Wednesday, January 17, 2018

தானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தணிகை.

தானா சேர்ந்த கூட்டம் ஸ்கெட்ச் குலேபகவலி: கவிஞர் தணிகை.

தானா சேர்ந்த கூட்டம்:
Image result for thaanaa serndha koottam


சிவகுமார் பாசறையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள படம். ஞானவேல்ராஜா சூரியா கூட்டணி. பெரிதாக சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் சும்மா ஜாலியாக வேண்டுமானால் பார்க்கலாம். ஆனால் இதில் சொல்லப்பட்டதற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சிறிதும் கூட தொடர்பேற்படுத்தி சீர் தூக்கி ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது, வேலை கிடைக்கவில்லையே என்ற ஒரு சிறு இளைஞர்களின் பிரச்சனை தவிர.

எல்லோரும் ஏற்கெனவே சொல்லி விட்டார்கள், கொஞ்சம் ஜென்டில் மேன், கொஞ்சம் கமலின் சத்யா, கொஞ்சம் இலஞ்ச ஊழல், கொஞ்சம் ராமைய்யா, கொஞ்சம் நாயகன் இப்படியே பார்த்த படங்களை எல்லாம் நினைவூட்டிய காட்சிகள் கடைசியில் நாடக பாணியில் எல்லாம் இவர்கள் செட்டப்பில் கெட்டப்பில் சம்பளம் பெறும் போலீஸ்கள் படத்தை முடித்து வைக்கிறார்கள். சுரேஷ்மேனனை நீண்ட காலம் கழித்து இதில் பார்க்கிறோம். சுரேஷ் மேனன் மற்றும் ரேவதி தம்பதியர்க்கு இது ஒரு வாய்ப்புக் காலம் போலும். இருவருமே இரண்டு படங்களில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து பொங்கல் படங்கள் வெளிவந்து விட்டன.

ரம்யா கிருஷ்ணன் நன்றாகவும், சத்யன் சுமாராகவும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் பங்குக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்கள். என்றாலும் சில காட்சிகள் இரசிக்கும்படியாக இல்லை. சில காட்சிகள் இரசிக்கும்படியாக இருக்கின்றன.கார்த்தி நயவஞ்சக காவல் துறை அதிகாரியாக கடைசியில் இவர்கள் அனைவரையும் வீழ்த்தி விடுகிற இளைஞர் படையுடன் சூரியா.

கீர்த்தி சுரேஷ் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாக வழிகிறார். இவருக்கு அவ்வளவு பெரிய ரோல் எல்லாம் இல்லை. ரம்யா கிருஷ்ணனுக்கு இருக்குமளவு கூட இல்லாமல்.\ ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் போன்ற நடிகர்கள் வாய்ப்பின்றி இருந்தவர்கள் இப்போது பொறுப்பை உணர்ந்து செய்துள்ளனர்.

விக்னேஷ் சிவனும், மணி அமுதவனும் எழுதி அநிருத் இசையில் அந்தோணி தாசன் பாடிய பாடல் ஹைலைட் ஆப் திஸ் சினிமா
Image result for sketch movie

ஸ்கெட்ச்:
விக்ரமின் பல படங்கள் இதே போல வெளிவந்தவைதான். தமன்னா காதலியாக துணிச்சலான பெண்ணாக மணத்தை உதறி இந்த கொலைகார விக்ரமிற்காக வருகிறார். எதிர் பாராத முடிவை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளாக இணைத்து படத்தை எழுந்து ஸ்கெட்ச் போட்டு நிற்க வைத்து விட்டார்கள். வேலையில்லா படிக்காத இளம் சமுதாயம் இப்படி ஒரு தொழிலுக்கு வரவே கூடாது என்ற முக்கியமான தற்போதைய சமூக அவலத்துக்கு காரணமான ஒரு கனமான கருத்தோடு படம் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அதற்காக முடிவு கொஞ்ச நேரம் நன்றாக இருப்பது ஒன்றிற்காக முழு படத்தையும் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை இந்தப் படம் ஏற்படுத்தும்படியாக பார்த்த படத்தைப் போலவே இருக்கிறது புதுப்படம் போல் இல்லாமல்.


குலேபகாவலி:

நகைச்சுவை என்ற பேரில் ஒரு கூத்து. பார்ப்பவர்க்கு அது எப்படி எரிச்சலாக இருக்கும் என்ற உணர்வு துளி கூட இன்றி. ரேவதி மாஷாவாம், கரகரப்புக் குரல் மன்னன் இராஜெந்திரன் ஒரு பக்கம் தகர சிலேட்டாய் நம்மை அறுத்துத் தள்ள, பிரபு தேவா, ஹன்சிகா , மன்சூர் அலிகான் இன்னும் பிற நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ரேஸ், ரிலே செய்துள்ளார்கள். பிரபுதேவா இரண்டு ஆட்டம் பாட்டு வழக்கமாக செய்துள்ளார்.
Image result for kulebagavali


இந்த பொங்கல் அன்று வெளிவந்துள்ள இந்த மூன்று படங்களுமே பார்த்தாக வேண்டிய லிஸ்ட்டில் வராது. வேலை மெனக்கெட்டு எல்லாம் பார்க்க வேண்டியதில்லை.  மற்றபடி பொழுத்போக வேண்டும் என்றிருப்பார் மட்டுமே பார்க்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

2 comments:

  1. பொங்கல் விடுமுறையினைப் படங்களோடு கழித்திருக்கிறீர்கள்
    அருமையான விமர்சனங்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete