Saturday, October 6, 2018

வரலாறு காணா சமையல் எரிவாயு விலை ஏற்றம்: கவிஞர் தணிகை

வரலாறு காணா சமையல் எரிவாயு விலை ஏற்றம்: கவிஞர் தணிகை

Image result for gas price rises


வாழப்பாடி கேஸ், மோடி கேஸ் என காட்டுச் சுள்ளி பொறுக்கி சமையல் செய்த அத்தனை கிராமத்துக் குடும்பங்களையும் சமையல் எரிவாயுத் திட்டத்துக்கு மாற்றிய பெருமை இந்த காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சிகளுக்கு உண்டு.

நாங்க ஒங்க காசை வாங்கி மானியமாய் காசை வங்கியில் இடுகிறோம் என்ற பெருமை மோடி அரசைச் சாரும்.

ஏழைங்க தலையிலேயே கை வைக்கும் இந்த மத்திய ஏன் மாநில அரசுகள் யாவும் பணமுதலைகளை பிரமிட் உச்சியில் அமர்ந்து வெள்ளித் தட்டில் சாப்பிட்டு காலுக்கு தங்க செயின் அணியும் குடும்பத்தாரை ஏதுமே செய்வதுமில்லை, செய்ததுமில்லை...
Image result for gas price rises
இந்நிலையில் எதிலிருந்து சுலபமாக காசு பிடுங்கலாம் என்னும் அரசுகள்: பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு, பேருந்து கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றில் கை வைத்து ஆள்வதாக ஆணவம் பேசிக் கொண்டு வேடிக்கை காட்டி காட்டு தர்பார் செய்து கொண்டிருக்கின்றன.

அதன் உச்ச பச்சம் இந்த மாதத்தில் சமையல் எரிவாயு வீட்டுக்கு கொடுக்கும் விலை 918ரூபாய் அந்த வீட்டுக்கு கொடுக்கும் டெலிவரி பாய் டிப்ஸ் உடன் சேர்த்தால் 970 ரூபாய். அதிலும் வீட்டின் அரசாணி ராணிகள் ஆயிரம் ரூபாயாக வாங்கி கொள்கிறார்கள்...என்னும் போது நாட்டின் நிலையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்..

இது கிராமத்தில் இருக்கும் சுப்பன், குப்பன் ஆகியோர் வீடுகளுக்கும், நகரத்தில் இருக்கும் ரமேஷ் தினேஷ் ஆகிய அனைவரது குடும்பத்தார்க்கும், ஏழை பணக்காரன், இல்லாதவன், இருப்பவன், குறைந்த சம்பளக்காரன், அதிக சம்பளக்காரன் அனைவர்க்கும் பொருந்தும்...

ஒரு ஏழைக் கிராமத்தான் விவசாயி இதற்கே மாதம்  ஒன்றுக்கே ஆயிரம் ரூபாய் செலவு செய்ய எங்கே போவார்?

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்...அதற்கு ஒரு ஆயிரம், போக்குவரத்துக்கு என இராயிரம் எனப் போய் விட்டால் எப்படி உண்பது உடுப்பது படிக்க வைப்பது இப்படி எல்லா செல‌வுகளையும் எப்படி செய்ய முடியும்

இதைப்பற்றி எல்லாம் பேசி விடுவார்களோ என்றுதான் மதுவும், புகையும், போதையுமாய் மனிதரை நிறம் மாற்றி, குலம் மாற்றி, நிலை மாற்றி அரசுகள் வேடிக்கை செய்துவருகின்றன...
Image result for gas price rises
உணரா மக்கள் பேடிகள்...

உண்மை மக்கள் கோடிகளில் இல்லை....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment