Saturday, December 29, 2018

சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில்: கவிஞர் தணிகை

 சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில்: கவிஞர் தணிகை

Image result for salem 8 arts college


கடந்த 27.12/2018 வியாழன் அன்று சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியில் பல் பரிசோதனை முகாம் நடத்த சென்றிருந்தேன்.
அந்த முகாமை எங்களது விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியும் சேலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டமும் சேர்ந்து நடத்தியது.

முனைவர்: ஸ்ரீவித்யா, முனவைர் புனிதப் பிரியா இருவரும் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் மிக அக்கறையுடன் அந்தப் பணியை விரும்பி ஏற்றிருந்தனர். செய்து முடித்தனர்.

எங்கள் கல்லூரியின் சார்பாக பேரா.மரு. வினோலா துரைசாமி அவர்கள் என்னிடம் முதலில் தொடர்பு கொண்டு இந்த ஆண்டு முடிவிற்குள் நமது கல்லூரியின் முதல்வர், தேசிய சிறுவர் பல் மருத்துவ சங்கத்தின் தலைவர், பேரா.மரு.பேபிஜான் ஒரு பல் பரிசோதனை முகாமை நடத்தவும் தேசிய வாய் மற்றும் பல் பரிசோதனை கணக்கெடுப்பு ஒன்றை நடத்திடவும் கேட்டுக் கொண்டார் என அப்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க  அடியேனும் பொது சுகாதாரத் துறைத் தலைவர் மரு.என்.சரவணன் அவர்களிடம் பேசி கருத்தொருமித்து ஒரு நாளை நியமித்து சென்று முகாமை நடத்திக் கொடுக்கத் திட்டமிட்டோம்.
Image may contain: 4 people, people sitting
மரு. பரத் தலைமையில் 20 மருத்துவர்கள் சென்று சுமார் 1200 மாணவியர்க்கு பற்பரிசோதனை செய்து, முகாம் அனுமதி அட்டைகள் கொடுத்து அவை பெரும்பாலும் இலவச சிகிச்சைக்கு அவர்களுக்கு அனுமதி தருவதாகும்.

மேலும் சிறுவர் பல் மருத்துவம் சார்ந்த ஒரு கணக்கெடுப்பு படிவமும் கொடுக்கப் பட்டு அனைத்து மாணவியரிடமும் கேள்விகளுக்கு பதில் டிக் செய்து  திரும்பி பெறப்பட்டது.
Image may contain: 3 people, people sitting and indoor
இளங்கலை ஆங்கில பிரிவு மாணவியரிடையே முதன் முதலாக விழாவாக முகாம் துவக்கி வைக்கப்பட்டது. அதில் அரசினர் பெண்கள் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்: முனைவர். ரங்கசாமி இவர் ஒரு பார்வையற்றவர் என்பதும் அவரை அவர் மகளே உடனிருந்து கவனித்து தேவையான பார்வை தருகிறார் என்பதும் எம்மை பெரிதும் கவனத்தை ஈர்த்த நிகழ்வாக இருந்தது. அவர் துவக்க உரையாற்றிட, பேரா.மரு.வினோலா துரைசாமி, டாக்டர் பரத் மற்றும் பொது உறவு அலுவலர் என்ற முறையில் சு. தணிகாசலம் ஆகியோர் மாணவியரிடை சிறிய அளவிலான நேரத்தில் தமது கருத்துகளை பல் மருத்துவக் கல்லூரியின் சேவை பற்றிய வாய்ப்புகள் மாணவியர்க்கும் முகாம் பங்கெடுப்பாளர்க்கும் பகிர்ந்து கொள்ள...

காலையில் சுமார் 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட முகாம் சற்றேறக் குறைய 4 மணி வரை தொடர்ந்தது.
Related image
மதிய உணவு, மற்றும் இதர உபசாரங்களை நாட்டு நலப் பணித்திட்டம் ஏற்றுக் கொண்டு செய்திருந்தது. பெண்கள் விடுதியின் உணவகத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் இதம் தருவதாகவும் மனதை தொடுவதாகவும் அன்புடன் அவர்களின் விருந்தோபசாரம் இருந்ததை வந்திருந்த மருத்துவர்கள் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டு நன்றி பாராட்டினர்.

ஒரு முகாம் நடைபெற பல்வேறுபட்ட முயற்சியும் இணைய வேண்டி உள்ளது அதிலும் அது இது போன்று மனதில் இடம்பெறும் வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்றால அனைவரின் ஒத்துழைப்பும் மனமுவந்து வேண்டி இருக்கிறது.
Image may contain: 4 people, people standing and indoor
வாகன ஏற்பாடு செய்து தந்த எங்கள் வாகனத் துறையின் பிரிவு பொறுப்பாளர் பிரபு, ஓட்டுனர் சித்தார்த், நாட்டு நலப்பணித்திட்ட செவ்வரி ஆடை அணிந்த மாணவியர், தேசிய நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், இரு கல்லூரியும் சார்ந்த முதல்வர்கள் துறைத்தலைவர்கள் என். சரவணன், டாக்டர் சுரேஷ்குமார், பேராசிரியர் வினோலா , தேவையான பொருட்களை மறவாமல் எடுத்து வைத்த உதவியாளர் சித்ரா, அதற்கு ரெடிமேடாக சிறுவர் பிரிவுக்கான ப்ளக்ஸை அடித்துக் கொடுத்த எமது நிர்வாக அலுவலர்  நடராஜன் அவர்கள்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவை யாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரு முகப்பார்வையுடன் இருக்கும் அனைவரின் அன்பும் தேவைபடுகிறது வந்திருந்து சளைக்காமல் பணி புரிந்த மருத்துவர்கள் அமித் அஞ்சுஜா, ரிஷாந்த்,இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

ஒரு பேராசிரியர் ஒரு காரில் தமது பணி முடிந்து வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார், இவரைப் பாருங்கள் என்றார் முனைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ஸ்ரீ வித்யா...பார்த்தோம். அவர் சொன்னார் அவர் ஒரு கையால் மட்டுமே தனது காரை இயக்கிச் செல்கிறார் . ஏன் எனில் அவருக்கு இன்னொரு கை கிடையாது என...

இப்படி அந்தக் கல்லூரி நல்ல புதிய நினைவில் பதியும்படியான எண்ண அலைகளை உற்பத்தி செய்ய களமாக அமைந்திருந்தது. நிறைய அடர்ந்த மரங்கள்...ஒழுக்கக் குறைவு என்பது எங்கேயும் இல்லை...மரத்தடியில் மாணவியரை குழுவாக வைத்தும் பாடம் நடந்தபடி இருந்தது...

பாரதி கண்ட காண விரும்பிய புதுமைப்பெண்டிர் நிறைந்த களம் அங்கு சத்தமில்லாமல் உருவாகி வருவதை காணமுடிந்தது. அங்கு பல தனியார் நிறுவனங்களும் அங்கு அந்த பெண்களுக்கு பணி தர வருகிறார்கள் என்பதை அங்கிருந்த பதாகைகள் சொல்லியபடி இருந்தன....சுற்றுச் சுவருக்கு அடுத்த கட்டடம் சேலத்தின் வேலைவாய்ப்பு அலுவலகம்.

சேலம் 8  அரசினர் கலைக்கல்லூரி என்பது இந்த பெண்கள் கலைக்கல்லூரி பற்றியே குறிப்பிடுகிறது. சேலம் 7அரசினர் கலைக்கல்லூரி என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் பொதுவாக நடப்பது. அது ஏற்கெனவே பல காரணம் பற்றி சென்று வந்திருக்கிறேன் என்றாலும் இந்தக் கல்லூரிக்கு சென்றது இதுவே முதன்முறை இந்த வாய்ப்பை எனது பணி சார்ந்த நட்புகள் தந்திருப்பது பற்றி உளபடியே பெருமையும் மகிழ்வையும் அடைகிறேன் மறக்க முடியா நாட்களில் அதுவும் ஒன்று. எல்லாமே புதிதாக புது பொலிவுடன் இருந்தது தெரிந்தது எனது பார்வையில்.
Image may contain: 3 people, people sitting and indoor
கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை...

No comments:

Post a Comment