Saturday, October 13, 2018

கமல் ஹாசனும் தந்தி டிவி பாண்டேவும்: கவிஞர் தணிகை

கமல் ஹாசனும் தந்தி டிவி பாண்டேவும்: கவிஞர் தணிகை

Image result for kamal hassan as political leader


கமல் சேலம் மாவட்டத்தில் 12, 13 அக்டோபர் 2018 ல் சுற்றுப் பயணம் மக்கள் நீதி மையம் கட்சிக்காக செய்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோட்டில் உள்ள ஜெயகுமார் திருமண மண்டபத்தில் தந்தி தொலைக்காட்சியின் சார்பாக அதன் செய்தி ஆசிரியர் பாண்டே 12 அக்டோபர் அன்று சுமார் ஒன்னரை மணி நேரம் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சிக்காக கேள்விகள் கேட்டு பதில் பெற்றார்

மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி சுமார் 7.15 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது. தாமதத்திற்கு கமல் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். முன்னதாக ஸ்ரீபிரியா, தமிழ் தாய் வாழ்த்து யார் எழுதியது எனத் தெரியாதிருந்த கவிஞர் சினேகன் போன்றோ வந்து முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். Kamal came with very simple look.

நிகழ்ச்சி ஏற்பாடு நல்ல முறையில் செய்யப்பட்டிருந்தது...என்றாலும் இலட்சுமி விலாஸ் வங்கி, ஏ.ஆர்.ஆர்.எஸ்  நகைக் கடை, இன்னும் சில நிறுவனங்கள் ஸ்பான்சர் என்ற பேரில் முன்னால் சில வரிசைகளை ஒதுக்கி வைத்துக் கொண்டு முன்னுரிமை செய்து கொண்டன.

கேள்விகள் நிகழ் கால நடப்புகள் என்ற வரிசையில், ஓரினப்புணர்ச்சி, திருமண ஆண் பெண் மாற்று உறவுகள், போன்ற தற்கால உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுற்றியது. அதில் கேரளத்து அய்யப்பன் கோவிலில் பெண்கள் பிரவேசமும் அடங்கும்.

எந்த கேள்விக்கும் சளைக்காமல் சலிக்காமல், இப்படி கேள்விகள் கேட்டால்தாம் என்னால் கொக்கி போட்டு மேல் ஏற முடியும் , எத்தனை கொக்கிகள் பார்த்தீர்களா என மேடையில் வரையப்பட்டிருந்த கேள்விக்குறிகளைப் பற்றிக் குறிப்பிட்டார் கமல்.

சென்டரிசம் என்பது இன்று பல மேலை நாடுகளிலும் வளர்ந்து வரும் கொள்கைதான் இந்தியாவில் அதை நாமே முன்னெடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அதாவது முதலாளித்துவம் சாரத கம்யூனிசமும் இணைந்து செயல்படும் கொள்கை, அது தான் சோசலிசம் என்று ஏற்கெனவே இருந்ததுதானே என்ற ரங்கராஜ் பாண்டேவின் கேள்விக்கு இது சோசலிசத்தை விட ஒரு படி முன்னதாக முன்னெடுத்துச் செல்வதாகும் எனக் குறிப்பிட்டார்.

வைரமுத்து, ஆளுனர் புரோகித் பெண் சார்பியலான கேள்விகளும் முன் வைக்கப்பட்டன...அதற்கு ஆளுநர் அரசு பதவி வகிக்கும் சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய மனிதர், வைரமுத்து கவிஞர் பிரபலம் எனவே இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என பதில் வரும் என்று பார்த்தேன். ஆனால் அதற்கு அப்படிப்பட்ட பதில் சொல்லாமல் ஆளுனர் விஷயத்தில் ஊடகத்தை அடிப்படையாக வைத்து ஆளுநர் நடந்து கொண்டதையே குறிப்பிட்டேன் என்றார்.

விஜய் பற்றிய கேள்விக்கு தம்பி எங்களது கட்சிக்கு வருமாறு அழைக்கிறோம் . வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்றார்.

ஆனால் அதே விஜய் கோக் விளம்பரத்தில் நடித்துக் கொண்டும் நீர்க்கொடுமை பற்றி சினிமாவில் சவடால் விடுவதைப் பற்றியும் மறந்து விட்டார் போலும்.

ரஜினி நண்பர்தாம், ஆனால் கொள்கை அளவில் நாங்கள் வேறு என்று பதில் தெளிவாக வந்தது. கூட்டணி அமைக்கக் கூடிய அளவில்தாம் தற்போது கட்சி உள்ளது ஆனால் தனியாக நிற்குமளவு வளரும் என்றார்.

தமது தந்தை சீனிவாசன் ஒரு காங்கிரஸ்காரர் . அப்போது உங்கள் உடம்பில் காங்கிரஸ் இரத்தம் தான் ஓடுகிறது என்று சொல்லுங்கள் என்ற கேள்விக்கு இல்லை சீனிவாசன் என்னும் எனது தந்தையின் இரத்தம் தாம் ஓடுகிறது என்றார்

கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய செல்லும்போது டில்லி வந்தால் அவசியம் என்னை வந்து பார்க்கவும் என நட்பு முறையில் இராகுல் காந்தி அழைத்ததால் சென்று பார்த்தேன், அதை பெரிய செய்தியாக்கிவிட்டார்கள் என்றார்.

தமிழகத்துக்கு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் பி.ஜே.பி அரசு அனைத்துத் திட்டங்களையும் தங்கள் ஆளும் உ.பி போன்ற மாநிலத்துக்கு நிறைய செய்து வருகிறது. அண்ணா சொன்னது போல வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்வது சரியா?

எடப்பாடி பழனிசாமி அரசு தம்மி கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை தடை செய்துவிட்டு, அவர் சென்று கல்லூரியில் பேசிக் கொண்டிருக்கிறார்,

தன்னை விட வேறு ஒருவரும் தமிழக முதல்வராக தகுதி பெற்றிருப்பின் அவரை முதல்வராக்கவும் பணியாற்றத் தயார்தாம் எனக் குறிப்பிட்டார்

ஏன் கடவுள் மறுப்பு சிந்தனி, பெரியார் கொள்கையுடன் மட்டும் இருந்து விடலாமே ஏன் அரசியலுக்கு வருகிறீர் என்ற கேள்விக்கு நடக்க வேண்டும் என்று இருக்கிறது... நடக்கிறது என்றார்.

காந்தி என்னும் மகானின் தத்துவம் உலகு முழுதும் பரவியது, மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மாண்டேலா போன்றவர் கூட காந்தியின் சீடர்தாம் எனக் குறிப்பிட்டார்

அரவிந்த் கெஜ்ரிவால் நல்ல நண்பர் ,அதற்காக அவர் செய்வதை எல்லாம் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்படியே செய்ய வேண்டும் என்பதல்லாம் தேவையில்லை என்றார்.

இன்னும் அவருக்கு என்போன்றோரின் உறவு தேவைப்படுகிறது அதாவது கிராமிய முன்னேற்றம் , காந்திய சிந்தனை, போன்றவை அதிகம் கற்றோரின் வழிகாட்டுதல் ஏன் எனில் அவரை தற்போது சார்ந்திருப்போர் எல்லாம் ஒன்று இரசிகர் மன்றக் கூட்டம், அல்லது அவரது சினிமா நண்பர்களே அருகாமையில் இருப்பது தெரிகிறது. சில இரசிகர்கள் அடித்த விசில் இன்னும் காது கிழியாமல் வந்தது பெரிய அதிர்ஷ்டம்தாம்.

மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் , அல்லது யார் யாருக்கு விற்பது, எங்கு கடை வைப்பது, எவர் நடத்துவது போன்ற தெளிவு வேண்டும்...அள்ளிக் குடிக்க வேண்டிய குடிநீர் இப்படி பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மொத்தத்தில் இது பாண்டேவின் கேள்விக்கு கமலின் சரியான பதில் தோரணமாக இருந்தது...கட்சி,  வளரும்...

ஒரு பார்வையாளர் சொல்லிக் கொண்டே திரும்பினார் கூட்டம் முடிந்ததும்: என்ன இருந்தாலும் இவர் ஒரு அரசியல் வாதியைப் போல கையை எல்லாம் காட்டி பந்தா செய்ய இன்னும் கற்க வேண்டுமே...என...ஒரு அரசியல் வாதியைப் போல அல்லாமல் அவர் அவராகவே இருப்பதில் தாம் அவருடைய வெற்றி இருக்கிறது...

அவர்களிடம் இல்லாத நேர்மை தம்முள் இருக்கிறது என்றும், சம்பாதித்த பணத்துக்கு சரியாக வரி கட்டி இருக்கிறேன் என்றார்.

ஆம், சிறு வயதில் நிறைய நேரம் சாமிகும்பிட்டு பாடியது எல்லாம் உண்டு என்றார் அடுத்து தேவர் மகன்..2, இந்தியன் ..2 என்ற படங்கள் வரும் என்றார்.

நல்ல தேவையான நிகழ்வு. நாட்டு நடப்பை மாற்ற முயலும் சமூகப்பற்றுடனான நிகழ்வு. எம்.ஜி.ஆர் போல எல்லாத் தடைகளையும் தாண்டி எல்லா எதிர்ப்பையும் மீறி இலக்கை சென்று தொடுவாரா என்பதை காலம் சொல்லும் என்றாலும் நல்ல முயற்சி. பாரட்டத்தான் வேண்டும்.
Image result for kamal hassan as political leader
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments:

 1. நிகழ்வினை தொலைக் காட்சியில் நானும் பார்த்தேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. But I went directly to observe, and this is that report.

   Delete
 2. ஆளுநர் அரசு பதவி வகிக்கும் சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டிய மனிதர். ஆனால் வெறும் குற்றசாட்டில்லை உண்மையிலேயே பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை வருடினார்.
  //சென்டரிசம் என்பது இன்று பல மேலை நாடுகளிலும் வளர்ந்து வரும் கொள்கைதான் இந்தியாவில் அதை நாமே முன்னெடுத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அதாவது முதலாளித்துவம் சாரத கம்யூனிசமும் இணைந்து செயல்படும் கொள்கை//
  இவர் மட்டுமல்ல சென்டரிசம் மேற்குநாடுகளில் உள்ள கொள்கை என்று இந்தியாவில் சிலர் அடித்து விடுகிறார்கள்.அங்கே தெளிவான முதலாளித்துவம் தான் ஆனால் மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

  ReplyDelete