Saturday, March 10, 2018

தமிழக பூமி ஒரு நாளும் கலவர பூமி ஆகாது: கவிஞர் தணிகை

https://thanigaihaiku.blogspot.in/2018/03/changed-as-philosophy.html?showComment=1520676548523#c141748162373984600


தமிழக பூமி ஒரு நாளும் கலவர பூமி ஆகாது: கவிஞர் தணிகை

Image result for tamil nadu never changed as riot land

 தம் கட்சியின் மூத்தவரான அத்வானியை மதிக்காத  பிரதமர் ஆளும் நாட்டில்
சூரியனே எங்களைக் கேட்டுத்தான் எழும் விழும் என ஆங்கிலேயர் சொன்னது போல... நாடெங்கும் ஒரே ஆட்சி என அந்தக் கட்சியின் தலைவர்கள் மனப்பால் குடிப்பதுடன் தமிழகத்தில் கலவரம் தலைவிரித்தாட நினைத்தபடி எல்லாம் வார்த்தையை தீயை அள்ளிக் கொட்டி வருகிறார்கள்...ஆனாலும் தமிழர்கள் எப்போதுமே அறிவாளிகள்...கேரளத்து மலையாளச் சகோதரர்கள் அளவுக்கு இல்லை எனிலும் அவரை அடுத்து இந்த நாட்டின் அறிவார்ந்த மனிதர் எங்குள்ளனர் என்றால் அது தமிழகம், மே.வங்கம் போன்ற மாநிலங்களில்தாம் என்று உறுதியாகச் சொல்லலாம்...

காந்தி, அம்பேத்கார், பெரியார், லெனின் இது போன்ற சிலைகள் அசுத்தப்படுத்தப்படுவதும் அல்லது அப்புறப்படுத்தப்படுவதும், அல்லது சிதைக்கபடுவதும்..நிகழ்ந்து வருகையில்...நீங்கள் எல்லாம் ஏன் அதுபற்றி ஒன்றும் எழுதாமல் இருக்கிறீர் என ஒரு 20 வயது பொறியியல் படிக்கும் மாணவர் என்னைக் கேட்க அதற்கு முன்பே இந்த தலைப்பு பற்றி சிந்தித்து வந்தேன் ஆனாலும் நேரம், காலம், உடல் அலுப்பு, பணிச் சோர்வு இப்படி எல்லாம் அதை எழுத விடாமல் இருக்கிறது எனக் குறிப்பிட்டேன். இளைஞர் சுமார் இரண்டு மணி நேரம்,,,மார்க்ஸீயம், லெனின், அம்பேத்கர்,காந்தி,காமராஜ்,இந்திரா,மொரார்ஜி தேசாய், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்  பெரியார், இப்படி பல தலைவர்கள் பற்றியும்  பேச்சு சென்றபடி இருக்க கேட்டபடி இருந்தார்...அவருக்காக இன்று  இந்தப் பதிவு என்று முழுவதும் சொல்ல முடியாவிட்டாலும்...

ஒரு கம்ப்யூனிஸ்ட் நண்பரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தொண்டரும் பெட்ரோல் குண்டை பாஜக அலுவலக போர்டின் மீது வீசி கைதாகி உள்ளனர்.

 இது போன்ற சில விரல் விட்டு எண்ணக் கூடிய விரும்பத் தகாத சம்பவங்கள் அன்றி வேறு ஏதும் நிகழ்ந்திடவில்லை. ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் துண்டாடப் பட்ட போது சென்னையில் ஏகப்பட்ட கொள்ளை நடந்ததாக சான்றுகள் உண்டு.

அப்போதும் கூட அது மாநிலமெங்கும் தலைவிரித்தாட வில்லை. அவ்வப்போது கர்நாடகா கர்நாடகமாய் காவிரி நீருக்காக இனவெறி பிடித்து ஆடி அங்கே செல்லும், அங்கே இருக்கும் தமிழ் மக்களை வன்முறை கொண்டு தாக்கியபோதும்..அவர்கள் விலங்குகளான போதும், நாங்கள் மனிதர்கள் தாம் என்று பண்பாட்டுடன் நடந்து கொள்கின்றனர்.

கேரளத்தில் மலப்புரம் என்ற மாவட்டத்தில் முஸ்லீம் சகோதரர்கள் குடி இருப்ப்களுக்கு நடுவே ஒரு இந்துக் கோவில் கட்ட பணம் இல்லாதபோது அனைத்து முஸ்லீம் மக்களும் இணைந்து பணியாற்றி கோவிலுக்கு இருபது இலட்சம் திரட்டி கொடுத்து கோவிலின் பணியில் இணைந்து தோள் கொடுத்தனர் என்ற ஒரு செய்தியை வாட்ஸ் அப் மூலம் நண்பர்கள் பகிர்ந்தனர்....அவர்களுக்கு நன்றி பாராட்டும்பொருட்டு ஒரு பொது விருந்துக்கு ஏற்பாடு செய்தனர் அந்த கோவில் சார்ந்த மக்கள் என்பதும் கேட்கவே மனதிற்கினிய செய்தியாகி இருந்தது.


அது மனிதப் பண்பாடு...இங்கு இந்த சிலைகளை எல்லாம் உடைத்தும், சிதைத்தும், அசிங்கப்படுத்தியும் செய்து என்ன செய்து விட முடியும்....அவை எல்லாம் தத்துவங்கள்...அவரவர்க்கு பிடித்தமான மனிதர்களை அவர்கள் நினைவில் நீங்காமல் வைத்திருக்க செய்த ஒரு சிறு உத்திதானே இந்த சிலைகள்....ஆனால் அதைக் களங்கப்படுத்துவார் எல்லாம் எந்த வகை மனிதர்களாக வருகிறார்கள்...என்பதை சொல்ல மொழியும் வார்த்தை செலவும் செய்யத் தேவையில்லைதான்...

இதை நல்ல முறையில் தாம் கமல் சொன்னார் உடனே...வைகோ எனது அரசியல் 54 ஆண்டு, கமல் யார் வாயை மூடச் சொல்ல...என வெகுண்டு வார்த்தைகளை பொது அரங்கில் கொட்டி தமது சிறுமையை மேலும் வெளிப்படுத்தி உள்ளார்....

இவர் தி.மு.கவை ஜெவுக்காக பதவி ஏறக்கூடாது என விஜய்காந்த், திருமா,போன்றோருடன் சேர்ந்து தடுத்து விட்டு, இப்போது ஜெவின் மரணத்துக்கும் பின் தி.மு.கவை ஸ்டாலினை தூக்கிப் பிடிக்கிறாராம்...இப்படி இவர் போன்ற என்ன ஏது என்ன பேசப்பட்டது< எதற்காக பேசப்பட்டது அதன் நோக்கம் என்ன எனத் தெரியாமலே இருக்கும் இது போன்றவரால்தாம் தமிழக அரசியல் இந்த கதிக்கு ஆளாக்கப்பட்டு முடங்கிப் போய் வடக்கத்தி நாட்டாமைகளில் தேய்ந்து கொண்டிருக்கிறது.

வடக்கே உள்ளார் எல்லாம் ஜெ போடலாம், அதற்காக தமிழகம் ஜெ போடுமா என்பது தெரியாமல்... மத்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநிலத் தேர்தலும் நடத்தி விடலாமா என்று காய்கள் நகர்த்தப்படுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்க>

Related image


தினகரனுக்கு குக்கர் சின்னம்,அம்மாவின் ஆட்சி  பெண்களுக்கு ஸ்கூட்டி, மோடியின் திட்ட வீடுகள், ஏழைகளுக்கு பட்டா என்று தமிழக அரசும், மத்திய அரசும் ஓட்டப்பந்தயத்தில் ஓடக் களம் இறங்கி வருகின்றன...

பட்ஜெட்டிலும் இதன் முகங்கள் பளிச்சிடுகின்றன.

காவிரி மேலாண்மைத் தீர்ப்பாயம் அமைப்பது பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்யவே இந்த செய்தி திசை திருப்பம் என கமல் மக்கள் நீதி மய்யம் கருதுவது சரியாகவே எனக்கும் தோன்றுகிறது..இது போல்தாம் ஜெவின் ஆட்சியில் சென்னை புயலின் போதும் மற்ற நேரங்களிலும் மக்களின் பிரச்சனைகளை திசை திருப்ப...பீப்.பாப் என்ற ஓசைகளும் எழுப்பபட்டன என்பதை எல்லாம் நாம் மறந்து விடக் கூடாது...

பெரியார் தமிழை விரும்பினாரா, வெறுத்தாரா என்பதை விட பிராமண ஆளுமையிலிருந்து தமிழர் விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்த உழைத்தாரா இல்லையா என்பவைதாம் நம் முன் உள்ள கேள்விகள்...அதற்கான பதிலை அனைவரும் அறிவர்...எனவே தமிழர்களும், மனிதர்களும் இது போன்ற சிறு சிறு வாய் வீச்சுக்கு எல்லாம் உணர்ச்சி வசப்படாதிருப்பதே...சரியான அறிவுடைமை...அதே சமயம்...இவர்களின் முகத்திரையை இவர்களே கிழித்துக் கொள்வதை கவனித்தபடி தேர்தல் களம் என்று வரும்போது  விவசாயத்திற்காக போராடி வரும் அய்யாக்கண்ணுவை அறைந்த கட்சியை தோற்கடித்தே ஆக வேண்டிய கட்டாயம் தமிழ் மண்ணுக்கு ஏற்பட்டிருக்கிறது..பாடம் அதிலாவது அவர்கள் கற்றுக் கொள்ளட்டும்..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


2 comments:

  1. உண்மைதான் நண்பரே
    பாடம் கற்றுக் கொள்வார்கள்

    ReplyDelete