எனது பயணத்தில் இயற்கை வழிகாட்டி: கவிஞர் தணிகை
கேரளத்து அரசு, விபத்தில் சிக்கிய மனிதர்களுக்கு தனியார் மருத்துவ மனையிலும் 48 மணி நேர மருத்துவ உதவிகள் கிடைக்க சட்டம் செய்திருக்க அரியானா அரசில் 12 வயதுக்குட்பட்ட பெண்களை வன்முறையில் கெடுக்கும் நபர்களுக்கு தூக்கு தண்டனை என்பதை சட்டமாக்கி இருக்கும்போது...அதைப் பாராட்டிக் கொண்டே...எனது அகமும் புறமுமான வாழ்வின் ஒரு சிறு பயணத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். அதன் மூலம் இந்த நாளின் ஒரு பகுதியை பதித்துக் கொள்ளவும் விழைகிறேன்.
வழக்கம் போல மேட்டூர் ரயிலில் மாலை அமர்ந்திருந்தேன். மாலை 5. 40க்கு வண்டி புறப்பட்டது. கடைசியில் ஒரு இளைஞர் ஓடி வந்து ரயில் புறப்படும்போது ஏறினார். அவர் டிக்கட் கடைசியாக வாங்க கவுண்டருக்கு சென்றபோது மேட்டூர் ட்ரெயின் கேன்சல் என்றும் 7 மணிக்குத்தான் செல்லும் என ஹிந்தி மொழியில் பேசியதாகவும் எனக்கு அது புரியவில்லை ஆனாலும் இங்கு வந்து பார்த்தால் மேட்டூர் ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன் ஏறிக் கொண்டேன் என்றார்.
எப்படியோ ஒரு வழியாக மேட்டூர் வரும் ரயிலை நிறுத்தி விடலாம் எனத் திட்டமிடுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லாப் பயணிகளிடமுமே இருக்கிறது.
வண்டி மேச்சேரி ரோடு அதாவது சிஸ்கால் எனப்படும் ஜே எஸ் டபள்யூ எனப்படும் ஜிந்தால் ஸ்டீல் ஒர்க்ஸ் கம்பெனிக்காகவே ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரயில் நிலையத்தில் நிறுத்தப் பட்டது. என்னுடன் பேசி விட்டு முன் சென்று அமர்வதாக சொல்லிச் சென்ற அசோகர் என்னுன்ம் மாணவனிடமிருந்து போன் . ரயில் மேட்டூர் போகாதாம், மேச்சேரி ரோட்டுடன் இப்படியே திருப்ப இருக்கிறார்களாம்.
சேலம் சந்திப்பில் அதை ஏன் சொல்லவில்லை, அதை ஏன் காட்சி பலகையில் காட்டாமல் மேட்டூர் செல்லும் எனப் போட்டார்கள்,,,வாருங்கள் அனைவரும் சேர்ந்து சென்று கேட்போம் எனப் புறப்பட்டேன். எவருமே வரவில்லை. அனைவருமே அதாவது முதியவர்கள், பெண்கள், சுமையுடன் இருப்போர், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் என கலவையாக காட்சி அளித்த கதம்ப மனிதர்களில் இருந்து பெரும்பாலும் எவருமே ரயிலை விட்டு இறங்கவே இல்லை.
சிலருடன் சென்று வெண்ணிற ஆடை தரித்த டி.டி.ஆரிடம் விசாரித்தோம், ரயில் நிலையத்து நபர்கள் முன்னே சென்ற கூட்ஸ் ரயிலின் எஞ்சின் பழுதாகி நின்று விட்டது. எனவே இந்த பயணிகள் ரயில் போகவே வழி இல்லை.
எனவே இந்த எஞ்சினைப் பிரித்து முன் இணைத்து மறுபடியும் சேலம் செல்ல இருக்கிறோம் பயணிகள் அனைவரிடமும் தெரிவிக்கச் சொல்லி சேலம் சந்திப்பிலிருந்து தகவல் வந்து விட்டது என்றார்கள். எனவே அங்கிருந்து ரயில் மேட்டூர் வர வாய்ப்பில்லை என்றனர்.
விவாதம் புரிய நேரமில்லை, அதில் பொருள் இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே கருப்பு சாமி காக்கி உடை தரித்த மின் பணியாளரும் நானும் சாலை வாகன கடக்கும் வாயிலில் சென்று நின்று பேருந்து ஏறலாம் என நடக்க ஆரம்பித்து விட்டோம். அங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் மேச்சேரிக்கு அதன் பின் தான் பேருந்தை பிடித்து வீடு வர முடியும்.
கையில் இருத காசில் 2 கிலோ லோ சோடியம் சால்ட் வாங்கி விட்டது நினைவில் வந்தது...மேலும் கண் பார்வைக் குறைபாட்டை சரி செய்ய கண்ணாடியின் பிரேம் உடைந்ததால் அதை புதிதாக செய்து தர கடைக்காரர் கேட்ட முன் பணமும் கொடுக்கவில்லை. கண்ணாடி தயாராகி கைக்கு கிடைக்கும்போது முழுப்பணத்தையும் தருவதாக சொல்லி விட்டதும் உடன் நினைவிலாடியது
செல்பேசியில் இது போன்ற அவசரத் தேவைக்காக சில பத்து ரூபாய் நோட்டுகள் இருக்கும் நினைவு தைரியமும் தெம்பும் தர ...இரு சக்கர வாகனசாரிகளிடம் மேச்சேரி வரை வர கொண்டு விட முடியுமா எனக் கேட்க ஆரம்பித்தேன்...கருப்பு சாமி நீங்கள் போங்க சார், நான் பின்னால் வருகிறேன் என என்னை வழி அனுப்பினார்...* (உடன் வந்தவரை தனியே கத்தரித்து விட்டு செல்கிறோமே அதுவே சரியில்லைதான்...என்றாலும் அதை செய்ய வேண்டியதாகவே இருக்கிறதே....)
ஒரு ஹெல்மெட் அணிந்த நபர், தேனிக்காரராம், பேர் பாண்டியன். தமிழ் நாடு மின் வாரியப் பணிக்காக இங்கு வந்து ஏரியூரில் இருக்கிறாராம். இந்தப் பக்கம் வருவது அவருக்கும் இது முதன் முறைதானாம்...தேனியருகே அவருக்கு குடும்பம்,,,மாதம் ஒரு முறைதான் செல்கிறாராம்...குரங்கணிக் காடி காட்டுத்தீ பரப்பிய செய்தி பரிமாறிக் கொண்டோம்...அவரும் நானும் முதல் சந்திப்பிலேயே நண்பர்களானோம்...
மேச்சேரி பேருந்து நிலையத்தில் எனது விசிட்டிங் கார்ட் கொடுத்தும், எனது புத்தகங்களில் ஒன்றான "முன்னோரின் முன் மொழிகளும், தணிகையின் மணி மொழிகளும்" பரிசளித்தேன் நன்றி பரிமாறிக் கொண்டேன். தொடர்பு எண்களை பரிமாறிக் கொண்டோம்...
இது போன்ற ஒரு நண்பரை சந்திக்கத்தான் இந்த சம்பவம் நடந்ததோ எனும்படியான மலைப்பில் நகர்புற பேருந்தில் ஏறி இடம் இருக்க அமர்ந்தேன். அங்கிருந்து 10 ரூபாய் எனது ஊருக்கு.
நினைவு ஓட ஆரம்பித்தது: ஏன் இந்த ரயில் நிர்வாகம் ரயிலை ஓமலூரிலேயே நிறுத்தி இந்த செய்தியை சொல்லி பயணிகளை அனுப்பி இருந்தால் அருகிலேயே பேருந்து பிடிக்க பயணிகளுக்கு வசதியாக இருந்திருக்குமே...
இன்று காலையில் உலக ஊனமுற்றோர் தினம் என்று சொல்லக் கூடாது எனவே உலக மாற்றுத் திறனாளிகள் தினம் என்று கல்லூரியில் தலைப்பிட்டு எழுதினோமே....இந்த ரயிலில் கண் குருட்டுடன், கால் இழந்து தினமும் வரும் பயணியின் நிலை என்ன, அந்தப் பெண்கள், சுமையுடன் பயணம் செல்ல வந்திருக்கும் அந்தப் பயணிகள் நிலை, ஏன் எனக்கு தோழமை காட்டும் அந்தக் கல்லூரி மாணவர்கள் ...அவர்கள் கூட ஏதாவது வழி செய்து கொள்வார்கள்..இள ரத்தம், காசில்லாதார் எல்லாம் எப்படி போய்ச் சேர்வார்கள்...
பேருந்து இடையில் நின்றால் பணத்தை திருப்பித் தருவது போல இந்த ரயில் நிலையத்தில் நாம் ஏன் அனைவரையும் அழைத்து கேட்டு வாங்கிக் கொடுக்க வில்லை...
இப்படியாக பேருந்து நெருங்கியது...கால் ஊனமுற்ற ஒரு இளைஞர் இரு கைககளுக்கும் அக்குளில் கட்டை வைத்து நடப்பவர் ஒருவர் ஏறினார்.அவர் எங்கள் ஊர். அவர் இறங்க அவரை முன்னால் இறங்கச் சொல்லி அவருக்கு உறுதுணையாகும் அந்த ஊன்று கோல்களை அவருக்கு எடுத்துக் கொடுத்து எனது ஆதங்கம் அத்தனையையும் முடித்தபடி எனது இன்றைய பயணம் முடிந்தது....
ஒரு தலைவனாயிருந்தால் இந்த சூழலில் இப்படி வீடு வந்திருப்பானா, இதை எல்லாம் செய்து தானே ஆக வேண்டும்.,,எனவே தான் நாம் தலைமை ஏற்க இன்னும் தயாராகவில்லையோ...திருமணம், வீடு, குடும்பம், பிள்ளை இதெல்லாம் இல்லாமல் சிறைக்கும் போக தயாராக, இரவு வீடு வராமலே எங்கு வேண்டுமானாலும் தங்க நேரிடும் துணிச்சலும், அனைவருக்கும் நல்லது செய்து நமக்கு ஒன்றுமே இல்லாமல் உடலுக்கு ஏற்படும் இன்னலைப் பொறுத்துக் கொண்டு உயிர்விடவும் தயாராக இருக்கும்போது நினைத்தை செய்வோம்....
அதற்கு முன் மறுபடியும் ரயில்வே நிர்வாகத்துக்கு மறுபடியும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்...இப்படியே செய்து மேட்டூர் ரயிலை நிரந்தரமாக நிறுத்தி விடுவதாக உத்தேசமா எனக் கேட்டு...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment