Tuesday, January 29, 2019

தங்கர்பச்சானின் நல்ல எண்ணம்: கவிஞர் தணிகை

தங்கர்பச்சானின் நல்ல எண்ணம்: கவிஞர் தணிகை


Image result for thangarbachan and thamil

வாட்ஸ் ஆப்பில் சில நிமிடம் மட்டுமே அந்தக் காணொளி பார்த்தேன். தமிழ் மொழியில் முன்னோர்கள் 2000 வார்த்தைகள் அறிந்திருந்தார்கள் அதை புழங்கினார்கள் அந்த பண்டைக்காலம் போக அது அதை அடுத்த காலத்தில் 1000 வார்த்தையாகி  கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி 500 வார்த்தை இப்போது வெறும் 200 வார்த்தை கூட தமிழ் சிறுவர் சிறுமிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது  என ஆதங்கப்பட்டு இனி தமிழில் எழுதும் செயலை அதிகம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிடுகின்றார்.

மிகவும் உண்மையான தமிழ் மொழிக்கான தற்போதையத் தேவை இது.

எனவே மூளைச் செல்களிலும் நரம்புகளிலிருந்து ஏற்படும் எண்ணங்களுக்கு வடிவத்தை கைகள் வழியே எழுத்துகளாக்கும் பயிற்சியை மறுபடியும் தீவிரமான எண்ணம் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்.


தட்டச்சு, சுருக்கெழுத்து முற்காலத்தில் நாம் எழுதுவதை ஒரு வாறு மாற்றியது அதை அடுத்து இப்போது கூகுள், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளில் பேசுவதை என்ன மொழியானாலும் அதை அப்படியே எழுதி விடுகிறது அதை நாம் சொல்ல வேண்டிய நபர்க்கு அப்படியே அனுப்பி வைக்கும் வேலை ஒன்றை செய்ய வேண்டியதுதான் என்றாகிவிட்டது

முற்றிலும் எழுதும் வேலையே இல்லை. அறிவியல் முன்னேற்றம் இந்த அளவு உள்ள நிலையில் தாய் மொழி தமிழ் பற்றி உண்மையிலேயே அக்கறையும் கவலையும் கொண்டிருக்கும் அவரின் அந்தப் பகிர்தல் என்னைத் தொட்டு விட அதற்காகவே இந்த சிறு பதிவை உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள சித்த வைத்திய நாட்காட்டியின் இந்த 2019 ஆம் ஆண்டின் ஏடுகளில் மாபெரும் அறிஞர்களின் தமிழ் மறவர்களின் குறிப்புகள் இருந்தன அவற்றில் கூட ஓரிடத்தில் எழுத்துப் பிழையை கவனிக்க நேர்ந்தது மூன்று சுழி ணகரத்துக்குப் பதிலாக இரண்டு சுழி னகரத்தை போட்டிருந்தார்கள்.

உண்மையிலேயே இரண்டு ஒரே மாதிரியான எழுத்துகள், மூன்று ஒரே மாதிரியான எழுத்துகள் அதாவது லகரம், ளகரம், ழகரம், னகரம் ,ணகரம் ரகரம் றகரம்

போன்ற எழுத்துகளை எழுதுவதில் மிகவும் மோசமான நிலையிலேயே நமது தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல நல்ல தொழில் வல்லமையுள்ள வேறு வேறு துறைகளில் சிறந்து விளங்கும் விற்பன்னர்களிடம் கூட இந்தக் குறைபாடு இருப்பதை மறுப்பதற்கில்லை.


எல்லாம் ஒரே அவசரகதி, அல்லது கவனக்குறை அல்லது தெரிந்தவரை வைத்து செய்து முடிக்காமை இவை யாவுமே இது போன்ற பிழைகள் நேரக் காரணம்.

எனவே ஒவ்வொரு ஆக்க பூர்வமான பணிகளை மேற்கொள்ளும்போதும் அது காலத்தை விஞ்சி நிற்கப் போகிறது என்ற இறுமாப்புடன் உறுதியேற்று அதற்குரிய கால நேரத்தை அதற்கு ஈந்து எழுதும் பணியை அதைப் பிரசுரிக்கும் பணியை செய்ய வேண்டியது முதலில் முன்னோரின் மூத்தோரின் கடமையாகிறது.

இப்போது எதில் பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் பிழைகள் நிறைய மலிந்துவிட்டன. தமிழ் தள்ளாடிக் கொண்டிருப்பது உண்மைதான். இனியாவது தமிழ் தெரிந்தார் தமிழில் சிறிது நேரம் தமது குடும்பத்தாரை எழுதச் சொல்வது எழுதச் செய்வது இன்றியமையாதது.


இப்படி எழுதாமலும் பேசாமலும் இருந்த நிறைய மொழிகள் காணாமல் போயிருக்கின்றன.இப்போது தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னடம் பேசுவோரின் மொழிகளை எல்லாம் நீங்கள் கவனித்துப் பாருங்கள் பெரிய நகைச்சுவையாய் இருக்கும்.

நன்றி: தங்கர் பச்சான்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment