Monday, July 13, 2020

உண்மைக் கதை 17. மது விற்பனையை விட குடி நீர் விற்பனை பேராபத்து பெரும் பாவம்: கவிஞர் தணிகை

உண்மைக் கதை 17. மது விற்பனையை விட குடி நீர் விற்பனை பேராபத்து பெரும் பாவம்: கவிஞர் தணிகை
Singapore's S$134m bottled water addiction - CNA
இரத்தினச் சுருக்கமாகவே சொல்கிறேன்.ஏன் எனில் இது ஒரு நெடுங் காதை.மேட்டூர் அணையும் காவிரியும் தமிழகத்துக்கே நீர் வழங்கும் ஒரு தாய் மடி. அந்த தாய் மடியில் தவழ்ந்திடும் இலட்சக்கணக்கான குழந்தைகளில் அவனும் ஒருவனாக நானும் ஒருவன்.

ஒன்பது வருடம் அணை கட்டப்பட்டு 1934ல் முடித்தார்களாம். சரி அதெல்லாம் நமக்கு வேண்டாம். நமது கருப்பொருள் குடிநீர்ச் சுரண்டல் அல்லது நீர்ச் சுரண்டல். இயற்கை ஐம்பெரும் பூதங்களில் நீர் ஒரு அரிய அற்புதமான அமிர்தம். எல்லா உயிர்க்கும் கருணை மழை. மனிதர்க்கு மட்டுமல்ல. மழை பூமிக்குக் கிடைத்த கொடை. மழை பொழிந்து அருவி ஓடையாகி நதியாகி பெருவெள்ளச் சமவெளியில் அமைந்தியடைந்து மக்களுக்கு உயிர்களுக்கு பயனானது போக மீதி இருந்தால் கடலோடி மீண்டும் புவி சுழற்சியுள்.

யார் அப்பன் வீட்டு சொத்து இது? எங்க அம்மா இயற்கைத் தாய் தானே இதற்கும் அன்னை. என்னை தன்னை நீரை சொந்தம் கொண்டாட யாருக்கு அதிகாரம் யார் கொடுத்தது? யார் கொடுப்பது? அதில் என்ன சூட்சுமம்...உலகில் மூன்றில் இரண்டு பங்கு மனித இனம் குடிக்க நீரின்றி உண்ண உணவின்றி பசியாலும் தாகத்தாலும் மடிந்தபடி இருக்கிறது என்பது சரியா?

மேட்டூர் அணை கட்ட அந்த ஊரில் இருந்தாரை எல்லாம் ....அது பழைய சாம்பள்ளியாம்..வெளியேறச் சொல்லி புது சாம்பள்ளி என்ற இடத்தில் அவார்ட்தாரர் என்ற முறையில் பல ஏக்கர் நிலம் அளித்ததாம் அன்றைய அரசு. இது நிலை ஒன்று. இரண்டு நதிக்கரையோரம் நீர் தேக்கம் என்பதால் பல தொழில்களும் மலர பணிக்கு வந்து சேர்ந்த குடும்பங்கள் காடழித்து நாடாக்கி கழனியாக வீடாக மாற்றிக் கொண்டன இது இரண்டாம் நிலை. மூன்றாம் நிலையில் அப்படி சொந்த வீடுகள் உள்ளாரிடம் வந்து வெளியோரில் இருந்து வந்தார் வாடகைக் கொடுத்தும், வீட்டுக்கு வாடகை இல்லை பணத்துக்கு வட்டி இல்லை என்ற நிலையிலும், போகியம் குத்தகை என்ற நிலையிலும், இப்படி இருக்க இடம் தேடிக் கொண்ட ஊரும் தொழிலும் தொழிற்சாலைகளும் பெருகின.

முன் நாளில் குழந்தை யானைவேட்டியில் உறங்க ஆள் இல்லா நேரம் பார்த்து குள்ள நரி அருகே வந்து நின்று கொண்டிருந்த இடம்....இன்று செல்பேசி கோபுரங்களுடன் கழிவை சரியாக வெளியேற்ற வழிகளற்று தேங்கிக் கிடக்கிறது. மனித அரவம்.

வீட்டுக்கொரு கிணறு. குடிக்கவும் குளிக்கவும் துவக்கவும் சமைக்கவும் எவரையும் கையேந்தாத நீர் நிலை.அதாவது நிலத்தடி நீருக்கும் நிலவளத்துக்கும் பஞ்சமில்லை.பெரு ஆலைகள் வந்தன. அதில் ஒன்று கெமிகல்ஸ் அன்ட் பிளாஸ்டிக் கம்பெனி லிமிடெட் என்பது. மேட்டூர் கெமிகல்ஸ், மேட்டூர் பியர்ட்செல் போன்ற ஆலைகள் கூட ஆயிரக்கணக்கான மனிதர்க்கு வேலை கொடுத்த போதும் அதன் எச்சம் பெரிதாக கெடுக்கவில்லை. அலுமினியம் ஆலை கூட மாசு காவிரியைப் படுத்துகிறது என மூடி விட்டார்கள் அது அப்போது மால்கோ இப்போது மால்கோ ஸ்டெரிலைட் குழுமம்.
14 Top Bottled water brands - Bottled water top Companies
இந்த கெமிகல் ப்ளாஸ்டிக் இப்போது கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் அப்போது கெம்ப்ளாஸ்ட் (இப்போது கழிவு நீரே விடுவதில்லை அந்த கழிவு நீர் ஓடையில் என சாதிப்பார்கள்...ஏன் எனில் விட்டு முடித்து ஊரின் நிலவளம், நீர்வளம் யாவற்றையும் முடித்துக் கட்டி விட்டதால்) காமராசர், நேரு போன்றவர்கள் காலத்தில் ஆரம்பிக்கப் பட்ட கம்பெனிதான்.

பிளாஸ்டிக் கம்பெனி என்று பொதுவாக சொல்வார்கள். அங்கு பவுடர், பைப் போன்றவை பாலி வினைன் குளோரைடு, ஹைட்ரோ குளோரின் ஆக்ஸைடு, கேபட் என்றெல்லாம் சாதாரண மாந்தர்க்கு தெரியா இரசாயன வேதிப் பொருட்களை தயாரிக்க ஆலை. அதை வைத்து தான் தற்போதைய இளைஞர்கள் அது வெடித்துச் சிதறினால் என்ன ஆகும்? அதை பராமரிக்காமல் விட்டால் என்ன ஆகும் என மிரட்டியே தமது தொழிலை தக்கவைத்து உயர் ஊதியம் தம் போராட்டத்தின் மூலம் பணி உறுதி பெற்றதாக அதில் பணி புரிந்த எனது சகோதரனைப் போன்ற நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

இதெல்லாம் வேறு: சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன் ஏன் அதற்கும் முன் கூட இருக்கலாம் தோராயமாக அரை நூற்றாண்டுக்கும் முன் அந்த ஆலை தனது கழிவு நீரை வெளியேற்ற ஆரம்பித்த போது அப்போது காங்கிரஸ் கட்சியார்கள் தாம் அந்த ஊராட்சியின் அமைப்பை தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கட்சி பேதமின்றி முன்னணியினர் அந்தக் கம்பெனி மேலாண்மையுடன் கலந்து பேசி குழாய்களில் கொண்டு செல்ல வேண்டிய கொண்டு செலுத்த வேண்டிய இரசாயனக் கழிவு நீரை நானே பார்த்திருக்கிறேன் அது நுரையுடன் வெளியேறுவதையும் மழைக்காலத்தில் அதன் வேப்பர் தொண்டை எல்லாம் அடித்து மூச்சுக் குழலை சிரமம் செய்வதையும் அப்படிப் பட்ட கழிவை எங்கள் ஊரின் நன்னீர் ஓடையில் செலுத்தி காவிரியில் சென்று கலக்கச் செய்கிறது.  செய்தது. முன்னணியினரும் அந்த அப்போதைய ஆலையின் மேலாண்மையும் மக்களுக்குச் செய்த நற் தொண்டு. அந்த நன்னீர் ஓடையில் படல் தடுக்கு கட்டி சேர்ந்த மீனை தின்ன பாம்பும் வருமாம் காலையில் பார்த்து கட்டியவர்கள் மீன்களை எடுத்துச் செல்வாராம். அப்படிப் பட்ட நன்னீர் ஓடை அன்று முதல் கழிவு நீர் ஓடையாகிப் போனது. இன்று மக்கள் பெருக்கம் ஊரின் விரிவாக்கம் அந்த ஓடையும் இல்லையெனில் கழிவு நீரெல்லாம் எங்குதான் எப்படித்தான் பாய்ந்து ஊர் தூய்மை அடைவது தேங்கி நின்று நாறினால் ஊரே பாழாகும். ஆனால் இந்த நீர் எல்லாம் காவிரியில் தான் கலக்கின்றன என்பதுதான் மறைக்க முடியா மறுக்க முடியா உண்மை.
The Best Water Filters Of 2020 - Reactual
இதன் விளைவு: வீட்டுக்கு ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு என்றிருந்த கிணற்று நீர் கழிவானது. பப்பாளித் தண்டு வாசம் முதலில் எடுக்க ஆரம்பித்து அதன் பின் நீச வாசம் வீசம்.கிணறு ஒவ்வொன்றாக மூடி ஊரெல்லாம் நீர் இல்லை என்ற நிலை உருவானது. நிலமும் சரியான விளை நிலமாக இருந்தது மாசு அடைந்தது. நிலத்தடி நீர் முற்றிலும் கேடடைந்தது.  இப்போது ஊர் மக்கள் குடிநீருக்காக வேறு மாற்று ஏற்பாடு நீர்வளமும் இல்லை என்ற நிலையில் ஆற்றுக்கு சென்று துவைப்பதும் குளிப்பதுமாக இருந்தனர். குடிக்க என்று சில குடங்கள் நீரை கம்பெனிக்காரர்கள் தர்மம் செய்து ஊராட்சிக்கு வழங்க ஊராட்சி சில குடிநீர்க் குழாய்களை போட்டு வீட்டுக்கு குடும்பத்துக்கு இரண்டு குடங்கள் விநியோகம் செய்தன அதற்கு வாட்ச்மேன் எனப் போட்டு. முதலில் ஊருக்கே மொத்தம் 8 குடிநீர்க் குழாய்கள் என்றிருந்ததை சற்று வீதிக்கொன்றாக மாற்றி விநியோகம் செய்தன. இந்நிலையில் ஊர் மக்கள் அணைக்கு குண்டு வெடி மிரட்டல், நீர்நிலையில் பாதுகாப்பின்மை காரணம் யாவும் சேர அரசும் பொதுப்பணித் துறை குடிநீர் வழங்கும் துறை யாவும் அரசு விதிகளுக்கு உட்பட்டு கம்பி வேலி இடப்பட்டு காவிரியின் ஆற்றில் எவரும் முன் போல் சென்று குளிக்கவோ நீர் கொண்டுவரவோ துவைக்கவோ முடியாது ஆகின முக்கியமான படித்துறைகளில். இன்று ஊரின் மக்கள் பெருக்கமோ சுமார் 5000க்கு அதிகம் இருக்கும்.

இப்போது மாதம் ஒன்றுக்கு குடி நீர்க் கட்டணம் ரூ. 220 அதிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வரும் சுமார் 12 குடம். பெரிய குடும்பத்துக்கு போதாது. அதிலும் நமது மக்கள் மின் மோட்டார் வைத்து நீர் திருடுவார்கள். கேட்பார் இல்லை. அதிலும் செல்வாக்கு பெற்றவர்கள் நேரடியாக குழாய் செருகி பொதுக் குழாய்களிலிருந்தும் வீட்டுக்கு நீர் அனுப்பலாம். பெரும் மாடி வீடுகள் எங்கும் தலையில் மகுடங்களாக குடி நீர் டேங்க் இருப்பதும் நிலத்தடியில் பெரிய நிலத்தடி டேங்க்குகளும் இல்லாமல் புதிய வீடுகள் இல்லை. அவர்களுக்கும் அதே கட்டணம் மாதா மாதம் ஏழை எளியார்க்கும் அதே கட்டணம். மாதா மாதம் மின்சாரக் கட்டணம் போல் கணக்கெடுப்பு மீட்டர் ரீடிங் என்பதெல்லாம் இல்லை.

இதெல்லாம் சொன்னதெல்லாம் எங்கே காவிரிக் கரையில்... மேலும் காவிரி நதி தீரத்தின் ஓரத்தில்.  குடி நீர் விநியோகம் சரியில்லை. அதற்கு மேல் சொன்னால் அரசுத் துரோகமாகக் கருதப்படும் நான் நேரு சொன்ன வார்த்தையின் படி நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்ற பாடத்தையே படித்ததால் அதற்கு மேல் எல்லாம் சொல்ல வழியில்லை.

குறிப்பிடத் தக்க மற்றொரு செய்தி என்னவெனில்: இந்நிலையில் எல்லா ஆலைகளுக்கும் நீர் எடுத்துக் கொள்ள அனுமதி. அதை விற்கிற ஆலைகளுக்கும் அனுமதி. அதைப் பார்த்து அரசும் குடி நீர் விற்பனை...அந்த குடி நீருக்கு ஒரு பேர் நீருக்கு எல்லாம் ஒரு பேர் , நிலத்துக்கு பேர், காற்றுக்கு பேர், என்று எல்லாவற்றுக்கும் ஒரு பேர் வைத்து விற்பார் எம் மனிதர் .அதற்கெல்லாம் எம் அரசு துணை நிற்கும். அவர்களைக் காக்கும். . சூரியனுக்கு இன்னும் பேர் வைக்க வில்லை. அதன் ஒளிக்கும் பேர் வைப்பார்கள் எதிர்காலத்தில்
Plastic Mineral Water, Available Packaging Size: 20 Ltr, Lucknow ...
. இப்போது மின் விளக்கு எங்கள் வீட்டு யு.பி.எஸ் உதவியால் வருகிற ஒளி இது எங்களுக்கு மட்டுமே எங்கள் கதவு தாண்டி வாசலில் விழுந்து நீங்கள் அதன் வழி நடந்து விடக்கூடாது  என கதைவை மூடி வைக்கும் மாமனிதர்கள் இவர்கள் எல்லாம் வாழும் நாடு ஊர் எங்களுடையது. ஏட்டில் இருப்பது யாவும் புவி மேட்டுக்கு வருவது எப்போ? இவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும்...எப்படி  வாழ என்று...முயற்சிக்கிறேன். பார்ப்போம்.. சொன்னால் வருத்தப் படுவீர்கள் இவர்கள் எல்லாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும் என பாடும் ஒரு நல்ல மன்றத்தில் இருக்கிறார்கள். எந்த மன்றத்தில் எவர் இருந்த போதும் ஒவ்வொரு மனிதர்க்கும் தனித்தன்மை உண்டோ?

ஒரு முறை பொருளாதாரக் கஷ்டம் ஒரு நகை ஒன்றை அடகு வைக்கச் சென்ற எனது துணைவியார் அந்த  மாபெரும் இயக்க முறைமை சொல்லும் நபர் அந்த தங்கத்தை தேய்த்த தேய்ப்பையும்  உராய்ந்ததையும்  பார்த்து அவரிடம் வாழ் நாள் எல்லாம் போகக் கூடாது என வங்கிக்குச் சென்று வைத்தார். அப்படிப் பட்ட நபர்களே மாமனிதம் வழிகாட்டும் நல் வழிப் படுத்தும் மன்றங்களில் எல்லாம் முக்கியப் பொறுப்பாளர்களாகி நல் தொண்டு செய்து வருகிறார்கள். நிறைய தானம் தர்மம் செய்து வருகிறார்கள்...?

அரசின் குடிநிர் விநியோகமும் மக்களின் பகிர்தலும் இங்கே ஒத்திசைவுத் தன்மையுடன் இல்லை. எனவே குடி நீர் விற்பனை இது மது விற்பனையை விட அரசின் மக்களின் அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கும் மக்களின் பெரும் பாவமாகிவிட்டது....எதிரியை விட போராடுவோர்க்கு துணை வராமல் பார்த்துக் கொண்டு வேடிக்கையாக இருப்போரால் தாம் இந்த உலகு மாறாமல் இருக்கிறது.
Cauvery water dispute: Supreme Court to deliver verdict on ...
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி...பாரதி.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

.பி.கு: இன்னும் விவரமாகச் சொல்லப் போனால் இதைப் படிப்பவர்களில் எத்தனை பேர் கோவித்துக் கொள்வீர்களோ என சில விவரங்கள் எல்லாம் பேர் சார்ந்த அமைப்பு  ஊருடன் சொல்லப் படவில்லை. எதற்கு தேவையில்லாத பகை உட்பகை கருத்து முரண் என்ற எண்ணத்தில் மேலோட்டமாகவே சொல்லி இருக்கிறேன். அரசு எப்படி தனியார் முதலாளிகளுக்கு பொதுவான நீரை எடுத்து குடுவையில் அடைத்து அதற்கு பேர் எல்லாம் வைத்து விற்க தனியார் இயற்கையின் கொடையை இலாப நோக்கில் முதலாளித்துவம் ஆக்க இடம் தருகிறது என்றெல்லாம் சொல்லப் போனால் நான் அவன் இல்லை என்ற பேரும் சேர்ந்து கொள்கிறது எனவே நட்பு நாகரீகம் கருதி கண்ணியம் கட்டுப்பாடு காத்து கடமையை செய்திருக்கிறேன்.







No comments:

Post a Comment