Wednesday, December 19, 2018

என் தாய்த் திருநாடே நேசமிகு வீடே:


என் தாய்த் திருநாடே நேசமிகு வீடே:
வணக்கம்

Image result for I love india

சுமார்   135 கோடி புதல்வர்களாம் உனக்கு. இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கமல்ல நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் வீரியமற்ற மக்கள் தொகைப் பெருக்கமே காரணம்/
சாலையில் வீதியில் செரிமானத்துக்கு உணவுடன் கலந்து விழுங்க வேண்டிய உமிழ் நீரை துப்பி விட்டு அதைப்பற்றிய விளைவை அறியாமல் சுய நினைவில்லாமல் உனது மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்

விடியற்காலையில் பற்களைத் தேய்த்தபடியே பால் வாங்க வருகிறார் ஒரு அரசு அலுவலர் எச்சிலை துப் துப் என தார்ச்சாலையில் துப்பியபடியே ...
அந்த அதிகாலையிலேயே டீசல், கரி எஞ்சின் மாதிரி பீடியும், சிகரெட்டுமாக புகைத்து பொது இடத்தில் எவர் இருக்கிறார் இல்லை என்ற நிலை துளியுமின்றி இருக்கும் இடத்தை புகைமண்டலமாக்கி அடுத்தவரையும் நோயாளியாக்குகிறார் உங்கள் மக்கள்

எங்கள் ஊர் சுடுகாட்டருகே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை என்றும் ஜெ ஜெ என்று இருக்கிறது பக்கத்திலேயே சுடுகாடு இருப்பது ஒர் நன்மைக்கே
கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பெற்றோர்க்கு பிள்ளையில்லமலே ஆகி விடுகிறார்கள். இதெல்லாம் உண்மைகள் கூச்சப்படாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகள்...

மகாத்மா ஆரம்பித்து வைத்த இந்த தூய்மை பாரதத்திட்டம் அவரைப்போலவே கிழடு தட்டிப் போய்விட்டதோ? இந்தக் கட்சிக்காரர்கள் எல்லாமே எல்லா கீழ் தட்டு மக்களுக்கும் நன்மை செய்வதாகச் சொல்லித்தானே பதவிக்கு வருகிறார்கள்...அதை எல்லாமே வாக்கு விகிதாச்சார முறைகளில் ஏன் பதவியையும் பிரித்துக்கொண்டு ஆளவரக்கூடாது? இவர்கள் ஆள்பவராக நாங்கள் இன்னும் ஆளப்படுபவராகவே இருக்கிறோம். எப்போது பதவிக்கு வருவது சேவை செய்ய  வருவதுதான் என உணர்தலும் புரிதலும் ஏற்படுகிறதோ அப்போது இந்தியா மேலும் உன்னத நிலை அடையும்.

இந்த பாரத நாட்டில் சிறுமிகளும், பெண்களும் வயது வேறுபாடின்றி பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொன்று குவிக்கப்படுகிறார்கள்.  இரையாகிறவர்களும், இரைக்கு குறிவைத்து வேட்டையாடுபவர்களும் உனது பிள்ளைகளே
Image result for I love india
பொருளாதாரத்தில் நான் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் வாழ்கிறேன் காமராசர், கக்கன், ஜீவா போல.எனது உடலுக்கு சேவை செய்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பிணி என்னுடன் தொடர்கிறது. இப்போது என் உடலுக்கு ஏதாவது என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் மருத்துவக் கல்வி சார்ந்த தனியார் கல்லூரி ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். ஆனாலும் என்னிலையிலிருந்து நான் வீழ்வேன் என நீ நினைத்தாயா?

இந்த நாட்டின் ஆதிவாசிகளுக்கு , பழங்குடிகளுக்கு, மலைவாழ் மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் தம் வாழ்வை மேம்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத இன மொழி பேதமின்றி 1985 முதல் 1995 வரை மட்டுமல்ல ஏன் இன்று வரை கூட உழைத்து வருகிறேன். அப்படி கடுமையாக உழைத்ததன் விளைவாக தொழுநோய் முதல், மலேரியா, டைபாய்டு, உணவுக் குழல் தழற்சி, மூலம்  குடல்புண் இப்படீ தொடர்ந்த பிணிகளால் பாதிக்கப்பட்டு உடல் ஒத்துழைக்க மறுப்பதும் பேருந்துகளில் பணி முடித்து நின்று கொண்டு வருவதும் துன்பமாகத்தான் இருக்கிறது.

எனது இளமைப்பருவம் 25 வயது முதல் 35 வயது வரை நாட்டின் மிக உச்சமான சேவைக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 24 மணிநேரமும் அதற்கே செலவளிக்கப்பட்டது.அதற்காக நான் கடந்த ஆறுகளும், மலைகளும் துன்பங்களும், துயரங்களும் வெகு அதிகம். என்றாலும் டாக்டர் மாதவன் M.B.B.S. D.O,  எம்.பி.பி.எஸ் .டி.. என்ற நாமக்கல்லில் இருந்து வந்த மருத்துவர் ஒருவர் 1988ல் எல்லாப் புகழுரைகளையும் மீறி அப்போது அவர் கண்ட எனது உழைப்பை பாராட்டி வருகையாளர் பதிவேட்டில் இவருடைய உழைப்பும் மகாத்மா காந்தி , மதர் தெரஸா உழைப்பை போன்றதுதான் என வழங்கிய பாராட்டுச் சான்று நான் பெற்ற பாராட்டுகளிலே மகுடம் வைத்தது போலானது.

நான் இந்தியக் குடியரசுத் தலைவர் மக்கள் குடியரசுத் தலைவர் மேன்மைமிகு டாக்டர் ..ஜெ அப்துல் கலாம் அவர்களிடமிருந்து இலஞ்ச ஒழிப்பு பற்றிய அறிவுரையை கடித வழியாகப் பெற்றதும்,  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மேன்மை மிகு பி.என் . பகவதி அவர்கள் வீற்றிருந்த சபை மேடையில் கிராம முன்னேற்றப் பணிகளில் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு நிலை பற்றி சில நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசியதும் அதன் பின் அவருடன் ரிட்ஜ் நட்சத்திர அந்தஸ்து உணவகத்தில் உணவுண்டு கலந்தளாவியதும் எனது சேவைக்கு கிடைத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள்.
Image result for I love india
இவை எல்லாம் பெரிய சாதனைகளா? என எவர் வேண்டுமானாலும் கேட்கலாம், இந்த நாட்டின் உண்மைக்குடி மக்களுடன் ஒரு உண்மையான குடிமகன் சந்திப்பதும், பேசுவதும், எழுதிக் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதும் நாட்டின் கிராம முன்னேற்றம் பற்றி சிந்திப்பதும் மிகவும் அவசியமானத்தேவைதான்.

நாட்டில் ஒவ்வொரு இளைஞரையுமே இது போல ஓரிரண்டாண்டாவது கிராம முன்னேற்றத்திற்கு உழைக்கச் சொல்லி பயிற்சி அளிக்க வேண்டும். அது இராணுவத்தில் சேருவதாக இருந்தாலும் சரி அதையே முன் தகுதியாகக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கிராமங்களில் இன்னும் வசதி வாய்ப்புகள், தொழில் நுட்பங்கள், தகவல் பரிமாற்றங்கள்,கலாச்சார நாகரிகம் எல்லாம் குறைவாகவே நகர் புறம் சார்ந்தே மருத்துவம் கல்வி போன்ற மனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையனைத்தும் பிரமிட் வடிவத்தில் குவிந்து கிடக்கின்றன.
எனவே அங்கே ஒவ்வொரு படித்த இளைஞரை, பெண்களை கொண்டு சென்று வாழும் நிலையைப் பற்றி பகிர்ந்து புரிந்து கொள்ள பொருளாதார்த்தில் கடைசித்தட்டு வாழ்வு எத்தகையது எனக் காட்டிக் கொடுக்க வேண்டும்...அங்கு சித்ரவதைப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களுக்கு எதாவது செய்ய முடியுமா என அவர்களை யோசிக்க வைக்க வேண்டும். சிந்திக்கட்டும் ஏதாவது செய்ய முயற்சிக்கட்டும் உழைக்கட்டும் பிறகு என் போன்றோரைப் பார்த்து எந்தக் கேள்வி வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் கேட்கட்டும்.

ஏன் இப்படி சொல்கிறேன் எனில் இன்று மக்களுக்கான சேவை செய்வதும், கிராம முன்னேற்றம் செய்ய முயற்சிப்பதும் அத்தனை கடினமான பணியாகியிருக்கிறது. ஆனால் இது இராணுவ பாதுகாப்புப் பணிகளை விட மிக முக்கியமானது. அப்படி சேவைக்கு தமது வாழ்வில் ஒரு பகுதியாவது செலவு செய்வாரை மட்டுமே உனது குடிமக்களாக நினைக்க வேண்டும் என்பதுதான் நான் சொல்வது அவ்ர்களைத்தான் மதிப்பிற்குரிய மக்களாகவே கருத வேண்டும்.Image result for I love india

மற்றபடி உன்னிடம் மாறுபட்ட கலாச்சாராம், மதங்கள், இனங்கள், மொழிகள், வித்தியாசமான காடுகள், மலைகள்,மண்வளங்கள், நீர் நிலைகள், விண்ணியல் சாதனைகள் , உலக அதிசயங்கள், விண்ணை முட்டும் கோபுரங்கள்,வானளாவிய கட்டடங்கள் இதெல்லாம் பெருமைக்குரியதுதான் ஆனால் அதன் மதிப்பை அறியாத மூட மாந்தரை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்...பழங்கால சிற்பங்கள் மேல் சுண்ணாம்பை , வண்ணத்தை தீட்டி அதன் அருங்கலையை மூடி மறைப்பாரை என்ன வார்த்தை சொல்லி பாராட்ட இயலும்?

அடுத்து இந்த நாட்டின் பொருளாதார அமைப்பு என்பது சில மனிதர்களிடம் செல்வம் குவிந்து செல்வதும் அரசியலாரைக் கொண்டு அவர்கள் குனிந்து கொள்ளவும் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு நீக்க முடியாத பந்தம் உருவாகி நாட்டின் ஏழ்மை நிலையை மாற்ற முடியாது வளர்ந்து வருவதும்
தவிர்க்க முடியாததாகி உள்ளது.  எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெண்மைபுரட்சி, பசுமைப்புரட்சி நீலப்புரட்சி என்றெல்லாம் செய்தாகிவிட்டது. அதனால் நமது இந்திய பாரம்பரிய விதிகளும், விதைகளும் நாசமாகிவிட்டன. நமது மஞ்சளை வாங்கி மவுத் வாஷில் கலந்து புதிய பிராண்டாக அமெரிக்க நாடு நமக்கே விற்பனை செய்து வருகிறது...இப்போது விவசாயத்துக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. மாபெரும் ஆலைகளுக்கும் பன்னாட்டு நிறுவனஙக்ளுக்கும் அதன் முதலாளிகளுக்குமே வங்கிகளும், அரசுகளும் படியளக்கின்றன. அவை திரும்பி வராது என்று தெரிந்தே இவை நடக்கின்றன

இசையில் பெரும் சாதனை, சினிமாவில் சாதனை இவை எல்லாம் கீழ் மட்டத்தில் இருக்கும் பசியால் துடிக்கும் வயிறுகளுக்கு உணவாகிவிடப் போவதில்லை. பெட்ரோல் விலையும் பொருட்கள் விலையும், போக்குவரத்து கட்டணங்களும், சரக்கு வாகன வாடகையும் மிகவும் உச்சமாக உயர்ந்து வருகின்றன ஆனால் தனியார் கம்பெனி முதலாளிமார்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பணி புரிவார்க்கு ஒரு பைசா கூட ஏற்றுவதாக இல்லை. மேலும் மனித வர்க்கத்துள் ஒரு சாரர்க்கு கற்பனை செய்ய முடியா மாத வருமானமும், பெரும் உடல் சார்ந்த உழைப்பை நம்பிய பிரிவினர்க்கு மிகவும் குறைவான கேவலமான மாத வருமானமும் கிடைக்கின்றன.

மனித உழைப்பும், மனித உயிர்களின் மதிப்பும் மிகவும் தாழ்ந்துவிட்டன.
மலிந்து காணப்படுகின்றன. சுயநலம் அனைவர் வாழ்விலும் ஊறிவிட்டது. தியாகச் சுடர்கள் ஏற்றி வைத்த சுதந்திர ஜோதி அணைந்து வெகுகாலம் ஆகிவிட்டது. உலகிலேயே மாபெரும் சிலையை வைக்க முடியும் நம்மால் சாதாரண மனிதருக்கு இன்னும் குடி நீரே கொடுக்க முடியவில்லை.

எதை எடுத்தாலும் வியாபாரம் என்றாகிவிட்டது. குடிநீரை விற்பனை செய்வது மது விற்பனையை விட பேராபத்து என்று அரசு அனைவர்க்கும் உணர்த்தும் நிலையில் அல்லாது அதுவே தவறான வழியில் சென்று கொண்டு அனைவரையும் தவறான வழிகளிலேயே செலுத்தி கேட்பாரற்ற சாம்ராஜ்யமாக நாட்டை மாற்றி வருகிறது.

எங்கு பார்த்தாலும் தனியார் மயம், உலக மயம் ஏற்பட்டு இந்தியா என்ற நாட்டின் தனித்துவம் அடியோடு அழிந்து பட்டுப் போய் விட்டது.
இந்த நாட்டின் நதிகளை இணைப்போம் என்று எப்போதுமே சில பெரியவர்கள் முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். ஆனால் அதை இணைப்பது சாத்தியமற்றது என்றும், அப்படி இணைப்பது சுற்றுச் சூழலுக்கு ஆகாது என்று மற்றொரு குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா போன்றோர் கண்ட இராமராஜ்ஜியக் கனவில் மதமாச்சரியமற்ற பொருளாதாரத்தில் வறுமை யில்லா, போதைக்கு அடிமையாகாத பெண் சுதந்திரம் மற்றும் எல்லா மனிதர்களும் பாரதி சொன்னபடி ஒரே விலை ஒரே நிறையுடன் இருக்க வேண்டும் அதுதான் அவர்கள் நம் நாட்டின் அடிப்படைக்கு செய்த தியாகத்துக்கு பொருள். அது அடையாதவரை இங்கு நடப்பது எல்லாம் ஏமாற்று வேலை. அதற்கு ஒரே தீர்வு அதே பாரதி சொன்னபடி நதி நீரை இணைப்பது ஒன்றுதான்

அப்படி எந்த மகான் செய்கிறாரோ அவர் பேர் மகாத்மாவின் பேரையும் பின்னுக்குத்தள்ளும் இந்தநாட்டின் வலுவான தலைவர் என்ற பேரை படேலையும்விட நேருவையும் விட மக்கள் மனதில் சொல்லும்.
இந்த இந்திய  நாட்டின் நீர்ப்பாசனத் தந்தையாக விளங்கி தமது சொந்த நாடான இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று அபராதமும் தண்டனையும் பெற்ற சர் ஆர்தர் காட்டன் கனவு நிறைவேறினால் மட்டுமே அந்தப் பொருளாதாரச் சுதந்திரத்தை இந்திய மக்களாகிய உனது பிள்ளைகள் அனைவரும் எட்ட முடியும் இல்லாவிட்டால்  மாதமொன்றுக்கு 300 கோடி அம்பானிமார்கள் ஈட்டிக்கொண்டிருக்க தமது கோடீஸ்வர மதிப்பில் உயர்ந்தபடியே இருக்க எம் போன்ற சேவை செய்யும் நாட்டுப் பற்றாளர்கள் செத்து சுண்ணாம்பாய் ஆவதுதான் எப்போதும் நடந்தபடி இருக்கும். இதுதான் உனக்குத் தேவையெனில் பாரத நாடே, தாய்த்திரு நாடே இப்படியே நீ எதையும் கண்டுகொள்ளாதிருக்கும் நீதி தேவதை போல நீயும் கண்டும் காணாதிரு. உறங்கிக் கொண்டே இரு...

சு. தணிகாசலம்


No comments:

Post a Comment