Thursday, March 29, 2018

ஒன்னு காதில மாட்டிக்கிறாங்க இல்லைன்னா காதல்ல மாட்டிக்கிறாங்க: கவிஞர் தணிகை

ஒன்னு காதில மாட்டிக்கிறாங்க இல்லைன்னா காதல்ல மாட்டிக்கிறாங்க: கவிஞர் தணிகை

Image result for one to one cbe to salem


கோவை முதல் சேலம் வரை இரவு நேரப் பயணம் ஒன் டூ ஒன் பேருந்து...கல்லூரி விடுமுறை என்பதால் எங்கள் பேருந்தில் மட்டும் 8 காதல் ஜோடிகள்...இறங்கும் இடத்திற்கு முன் அந்த இளைஞன் இறங்கிய பிறகு அவன் தோளில் சாய்ந்துறங்கிய அந்தக் கல்லூரி மாணவி சிகையை தடவு தடவென்று தடவி பின்னுக்கு இழுத்து விட்டு கிளிப் போட்டு சரி செய்கிறாராம்...துணையாக வந்தவர்கள் வேறு இதெல்லாம் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தால் பரவாயில்லை வாழுமா என்று சந்தேகம் எழுப்பினார், மேலும் ஒரு ஜோடி பின்னால் அவர்கள் செய்வது தெரியாமல் இருக்க பனியன் ஒன்றை மறைப்பாக போட்டுக் கொண்டனர், அவர்களுக்கு வசதியாக ஓட்டுனரும் பேருந்தின் விளக்கை அணைத்து பயணிகளுக்கு இது போன்ற பயணிகளுக்கு வசதி செய்து தந்தார்...

இவர்களுக்கு எல்லாம் நியூட்ரினோ, மீத்தேன், தஞ்சை நெற்களஞ்சியம், தூத்துக்குடி ஸ்டெரிலைட் பிரச்சனை ஏதும் ஏன்... அம்மா அப்பா வீட்டுப் பிரச்ச்னை சகோதர சகோதரிகள்..நாடு, வீடு ஏதும் பெரிதாகத் தெரியவில்லை. தெரியாதுதான்.

நாங்களும் காதலித்தவர்கள் தாம். அது வேறு. இது வேறு...காதல்னா என்னாங்க அது கல்யாணந்தானே, செல்வச் சீமானே...என்று காதல் அங்கொன்றும் இங்கொன்றும் பேசப்படும்... பணக்கார வீட்டுப் பையன்கள் தாம் காதலிப்பார்கள்...மீதி இருப்பார்க்கு பிழைக்க வழி தேட , ஒரு வாய் வயிறு சோறு சம்பாதிக்கவும், பெற்றோர்க்கும், வீட்டார்க்கும் செய்யவே கடமை இருக்கும் காதல் என்பதற்கெல்லாம் நேரமே இருக்காது...

நாவல்கள், கதைகளில் இருக்கும், சினிமாவில் இருக்கும், மீறி எங்காவது இருந்தால் அதில் இரண்டில் ஒன்று இறக்கும்...ஒரு கடிதம் எழுதி சேர்த்துவதற்குள் அது சேராமலே படாத பாடு படுத்தி எடுக்கும், ஊரே காறித் துப்பும் அந்தப் பையன் லவ் லெட்டர் கொடுத்தானாமே அந்தப் பிள்ளைக்கு என அதுக்கு பயந்தே எந்தப் பெண்ணுமே யாரையுமே ஏறெடுத்துப் பார்க்கவே மாட்டாள் எந்த லவ் லெட்டரையும் யாரும் வாங்கவே மாட்டார்கள்... இது போன்ற காதல் எல்லாம் ஒரு தலைமுறைக்குள்ளாகவே மாறி இவ்வளவு தூரம் வந்தது செல்பேசியால்...

ஒன்னா இவர்கள் தம் சுற்றத்தில் வெளியிடத்தில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல் காதில் ஹெட் செட் இயர் போன் என மாட்டிக் கொண்டு திரிகிறார்கள்...அல்லது காதல் என்ற பேரில்...உண்மையிலேயே காதல் தான் இதன் பேரா...பிப்ரவரி 14ல் ஒரு பொறியியல் இரண்டாமாண்டு மாணவன் சாரி ஃபார் திஸ் என தமது 170 தொடர்பு எண்களுக்கும் செய்தி அனுப்பிவிட்டு எப்படி தூக்கு மாட்டிக் கொள்வது என யூ ட்யூப்பில் கற்றுக் கொண்டு எனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என அவர்கள் ஊரில் இருந்து ஒரு பெண் இவனது கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தவளுக்கும் இவனுக்கும் ஏதோ இருந்தும் இல்லாதிருந்ததுமாக இருந்ததால்...யாரும் காரணமே அல்ல என இரண்டடுக்கு கட்டில் மேல் ஏறி துணி காயவைக்கும் நைலான் கயிற்றில் மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு மிகவும் பர்பெக்ட்டாக செத்துப் போனான்..

பேராசிரியர்களும் மாணவர்கள் அவனுடன் படித்த அவனது துறை மாணவர்கள் 70 பேரும் அவனது ஊருக்கு சிறப்பு பேருந்து எடுத்துக் கொண்டு அவனது உடலை இறுதி அடக்கம் செய்து வந்தார்கள்...அப்படி சென்றவர்க்கு ஒரு சிறு உணவகத்தில் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...ஒரு மாணவன் தோசைதானா, புரோட்டா, சப்பாத்தி,பூரி மாதிரி ஏதும் இல்லையா எனக் கேட்க வாய் எடுக்க இன்னொரு மீசைக்கார மாணவன் அவனை அடக்கினான்

எல்லாமே சொன்னார்கள் அவனது படிக்காத அப்பா, எதனால செத்தான், அந்தக்  காரணத்தை மட்டும் சொல்லுங்கப்பா என்று எல்லாரையும் கேட்டு கேட்டு அழுது கொண்டிருந்ததையும் மறக்க ஆரம்பித்து விட்டார்கள்...சிலர் விடுதியை விட்டு வெளியே போய்விடலாம் என்றார்கள்.நாளாக நாளாக மறக்க ஆரம்பித்து விட்டார்கள்...

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஊடகம் அந்தக் கல்லூரி நிர்வாகத்திடம் அது கொடுத்த அழுத்தம்தாம் அந்தப் பையனுக்கு அந்தமுடிவு ஏற்படக் காரணம் என செய்தி வெளியிட்டு...பழம் பறிக்க ஆசைப்பட்டு ...தொலைக்காட்சி, பத்திரிகை செய்திகளை வெளியிட்டு ....காவல்துறையும்  சீக்கிரம் இந்தக் கேஸை இழுத்து மூடவே முனைந்தது...அது சந்தேகமில்லா தற்கொலைதான் என...கல்லூரியும் சில நட்கள் விடுமுறை விட்டு பிரச்சனையை அமைதியான சுமூகமான முறையில் தீர்த்தது... அடுத்து செமஸ்டர் வந்துவிட்டது, எக்ஸாம் பீஸ், அட்டன்டஸ் 80% எல்லாம் மறந்தே விட்டார்கள்....

அந்தப் பையனை இழந்த குடும்பம்... காதல் என்றால் என்னாங்க அது கல்யாணந்தானே...என்ற எப் எம். ரேடியோவில் காற்றலையில் மிதந்த பாடலை நிறுத்த முடியாமல் கேட்டுக் கொண்டிருந்தது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment