Sunday, January 27, 2019

ஆண் தேவதை ஆம் இது ஒரு சமுத்திரக்கனிக்கொரு பொற்காலம்: கவிஞர் தணிகை

 ஆண் தேவதை ஆம் இது ஒரு சமுத்திரக்கனிக்கொரு பொற்காலம்: கவிஞர் தணிகை

Image result for thamira director

பாரதிராஜாவின் தொடர்ச்சியாகத் தெரியும் சமுத்திரக்கனி நல்ல ஆக்கபூர்வமாகத் தெரிகிறார் சினிமா பிம்பங்களில். நேற்று அவருடைய நடிப்பில் தாமிராவின் இயக்கத்தில் கடந்த ஆண்டின் அக்டோபரில் வெளியான "ஆண் தேவதை" என்ற படத்தை நடைப்பயிற்சி கூட மேற்கொள்ளாமல் பார்க்க நேர்ந்தது. எனது துணைவியார் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என குறித்துக் கொண்டு பார்க்க விழைந்தார். அதில் ஒரு காட்சி பள்ளியில் ஹவுஸ் ஹஸ்பண்ட் என தந்தையைக்  குழந்தைகள் குறிப்பிடும்போது அதைக் கேலி செய்து வகுப்பில் உள்ள அனைவரும் எள்ளி நகையாடுகிறார்கள் ....உன் தந்தைக்கு என்ன தெரியும் அவருக்கு என்ன தொழில் என்ற வகுப்பாசிரியரின் கேள்விக்கு நன்றாக ஐஸ்க்ரீம் செய்வார், நன்றாக கதை சொல்வார் என்றும் பிள்ளைகள் சொல்ல மற்றொரு இவர்கள் குடும்பம் பற்றி அறிந்த குழந்தை இளங்கோ ஒரு வெட்டி ஆபிசர் வேலை இல்லாதவர் எனக் குறிப்பிடுகிறது.

இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்கிற அதே வேளையில் இப்படி பொறுப்புள்ள ஆண்களை அவமதிக்கும் சமூகமாகவும் இருக்கிறது என்பதை அழகாக படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

பால் வேறுபாடு பற்றி கதை சொல்ல ஆரம்பித்தவுடன் என்னால் அதை விட்டு வெளியேற முடியவில்லை.

பெண்களை ஹவுஸ் ஒய்ப் என்றவுடன் அல்லது வேறு பேர் கொண்டு ஹவுஸ் மேக்கர் என்றவுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இருக்கும் இதே சமூகத்திற்கு ஆண்களுக்கு ஹவுஸ் ஹஸ்பண்ட் என்றாலோ ஹவுஸ் மேக்கர் என்றாலோ ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. புதிதாக இருக்கிறது.

பழைய தமிழர் பண்பாட்டில் இருபாலரும் கால்விரலில் மிஞ்சி அணிந்தே வந்தனர். இப்போது ஒரு சில பெண்கள் தங்களது தாலிக் கயிற்றை சரட்டை எடுத்து மறைத்துக் கொள்வதையும் இல்லை என்று சொல்ல முடியாது.

உண்மையில் சொல்லப்போனால்: விதவை என்ற சொல் விளங்குவது போல விதவன் என்ற சொல் புழக்கத்தில் இல்லை என்பது உண்மைதானே...மணமனவர் என்றவுடன் பொட்டு, பூ, வண்ணச் சேலை போன்றவை மங்கல திருமணமான பெண்ணின் அடையாளங்களாக கருதப்பட்டவை...இன்று பூ விலை ஏற்றத்தால் பூ வாங்கிக் கொடுக்க முடியாத அல்லது வாங்கிக் கொள்ள முடியாத சூழலில் பண்பாடு கலாச்சாரம் எல்லாம் ஏகப்பட்ட திருகல்களில் சீரழிவில் சென்று கொண்டிருக்கின்றன‌
Image result for naadodigal
இந்த சூழலில் இந்தக் காலக்கட்டத்தில் இப்படிப்பட்ட படங்கள் தேவைதான். இதன் இயக்குனர் தாமிரா என்பவரை இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்தமைக்காக உண்மையிலேயே பாரட்டப்பட‌த்தான் வேண்டும். இவர் ஏற்கெனவே 2010ல் இரட்டைச் சுழி என்ற படத்தை எடுத்து பாரதிராஜா, பாலச்சந்தரை வைத்து இயக்கியவர் அந்தப் படம் இயக்குனர் சங்கர் தயாரிப்பில்  வெளிவந்து படுதோல்வி அடைந்து நட்டம் ஏற்படுத்தியபிறகு இந்தப்படத்தை செய்திருக்கிறார். 18 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக செய்திகள். ஆனால் இந்தப் படம் இன்னும் நன்றாக தமிழ் கூறும் நல்லுலகால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

மனநிறைவு என்பது பொருளாதாரம் பணத்தில் மட்டுமே இல்லை என்ற ஒரு நல்ல இளைஞரும் வாழ்வில் வேறு ஆதாரம் இல்லை என அவரை மணந்து ஒர் ஆண் ஓர் பெண் குழந்தைகளுக்குத் தாயான இன்றைய காலக்கட்டத்தின் மாயாலோகத்தில் ஈர்க்கப்படும் ஒரு அடிப்படையில் நல்ல பெண்ணும் வாழ்கிறார்கள் அதில் ஏற்படும் புயலும் அலையும் ஆட்டமும் அசைவும் படம்.

மாதாந்திர தவணை முறையில் வீடு கார் வாங்குவது தனியார் கம்பெனியில் பெரிய பணியில் இருப்பதாகவும் அவர்களுடைய இச்சையை தீர்க்க முடியாதபோது ஒரே நொடியில் தூக்கி வெளியே வீசப்பட்டு மறு வேலை தேடவேண்டிய நிர்பந்தத்தில் மாத தவணை கட்ட முடியாமலும், தற்கொலைக்கு முயலவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுமான சூழல்களை கதை விளக்குகிறது.

அதிகமாக ஆசைப்படாதே ஆசைப்பட்டால் விளைவு இப்படித்தான் என்னும் கணவனை தூக்கி எறிந்து வீட்டுக் கணவனாக தனக்காக தமது குடும்பத்துக்காக குழந்தைக்காக வாழும் ஒரு நல்ல மனிதரை வீட்டுக்கு வெளியே போ எனத் துரத்தியபின் அவன் படும் துயரும், அவளின் பிரிவும் குழந்தைகளின் பாடும் நன்கு இயல்பான நடைமுறை எதார்த்தத்துடன் சொல்லப் பட்டிருக்கின்றன.

 வேட்டியை அவிழ்த்துக் காண்பிப்பதான ஒரு கதாப்பாத்திரம் சொல்கிறது என்னைக் கூட ஒதுக்கி அடித்து வீழ்த்தி விடலாம் ஆனால் எனக்கும் பின்னால் என்னைப் போன்றே வரும் எல்லாரையும் வீழ்த்தி விட முடியுமா கடன் வாங்கினால் கட்டித்தானே ஆகவேண்டும் இல்லையேல் நிலை இதுதான் என அந்தப் பாத்திரம் வழியே  அனைவர்க்கும் பாடம் சொல்கிறது அந்தக் கதையும் படமும்...எஸ்பி ஐ மாணவர் படிக்க கடன் கொடுத்து விட்டு ரிலையன்ஸை விட்டு வசூல் செய்யச் செய்தது போல...தனியாரும் அதன் நகங்களும் எத்தனை வலிமையானவை அதில் சென்று சாதாரண மனிதர்கள் வசதி என்ற இச்சைக்கு ஆட்பட்டு சிக்கிவிடக்கூடாது என்று சொல்லாமல் சொல்கிறது...என்ன அந்த வீட்டை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் நாங்கள் வேறு இடம் போகிறோம் என எளிய வாழ்க்கைக்கு செல்வதை அதில் காட்டவில்லை.

Image result for thamira director
முன் அனுமதி கிடைக்காத ரயிலில் பயணம், பெண்குழந்தையுடன்  விபச்சாரம் நடைபெறும் ஒரு கீழ்த்தரமான விடுதியில் தங்குவது என கணவனின் வாழ்வு போக,,,இவளை மறைமுகமாக உபயோகிக்க நினைக்கும் இவளது பணிக்குழுத் தலைவன் அவனது இச்சையை இவள் தீர்த்து வைக்க வில்லை என்றறிந்ததும் அவளை வேலையை விட்டு உடனே அனுப்பி விட்ட பிறகு அவள் மாதாந்திர தவணையை வீட்டுக்கு கட்ட முடியாமல் வசூல் செய்ய வருபவர்களின் அட்டகாசத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தனது தோழிக்கு நேர்ந்த கதி தமக்கும் நேருமோ என்று கலங்குவது  இதனிடையே கணவன் இளங்கோ சந்திக்கும் நல்ல மனிதர்களால் சிக்கிக் கொண்ட சுழியில் இருந்து மீண்டு எப்படி மீள்கிறார்கள் மறுபடியும் வாழ்வில் எப்படி சேர்கிறார்கள் என்று சொல்கிறது இந்த 115 நிமிடக் கதைக்குண்டான படம்.

இந்தப் படத்தை ஜீ தமிழில் வெளியிட்டார்கள் நேற்று, அதன் முன் நாள் கே தொலைக்காட்சியில் சமுத்திரக்கனியின் நாடோடிகள் படம் வெளியிட்டார்கள் இப்போது ஒர் செய்தி ஆர் ஆர் ஆர் எனப்படும் இராம இராவண இராஜ்ஜியம் என்னும் பாஹுபலி இயக்குனர் ராஜ மௌலியின் இயக்கத்தில் 300 கோடி செலவில் தயாராகும் படத்தில் இராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு வில்லனாக சமுத்திரக் கனி நடிப்பதாகவும் இவரின் நாடோடிகள் இரண்டு திரைப்படம் பார்த்து இராஜமௌலி இந்த முடிவுக்கு வந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.
Image result for aan devathai
தாமிரா, சமுத்திரக்கனி போன்றோரை இன்னும் தமிழ் உலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . தெலுங்கு இராஜமௌலிக்கு தெரிந்திருக்கிறது பயன்படுத்த ஆரம்பித்து விட்டார் சமுத்திரக்கனியை. இவர் ஏற்கெனவே சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் என தேசிய அளவில் பரிசு பெற்றதும் நமக்கு எல்லாம் நினைவிருக்கும்...இவரின் நோக்கம் நன்றாக இருக்கிறது சினிமா மீடியத்தை ஒரு நல்ல சமூக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறார் இவரின் சில முயற்சிகள் தோற்றபோதும் முயற்சிகளை விடாமல் தொடர்கிறார் இவர் போன்றோரை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment