Monday, January 21, 2019

நாட்டு நடப்பும் வீட்டு நடப்பும் என் பார்வையில்: கவிஞர் தணிகை

நாட்டு நடப்பும் வீட்டு நடப்பும் என் பார்வையில்: கவிஞர் தணிகை

Image result for marubadiyumpookkum


தேர்தல் காலம் ஆரம்பித்து விட்டது. அணி சேரும் முயற்சிகள் துவங்க ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் ராகுல் பிரதமர் வேட்பாளராக நிறைய பேரால் முன்மொழிய முடியாதபோதும் மோடிக்கு எதிர்ப்பு செய்வதில் ஒரு ஒற்றுமையின் அணியாக இருக்கிறார்கள்., மமதா அணி சேர்ப்பு அதில் ஸ்டாலின் முதல் சத்ருகன் சின்ஹா  வரையும் உ.பியில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் இப்படி எதிரும் புதிருமானவர்கள் யாவரும் பாரதிய ஜனதாவுக்கு மோடிக்கு எதிராக அணி திரள்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.கவும் கருணாநிதியும் மறுபடியும் ஆட்சிக் கட்டில் ஏறிவிடக்கூடாது என கடந்த சட்டசபைத் தேர்தலில் மாறுபட்டு அணி சேராமல் கெடுத்த வைகோ, திருமா,விஜய்காந்த் ஆகிய கட்சியினர் எல்லாம் கூட தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பாகவே இருக்கிறார்கள்.

தமிழகத்தில நடந்தது மாதிரி இந்த உதிரிகள் எல்லாம் வாக்கைப் பிரித்து, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை தனிப்பெரும் மெஜாரிட்டி வராமல் செய்து, இராகுல் மேல் இருக்கும் பிடிப்பின்மையால் இரண்டாம் அணிக்கு எதிராக மூன்றாம் அணி என அவர் வரக்கூடாது என மோடியையையே மறுபடியும் ஆள விட்டு விடுவார்களோ என்ற கோணமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மொத்தத்தில் நடந்து முடிந்து இன்னும் சில மாதங்களே மீதம் இருக்கும் இந்த ஆட்சி பணம் படைத்தாரின் ஆதரவான ஆட்சிதான்.

செல்பேசிக்கு எல்லாம் மாத வாடகை வந்துவிட்டது.

வங்கியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மக்களின் சேமிப்புப் பணத்தை ஏழைகளின் பணத்தை முடக்க முடியுமோ அப்படி, ஒன் டைம் பாஸ்வேர்ட், செல்பேசி எண்களின் அவசியம், ஏடி எம் கார்ட் மறுமலர்ச்சி இப்படி பல வகையிலும், ஏன் சமையல் எரிவாயு இன்னும் கூட இலவச இணைப்பு என்ற பேரிலும்

பெட்ரோலியப் பொருட்களின் விலைவாசி ஏற்றம், எல்லா மனிதர்களின் அன்றாடத் தேவைகள் பாலும் விலைவாசி ஏற்றம்...

பணம் படைத்தாருக்கென சுலபமான வாழ்க்கை...

குடிநீருக்கும் கூட ஏழை எளியார் கை ஏந்தும் நிலை, மருத்துவம், கல்வி ஆகியவை தனியார் கையில்...

நாட்டு நடப்பு இப்படி இருக்கையில்

வீட்டு நடப்பில்
ஒரு புத்தாண்டு நிகழ்வில் கிடைத்த விருதும், அதன் வழியே புத்தகம் விற்பனை மற்றும் போக்குவரத்துக்கான செலவு எல்லாம் சேர்த்து நாலாயிரம் தந்ததை எல்லாம் சேர்த்து ஒரு டெல் டெஸ்க் டாப் மானிட்டர் வாங்கி விட்ட செலவு. செலவு எப்போதும் எமக்கு முன் வரும் பின் தான் வருவாய் வரும் என்பதற்கேற்ப...

தமிழக அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் பொங்கல் திருவிழா ரொக்கம் மகனது கைகளை வலுவாக்க கனம் தூக்கி வாங்கி அதை செலவளித்துவிட்டான். டம்புள்ஸ் என்பதற்கு நேரடியாக சரியாக மொழிபெயர்க்க நேரம் நிறைய தேவைப்படும் என நினைக்கிறேன்

அந்தக் காலத்தில் டம்புள்ஸ் என்பது ஒன்று கற்களால் செதுக்கப்பட்டிருக்கும் அல்லது இரும்பில் இருக்கும். இது ரப்பர் கார்க் போன்ற மொத்தமான ரப்பரால் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல வேளை அந்த 16 கிலோவில் ஒர் 3 கிலோ எடை என் இடது கால் பெருவிரல் மேல் விழுந்தும் தப்பித்துக் கொண்டேன். பழைய காலத்தின் கற்கள், அல்லது இரும்பு போன்றதாக இருந்தால் தவறி விழுந்த கனமான எடையால் எனது இடது கால் பெருவிரல் துண்டாகி இப்போது இந்தப் பதிவைப் போட நான் இயன்றவனாக இருந்திருக்க மாட்டேன்.

கோபெ நாராயணசாமி என்னும் தலைமை மற்றும் தமிழாசிரியராக மேட்டூரில் தமிழ் சங்கம் நடத்தி வந்த ஒரு நல்ல மனிதர் மறைந்து விட்டார்.அவர் எனது முதல் நூல் வெளியிட்டபோது தமிழருவி மணியனை அழைத்து வந்து விழா நடத்தி அதில் எனது நூலை ,,,,நான் அதை எந்த விழாவும் இன்றி விற்க ஆரம்பித்திருந்ததை  கண்டறிந்து விழாவில் போஸ்டர் எல்லாம் அடித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூலை எல்லாம் ஒரு விலைக்கும் வாங்கிக் கொண்டு அந்த விழாவில் வெளியிட்டு அவரும் மகிழ்ந்து எனையும் மகிழ்வித்தார். கோனூர் பெருமாள், சிந்தனையாளர் அர்த்தனாரி போன்ற பெரியவர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் எனக்கு போர்த்திய பொன்னாடையை நான் உடனே விலக்கி மடித்து வைக்காமல் தோளில் ஏந்தியபடியே எனது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டிற்கான ஏற்புரையை செய்தது இன்றும் எனது நினைவுள்.

ஆனால் அந்த மனிதரின் மறைவுக்கு என்னால் கலந்து கொள்ள முடியாமலே போனது. வாட்ஸ் ஆப் செய்தி மூலமே தெரிந்து கொண்டேன். மேலும் மற்றொரு நண்பர் ஜெயச் சந்திரன் என்பார் கலந்து கொண்ட நிகழ்வை எல்லாம் எனக்கு சொல்லிப் பகிர்ந்து கொண்டார்.

கொ.பெ.நாவும் நரேந்திரனும் என்று ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன். அதில் 39 வயதே ஆன இளைஞர்  விவேகானந்தரின் வாழ்வை நூற்றாண்டுக்குப் பின்னும் உலகு சிந்திக்கிறது... இளைய ராஜா ஞானிதான் ஆனால் அவருக்கு தான் என்ற கர்வம் கலைஞர்களுக்கே உரியது அதிகம், மேலும் தான் மட்டுமே இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை என்று சொல்லுமளவு போய்விட்டதாக ஊடகங்களில் வந்தது எல்லாம் மெய்யாய் இருக்குமோ என்றெல்லாம் சிந்திக்குமளவு அவர் பேசத் தெரியாமல் பேசியிருக்கிறார். பொதுவாக அவருக்கு பொது இடங்களில் எப்படி பேசுவது என்று தெரியாத அளவு அவர் உண்மையிலேயே பெரிய ஞானிதான்.
Image result for marubadiyumpookkum
தத்துவம், ஆன்மிகம் பாடல்களுக்கே அவரது குரல் பொருத்தம் என்றபோதும் ஒரு நல்ல பாடலை மற்ற பாடகர் பாடும்போது நன்றாக் இருக்கும் என்றால் தானும் பாடுவார், மேலும் காதல் பாட்டெல்லாம் பாடி தமிழ் கூறும் நல்லுலகத்தின் மேல் அவர் தமது மேலாண்மையை நிர்பந்தித்து திணிப்பார்.  என்றாலும் அவர் ஞானிதான் அதில் வேறுபட்ட கருத்து இருப்பதற்கில்லை

இதை எல்லாம் எழுத ஆர்வம் கொண்டிருந்த நிலையில் எனது மேஜைக் கணினியின் திரைக் காட்சி பழுதுபட்டாகிவிட்டது . அதை புதிதாக மாற்றிக் கொண்டு எழுதுவதற்கு இத்தனை நாட்கள் பிடித்தது...

பொங்கல் போய்விட்டது...இனி வரும் இந்த ஆண்டில் வரும் விடுமுறை யாவும் சனிக்கிழமைகளிலேயே வருகிறது ஒரு கவலைதான்.

கடந்த சனிக்கிழமையில் கூட ஒரு பள்ளிக்கு சென்றிருந்து சுமார் 700 மாணவ மணிகளை சந்தித்து வந்தேன். எனது எண்ணெய்க்குளியல் நாளான அதை பொதுநலத்திற்காக மாற்றிக் கொண்டு தனிமனித நலத்தை தள்ளிப் போட்டு ஒரு தலைமைப்பண்புடன்  அன்று நடந்து கொண்டேன். இல்லையெனில் பொதுவாக வசதிக் குறைவான பணி நாளாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விடுமுறை எடுக்க வாய்ப்பு இருந்தால் எடுத்துக் கொள்வதே என் பழக்கம்.

 வங்கிகள் எல்லாம் ஏடிஎம் புதிது, அதை செயல்படுத்தவேண்டிய புதிது, அதன் பின் கடவுச் சீட்டு எண் குறித்த தகவல் புதிது என சாமான்ய மக்களுக்கு பலவகையிலும் தொந்தரவு செய்து கொண்டு அவர்களது சேமிப்பு பணத்தை முடக்குவதில் குறியாக உள்ளன என்பதை பலரும் பகிர்ந்து கொண்டனர். ஆனால் இணையம் பற்றி அறிந்திடில் இவை மிக எளிதே. ஆனால் இந்த வங்கிப் பணியாளர்கள் பெரும்பாலான வாடிக்கையாளர்க்கு அதை பெரிதான பிரச்சனையாக்குகிறார்கள் உடன் செல்பேசி கம்பெனிகளும் தம் பக்கத்திற்கு மாத வாடகை வசூலிக்க ஆரம்பித்து விட்டன. இதற்கு ட்ராய் உடந்தையாம், வேலிக்கு ஓணான் சாட்சியாக...

விஸ்வாசம் படம் பார்க்க காசு தராத தந்தையை விஸ்வாசம் இல்லாமல் கேவலம் ஒரு சினிமாவுக்காக குத்திக் கொன்ற தனயனைப் பற்றிய செய்தியை பத்திரிகையில் படிக்க நேர்ந்தது எனது காலத்தில் நாங்கள் படித்தறிந்த ஒரு அவல நிலை.

சுமார் ஒன்னரை ஆண்டுக்கும் பிறகு எப்படியோ மிரட்டி உருட்டி எங்கள் வீட்டருகே இருக்கும் தெரு மின் விளக்கை கம்பத்தில் எரிய வைத்திருக்கிறேன்.

எதையும் எதிர்பார்ப்பவர்க்கு(ம்)
எதையும் எதிர்பார்க்காதவர்க்கும்(ம்)
ஏமாற்றம் இல்லை

பால் நிலா பாலை நிலா பாழ் நிலா
பார் நிலா பா நிலா நிலா

என்றெல்லாம் எனது சுவர் எழுத்துகளில் மறுபடியும் வாசகங்கள் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளன.

மறுபடியும் பூக்கும் வரை
Image result for marubadiyumpookkum
இது எழுத வேண்டுமே என்று எழுதப்பட்ட எனது உளறல்கள்...தொடர்பு விட்டு விடக்கூடாதே என்பதற்காக...
 பார்த்த இரண்டு படங்களைப் பற்றி நான் எழுத தயாரில்லை



கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment