Saturday, January 5, 2019

மஹரிசி வித்யா மந்திர் பள்ளி ராக்கிப் பட்டியில் : கவிஞர் தணிகை

மஹரிசி வித்யா மந்திர் பள்ளி ராக்கிப் பட்டியில் : கவிஞர் தணிகை



அணில் லாசர் முத்தத் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ முதுகலை மாணவர் இரண்டாம் ஆண்டு சிறுவர் பல் மருத்துவப் பிரிவு சார்ந்தவர் நேற்று காலை திடீரென ஒரு முகாம் செய்ய வேண்டும் சார், நீங்கள் அவசியம் வரவேண்டும் ,கலந்து கொண்டு நடத்தி கொடுக்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். அவர் மேல் எனக்கு ஒரு மென்முகம் எப்போதும் உண்டு. ஏன் எனில் வேறு எவரும் அவர் மேல் அக்கறை காட்டாதபோதும் கேரளா சார்ந்தவர் நமது மண்ணில் வந்து அரிய ஆய்வுப் பணியை எல்லாம் ஏற்றுக் கொள்கிறாரே என்று அவருக்கு உதவுவது நமது கடமையல்லவா?

அவருடன் 3 பயிற்சி மருத்துவர்களும் முகாமுக்குத் தேவையான உப கரணங்களும் தயாராக எடுத்து வைத்திருந்தனர். கல்லூரி முதல்வர் வந்தவுடன் அவரிடம் அன்று கல்லூரிப் பணிதான், வேறு நிகழ்ச்சி ஏதுமில்லை முகாம் செய்ய பல்சிறுவர் மருத்துவப் பிரிவின் மருத்துவர்கள் பள்ளிக்கு அழைக்கின்றனர் என உத்தரவு வாங்கிக் கொண்டு இளைஞர்களுடன் இணைந்தேன்.

அது ஒரு நீல நிறக் கார், மற்றொரு மருத்துவருடையது. கல்லூரி முகாம் வாகனமும் அல்ல. முகாம் சிறப்பு அட்டைகளை கல்லூரி பொது பல் மருத்துவப் பிரிவில் பெற்றுக் கொண்டு ராக்கிப் பட்டியில் உள்ள பள்ளிக்கு விரைந்து சென்றோம்.ஏன் அந்தக் காரைப்பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் அது அந்தப் பள்ளியிலிருந்து நாங்கள் திரும்பி வரவே விடாமல் அந்தக் கார் நாங்கள் திரும்பி வரும்போது சரியாக மக்கர் செய்தது.

அது ஒரு மேலாண்மைக் கல்லூரியாக இருந்த இடம், அது இப்போது மஹரிஷி வித்யாமந்திராக மாற்றப்பட்டிருந்தது. அது ஒரு சென்ட்ரல் போர்ட்  ஆப் செகன்டரி எஜுகேஷன்...நடுவன் இடை நிலைக்கல்வி வாரியத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று புதிதாக துவங்கி நடந்து வரும் பள்ளி. சரியாகச் சொல்ல வேண்டுமெனில் அது இருக்கும் இடத்தின் பெயர் : எட்டிமாணிக்கம்பட்டி என்பதாகும்

பள்ளி புகு முக‌ வகுப்பிலிருந்து எட்டாவது வரை அங்கே 110 மாணவ மாணவியர் இருந்தனர். மேலும் ஆசிரியர்கள், நிர்வாகஸ்தார் எல்லாம் சேர்ந்து தோராயமாக 150 பேர் மட்டுமே. எங்களது கல்லூரிக்கு அது ஒரு பெரும் தொகையல்ல...ஏற்கெனவே 4200 மாணவர் கொண்ட பள்ளிகள், 3500, 1500 மாணவியர் கொண்ட கல்லூரிகள் எல்லாம் மிகவும் சுலபமாக பல் பரிசோதனை முகாம் நடத்தும் எங்களுக்கு இது மிகவும் குறைந்த எண்ணிக்கை எனவே மிகவும் கவனத்துடன் நேரம் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு மாணவரையும் எமது மருத்துவர்கள் சிறப்பாக கவனித்து பரிசோதனை செய்து முகாம் அட்டைகளையும் தேவையானவர்க்கு வழங்கி அறிவுரை செய்தனர்.

சுமார் இரண்டு மணி நேரத்தில் முடிந்த இந்த முகாமில் அதன் பின் அனைத்து மாணவர்களையும் ஒரு சேர வைத்து பல் பராமரிப்பு மருத்துவ முறை, எமது கல்லூரி அமைப்பு முறை பணிச் சிறப்பு போன்றவற்றை எடுத்துக் கூறினேன்.

இந்த முகாம் இனிதே நடைபெற இதன் ஒருங்கிணைப்பாளர் பத்மஜா, என்பவரும் ரூபின் என்பவரும் மற்ற பள்ளி அலுவலர்களும் மிகச் சிறப்பாக கவனம் எடுத்துக் கொண்டு செயல்பட்டனர்.

அந்தப் பள்ளியில் தங்கள் மதிய உணவை முடித்துக் கொள்ள இருபக்கமும் நிர்பந்தம்... ராகி + அரிசி + உளுந்தில் இட்டில் செய்து இருந்தார்கள் அது ராகி நிறத்திலேயே இருந்தது. மதிய உணவு அந்த பள்ளி மாணவர்களுடன் இறை வணக்கத்திற்கும் பிறகு. எளிய சுகாதாரமான ஆரோக்கியமான உணவு...


மேலும் இந்த மஹரிசி என்பவர் யார் என்பது பற்றி சிலரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். எவருக்கும் தெரியவில்லை.ஆனால் அவர் பேர் வைத்திருக்கும் பள்ளியில் அவரால் இயங்கும் கல்வி நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் இருந்தனர்.

அதன் பின் நான் வந்து இணையத்தில் தேடிப்பார்த்ததில் அவர் ஜபல்பூர் மத்தியப் பிரதேசத்தில் 1918ல் ஜனவரி 12ல் பிறந்து பிரமானந்த சரஸ்வதியின் தலைமைச் சீடராக,உதவியாளராக இருந்து உலகெங்கும் 1000க்கும் மேலான கிளைகள் வைந்து ஆழ்நிலைத் தியானம் பள்ளிகள், கல்லூரிகள் கல்வி நிலையங்கள் நடத்தி மில்லியன் பில்லியன் கணக்கில் சொத்துகளை உற்பத்தி செய்த கனவான் என்றும் இவர் லம்பர்க் நெதர்லாண்ட்ஸ் நாட்டில் பிப்.5 2008ல் மறைந்திருக்கிறார் அப்போது அவரின் வயது 90 என்றும் அறிய முடிந்தது...பையா பிரமச்சாரி மகேஷ் என்றும் பால பிரமசாரி என்றும் இவரது தோழர்களால் பிரமானந்த சரஸ்வதியுடன் இருந்தபோது அழைக்கப்பட்டார் என்றும் அறியமுடிகிறது.மஹரிசி மஹேஸ் யோகி.

 பீட்டில்ஸ் இசைக்குழு இவரின் தியானப் பயிற்சி மேற்கொண்டது , இவரது உலகளாவிய பயணமும் புகழும், இவர் எழுதிய  THIRTY YEARS AROUND THE WORLD உலகைச் சுற்றிலும் 30 ஆண்டுகள் தர்ட்டி இயர்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்,1964ல் இவர் எழுதிய  THE SCIENCE OF BEING AND  ART OF LIVING தி சைன்ஸ் ஆப் பியிங் அன்ட் ஆர்ட் ஆப் லிவிங் நூல் உலகெங்கும் 15 மொழிகளில் பல இலட்சக்கணக்கான பிரதிகள் குறுகிய காலத்திலேயே விற்பன ஆயிற்று
இவர் ஆரம்பத்தில் பிராமண வம்சத்தில் பிறக்காத காரணம் பற்றி இவரது குரு  இவரை உலகெங்கும் சுற்றி தியானத்தை திர்ளான மக்களுக்கு கற்பி எனப் பணிக்கப்பட்டு பிரமானந்த சரஸ்வதியால் நியமிக்கப்பட்டார். அப்போது பிரமானந்த சரஸ்வதி தமக்கு அடுத்த வராக சுவாமி சாந்தானந்த சரஸ்வதி என்பாரையே நியமித்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது... இப்படியே அவரைப்பற்றிய ஒரு சரிதம் விரிகிறது...

ஆதாரம் விக்கிப் பீடியா..

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை

No comments:

Post a Comment