Friday, March 30, 2018

பேசும் முன் வார்த்தைக்கு நீ எஜமான் பேசியபின் வார்த்தை உனக்கு எஜமான்: கவிஞர் தணிகை

Image result for abdul kalam quotes in tamil

பேசும் முன் வார்த்தைக்கு நீ எஜமான் பேசியபின் வார்த்தை உனக்கு எஜமான்: கவிஞர் தணிகை

முதலில் ஊழல் மிக்க அரசு எடியூரப்பா அரசுதான் என்ற உண்மையை அவரை வைத்துக் கொண்டே சொன்னார் தைரியமாக அதே கட்சி சார்ந்த அந்தக் கட்சியின் தலைவர் அமித் ஷா , மிக நேர்மையானவர் உண்மையை ஒத்துக்க் கொண்டிருக்கிறார் இவரது உண்மை, நேர்மை பற்றி லோயா என்ற நீதிபதி வழக்கை கவனித்தார்க்குப் புரியும், இப்போது அவரது பேச்சை மொழி பெயர்த்த  பா.ஜ.க எம்பி பிரகலாத் ஜோசி...பிரகலாதன் எப்போதும் உண்மையே பேசுவான் யாருக்கும் எதற்கும் பயப்படமாட்டான், ஹரி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொன்ன பேராயிற்றே...அந்த வாரிசாக இந்த எம்.பியும் நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்ததில்லை. மேலும் மோடி நாட்டை சீர்குலைத்து விடுவார் என கன்னடத்தில் மொழி பெயர்த்து பேசினார்.

இப்போது இங்கு வரும் ஏப்ரல் 15 அன்று கருப்புக் கொடி பிடிப்போம்  பிரதமருக்கு எதிராக என தி.மு.கவும், காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்காமல் விட மாட்டோம், உண்ணாவிரதம் இருப்போம்,யோசித்து முடிவு செய்வோம் வழக்கு தொடர்வது பற்றி யோசித்து வருகிறோம் என்றும் 3 குரல்கள் அ.இ.அ.தி.முகவிலிருந்து எழுந்திருக்கின்றன.

காவிரியை, தென்னகத்தின் நெற்களஞ்சியம் எனப் படும் தஞ்சையை குறி வைத்து தமிழகத்துக்கு எதிராக யுத்தம் நடத்தப்படுகிறது துப்பாக்கி குண்டுகளின்றி...மீத்தேன், நியூட்ரினோ இதற்கெல்லாம் தஞ்சை பூமி நஞ்சை பூமி தான்கிடைத்தா? எளிதில் நம்ப முடியவில்லைதான்..

ஆனால் சாகர் மாலா, தூத்துக்குடி ஸ்டெரிலைட் செம்பு வம்பு விவகாரம், அங்கு கூடி எதிர்க்கும் இலட்சக்கணக்கான மக்கள்  பள்ளிச் சிறார் முதல், பெரியோர் வரை, அதை மறைக்கும் ஊடகங்கள், அதற்காக மாணவர்கள் ஸ்ட்ரைக் செய்யும்போது கல்லூரியை காலவரையறை இன்றி மூடுவதாக சொல்லும் கல்லூரி நிர்வாகம் போன்று 15 நாளுக்கு கம்பெனியை மூடுவதாக அறிவித்திருக்கும் ஸ்டெரிலைட் ஆலை,

இங்கே மேட்டூரில் தொழிற்சங்கமே இருக்கக் கூடாது என திட்டமிட்டு சதி செய்து படித்த இளம் இளைஞர்களை ஏமாற்றும், உழைப்பை உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள்,,,,எங்கு பார்த்தாலும் பஸ்போர்ட், நெடுஞ்சாலை, எனவும், தமது காலத்திலேயே பதவி விட்டு இறங்கி விடும் முன் என்ன என்ன செய்து பேர் விளங்கச் செய்து கொள்ளலாம் என எடப்பாடி பேரில் மாவட்டம் செய்யலாமா என வரும் செய்திகள்...இதனிடையே மேட்டூர் அணையில் வெகுவாக குறைந்து குடி நீருக்கே கூட பஞ்சம் வரும் நீர்ப்பற்றாக்குறை...கொளுத்தும் கோடை....

இப்படியாக நாளும், காலமும் நகர்ந்து வருகிறது...யாராவது எப்போதாவது சொல்லி இருக்கிறீரா, அட நீங்கள் கூட பத்தாண்டுக்கும் மேல் மிகவும் பின் தங்கிய இந்தியப் பழங்குடி மக்களுக்கு உழைத்திருக்கிறீர் இவர்கள் எல்லாரையும் விட நீங்கள் பிரதம்ரானால், அட தமிழகத்தின் முதல்வரானால் மிக நல்ல நாட்டை மக்களை மேன்மைப்படுத்துவீர் என்று?

முதலில் நீரை, நிலத்தை, அதன் மேல் உள்ள கட்டடங்கள் யாவற்றையும் நாட்டுடமை ஆக்குவேன்

இரண்டாவதாக நதி நீரை இணைப்பேன்

மூன்றாவதாக அறக்கட்டளை யாவற்றையும் அது ஈஷா ஆனாலும், ஈசனே ஆனாலும் அம்மா ஆனாலும் ஆதி பராசக்தி ஆனாலும், அமிர்தம் ஆனாலும் தங்க மாளிகை ஆனாலும், திருப்பதி வேங்கடவன் ஆனாலும் திருவனந்தபுரத்து பத்மனாபன் ஆனாலும்,  திருவரங்கத்து அரங்கன் ஆனாலும் அனைவர்க்கும் நாட்டுக்கு பொது உடமை ஆக்குவேன்..

நான்காவதாக தனியார் எந்தத் துறையிலுமே இருக்காமல் அனைத்தையும் அரசின் பொதுத் துறை நிறுவனமாக்கி ஏமாற்று வேலை செய்வாரை நீக்கி, உண்மையான பணி செய்யும் இளைஞர்க்கு பணி கொடுத்து உலகின் முன்னணி நிர்வாகம் நடக்கச் செய்வேன்

ஐந்தாவதாக நாட்டில் தேர்தல் என்றால் அது மத்திய மாநிலம் எல்லாம் ஒரே நேரத்தில் மட்டும், தேர்தல் செலவு யாவும் அரசுடையது...நிற்பார் எந்த செலவும் செய்யக் கூடாது...ஊழல் நிருபிக்கப்பட்டால் உடனே பதவி நீக்கம் தண்டனை உறுதி...அதையே லோக்பால் மசோதா என்கிறார்களோ?

ஆறாவதாக கல்லூரி இளைஞர் அனைவர்க்கும் இராணுவப் பயிற்சி இரண்டு வருடம் உறுதி உடன் உதவித் தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்

வங்கிகள் யாவும் தேசிய பொது உடமையாக்கப்பட்டு,,, பெரு முதலாளிகளுக்கு  என்று எந்த கடனுதவியும் இல்லாமல் செய்து விகிதாசார முறைப்படி பொருளாதார உதவிகள் செய்யப்படும்...

கல்வி, மருத்துவம் யாவும் அரசு பார்த்துக் கொள்ள தனியார் துறை என்பது இல்லாமல் செய்யப்படும்...

நாட்டில் மூன்றாம் அணி என்றெல்லாம் அமைத்து மறுபடியும் பி.ஜே.பி கட்சிக்கே வாய்ப்பு சென்று விடாமல் காப்பது போல நடவடிக்கை எடுத்து....இரு கட்சி ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டு ஒரு ஆட்சிக்காலம் ஒரு கட்சி, அடுத்து எதிர்க்கட்சியாக இருந்தது ஆளும் கட்சி என்ற நிலைக்கு வரவழைக்க நடவடிக்கை, தேர்தல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள சட்டம் நீதி நிர்வாகம் எல்லாம்செய்யப்படும்...

இப்படி எல்லாம் செய்யும்போது தனியார் கல்வி நிறுவனங்கள் என்ற பேச்சுக்கே வழி இல்லாமல் சாதனையாளர்க்கு, அறிவியல் விஞ்ஞானிகளுக்கு தனிப்பட்ட ஆய்வுக்கு ஆராய்ச்சிக்கு உண்டான அத்தனை வழிவகைகளும் செய்யப்படும்...

மானியம், இலவசம் எல்லாம் இல்லாமல் ஒழிக்கப்பட்டு அரசே அனைத்தையும் கொடுக்கும்...

மது ஒழிப்பு, மனிதர்களின் சக்திக் குறைபாட்டுக்கான, நோய்கள் உற்பத்தி செய்யும் அனைத்து விதமான உணவுகளும் தடைசெய்யப்படும்..

விவசாயம் நாட்டின் பிரதான முதுகெலும்பான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு அனைத்து உதவிகளும் உழவுத் தொழிலுக்கு செய்யப்படும்

பிளாஸ்டிக் நெகிழிகள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதம் போன்றவை அடியோடு உற்பத்தி தடைசெய்யப்பட்டு  பயன்பாடு ஒழிக்கப்படும்.

....தனியார் போக்குவரத்து அறவே இல்லாமல் ஒழிக்கப்படும்...தொழில் செய்வோர்க்கு பயண ஏற்பாடுகள் அரசின் மூலமே செய்யப்படும்...

ஏங்க இதெல்லாம் செய்ய முடியாதா என்ன?
செய்யலாம்....மக்கள் நினைத்தால்...
unnaal ethaiyum saathikka mudiyum...apj quotes in tamil க்கான பட முடிவு
பேராற்றல்
உன்னிடம் மறைந்திருக்கிறது
உன்னால் எதையும் சாதிக்க முடியும்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment