மது நுகர்வோர் ஏன் பொது இடங்களில்
குடிக்கிறார்கள்? கவிஞர் தணிகை
மதுவை வீட்டுக்கே வேண்டுவார்க்கு
அரசு அனுப்பி வைக்கலாமே என்று
ஒரு பேச்சு மது விற்பனை
பற்றி நீதிமன்றத்தில் வழக்கில் இருந்த போது நிலவியது.
அப்படி
செய்து விட்டாலும் கூட பரவாயில்லை என்னும்படி
எந்த இடத்தில் ஆனாலும் சரி கோவில்,
பள்ளி, இப்படி இட வித்தியாசம்
இன்றி அதன் பின் புறம்
முன் புறம் சாலை, பாலம்
எங்கு எங்கு எப்படி எல்லாம்
இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் பொது இடங்களில் திறந்த வெளிகளில் சாலையோரங்களில் எல்லாம் இவர்கள்
அருந்தி வருகிறார்கள். காலிப் புட்டிகளை போட்டுவிட்டும்
சென்று விடுகிறார்கள்
வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கடையடுப்பு என அரசு மதுக் கடைகள் மூடப்பட்டதால் திங்கள் கிழமையன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 கோடி 40 கோடி என மது விற்பனை ஆனதாக அரசு புள்ளி விவரங்கள் சொல்கின்றன
வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கடையடுப்பு என அரசு மதுக் கடைகள் மூடப்பட்டதால் திங்கள் கிழமையன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 கோடி 40 கோடி என மது விற்பனை ஆனதாக அரசு புள்ளி விவரங்கள் சொல்கின்றன
ஏன் டாஸ்மார்க் கடையிலேயே டேபுள் பெஞ்ச்/ மேசை
இருக்கைகள் இருப்பதாகச் சொல்கிறார்களே அங்கேயே முடித்து விட்டு
இவர்கள் திரும்பலாமே...
டாஸ்மார்க்
கடையில் பார் வசதியுடன் இருப்பதை
மட்டுமே அரசு அனுமதிக்கவேண்டும் . அப்படி
மட்டுமே அனுமதித்தால் இந்த பொது இடங்களில்
இவர்கள் இப்படி நடந்து கொள்ளும்
முறை இல்லாமல் போகுமே.
இதற்கு
தனியார் பெரிய ஹோட்டல்கள் தேவலாம்
ஒதுக்குப் புறமாக எவருக்கும் தெரியாமல்
எவரும் அறியாமல் பொது இடத்துக்கும் பொது
மக்களுக்கும் பங்கம் வராமல் பொது
இடங்களில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் இருக்கும் இடத்தை
விட்டு விடுகிறது.
இந்த விடயத்தை அரசு சரியாக அமல்படுத்தினாலும்பரவாயில்லை.
நிறைய
மலைப் பாங்கான இயற்கை எழில்
கொஞ்சும் இடங்களில் எல்லாம் இவர்கள் ஆதிக்கம்
இருக்கிறது என உண்மையான இயற்கை
ஆர்வலர்கள் வருத்தப் படுகிறார்கள். பிராணிகள் விலங்குகள் எல்லாம் இந்தப் பிரயாணிகளால்
துன்பம் அனுபவிக்கிறது என பதிவுகளும் பகிர்வுகளும்
இருக்கின்றன.
தற்போது
யானைகள் பெரும் எண்ணிக்கையில் இறந்து
வருவதாக எல்லாம் செய்திகள் வருகின்றன.
அவை எதனால் என்று ஆய்வும்
நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்த மனிதப் பயல்கள்
செய்யும் அட்டகாசம் ஏதாவது காரணம் எனச்
சொல்வார்கள் இயற்கையை வேறு யார் இவ்வளவு
மாசு படுத்த இருக்கிறார்கள். எந்த
உயிர்கள் இப்படி எல்லாம் செய்கின்றன.
மறுபடியும்
பூக்கும் வரை
கவிஞர்
தணிகை.
No comments:
Post a Comment