Saturday, March 17, 2018

பழைய முறையில் வாக்குப் பெட்டித் தேர்தலும் எண்ணிக்கையும் வைத்தால் பா.ஜ.க நிச்சயம் தோற்கும்: கவிஞர் தணிகை.

பழைய முறையில் வாக்குப் பெட்டித் தேர்தலும் எண்ணிக்கையும் வைத்தால் பா.ஜ.க நிச்சயம் தோற்கும்:  கவிஞர் தணிகை.
Related image


கடந்த உ.பி  இடைத்தேர்தலில் 3 பாராளுமன்றத் தொகுதிகளையும் இழந்திருக்கிறது பாரதிய ஜனதா நாடாளும் நாட்டின் மாபெரும் முதலாம் கட்சி.அது மட்டுமல்ல இவர்கள் தேர்தல் முடிவு பெறும் முன்னே முடிவை அறிந்து கொள்கிறார்கள் வாக்கு எந்திரப்பதிவில் அதுவும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது.

மேலும் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்ப செய்திகளை புதிதாக உருவாக்கி மக்களை ஊடகங்களை வேறுபக்கம் அலை பாய ஏமாற்றி அலைக்கழித்து அழைத்துச் சென்று விடுகிறார்கள். இதுவே இவர்களின் இவர்கள் கட்சியின் முக்கியமான உத்தி. இதற்கு மக்களும் மற்ற கட்சிகளும் ஏமாந்து விடக்கூடாது...

அமெரிக்கா என்னதான் முன்னணி நாடாக இருந்த போதும் இன்னும் வாக்குப் பெட்டித் தேர்தலையே வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே வழி மொழியும் நாடாக விளங்கும் இந்தியா இந்த விஷயத்தில் தமது வசதிக்கேற்ப இந்த முறையில் செய்து தில்லு முல்லுகளை தேர்தல் கமிசனும் உடந்தையாகச் செய்ய தேர்தல் விழாவை அரங்கேற்றி வருகின்றன.

உதாரணமாக டி.டி.வி. தினகரனின் ஆர்.கே நகர் பழைய ஜெவின் தொகுதி தேர்தலையும் அதன் பணப் பரிமாற்றம் வெளிப்படையாக தெரிந்தபோதும் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியதைச் சொல்லலாம்.

இந்நிலையில் தமிழிசையும், ஹெச் இராஜாவும் கமல்ஹாசன் ஆரம்பித்துள்ள மக்கள் மைய நீதி மய்யம் கட்சியில் உறுப்பினர் ஆக விண்ணப்பித்துள்ளனர்...உண்மையிலேயே நாடாளும் அந்த மாபெரும் நாட்டின் முதல் பெரும் தனிக்கட்சி தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாது என கட்சி மாறாட்டம் செய்ய இப்போதே அட்வான்ஸாக இடம் தேடிக் கொள்ளப் பார்க்கின்றனரா அல்லது எவ்வளவு எண்ணிக்கையில் கமல்ஹாசனின் கட்சியில் உறுப்பினர் எண்ணிக்கை இருக்கிறது என்று நாசூக்காக அறிந்து கொள்ள இந்த யுக்தியைப் பயன் படுத்திக் கொண்டுள்ளனரா என்று அவர்களுக்கே வெளிச்சம்...வெளிச்சம் என சூரியனைப் பற்றிச் சொல்லி விட்டால் அதற்கும் கூட இந்து மத தர்ம நியாய நேர்மைப்படி சூரியன் எங்களது மதத்தின் ஒரு கடவுள், மஹாபாரதத்தில் குந்திக்கு தொடாமலே இரண்டு வரம் கொடுத்து குந்தி மணம் ஆகும் முன்பே கர்ணனை குழந்தையாகக் கொடுத்த அவதாரம் எனப் போராட ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள்...

அவர்களுக்கு தேவை எல்லாம் இப்போது ஒரு சூடு கிளப்பும் பிரச்சனை , கிளர்ச்சி, மக்களின் பலிகள், இரத்தத் தெறிப்புகள்..அது எங்கும் பரவ அவர்களின் கட்சிக்கான சில பதவிகள் வெற்றிகள் தேர்தலில் கூட்டு சேர்தல்கள்

ஆனால் தமிழக மக்களும் கேரள மக்களும் ஏன் ஆந்திர மக்களும் மே.வங்க மக்களும் அவ்வளவு சாதாரணமாக ஏமாற மாட்டார்கள் போல் இருக்கிறதே...

எல்லா இடங்களிலும் இந்தி, வடக்கிலிருந்து தெற்கே வரும் இந்தியர் இதெல்லாம் அவர்கள் அவர்களின் இலக்காகவே மாறி இருக்கிறது.  அவர்களை ஜெயிக்க வைத்தால் தமிழக மக்கள் மேலும் நிறைய நெருக்கடிகளை சந்திக்கலாம்... வாழ்வாதாரங்களை இழக்கலாம்...


அவர்களைத் தோற்கடிக்க ஏழைகள் சுயமாக சம்பாதித்த தம் பணத்தை வங்கியில் போட வைத்து இரவு பகல் பனி வெயில் பசி பட்டினியுடன் சாலைகளில் நிற்க வைத்த ஒரு செயலே போதும் மேலாக ஏழைகள் பணத்தை வங்கிக்கு வரவழைத்துவிட்டு பண்க்கார கனவான்களின் கடன்களை திரும்பப் பெற முடியாமல் வங்கிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பணக்கார ஏமாற்று புத்தி ஒன்றே போதும் அவர்களைத் தோற்கடிக்க மேலும் போதாதற்கு ஜி.எஸ்.டி வரிகளும், ஏதோ இதன் செயல்பாட்டால் ஏழைகளை வாழவைக்கப் போவதாகவும் அந்த மறுமலர்ச்சியில் காய்கடைக்காரர்களும், சிறு தொழில் புரிவோரும், கூலித்தொழில் செய்வாரும் ஸ்வைப் மெஷின் வைத்துக் கொள்வார்கள் என்று எல்லாம் கூவி விட்டு ...பெரும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் நாட்டையே மூழ்கடித்து விவசாயத்தை அடியில் குழி தோண்டி புதைத்து, படித்த இளயவர்க்கு பணி ஏதும் இல்லாமல் செய்து குடி நீருக்கும் கூட ஒரு வழியும் இன்றி பன்னாட்டு குடி நீர்க்கம்பெனிகளுக்கு அனுமதித்து பாட்டில்களை அடைத்து நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் அவர்களை பேச்சில் விஷத்தை விதைத்து நாட்டில் அனைவரும் அடி தடி கொலை கொள்ளையில் ஈடுபட விதைத்து வரும் அந்த அரசியல் கட்சிக்கு  நல்ல பாடம் புகட்ட வில்லை எனில் மக்கள் அனுபவிக்கப் போகும் துன்பம் கொஞ்சமாயிருக்காது...

எதிர்க்கட்சியாயிருக்கும்போது ஆதார் வேண்டாம் என்பார்கள், ஆளும் கட்சி ஆன போதும் வேண்டும் என்பார்கள், எதிர்க்கட்சியாய் இருக்கும்போது மேலை நாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை பிடித்து இழுத்து வந்து பரிமாறுவோம் என்பார்கள்...ஆளும் கட்சியாகிவிட்டால் அங்கு ஒன்றும் இல்லை இருந்தாலும் அதெல்லாம் சொல்ல முடியாது இரகசியப் பிராமணத்துக்கு முரணானவை என்பார்கள்...வேறு எங்கும் சிலை இருக்கக் கூடாது படேலுக்கு மட்டும் உலகிலேயே பெரிய சிலை வைப்போம்  என்பார்கள்...இப்படியாக இவர்கள் இருப்பதற்கு மறுபடியும் இவர்களை ஆளும் கட்சியாகக் கூட அமர வைக்காமல் மக்கள் புறக்கணித்த கட்சியாக மாற்ற வருகிற பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் இந்த இடைத் தேர்தலில் தோற்றதால் விழித்துக் கொண்டிருப்பார்கள் எப்படி எல்லாம் மக்களை திசை திருப்ப, எப்படி எல்லாம் அவர்கள் வாக்குகளை திரும்பப் பெற என்றெல்லாம் மாபெரும் கார்ப்ரேட் திட்டம் எல்லாம் இருக்கும் ஆனாலும் மக்கள் நினைத்தால் வீழ்த்தலாம்...மறந்து விடக்கூடாது நமது பணத்தை நாம் தொடக் கூட இவர்கள் நடு ராத்திரியில் எழுதிய பூஜ்யமாக எதிரிடையாகச் சென்ற வரலாற்றுப் பிழைகளை எல்லாம்... ஒரு போதும் மறந்து விடக்கூடாது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment