Saturday, January 13, 2018

நிகழ்வும் பிறழ்வும்: கவிஞர் தணிகை.

நிகழ்வும் பிறழ்வும்: கவிஞர் தணிகை.

Image result for vairamuthu is not so humble


கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் திராவிட கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களுக்கும் இந்து மதக் கடவுளர்களை தூக்கிப் பிடிப்பாருமிடையே மிகவும் தரம் தாழ்ந்த விவாதங்கள். உபயம் தேசிய செயலாளர் எனப்படும் ஹெச்.ராசா.  பொருள் வைரமுத்துவும் ஆண்டாளும். அதில் கனிமொழியின் திருப்பதி பற்றிய பேச்சும். எனது பார்வையும் பதிவுகளும் கீழ் வருபவை.

மொத்தத்தில் தேர்தல் என்று ஒன்று 2019ல் பாராளுமன்றத் தேர்தல் வரும்போது தமிழக சட்டசபைக்கும் வரக்கூடும் அதன் முன்னேற்பாடாகவே இத்தனை காட்டம் என நினைக்கிறேன்.

அதில் தி.மு.க நிமிர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பாரதிய ஜனதா திட்டமிட்டு காய் நகர்த்தி பிரச்சார உத்திகளை ஏற்படுத்தி கடவுளை நம்புவோர் அனைவரையும் ஓரணிக்குள் திரட்ட விழைகிறதோ என்ற சந்தேகமும் யூகமும் அந்த ஒரு நபரின் பேச்சைக் கேட்கும்போது தெளிவாக கிடைக்கிறது. அவர் மதுரை மீனாட்சி, திருவண்ணாமலை உண்ணாமுலை, அண்ணாமலை, திருவில்லிபுத்தூர் ஆண்டாள், திருச்சி திருவரங்கத்தான் என அனைவரையும் மெச்சுவதுடன் அவர்கள் எல்லாம் அவர்களின் அப்பா அம்மா  என அப்பப்பா என கொண்டாடி பக்தர்களை எல்லாம் அவர் கருத்துக்கு ஆட்படுத்தி கலகம் விளைய முனைகிறார். அதற்கு ஒரு மத்திய மந்திரியும், கண்ணியத்துக்கு சொந்தக்காரர் என்னும் மற்றொரு தலைவரும் கூட தமது கட்சிக்காரர் நடந்து கொண்டது தவறு என்று சொல்லவே இல்லை.
Image result for vairamuthu is not so humble


இதனிடையே ஸ்டாலின் திமுக செயல் தலைவர் மதத்துக்கு எதிரான நிலை திமு.க வுடையது இல்லை எனச் சொல்லி தேர்தல் பயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பான அனைவரது உணர்ச்சி பூர்வமான அதாவது வைரமுத்து VS  ராஜா தொடர்பான அனைத்து பிரபலங்களின் கருத்து வெளிப்பாடுகளையும் கவனித்தேன். பெரும்பாலும் சார்புடையதாகவே இருக்கின்றன. அதில் திருமுருகன் காந்தி சொல்வது நடுநிலையுடன் இருப்பதாக எனக்குப் படுகிறது.

இந்த நிலையில் நாம் ஒன்றைச் சொல்லவேண்டும்: கவிப்பேரரசு எனச் சொல்லப்படும் சொல்லப்பட்ட வைரமுத்து நோபெல் பரிசு கூட பெறலாம். கமலுக்கு ஆஸ்கார் விருது இன்னும் கிடைக்காதது போல இவருக்கும் அந்த தகுதி அந்தஸ்து கிடைக்காமல் இருக்கலாம். பாரதி ராஜா சொல்வது போல 7 முறை தேசிய விருது பெற்றவர் இவர் ஒருவரே, பத்மபூசன் என்ற விருதெல்லாம் பெற்றவர் எல்லாம் சரிதான். ஆனால் கவியரசர் கண்ணதாசனிடம் இவர் கற்றுக் கொள்ள வேண்டியது எளிமை. எனவே இன்று இல்லாதிருக்கும் கண்ணதாசன் இவரை விட ஆளுமையில் பெரியவர்தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தபோதும்.

வைரமுத்துவைக் கூட கஞ்சாக் கவிஞர் என்று அந்த ...ராசா பேசினார், பொன்மணியிடமிருந்து பாடல் எழுதி சம்பாதிக்கிறார் , அவரது அம்மா பற்றி எல்லாம் பேசி இருந்தார். தமிழ் மற்றும் தமிழ் நாட்டிற்கும் அவலம் ஏற்படும் அறிகுறி இவை எல்லாம்.

வைரமுத்து சரியான சுயநலவாதி, பொதுநலம் பற்றி பேசுவது எல்லாம் மேடைக்குத்தான் என்பது அவரை நெருங்கி பார்த்தவர்க்குத் தெரியும். அவர் தமது புத்தகம் அன்றி வேறு புத்தகத்தில் சிறு ஏழை மாணவர்கள் சென்று ஆட்டோகிராப் கேட்கும்போதும் போட விரும்பாமல் தவிர்த்தவர், இது நானே கண்கூடாகப் பார்த்த நிகழ்வு.

மற்றொரு முறை ஒரு கல்லூரி மாணவர் அவரைத் தம் கல்லூரிக்கு வரவழைக்க அவர் கொடுத்த நிபந்தனைகளை தாளமாட்டாமல் அவரது நிகழ்வே வேண்டாம் என பின் வாங்கியது பற்றி வேதனைப்பட்டிருந்தார். அதாவது இத்தனை எண்ணிக்கை புத்தகம் வாங்க வேண்டும், இப்படி எல்லாம் இருக்க வேண்டும், இவ்வளவு தொகை வேண்டும் இப்படியாக இந்த பட்டியல் நீள்கிற போக்கு...

சேலம் மாவட்டத்தில் ஒரு பிரிவினர் என்னை அவர்கள் சங்கத்துக்கு அழைக்கும்போது வைரமுத்துவே அவரது சாதி, சமயம் மக்கள் என்று இருக்கும்போது நீங்கள் ஏன் வந்து எங்களுடன் இணையக் கூடாது என ஒரு பிரபலம் என்னைக் கேட்க நான் வளர்ந்த விதம் அப்படி, நான் இந்தியா முழுதும் 10 ஆண்டுக்கும் மேலாக கீழ்த்தட்டு மக்களுக்காக உழைத்தவன் என்னை இந்த சிறு வளையத்துக்குள் எல்லாம் சிக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என பதில் சொல்லி விட்டேன். இல்லையேல் எனது பின்னணியில் அது இருந்து மேலும் என்னை பிரபலம் செய்திருக்கும்...

இப்போதும் கூட வைரமுத்து எந்த தரப்பிலும் தமது பேர் இப்படி கீழ்பட்டுபோய் தமது வாழ்நிலையும், வருவாயும், குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்ற கவனத்தில் இருப்பதைக் காணமுடிகிறது.

ஏன் எனில் இராசா எப்படிப்பட்ட நச்சரவமாக இருந்தபோதும் அது பரமசிவன் கழுத்தில் இருப்பதால். ஏன் கனிமொழி ஸ்டாலின் போன்ற ஒரு கட்சியின் தலைமையில் கோடிக்கணக்கான தொண்டர் படையுடன் இருப்பாரே இராசாவின் பிறந்தநாளின்போது அவர் இருப்பிடம் சென்று வாழ்த்து தெரிவித்து கலந்து கொண்டதை செய்தியாக அறிந்தோம். ஏன். அதன் சில மாதங்களில் 2 ஜி வழக்கு ஒன்றுமே இல்லாமல் புஸ் வாணமாகிப் போனதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

Image result for vairamuthu is not so humble

எல்லாருமே மத்தியின் கை எங்கே தம் வரை நீண்டு விடுமோ என்ற மடியிலே கனமிருக்கும் மனசிலே பயமிருக்கும் பயந்தாங்கொள்ளிகள்தாம்.

அதிலும் வைரமுத்து ஒரு வார்த்தை வியாபாரி, மரணத்துக்கு மரணம் நிகழும் என்றெல்லாம் சொல்வார். போலிக்கவிஞர். சினிமா அவருக்கு சிகரங்களைத் தொட்டு விட உதவியது அதன் துணையுடன் வாய்ப்பாக நிறைய நூல்களையும் படித்துவிட்டார் படைத்து விட்டார். கண்ணதாசனுக்குப் பிறகு இவர் சினிமாத்துறையில். எப்படி எழுத்துத் துறையில் ஜெயகாந்தன், சுஜாதா போன்றோரை அடுத்து ஜெயமோகனின் காலமாக இது இருக்கிறதோ அது போல... அதாவது கவிஞர் என்றால் கற்பனை வளத்துடன் எழுதுவார் மட்டுமல்ல கவிஞர். பாரதி போல, பாரதிதாசன் போல, இன்குலாப் போல ரகுமான் போல கடைசிவரை பொதுநலம் பற்றிய வாழ்வில் வாழ்ந்தாராக இருக்க வேண்டும். கொள்கையை விட்டுத் தந்திருக்கக் கூடாது.

வளமான அழகுபடும் வார்த்தைகள் அவரிடம் தூய தமிழ் எல்லாம் உண்டு. ஆனால் சக மனிதரின் துயரத்தின் பங்கு கொள்ளாதவர். தம்மையும் தமது சிகையையும் போலியாக மை பூசி தோற்றப் பொலிவில் மயங்கி நிற்பவர். மனிதரால் ஒரு முடியைக் கூட கறுப்பாக்கவோ வெளுப்பாக்கவோ முடியாது என்று பைபிளில் சொல்வாரே அது போல...அல்லாமல் இவர் போலியாக மை பூசித் திரிவார்...வெளித்தோற்றத்தில் அக்கறை உள்ளவர்...ஏன் இதை சொல்லவேண்டி வருகிறது எனில் கவிஞர் என்பார் இயற்கையோடு இணைந்தார்,போலியாக வாழ முனையார், தோற்றப் பொலிவில் அக்கறை கொள்ளார் அதேசமயம் உண்மை நேர்மை சத்தியம், வீரியம் வீரம் இதன் பால் நிற்பார் இதெல்லாம் இவரிடம் இல்லை.

கவிஞராய் இருப்பதை விட தமிழராய் இருப்பது நல்லது. தமிழராய் இருப்பதை விட மனிதராய் இருப்பது சிறந்தது.

ஆனால் இதற்காக ராசாவை ஆதரிக்கிறேன் என்று எண்ணி விடாதீர் அந்த நபரை தமிழன் என்ற ஒருவர் தேர்தலில் நின்று என்னை வென்று காட்டடா என போனில் அழைத்துப் பேசுகிறார் ஒருமையில்....அந்த சவாலை ஏற்க முடியாமல் நீ வேலை வெட்டி இல்லத பயல், உன்னுடன் எல்லாம் பேச முடியாது என போனைத் துண்டித்து விடவே பெரும்பாலும் முயன்ற அந்த பேச்சையும் நான் கேட்டேன்.

நுனிப்புல் மேயும் இந்த நபரின் பேச்சு வன்முறையை இந்த மண்ணில் விளைக்கும்... அதன் அடிப்படையை நிறைய இடங்களில் அந்த பேச்சு பொருளாக கொண்டிருக்கிறது. லால் கிருஷ்ண அத்வானியை கோவைக்கு வந்த பிரதமர்  என்கிறார். அந்தக் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி பேசுகிறார். அவர் ஒரு துணைப்பிரதமராக இருந்தவர், அவர் மேல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறதே என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிறார்...அவரை மோடி எப்படி ஓரங்கட்டி குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்டு வைத்தாரோ.... அது போன்ற ஒரு உள் கட்சி வன்முறை உடைய கட்சி எந்தவகையிலும் தமிழகத்தில் கால் பதிக்கவே போவதில்லை...

அதன் பொச்சரிப்புதான் இன்றைய நிகழ்வுகளாகவும் பிறழ்வுகளாகவும் தமிழக மண்ணில் ஒரு தனிமனிதனின் கால்ப்புணர்ச்சியாக எல்லாரையும் ஆம் ஆம் எல்லா தரப்பு மனிதரையுமே, அந்தக் கட்சி இந்தக் கட்சி என்று பாராமல் தரங்கெட்ட முறையில் பொது மேடையில் பொது வெளியில் நின்று பொது இடத்தில் கெட்ட வார்த்தைகளை கேட்ட வார்த்தைகளாக மாற்றிக் கொண்டுள்ளது.

சொல்ல முடியாது இப்படி மேடையில் திட்டிக் கொண்டே இந்த .....எல்லாம் கூட்டணி என ஒரு நாளைக்கு தேர்தலில் நின்று மக்களிடையே வாக்கு கேட்கவும் வரக்கூடும்..எல்லாம் அரசியல்ல நடக்குமப்பா...மோடியும், ராகுலும் வந்து உலக மகா எத்தன் நமது மு.கவை சந்திக்கவில்லையா?.... அப்படி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

5 comments:

  1. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பிரச்சனைகளை நன்றாக அலசியுள்ளீர்கள்.
    //இது தொடர்பான அனைவரது உணர்ச்சி பூர்வமான அதாவது வைரமுத்து ஏளு ராஜா தொடர்பான அனைத்து பிரபலங்களின் கருத்து வெளிப்பாடுகளையும் கவனித்தேன். பெரும்பாலும் சார்புடையதாகவே இருக்கின்றன. அதில் திருமுருகன் காந்தி சொல்வது நடுநிலையுடன் இருப்பதாக எனக்குப் படுகிறது.//

    இஸ்லாமிய மதத்தின் ஷரீ அத் சட்டத்தை உலகம் முழுவதும் நடைமுறைபடுத்தபட வேண்டும் என்ற பயமுறுத்தல்கள் பல நாடுகளில் இஸ்லாமிய மதவாத அமைப்புக்களால் நடைபெறுகின்றன.இஸ்லாமிய மத ஷரீ அத் சட்டத்தில் கை வைக்காதே என்று இஸ்லாமிய மதவாத அமைப்புக்கள் தமிழகத்தில் நடத்திய ஆர்பாட்டத்தில் பங்குபற்றி ஆதரவு தெரிவித்த திருமுருகன் காந்தியை எப்படி ஐயா நடுநிலை என்கிறீர்கள் :(
    உங்களுக்கு தமிழர் புது வருட வாழ்த்துக்கள்+பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. particularly regarding with vairamuthu...You watch that you tube .I am not going to that islam and its....thanks for your comment on this post. vanakkam.

      Delete
    2. பதிலுக்கு நன்றி சார்.
      particularly regarding with vairamuthu.
      உண்மை.
      வைரமுத்துவுக்கு எதிரான மதவாத கண்டணங்களுக்கு எதிராக நடுநிலை கருத்து தெரிவித்த திருமுருகன் காந்தி, எப்படி தனது நடு நிலையை தவறவிட்டு இஸ்லாமிய மத ஷரீ அத் சட்டத்தில் கை வைக்காதே என்று இஸ்லாமிய மதவாத அமைப்புக்கள் தமிழகத்தில் நடத்திய ஆர்பாட்டத்தில் பங்குபற்றி எதற்காக ஆதரவு தெரிவித்தார்?

      Delete