Saturday, October 20, 2018

இன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை

உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை
18.10.18 அன்று காலை எங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள கறிவேப்பிலை மரம், மற்றும் சப்போட்டா மரத்தின் மேல் ஏறிப் படர்ந்து பின்னியிருந்த கொடியை அகற்ற பிரம்மப் பிரயத்தன முயற்சிகள் மேற்கொண்டேன்.

நமது நாட்டில் பி.எல் 480 ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா அனுப்பிய கோதுமையுடன் பார்த்தீனிய விதைகளும் அனுப்பி வைக்கப்பட்டு இந்த நாட்டில் இன்று அது அழிக்க முடியாமல் பரவி வருவதாகச் செய்திகள் உண்டு.

அதன் பின் கல்வராயன், பாலமலை போன்ற மலைப்பிரதேசங்களில் உன்னி முட்செடி என்ற ஒரு முட்செடி அழகாய் வண்ண வண்ணமாய்ப் பூத்து அதன் பூக்கள் கீழே சிந்தி அதிலிருந்து அந்த முட்புதர்கள் தோன்றி அந்த வனத்திலே பரவி ஆக்ரமித்ததை பார்த்ததுண்டு...ஏன் இந்த ஜூன் மாதம் முதல் ஜூலை வரை கூட நான் பாலமலையில் இருந்தேன் பார்த்தேன்.
Image may contain: 1 person, standing and outdoor
எந்த அரசுக்குமே இவற்றிப் பற்றி எல்லாம் இவற்றி அறவே அழிக்கவேண்டும் என்ற எண்ணமே இருந்ததில்லை. அதே போல சவுக்கு,யூகலிப்டஸ் போன்ற நிலத்தடி நீரை உறிஞ்சி அந்தப் பிரதேசத்தையே மலடாக்கும் மரங்கள் பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்க நேரமில்லை.

 அதே போல விவசாய முள் மரம் என்போமே வேலிகாக்க சீமை வேலா முட் மரங்களையும் வெட்டி அகற்றுவது பற்றி இயக்கங்களே இருந்தன...

இப்போது எங்கள் பகுதிகளில் எல்லாம் ஏன் உங்கள் பகுதிகளிலும் நீங்கள் கண்டிருப்பீர்...இந்த செடி, இல்லை இந்தக் கொடி இல்லை இல்லை இந்த செடிகொடி ஏன் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் நூல் இழை விடுவதை வைத்து சொல்லவேண்டுமானால் இந்த விழுதை விடும் தாவரம்...

அதனதன் பூகோளத் தன்மைக்கேற்ப செடி கொடி மரத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு ஆற்றல் பெற்றதாய் வளர்ந்து அந்த படரும் கொடிக்கு இலக்காகும் தாவரத்தை அழுத்தி அமுக்கி அழித்து விடும் ஆற்றல் கொண்டதாய் விளங்குகிறது.
Image may contain: plant, outdoor and nature
மிகவும் அபாயகரமான நச்சுக் கொடி...

இதனுடன் நான் ஒரு போராட்டமே நடத்தினேன். தப்பித்தது எனது மறுபிறப்பே/ ஏன் எனில் இதை முதலில் எனது பக்கத்து விட்டுக் காம்பவுண்ட் உள் பார்த்தேன் அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு தாவி பற்றிப் பரவியது அவர்கள் காம்பவுண்ட் அருகே இருந்த செடி கொடி மரத்தை அப்புறப்படுத்தி விட்டார்கள்.

சிறிது காலம் கழித்துப் பார்த்தால் எங்கள் கறிவேப்பிலை மரத்தின் அருகே ஒரு இரண்டு விரல் மொத்தத்திற்கு ஒரு புரசங் கொம்பு கலரின் ஒரு மரக்கட்டை போலான வேர் ஓடி மேல் மரத்து வரை ஏறி இருந்தது. அதை வெட்டி எடுத்தேன். பிடுங்கியும் விட்டேன்... வேர் வெட்டப்பட்ட செடி காய்ந்து போகவேண்டும்...காய்ந்தால் பிறகு மேல் சுற்றிக் கொண்டிருப்பவற்றை சத்துக் குறைந்து தானே இருக்கும்...பிடித்து இழுத்துப் போட்டு அப்புறப்படுத்தி விடலாம் என என் திட்டம்.


ஆனால் அது அதனிடம் பலிக்கவில்லை...மேல் ஏறியிருந்த கொடிகள் நன்றாக வளர்ந்து மேலும் மேலும் பசுமையாக இலைகள் விட்டு துளிர் விட்டு வளர்ந்தபடியே இருந்தன...மேலும் அதன் விழுது வேறு எல்லா இடங்களிலும் தொங்க ஆரம்பித்தன...

விழுது போல வரும் அதன் நூல் இழை போன்ற கொடியை அவ்வப்போது நாங்கள் குளிக்கும் அறைக்குச் செல்லும்போதும், ஓய்வறைக்குச் செல்லும்போதும் இழுத்து இழுத்து பிய்த்து பிய்த்துப் போட்டபடியே இருந்தேன் இருந்தாலும் அவை அழியவில்லை.ஓயவில்லை.
Image may contain: plant, outdoor and nature
 அதற்கு நீரும் தேவை இருக்கவில்லை, நிலமும் தேவை இருக்கவில்லை. காற்றிலேயே இருக்கும் ஈரப்பதம் அல்லது எங்கிருந்து சத்து பெறுகிறதோ தெரியவில்லை மிகவும் அற்புதமாக சுகமாக வளர்ந்து வந்தது. அதன் இலைகள் மிகவும் பசுமையாக ஏறத்தாழ மென்மையான அரசு இலை போல.

ஆய்த பூஜை அன்று ஒரு நாள் குறித்தேன், கறிவேப்பிலை, மற்றும் சப்போட்டா மரத்தின் மேல் இருந்த இதை ஓய்வறையின் ஓடுகள் மேல் ஏறி அறுத்து பிய்த்து எடுத்து அப்புறபடுத்துவது என...அதே போல ஏறினேன்.

வீட்டில் அதன் பிறகு வீட்டம்மாளிடம் பாட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன் இன்றுதான் அதை செய்ய வேண்டுமா? அதனால் எவ்வளவு நேரம் வீணாகிவிட்டது மற்ற வேலைகள் எல்லாம் எவ்வளவு பாதித்திருக்கின்றன என்று அது வேறு குடும்பப்பிரச்சனை. இது வேறு பூகோள, தாவரவியல் பிரச்சினை

எப்படியோ அந்த இரண்டு மரங்களை விடுவித்தே தீருவதென்று எனது முடிவு. மேல் ஏறிப் பார்த்தால்...அந்த நூல் இழைகள் கீழே அந்த அஸ்பெஸ்டாஸ் சீட்டுகளி உதிர்ந்து தேங்கிய சப்போட்டா மற்றும் மக்கிய இலைளின் கீழ் இறங்கி பூரான் கால்கள் போல் வேர் விட்டு சல்லி வேர் மூலம் நீண்டு நீண்டு கிளை பரப்பியபடியே சென்று கொண்டிருந்தன. அதை முதலில் சுத்தம் செய்ய ஆரம்பித்து அந்த மக்கிய குப்பைகளுடன் அந்த செடியின் வேர் மற்றும் நூல் இழை போன்றவற்றையும் அப்புறப்படுத்தி விட்டு  மேல் இருக்கும் கொடியை கைப்பற்றும் முயற்சி செய்தேன்.

கொக்கி போட்டு இழுத்தாலும், வரவில்லை. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டு மரத்தின் கிளைகளிலும் பின்னியபடி மகா மரணப் போராட்டம். கொஞ்சம் பிசகினாலும் நான் அன்று ஒரேயடியாக விடைபெற்றிருப்பேன் என எண்ணுமளவு

மெதுவாக ஒவ்வொரு கொடியையும் பிரித்து இழுத்து முடிந்தவரை பிய்ந்து வந்தாலும் வரட்டும் என கைகளாலும் பலம் கொண்ட மட்டும் பிய்த்தேன், கொக்கி மூலமும் இழுத்தேன். சில முறை பிய்ந்து வந்தது, சில முறை அதை என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை...

ஒரு முறை பிய்த்தபோது அதன் தோல், மட்டும் பிரிந்து வந்து உள்ளே நார் போல நீர் வழுக்கி கையை வைத்து இழுக்க முடியாமல் நடுத்தண்டு நின்று கொண்டது ஒரே நீர் வழ வழவென்று பிசு பிசுப்பு...
Image may contain: plant and outdoor
பல வகையான வண்ணம் காட்டியது... செடி போல, இலை போல, கொடி போல, தடித்த பட்டையுள்ள மேல் தோலுள்ள கொடி போல, உள்ளே நீர் விட்டும் , கசிந்துகொண்டிருக்கும் தாவரம் போல.. பூமியைத் தொடாமலே பூமிக்கும் தொடர்பில்லாமலே வளர்ந்தபடியே...

மாயம் காட்டியது...95 சதவீதம் பிய்த்து பிரித்த்ப் போட்டேன். கழீவு நீர் ஓடையில் இரசாயன கெம்ப்ளாஸ்ட் ஓடையில் விசிறி எறிந்தேன். அப்போதும் மிகவும் உயரத்தில் இரண்டு கொடிகளை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை...

இங்குதான் இப்படி எனில் போகும் வழியெல்லாம் அன்று என் கண்கள் இதற்காகவே மேய்ந்தன...அந்த அந்த இடத்திற்கேற்ப புதர்களுக்கேற்ப, செடிகொடிகள் மரத்திற்கேற்ப இந்தக் கொடிகள் வளர்ந்துதான் இருக்கின்றன..மனிதர்கள் இதன் அபாயத்தை உணராமலே இருக்கிறார்கள்.

இவற்றை  உடனே அப்புறப்படுத்துங்கள் இல்லையேல் ஒரு தாவரம் மிஞ்சாது...
Image may contain: 1 person, standing


 இதன் இலை, கொடி, வேர் விடும் தன்மை ஆகியவற்றை இத்துடன் பதிவு செய்துள்ளேன்.... எப்படி எப்போது விழுமோ அந்த செடிகள் மிகவும் மென்மையாக பார்க்க அழகாக எங்கெங்கும் முளைத்தும் கிடக்கின்றன இவற்றை பார்த்தவுடன் முளையிலேயே பிடுங்கி எறிந்து விட வேண்டும்...

இதன் பேர் என்ன, இதன் குணம் என்ன,,, இவை எப்படி செடியாக, கொடியாக வியப்புக்குரிய ஒரு அபாயகரமான வளர்ச்சியாக எல்லாத் தாவரத்தையும் வளைத்து விடும் கொடிய ஆபத்தாக மாறுகின்றன என்பவை பற்றி எல்லாம் தாவரவியல் படித்த விற்பன்னர்கள் எவராவது தொடர்புக்கு வந்து விளக்கிச் சொன்னால் அவை உலகுக்கு நன்மை பயக்கும்.

சில செடிகள் மிருகத்தையே உண்ணும் எனக் கேள்வி. ஆக்டோபஸ் நிறைய கைகள் உடையவை என்றும் செய்தி..இந்த செடியான கொடித் தாவர்த்தப் பார்த்து வியப்பதா அதன் அபாயத்தை நினைத்து பிரமிப்பதா இதை எல்லாம் உணராமல் வாழ்ந்து வரும் எனது தமிழ் சமூகம் கண்டு மலைப்பதா...இவற்றை எல்லாம் அழிக்கும் விவசாயியை அழித்து வரும் நமது நிர்வாகம் கண்டு என்ன செய்வது என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் என்னுள்
Image may contain: one or more people and people standing
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

 1. இன்னுமொரு உயிர்க் கொல்லி தாவரம்: கவிஞர் தணிகை - அவசியமான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கவிஞர் தணிகை

  ReplyDelete
  Replies
  1. thanks for your feedback and sharing sir. vanakkam. please keep contact

   Delete
 2. சரியான நேரத்தில் அவசியமான பதிவு. இருப்பதையாவது காப்பாற்றப் போராடும் நேரத்தில் இப்படியொரு வேதனையா? உன்னிப்பாகக் கவனித்துப் போராடி ஒழிப்போம் இவற்றை.

  ReplyDelete