Saturday, October 20, 2018

படிச்சவங்களே இப்படி பண்ணலாமா:? கவிஞர் தணிகை

படிச்சவங்களே இப்படி பண்ணலாமா:? கவிஞர் தணிகை


Image result for god is to live not to die

கூட்டம் கூடி இருக்கிற இடத்தில் ஜலந்தரில் இருந்து வந்த ரயிலை மக்கள் மேலே  ஓட்டி விட்டு பச்சை சிக்னல் காட்டப்பட்டது எனவே ஓட்டினேன் ...ரயில் ட்ரைவர்.

ரயில்வே தண்டவாளங்கள் அருகே மக்கள் நின்றிருக்கக் கூடாது...இது ஒரு வகையான அத்து மீறல்...நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது...ரயில்வே நிர்வாகம்

நான் அங்கிருந்து கிளம்பியபிறகுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்னை வீணாக இப்படிப்பட்ட அரசியல் ஆட்டத்துக்கு இழுக்க வேண்டாம்...நவ் ஜோத் சிங் சித்துவின் மனைவி கவுர்.. இவர் .பஞ்சாப் உள்ளாட்சித் துறை அமைச்சரின் மனைவியும் கூட..

இப்படி பொறுப்பற்ற எண்ணற்ற பதில்கள் இழந்த உயிர்களுக்கு 5 இலட்சம், இருப்பார்க்கு உள்ளாட்சித் துறை மந்திரி நவ்ஜோத் சிங் சித்து, அமரீந்தர சிங் முதல்வர் ஆறுதல்....இப்படியாக 61 உயிர்களை பலி கொண்ட காலனாக ஜலந்தர் பஞ்சாப் ரயில் விபத்து...மேலும் 71 பேர் காயம் என்றும் மேலும் பல உயிர்கள் போகக் கூடுமென்றும் செய்திகள்...

அடிப்படைக் காரணம் தசாரா பண்டிகை கொண்டாட்டம், ராவண உருவ பொம்மை எரிப்பு பட்டாசு, அதிர் வெடி வேட்டு வெடிப்பு, அந்த சத்தத்தில் இருபுறமும் ரயில்கள் வந்தது அறியாக் கூட்டம் ரயில்வே லைன் அருகே, ரயில்வே லைன் மேல் வேடிக்கை பார்த்து பரலோகம் புகுந்தது...

அந்த நிகழ்வை ரயில்வே தண்டவாளம் அருகே நடத்திய ஒருங்கிணைப்பாளர்களின் அக்கறை யின்மை,...நேரம் இரவு 7 மணி இருட்டு எல்லாம் சேர்ந்து கொண்டது அந்த கோர விபத்துக்கு...
Related image
பக்தி என்ற பேரில் கூட்டம் கும்மாளம் உயிர்ப்பலிகள்...

அதே காரணம்:கேரளத்து சபரிமலையிலும்.

அங்கு செல்ல முயன்ற ரஹானே என்பவரின் வீட்டின் மேல் கொச்சியில் கல்லெறிந்துள்ளதாம் கூட்டம்.

கேரளாவின் மக்கள் படிச்சவர்கள்...அவர்கள் போராடிய முறையைப் பார் என்றெல்லாம் பெருமை பேசினர்...ஆனால் அவர்களும் என்ன செய்திருக்கின்றனர் என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.


என்ன படித்தவர்களதானா இவர்கள் எல்லாம்...

இந்த ரஹனே என்ற பெண் பிள்ளை எல்லாம் ஒரு பெண்ணிய வாதி யல்ல என்று இங்கு ஒருவர் சொல்லி அவருக்கெல்லாம் எதற்கு சார்பு கருத்து தெரிவிக்கின்றீர் என்கிறார்... அவர் ஒன்றும் அப்துல் கலாம் அல்லவே குடியரசுத் தலைவர் என்றானபோதும் திருப்பதி கோவிலில் வேறு மதத்தினர் எவரும் கை எழுத்து இட்டு வரவேண்டும் என்ற நியதியை கடைப்பிடித்த அளவுக்கு
Image result for god is to live not to die
கட்சி, மதம், இனம், மொழி, பக்தி இப்படி எந்தக் காரணம் கொண்டும் உயிர்கள் பலியாகக் கூடாது..

எல்லாவற்றிலும் ஒரே வேகம், புரிதலின்மை...தினம் காண்கிறேன் எனது நடைப் பயிற்சி கிராமச் சாலை எங்கும் நசுங்கிய,சட்னியாகிய ஓணான், தவளை, எலி இது போன்ற சிற்றுயிர்களை வாகனசாரிகள் அடித்து வீழ்த்திச் சென்ற சுவடுகளை...

காலையில் நான் வாலறுந்த சிறு பல்லி ஒன்றை எங்கள் கழிப்பறையின் மலத்தொட்டியில் விழுந்து கிடந்ததை ஒரு பைப் மூலம் ஏறச் செய்து வெளி அனுப்பிக் காப்பாற்றினேன்...

இது போன்ற சிற்றுயிர்களை விட அல்லவா மனித உயிர்கள் கேவலமாகப் போய்விட்டது...
Image result for god is to live not to die
அய்யப்பனோ, துர்கையோ எந்த கடவுளுமே இந்த மனிதக் கூட்டத்தைக் காப்பற்றவும் வரவில்லை, இவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டி அறிவு புகட்டி இது போன்ற நிகழ்வு நடக்காமல்  இல்லை...தடுக்கவும் இல்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment:

  1. நல்லதொரு பதிவு.
    ரெஹானா பாத்திமாவின் வீடு தாக்கப்பட்டது வேதனையை தருகிறது.

    ReplyDelete