிக்கு 3 பெண் குழந்தைகள் அதிலும் கடைசிக் குழந்தை மன வளர்ச்சி குன்றியது. எனைப்பற்றி அறிந்தார்க்கு இவை எல்லாம் முன்பே தெரியும். எனவே அதை நான் திருப்பி எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அவர்கள் குடும்பத்தை நாங்களே அழைத்து வந்து உருவாக்க முனையும்போது அவர்களுக்கு ஏதாவது தொழில் உருவாக்கித் தரும் திட்டத்தில்( ஏன் எனில் அவர் சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிக்கெல்லாம் போக விரும்பவில்லை) ஒரு சிறிய பெட்டிக் கடை அதிலேயே ஆடை தைக்கும் ஒரு தையல் எந்திரம் எல்லாம் போட்டு சாலையோரத்தில் வாடகைக்கு ஒரு தெரிந்தவரின் கடையைப் பிடித்து ஏற்பாடு செய்தோம்.

அது எமது போதாத காலம் அந்த ஊரின் பக்கம் அப்போது செழிப்பாக இல்லை. ஆனால் பக்கத்தில் ஒரு அசைவ உணவு தயாரிக்கும் டிபன் கடை இருந்தது. அந்தக் கடையில் இரவில் நல்ல வியாபாரம். அதெல்லாம் இந்த கதையில் பெரிய விடயமல்ல.

அடியேன் அப்போது சேலம் மாவட்ட மலை வாழ் மக்களுக்கு திட்ட அலுவலராக இருந்தேன் மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு மாவட்ட அலுவலக அலுவலகர்கள் எல்லாமே ஓரளவுக்கு எனது தொடர்பில் இருந்தனர் முகாம் நடத்துவது மக்களுக்கு நன்மை செய்வது என்ற நல்ல பேர் என்னுடன் இருந்ததால்.

அப்போது மாவட்ட ஆட்சியராக எம்.எப். ஃபாரூக்கி ஐ.ஏ.எஸ் என்னை வெகுவாக மதிப்பார். காரில் ஏறி விட்டாலும் என்னைப் பார்த்து நிறுத்தி என்னை விசாரிக்காமல் கிளம்ப மாட்டார்....

ஐசரிவேலன் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) எங்கள் பக்கத்து எஸ்.ஐ.காவல் துறை துணை ஆய்வாளர். இவர் காவல் நிலையத்துக்கும் பின்பே/ பின்புறமே ஒரு வீட்டில் குடியிருந்த போது இவரது மனைவி எரிந்தார் இறந்தார் . அது பற்றி எல்லாம் எந்த மேல் விவரம் எல்லாம் எவருக்கும் தெரியாது. ஆனால் இந்த சம்பவம் நடந்தது பற்றி அனைவர்க்கும் தெரியும்.

இவர் நன்றாக ஆள் வாட்ட சாட்டமாக கருப்பாக ஒரு நீலக் கலர் புல்லட்டில் வருவதை இன்றும் எனது மனக்கண் முன் வந்து நிறுத்த முடிகிறது. இவர் எனது சகோதரிக்கு வாழ்வாதாரத்திற்காக வைத்து சோதனை முறையில் நடத்தப் பட்ட கடையின் மாலை நேர அசைவ உணவுக் கடை அருகே அதாவது சாலையின் மறுபுறம் கடையின் எதிர் புறம் நின்றபடி அங்கிருந்தே விரல் சொடுக்கி அந்தக் கடையில் இருந்து டிபனை வாங்கிச் செல்வது வழக்கம்தான் கவனித்திருக்கிறோம். மேலும் அதற்கு அவர் விலை கொடுத்தாரா இல்லையா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது நாமறியோம். இன்று நினைவில்லை.

இப்படி செய்து கொண்டிருந்த அவர் ஒரு நாள் திடீரென சாலையின் அப்புறம் இருந்து கொண்டே எங்கள் சகோதரியை அழைத்து வெற்றிலை பாக்கு(ம்) வேண்டும் என்று கேட்டதாக அறிந்தேன். அப்போது நான் உள்ளூரில் இல்லை. வெளியூரில் இருந்து ஊர் திரும்பிய நான் இதைக் கேள்விப்பட்டதும் எங்கிருந்து வந்ததோ அந்த ரௌத்ரம்...

Rowthiram pazhagu thamizha @rowthiram_pazhagu_thamizha Instagram ...

உடனே எனது இரு சக்கர வாகனத்தில் ஏறி காவல் நிலையம் சென்றடைந்தேன். மணி சுமார்  10.00 am இருக்கலாம். அப்போது அவர் அங்கு காவல் நிலையத்தில் தான் இருந்தார். ஆங்கிலத்தில் (கவனிக்கவும் ஒரு வார்த்தை கூட தமிழ்க் கலப்பின்றி தமிழ்க் கவிஞராகிய நான் தமிழைப் பேசாமல்) சரமாரியாக மிகவும் சத்தமாக திட்ட ஆரம்பித்தேன் அதன் சாரம்: நீ என்ன பெரிய பிடுங்கியா? ஒரு விதவைப் பெண் குடும்பம் பிழைக்க ஒரு சிறு பிழைப்புக்காக ஒரு கடை வைத்துக் கொடுத்தால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா? தொலைத்து விடுவேன் ஜாக்ரதை...என என்ன என்ன தோன்றியதோ எல்லாம் திட்டித் தீர்த்து விட்டு அந்த மனிதன் பேசவில்லை. I have not given any chance and time to  reply நான் பேசி முடித்து எனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

அதிலிருந்து அந்த மனிதன் தமது போக்கை மாற்றிக் கொண்டார். அந்த செயலை செய்யவில்லை. மேலும் தாமதமான இரவு நேரத்திலும் கூட அந்த மனிதரும் நானு ஒரே பேருந்தில் சேலம் முதல் எனது ஊர் வரை எல்லாம் கூட approximately 45 km பயணம் செய்திருக்கிறோம். எந்த சில்மிசமும் செய்ய முயலவில்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தால் அவர் அந்த நிலையத்தில் பணி புரிய முடியாமல் அல்லது அவரை எங்கு எல்லாம் எப்படி எல்லாம் சிக்க வைக்க முடியுமோ அதை எல்லாம் செய்திருக்க முடியும். ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லாது போயிற்று.

இன்று நினைக்கவும் கூட அது எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. இப்போது கூட அதை எல்லாம் just like that  என்னால் செய்ய முடியுமா என்றுத் தெரியவில்லை.
pazhagu hashtag on Instagram
மேலும் அந்த சம்பவம் பற்றி அக்கம் பக்கம் கடைக்காரர் மற்றும் ஊரில் உள்ளோர் எங்களுக்கு கடையை வாடகைக்கு கொடுத்தோர் எல்லா மனிதர்களும் பேசி வந்தனர் எனது நடவடிக்கை பற்றி... ஆனால் அந்தக் கடை சரியாக ஊதியம் ஈட்டித் தராததால் 3 மாதத்திலேயே அந்தக் கடையைக் காலி செய்து கொடுத்து விட்டேன் அது வேறு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: