Saturday, January 26, 2019

இடைவெளிகள் இட வெளிகள்: கவிஞர் தணிகை

இடைவெளிகள் இட வெளிகள்: கவிஞர் தணிகை

Image result for space and distance


கீத்தா மேத்தா பத்மஸ்ரீ விருதை நிராகரிக்க, பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கப்பட இருக்க...தேர்தல் காலம் நெருங்க நெருங்க...தமிழகத்தில் ஆசிரியர் போராட்டம்.

ஒரு புறம் தற்காலிக ஆசிரியர்க்கு மாத ஊதியம் 7,500 ரூபாய் இருந்ததை ரூ. 10,000 உயர்த்தி வழங்க அரசு முடிவும், மேலும் புதிய ஆசிரியர்களை 7,500க்கு சேர்க்க இருப்பதாகவும், பணி நிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை உடனே வேலைக்குத் திரும்பாவிட்டால் கடுமையான சட்டம் பாயும் என்றும் மந்திரிகளும், செயலாளர்களும் நீதிமன்றமும் எச்சரிக்கை விடுக்க....போராட்டக்காரர்களோ போராட்டத்தை கடுமையாக்கப்போவதாக செய்திகளில் தெரிவித்திருக்க...

இதெல்லாம் செய்தி படிப்பார்க்கு தெரிந்ததுதானே ஏன் இதை எல்லாம் நீங்கள் மறுபடியும் சொல்லிக் கொண்டு இருக்கிறீர் என நீங்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. காரணமும் இருக்கிறது.

தனியார் பள்ளிகளில் ரூபாய் இரண்டாயிரத்துக்கு பணி புரியும் ஆசிரியர்கள் இருக்கும் இதே நாட்டில் இலட்சக்கணக்கான ஊதியத்தைப் பெறும் வங்கிப் பணி ஊழியர்களும், ஆசிரியப் பணியிலும் அரசுப் பணியிலும் இருக்கும் நபர்களும் ரயில்வேயில் இருக்கும் பணியாளர்களும் அடிக்கடி யூனியன் சங்கம், வேலை நிறுத்தம், பயமுறுத்தல் உத்திகளில் அரசை மிரட்டி வருவது வாடிக்கையாகவே நடந்து வருகிறது...அதில் அடுத்து முக்கியத்துவமாகக் கருதப்படும் போக்குவரத்துத் துறையும்.

இதற்கெல்லாம் சரியான முடிவுகள் அரசால் எடுக்க முடியாமல் இருக்கும் நிலை ஒரு பக்கம்....எல்லாமே முதலாளித்துவ சிந்தனை மட்டுமே பரப்பி வரும் ஊடகங்கள், சமூகத் தளங்கள், மறுபக்கமாயும்,

சமூகப் பற்றோ பிடிப்போ பொது நலமும் இல்லாத மக்கள் அதன் அடிப்பக்கமாகவும் தாங்கி இருக்கும் அரிய குடியரசு இந்தியக் குடியரசு.

உங்கள் அனைவர்க்குமே தெரிந்திருக்கும் செய்தி: தனியார் பள்ளிகளின் நிலையும், அரசுப் பள்ளிகளின் நிலையும். வேடிக்கையாக சொல்வதுண்டு: அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்கள் வளமை செழுமையுடன் இருக்க பள்ளிகள் இன்னும் பாவமாகவே இருக்கின்றன பெண் பிள்ளைகளுக்கான ஓய்வறைகள் கூட சரியாக இல்லாமல். பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளில் தேவையான போதுமான நீர் குடி நீர் வசதிகள் கூட இல்லை. தனியார் பள்ளிகள் வளமாக செழுமையாக இருக்க அதன் பணியாளர் யாவரும் பரிதாப நிலையில் இருப்பதும் உண்மை. நாட்டின் முக்கியமான அமைப்பு அடிப்படையைக் கட்டமைக்கும் அமைப்பு அதிக முக்கியத்துவம் இன்றியும் மதுக்கடைகள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கவும்...நமது குடியரசு தினங்கள் 70 ஆண்டுகளாக..
Related image
மேலும் சொல்ல இந்தக் குடியரசு தினத்தில் ஒன்று உண்டு அது  என்ன வெனில் இந்த நாட்டில் குடிமகன்கள்கள் பேருந்து நிலையத்திலும் ரயிவே சந்திப்புகளிலும் வானே கூரையாய் மண்ணே வீடாய் படுத்துக் கிடக்க, ரெயில்வே நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் திறந்த வெளிக் கழிப்பிடங்களாய் மாற்றிக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ளாதிருக்க...

இந்தியா ஒரு பெரும் வல்லரசு முப்படைகளில் என வருடம் தோறும் குடியரசுதின அணிவகுப்பு நடத்தி உலகையே அசத்திக் கொண்டிருக்கிறது.

எமது மாணவர்கள் ஆசிரியர்களை பயத்தில் ஆழ்த்தி கத்தி எடுத்துக் குத்திக் கொல்வதும் குடித்துவிட்டு பள்ளிக்குச் சென்று சட்டையை கழட்டிவிட்டு ஆசிரியரை மிரட்டி ஆடிக் கொண்டிருப்பதுமான காட்சிகளை வாட்ஸ் ஆப் போன்ற ஊடகங்களில்  கண்டு கொள்ள பகிர்ந்து கொள்வதைக் காணமுடிகிறது. அதெல்லாம் நம்பாதீங்க என்று ஒரு குரலும், நடந்ததைத்தானே நாங்கள் எடுத்துப் போடுகிறோம் என மற்றொரு குரலுமாய் இருக்கின்றன. இல்லையென்றால் இன்னொரு பக்கம் பள்ளிகளின் ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் என்ற பேரிலும் பள்ளியின் முதல்வர் என்ற பேரிலும் அவர்களை பூட்ஸ் காலால் வயிற்றில் உதைப்பதும், சிகையை கத்தரிப்பதும், கை கால்களை உடைப்பதும், அடித்த அடியில் மயக்கமாகி ஏன் சில நேரம் இறந்து விடுவதுமான நிகழ்வுகளும் இந்த நாட்டில் நடந்திருப்பதை செய்திகளாக நாம் படித்திருக்கிறோம்.

இன்றும் நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என அவர்களைத் தம் ஊரில் தக்கவைக்க போராடும் ஊர்களும் இருக்கின்றன ஓய்வு பெறும் ஆசிரியர்க்கு காசு திரட்டி புல்லட் பைக் எல்லாம் வாங்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் மறுத்து விட முடியாது.
Related image
குடி அரசு என அரசு விடுமுறை என்பதே தனியார் முதலாளிகளும் கடைப்பிடிக்காமல் இருக்கும் முறையில் நாட்டில் நிறைய நிறுவனங்களும், மேலும் சொந்த தொழில் செய்யும் நபர்களும் கடைப்பிடிக்காமல் இருப்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

குடி அரசு என்றால் என்ன என்பதை நமது குடியரசில் உள்ள மக்களிடம் கேட்டு ஒரு சர்வே கணக்கீடு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுப் பாருங்கள் அதிலிருந்து நாம் மிகவும் அரிய விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் முடியும். நாம் நிறைவு செய்ய வேண்டிய இடைவெளிகளும், இடவெளிகளும் எவ்வளவு இருக்கிறது என...வணக்கம் 70ஆம் குடியரசு தினத்துக்கு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. அருமையான பதிவு.
    பஸ் டே கொண்டாட்டம் நடத்தும் மாணவர்கள் உள்ள நாடு.

    ReplyDelete