Wednesday, October 3, 2018

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பிரச்சனையை திசை திருப்பத்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளா? கவிஞர் தணிகை

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பிரச்சனையை திசை திருப்பத்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளா? கவிஞர் தணிகை

Image result for turning points on price rise in india

பெட்ரோல் , டீசல் , சமையல் எரிவாயு போன்றவற்றின் வரலாறு காணா விலை உயர்வால் போக்குவரத்து, சரக்கு கட்டணம் , காய்கறி உணவுப் பொருட்களின் விலை ஆகியவற்றின் உயர்வை மக்கள் பெரும் பிரச்சனையாகி அது தேர்தலில் எதிரொளித்து விடும் என்பதை அதன் கவனத்திலிருந்து  திசை திருப்பவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் என கருதப்படுகிறதே அது உண்மையா? பிரதமரும் குடியரசுத் தலைவரும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இன்னும் 1146 கோடி ரூபாய் பயணச் செலவு பாக்கி வைத்துள்ளார்களாமே அதாவது இந்திய அரசு பாக்கி வைத்துள்ளதாமே அதெல்லாம் உண்மையா?
Related image

அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் அனுமதி, ஓரினப்புணர்ச்சி அனுமதி, ராஜிவ் கொலை சார்ந்த 7 பேர் தீர்ப்பு மாநிலத்துக்கு மாற்றிவிடல், மணமான ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒத்துப்போனால் அவை சட்ட முரண்பாடு இல்லை...இப்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளாய் பீப் பாடல் இளையராஜா வைரமுத்து மேட்டர் போல பொல பொல வென உச்சா நீதிமன்றத் தீர்ப்பாய் வெளிவந்து கொண்டிருக்க...சாலமன் பாப்பையா முதல் அய்யப்ப பக்தர்கள் வரை எல்லாமே வெகுண்டு பேசிக் கொண்டிருக்க ஒருபக்கம் விவசாயிகள் மறுபக்கம் டில்லியை முற்றுகை இட...

இப்படி தேர்தல் களை இப்போதிருந்தே கட்டிக் கொண்டிருக்கிறதாமே...மோடி ஆப்பில் நள்ளிரவில் காந்தியை நோட்டிலிருந்து கிளப்பியவர் இப்போது காந்தி காந்தி சாந்தி சாந்தி என எல்லா பாரதத் திட்டங்களிலும் பேசிக் கொண்டிருப்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியாதா? குறைந்த பட்ச நோட்டு என்றவர்கள் எதற்காக ஆயிரம் ரூபாய் நோட்டை வீழ்த்தி விட்டு இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொண்டு வந்தார்கள்? 50 புது ரூபாய் நோட்டு பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டைவிட, 5 ரூபாய் போல இருக்கிறதே அதெல்லாம் சரிதானா? பழைய அம்பது ரூபாய் அப்படியே இருக்கலாம் என்பது எல்லாம் எதனால்...
Related image
இப்படி நிறைய பதில் சொல்ல மத்திய மோடி அரசு கடமைப்பட்டுள்ளது..

மாநில அரசு தம்மைத் தக்கவைக்க மோடி அரசு தான் பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க வேண்டும், எம்.எல்.ஏ பதவி நீக்கம், கருணாஸ் என இதுவும் 15 அண்டுக்கும் பின் ஓடிய தமிழ் ஈழப் படுகொலைகள் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்த எல்லாமே தேர்தல் ஜுரம் என்று தான் சொல்லப்படுகிறது...

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment