கமலுக்கும் எனக்கும் உள்ள மையப்புள்ளிகள்: கவிஞர் தணிகை
1. 8 கிராமங்களை தத்து எடுத்து அதில் முன்னேற்றப்பணிகளை செய்து அவற்றை முன் மாதிரியாகக் கொண்டு தமது சேவைப்பணிகளை தொடரவிருப்பதாக சொல்லி இருக்கிறார்.
நான் சுமார் 10 ஆண்டுகள் கிராமிய முன்னேற்றத்திற்காக இந்தியாவின் பின் தங்கிய மாநிலங்களிலும் எளிதில் எட்ட முடியாத கிராமங்களில் தங்கி பயிற்சி எடுத்து தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலைவாழ்மக்களுக்கு பணிச்சேவை செய்து பெயர் பெற்றவன். தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், சேவைப் பிரிவைச் சார்ந்த மக்களோடு நானும் ஒருவராக நின்று சேவயாற்றி உடல் பிணி பல பெற்றவன்.
2. கமல் ஹாசன் அப்துல்கலாம் பிறந்த இடத்திலிருந்து தமது அரசியல் பயணத்தை துவக்கினார்.
எனக்கும் அப்துல் கலாம் குடியரசு தலைவராக விளங்கும்போதே ராஷ்ட்ரபதி பவனிலிருந்து கடிதம் எழுதியுள்ளார், அவரை 3 முறை பார்த்திருக்கிறேன். எனது புத்தகங்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன.
எனவே இருவரும் மதிக்கும் மாமனிதராக அப்துல் கலாம் உள்ளார்.
3. நேற்று திருச்சி மாநாட்டில் தமது உரையின் போது...கமல் ஹாசன் தமது ரயில் பயணம் பற்றி பேசும்போது காந்தி ரயில் பயணத்தின் வழிதான் நாட்டின் நாடித் துடிப்பை உணர்ந்ததாகவும் எனவே தாமும் காந்தியின் வழியில் ரயில் பயணத்தை மேற்கொண்டதாகவும், மேலும் 48 பேர் 48 காரில் பயணம் வருவதை விட இது பாதுகாப்பு ஏற்பாட்டை மிகவும் குறைவாக செய்து கொள்ள ஏற்றதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
காந்தி எழுதிய 60000 பக்கங்களையும் படித்தவன் என்ற முறையிலும், மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் இணைப்பில் உள்ள வள்ளியம்மாள் கல்வி நிறுவனத்தில் காந்திய நூல் வழிக்கல்விக்கான முதல் பரிசைப் பெற்றவன் என்பதாலும், காந்திய கிராமியப் பல்கலைக் கழகம் காந்தி கிராமத்தின் பயிற்சி பெற்றவன் என்ற முறையிலும், நானும் எனது நண்பர் ச.மே.சிற்பி ஆகியோரும் இணைந்து நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற இயக்கங்கள் நடத்தி: சின்னபையன், சசிபெருமாள் (ஆம் அந்த மது விலக்குப் போராளியாகி இறந்த அதே சசிபெருமாள்தாம்) போன்ற நல்ல காந்திய மனிதர்கள் உருவாக பயிற்சி அளித்து உறுதுணையாக நின்றதாலும்...
இப்போது வாழ்வின் தேவை கருதி தினமும் ரயிலில் பயணம் செய்து கல்லூரி சென்று வருகிறேன் என்பதாலும்..
இதுவரை கமல்ஹாசன் வெளிப்படுத்திய 3 புள்ளிகள் எமக்கும் அவருக்கும் மையப்புள்ளிகளாக இருக்கின்றன...இனி எதிர் வரும் காலங்களிலும் நிறைய இது போன்ற மொட்டவிழ்தல்கள் நிகழும் என்றே நம்புகிறேன்...
அலை நீளம் ஒத்துப் போகிறது..கமல்ஹாசன் கவர்ச்சி காட்டி ஏதும் பேசவில்லை களப்பணியாளராகவே மாறிக் கொண்டிருக்கிறார். எனவே அவர் போன்றோர் மேலும் மேலும் வாய்ப்புகளின் போது வெளித்தெரிவார்கள், மிளிர்வார்கள் என்றே நம்புகிறேன்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment