Sunday, October 21, 2018

என்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:? கவிஞர் தணிகை

என்று தான் மாறப்போகிறீர்கள் மாற்றப் போகிறீர்கள்:? கவிஞர் தணிகை

Related image


அது ஒரு தேச உடைமை ஆக்கப்பட்ட வங்கிதான். எனக்கு ஏன் பழைய தலைமுறை ஏ.டி.எம் கார்ட் வைத்திருக்கிறீர் புதிய இ.எம்.வி கார்ட் பெற்றுக் கொள்ளுங்கள் இன்னும் சில நாட்களில் அதாவது 15. 10.18 உடன் உங்களின் ஏ.டி.எம்.கார்டின் செயல் இயக்கம் நிறுத்தப்படும் என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள்.

அது சரிதானா?
ஏனெனில் அந்தக் கார்டின் மதிப்பு 2020 வரை என அவர்கள் கொடுத்த கார்டில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு தொலைபேசினேன். அந்த துணை மேலாளர் அம்மா அந்த செய்தியை உறுதிப்படுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

அது மிகவும் மெதுவாக யானை போல அசைந்து பணி செய்யும் வங்கிப் பிரிவு.

நான் சென்று கார்ட் புதிது தரமுடியுமா எனக் கேட்டபோது எனக்கு முன் ஒரு தெரிந்த நபர் மிக எளிமையாக கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டு சென்றார். பழைய கார்டை நிறுத்தி வைத்து புதிய கார்டை ஓரிரு நாளில் இயங்க வைப்பதாக சொன்னார்கள்.
Related image


அடுத்து எனக்கு விடுமுறை ஆய்த பூஜை விழாக்காலத்தில் சனிக்கிழமை வர அந்த வங்கியை ஏ.டி.எம் கார்ட் வந்தால் கிடைக்குமா என தொலைபேசிவிட்டு சுமார் 10.30 மணி அளவில் சென்றேன் கிடைக்கும் அமருங்கள் பெட்டி ...பாக்ஸ் வரட்டும் என அந்த ஒரு சாளர முறை இயக்க அலுவலர் சொன்னார். முன் சொன்ன துணை முதல்வர் அங்கே பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கையைக் காட்டிவிட்டு அவரது பணியை கவனிக்க ஆரம்பித்தார்

சுமார் 11. மணிக்கு அனைவரும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினர். அதை முடித்து விட்டு உதவியாளர் பெண்ணை அழைத்து அந்தப் பெண் உதவி மேலாளர் மேஜையில் அமர்ந்திருந்தார், அவர் வராததால். வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் அவரை உதவி மேலாளாளராகி விட்டார் என கிண்டல் செய்தார்.
Related image
அவர் வந்து பெட்டியை அதாங்க பாக்ஸ் எடுத்து வைத்ததும், அதிலிருந்து  ஏடிஎம் கார்ட் உள்ள கவர்களை எடுத்து தனது கணினியில் பார்க்க எர்ர்ர் என்றதாம். சற்று அமருங்கள் என என்னைச் சொல்லிவிட்டு அந்த தனி சாளர முறை இயக்க அலுவலர் ...ஒரு இளம்பெண்தான்...உடனே செல்பேசியில் சொல்லி எடுத்துப் பேசினார்.

சற்று நேரத்தில் நிலை சீரடைந்தது.

உடனே அவர் என்னை மறந்து தனது பணியை தொடர ஆரம்பித்தார். அவருக்குத் தெரிந்த நபர்களை எல்லாம் ஏ.டி.எம் கார்ட் வாங்கி மாற்றிக் கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து பணம் வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

சென்றது முதல் கவனித்தேன் கணினியில்  புள்ளி விவரங்க்ளை புகுத்திக் கொண்டிருந்தார் சலான், வவுச்சர்களை எல்லாம் பார்த்து...அவர்களுக்கு நேரிடையான வந்திருக்கும் வாடிக்கையாளர்களை விட அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை விட இது போன்ற‌ பணிகள் தாம் முக்கியமாக இருக்கிறது.
Related image
கஸ்டமர் ஈஸ் கிங் இன் அவர் சர்வீஸ் என்றார் அந்த கோமணத்தாத்தா...

நான் மறுபடியும் தானாக சென்று நின்று கொண்டேன். மகனை நேரம் ஆகிறது என்று சொல்லி அனுப்பி விட்டு..

என்னை மறுபடியும் பார்த்து அந்தப் பெண் ஏடிஎம் கவரை எடுத்து எங்கள் பாஸ்புக்கை வாங்கிப் பார்த்து கண்னியில் சில குறிப்பு இட்டுவிட்டு அந்தக் கவருடன் மேலாளரை சென்று பார்க்கவும் என்றார்...சென்று கொடுத்தேன். அவர் கணினியைப் பார்த்து செக் செய்துவிட்டு கேட்டார் எனது கணக்கு வைத்திருக்கும் பேர்களைச் சொன்னேன் அது ஒரு இருவருடைய இணைப்புக் கணக்கு...பின் எண்களை எவரிடமும் சொல்லாதீர், எவராவது கேட்டால் உடனே வங்கியில் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள் என்றெல்லாம் அறிவுரை செய்துவிட்டு கை எழுத்து மாதிரி அதே போல இருக்கிறதா மாறி இருக்கிறதா ஒரு விண்ணப்பம் வாங்கி இருவர் புகைப்படமும் இணைத்து சாவகாசமாக கைஒப்பங்கள் இட்டு கொண்டு வந்து விடுங்கள் என்றார்...

 எங்கே கை எழுத்து எல்லாம் இட  விடுகிறீர் ?(கை எழுத்துக்குத்தான் வேலையே இல்லையே எல்லாம் ஒரே இணைய டிஜிட்டல் பரிவர்த்தனை தானே?) என்று மேலாளரைக் கேட்டுவிட்டு, ஏய்யா இதுக்குப் போய் ஒன்னரை மணி நேரம் தேவையா? ஆகிவிட்டதே? என்று கேட்காமல் முன்பாக இருந்திருந்தால் அதற்குள் ஓம்புட்ஸ் மேன் விலாசத்தைக் கொடுங்கள் உங்கள் வங்கி பற்றிக் குறிப்பிட்டு எழுத வேண்டும் எனக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன்...ஆனால் இப்போது அப்படியெல்லாம் செய்யாமல் மனதுள் சிரித்தபடியே மறுபடியும் அந்தப் பெண்ணிடம் சென்று நிற்க, அவர் என்ன எனக் கேட்க கொடும்மா கை எழுத்துப் போட்டுவிட்டு செல்கிறேன் என ரிஜீஸ்டரை வாங்கி ஏடிஎம் எண், கணக்கு எண் எழுதி  தேதியுடன் கை ஒப்பமிட்டு விட்டு ஒரு ஸ்பெசிமென் விண்ணப்பம் அவர் எழுந்து தேடித் தர சொல்லாமல் விடைபெற்றேன்.. 2020 வரை இருந்தது 2023 வரை நீட்டிக்க இந்த அடிப்படைப் பணி...
Related image
அடுத்து பி.எஸ்.என்.எல்...அலுவலக படையெடுப்பு.

கோவையிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புகிறார்களாம், பெங்களூரில் வாடிக்கையாளர் மையமாம், ஏதாவது ஒன்று என்றால் உள்ளூர் அலுவலகத்தில் தொடர்பு கொள்வதாம்... வாடிக்கையாளர் மையத்தை முடிந்தவரை கொத்திப் பிடுங்கிவிட்டு மத்திய மந்திரி முதல் மாவட்ட அலுவலர் வரை ஒரு மின்னஞ்சல் ஏற்கென்வே கொடுத்து இருந்ததை காண்பித்துக் கொள்ளாமல்...

ஏன் எனது ரூ. 7 மற்றும் ரூ. 9 பிக் பாக்கெட் அடிக்கப்பட்டன எனக் கேட்டேன் சப் டிவிசனல் எஞ்சீனீருக்கு கடிதம் எழுதித் தரச் சொல்லி வாங்கிக் கொண்டார்கள். அந்த மனிதருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியது வெற்றிகரமாயில்லை என்றே செய்தி வர, அங்கிருந்த பெண் அவர் பங்குக்கு முயன்று கடைசியில் கண்ட கண்ட‌ குறுஞ்செய்தி அனுப்புவதற்கு  எல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார். ஒரு சாதாரண மனிதருக்கு எந்தவகையிலும் உதவி கரமாக இல்லாத அமைப்பு முறைகள்...கொஞ்சம் கூட ஒரு துளியும் ஒருங்கிணைப்பு இல்லாத அலுவலக முறைகள்...

வீடு வந்த போது மணி 1. 30 மதியம் அன்றைய விடுமுறை அதற்கே சரியாகி இருந்தது...
Related image
இடையில் சில நண்பர்கள் சந்திப்பு: அதில் ஒருவர்: அரசியல் வியாதி, நடிப்பு சினிமா இந்த இரண்டுத் துறையில் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இந்தியாவில் ஏதாவது பிரபலமாகி செய்ய முடியும்...அதை ஊடகவிரும்பிகளும் பிரபலம் செய்வார்கள்... மற்றபடி என்னதான் செய்தாலும் ஒன்றும்...மேல் வரவழி இல்லை என்றார்...

சசிபெருமாளை நினைத்துக் கொண்டேன்.

வியட்நாமின் ஹோசிமின்னை நினைத்துக் கொண்டேன்

சனிக்கிழமை மதியம் காகங்களுக்கு எள் கலந்த சோறு வைத்துவிட்டு

வந்து கணினியைத் திறந்து இணையப் பார்வையைப் பார்த்தால்... அமிர்தசரஸ் ரயில் மனிதர்கள் மேல் பாய்ந்த செய்தி...இராவண கோபம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. அரசுப்பணி இப்படித் தான். நன்றி.

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sir. vanakkam

    ReplyDelete