Sunday, January 27, 2019

இலவசத்தின் உச்சம் மடிக்கணினியில் பள்ளி மாணவர்கள் ஆபாச நீலப்படம் பார்ப்பது: கவிஞர் தணிகை

இலவசத்தின் உச்சம் மடிக்கணினியில் பள்ளி மாணவர்கள் ஆபாச நீலப்படம் பார்ப்பது: கவிஞர் தணிகை
Image result for lap top to school students in tamil nadu free scheme is utter failure useful to see blue films


பள்ளி மேனிலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுவது கல்வி தொடர்பானதுதான் அதை புது சினிமா பார்க்க பதிவிறக்கம் செய்வதும், ஆபாச‌ நீலப்படம் பார்ப்பதும் தேவையில்லா நச்சுக்களை பதிவேற்றம் செய்வதும் இலவச விலையில்லா மாணவர்கள் சலுகைகளின் உச்சம். கிடைப்பதென்னவோ இது போன்ற எச்சம் மட்டுமே.

மதிய உணவு அளித்த காமராசர் கல்விக் கண் கொடுத்த கர்மவீரர் என்று கருதப்பட்டார் அவர்க்கு முன்பே சென்னையில் ஒரு அறிஞர் அந்தக் காரியத்துக்கு அந்த இலவச மதிய உணவுத் திட்டத்துக்கு முன்னோடியாக இருந்து ஒரு கல்விக்கூடத்தில் அந்த அரும்பணி ஆரம்பமாகக் காரணமாக இருந்திருக்கிறார் என்ற செய்தியும் உண்டு. தேடினால் விவரம் கிடைக்கும் இப்போது அது என் நினைவில் இல்லை. காமராசரை எம்.ஜி.ஆர், கருணாநிதி ஜெ எல்லாம் மிஞ்சினார்கள்  இலவசம் பள்ளிக்கு அளிப்பதில் பின்னணியில் காரணங்கள் பலப்பல.
Related image
அந்த மதிய உணவு ஆரம்பத்தின் உச்சம் இப்படி மடிக்கணினி கொடுக்கப்பட்டு மாணவர்கள் ஒழுக்கம் கெடுக்கப்படும் வரை அரசியல் மற்றும் பல்விதக் காரணங்களாலும் சென்று கொண்டிருக்கிறது.

பள்ளி மேனிலை வகுப்புகளில் மாணாவர் ஒருவர் பள்ளியிலேயே வந்து ஆபாச‌ நீலப்படம் பார்க்கிறார் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என ஒரு ஆசிரியர் மற்றொரு உடற்கல்வி இயக்குனரிடம் தமது தீராத பொருமலை வெளிக் கொட்டி இருக்கிறார்.

எங்கே நாமும் நமது சமுதாயமும் நமது இளைய சமூகமும் சென்று கொண்டிருக்கிறது?

 ஆசிரியர் கேட்டால் கத்தியால் குத்துவேன் , அடித்து வீழ்த்துவேன் என எகிறிக்கொண்டிருக்கிறது ஒரு ரௌடிகள் கூட்டம் மாணவர்கள் என்ற பேரில்

கடந்த வாரத்தில் ஆசிரியரை எள்ளி நகையாடிய  ஒரு மாணவரின் தந்தை பள்ளியிலேயே வந்து தமது மகனை செருப்பால் அடித்திருக்கிறார்

அரசுப்பள்ளியில் நிலை சொல்லத் தரமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அரசுப்பள்ளியில் துவக்கப்பள்ளி, இடைநிலை, உயர் நிலை, மேனிலை இவற்றில் எல்லா இடங்களிலும் செருப்பு, புத்தகம், பை, சைக்கிள், நோட்டுகள் இப்படி எல்லாம் மதிய உணவு, முட்டை, மடிக்கணினி இன்ன பிற இலவசங்கள் படுக்க இடம் ஒன்று தவிர வாழ்வின் தேவைகளை எல்லாம் நிறைவு செய்து தருகிற மாதிரி அரசு போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களுக்கு எல்லாம் செய்கின்றன. ஆனால் ஒழுக்கம், என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சுத்தம் சுகாதாரம் குடிநீர், கழிப்பறை வசதிகள் எல்லாப் பள்ளிகளிலும் சொல்லத்தரமில்லை. அவற்றை அந்த அந்த ஊரின் பிரமுகர்களிடம் விட்டாலும் ஒழுங்கு செய்வார்கள். ஆனால் குடிநீரை தனியாரிடம் விட்டதனால் நீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடுகையில் மின்சாரமும் காவிரி நீரும் எல்லாவற்றுக்கும் கிடைக்கும் என தொழில் முனைவோரிடம் சிவப்புக் கம்பளம் விரிக்கிறதாம் தமிழக அரசு...

இந்த மடிக்கணினியை வாங்கி ஒரு விலை நிர்ணயம் செய்து விற்று விடுகிற செயல்களும் இல்லாமல் இல்லை அதைக் கட்டுப்படுத்த அரசிடம் எந்த நியாயத் தராசுகளும் இல்லை.

ஆனால் எந்த சலுகையும் செய்யாமல் ஆண்டுக்கு மிகப்பெரும் தொகையை கட்டணமாக வசூலித்து வரும் தனியார் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது( ஜெ அரசை விட செங்கோட்டையன் கல்வி அமைச்சு ஏதோ செய்ய நினைக்கிறது என்பதை செய்திகள் வாயிலாக அறியலாம் ஆனாலும்)

இவற்றில் எங்கே முரண்பாடு இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்
தனியார் பள்ளிகளில் மட்டுமே மிக அரிய ஒழுக்க நெறிகள் எல்லாம் போதிக்கப்பட்டு கற்றுக் கொடுப்பதாக எல்லாம் கருத முடியாது

பின் ஏன் இந்த இரட்டை நிலை?
Related image
அரசு அப்படித்தான் எப்போதும் எல்லாத் துறைகளிலுமே தனியார், அரசுத்துறை என்ற இரு குதிரை சவாரிகளை ஒரே நேரத்தில் செய்ய முயன்று தோற்று மண்ணைக் கவ்வி தர தர வெனெ இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்து, கல்வி, மருத்துவம், தொழில், குடி நீர், மின்சாரம் பால் பொருட்கள் விநியோகம் இப்படி நாட்டின் மக்களின் எல்லா முக்கிய‌த்துவம் சார்ந்த துறைகளிலுமே இரு குதிரைச் சவாரிகளே செய்கின்ற அரசுகள்...

கள்ளச் சாராய ஒழிப்புக்காக பாடுபட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தின சிறப்பு விருதுகள் தருகின்றன மது விற்பனையை அரசே நடத்திக் கொண்டு... எங்கே சிரிப்பது எனத் தெரியவில்லை

இந்நிலையில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்களின் வேலை நிறுத்தம்...போராட்டம் இன்ன பிற...

ஒன்று எல்லாவற்றையும் தனியாரே நிர்வகிக்கட்டும் அரசும் அமைச்சும் ஆட்சியும் அதிகாரமும் நிர்வாகமும் மட்டும் அரசின் கைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையுள் இருக்கட்டும்

அல்லது எல்லாவற்றையும் அரசே எடுத்துக் கொள்ளட்டும்...குவிந்து கிடக்கும் செல்வத்தை பரவலாக்கலாம்...இருப்பதை சமமாகப் பிரி அது எதுவானாலும் நட்டம் என்றால் எடப்பாடி சொன்னபடி  மக்களே ஏற்றுக் கொள்ளட்டும் இலாபமானாலும்

இலாபத்தை அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும்,தனியார் முதலாளிகளும் எடுத்துக் கொள்ள நட்டத்தை மட்டும் மக்களுக்கு பிரித்துக் கொள்ளச் சொல்வது என்ன அரசு குடி அரசு...அதுவே இந்தியக் குடியரசு. எனவே நாம் மாணவர்கள் என்ற நல் ஒழுக்கம் மலர வேண்டிய அரும்புகளில் இலவசம் என்ற பேரில் நச்சு விதைகளை விதைத்து வருகிறோம்

விஸ்வாசம் படம் பார்க்க பெற்ற தந்தையைக் குத்தும் ஒரு சினிமா இரசிகனாக இல்லை இல்லை வெறியனாக‌

குடிக்க காசு தரவில்லை என்று தந்தையைக் கல்லை எடுத்து தலையில் போட்டு கொன்று போடும் போதை வெறியனாக‌

எண்ணத்துக்கு தடைபோடுகிறார் என ஆசிரியரைக் குத்தி கொலை செய்யும் கொலைகாரர்களாக...
Related image
70 ஆம் ஆண்டு குடியரசில் இன்னும் இதைப் போன்றவற்றைப் பற்றி எல்லாம் நிறைய சிந்திப்போம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment