Friday, January 12, 2018

எப்படி சிஸ்டத்தை சரி செய்யப் போகிறோம்? : கவிஞர் தணிகை.

எப்படி சிஸ்டத்தை சரி செய்யப் போகிறோம்? : கவிஞர் தணிகை.

Related image

திருடிய திருடன் சிசி காமிராவில் பதிவாகி அந்த வீதியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும்போதும் காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகும் அவனைப் பிடிக்கவும் திருட்டுப் போன பெரும் தொகையை மீட்டுத் தர முடியவில்லை

அதிகாலை தொழிலுக்குப் போன அந்த நபரை மறித்து அவரை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே தள்ளி விட்டு வாகனத்தை அதிலிருந்த பெரும் தொகையுடன் ஓட்டிக்  கொண்டு ஓடி மறைந்த நபர்களை இன்னும் கண்டு பிடிக்கவே முடியவில்லை

Image result for how can we set right our system in India and Tamil Nadu



பேருந்தில் பயணம் செய்தபோது மடிக்கணினி மற்றும் கணினி சார்ந்த வன்பொருள்களை பல்லாயிரக்கணக்கான தொகை மதிப்புடையதை மாற்றி எடுத்துப் போனவர்களை என்ன செய்தபோதும் கண்டு கொள்ளவே முடியவில்லை

ரெயில் சந்திப்பில் கொஞ்சம் நேரமாக போனாலும் அங்கே சுற்றித் திரியும் விடலைகள் டைம் என்ன என உங்களிடம் கேட்டு உங்கள் கவனத்தை திசை திருப்பி நீங்கள் ஏமாந்தால் உங்கள் மதிப்பு மிகுந்த பொருள்களை செல்பேசியை, பையை எடுத்துக் கொண்டு ஓடி மறையும் செயல்கள் நடைமுறையில் இருந்து ஒழிக்க முடியவில்லை

இன்னும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மட்டுமல்ல மிகுதியான பணம் ஈட்டுவார் யாவருமே தங்கள் கணக்கு இவ்வளவுதான் எனச் சொல்லவே போவதில்லைImage result for how can we set right our system in India and Tamil Nadu




பெரும் அரசியல் வியாதிகளும், பெரும் கார்ப்ரேட் முதலாளிகளும் அடிமை வர்க்கமாக அத்தியாவசியத் தேவைக்கு பணி புரிவோரை சுரண்டாமல் விடவே போவதில்லை

இத்துடன் இடைவர்க்கமாக இருபக்கமும் உறிஞ்சிப் பிழைக்கும் ஒரு வர்க்கமும் வளர்வதை தடுக்கவும் வழி இல்லை...

இந்நிலையில் காசு கொடுத்தால் வாங்கிக் கொள்வோம், அப்படித்தான் அதென்ன அவர் பணமா என்று வாக்குகளை மதிப்பறியாமல் செல்லாததாக்கும் மக்கள் கூட்டம்

இத்தனைக்கும் இடையே நடுவே அடையாளம் தெரியாது இயக்கம், சேவை என்ற பேரில் எங்கள் உடலை நாங்களே கெடுத்துக் கொண்டு தியாகம் என்ற பேரில் அவரவர் குடும்பத்துக்கும் கூட எதுவும் செய்ய முடியாத எம் போன்ற பிழைக்கத் தெரியாதவர் என்று பேர் பெற்ற சிறு எண்ணிக்கையினர்...

எல்லாமே தெரிகிறது, இவர்களை எல்லாம் விட அதிகமாக இந்த நாட்டின் மக்களுக்கு கீழ்த்தட்டு மாந்தருக்கு, கிராமிய முன்னேற்றத்துக்கு எங்களது இளமையை பலியிட்டு தீர்த்து பலி ஆடாக மாறமாட்டோம் என களப்பலியாகவே தீர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம்...

Image result for how can we set right our system in India and Tamil Nadu


நாங்கள் நடத்திய உண்மையான தியாகசிந்தையுடைய இயக்கங்கள் எல்லாம் சசிபெருமாள், சின்னபையன் போன்றோருடன் மறைந்து விட்டது...இன்னும் சிலர் எஞ்சியிருக்கிறோம்...அசை போட்டுக் கொண்டு...

நிலை இப்படி எல்லாம் இருக்க இன்று ஊசலாட்டத்துடன், அலைக்கழிப்புடன் இருக்கும் அரசியலை சரி செய்ய, சிஸ்டத்தை சரி செய்யப் போவதாக இருப்பாரை எல்லாம் விட எமக்கு தகுதிகள் அதிகம் இருந்தும் எம் முன் உள்ள கேள்விக்ளும் இதுவேதான் எப்படி இந்த சிஸ்டத்தை சரி செய்யப் போகிறோம்?

செய்தியாக நேற்று கூட இலஞ்சம் பெற்றதாக சில அலுவலர்கள் தொழில் முனைவர் ஒருவரிடம் பணம் பெற்றதாக கையும் களவுமாக பிடிபட்டதாக செய்தி....விவேகானந்தர் பிறந்தநாளும், லால்பகதூர் நினைவு நாளும், திருப்பூர் குமரனின் நினைவு நாளும் நாட்காட்டி செய்திகளாக அச்சடிக்கப் பட்ட நிலையில் ஆண்டுகள் கடந்து கொண்டே இருக்கட்டும்....

இந்த சிஸ்டத்தை எப்படி சரி செய்யப் போகிறோம்? மோடிகளும் ஜெக்களும் கடவுளாக ஸ்டாலின்களும் கருணாக்களும் அசைக்க முடியாத தலைமைகளாக இருக்க, எத்தனை கட்சிகள், எத்தனை தலைமைகள்? நல்ல கண்ணு போன்றோர் இருப்பது கூட இன்னும் அடையாளம் தெரியாமலே...எங்கிருந்து சகாயம் போன்றோர், தலைமை நிலைக்கு வர முடியும்?Related image



நான் என்ன நினைக்கிறேன் எனில்: இன்னும் தனி மனித ஒழுக்கமும், தனி மனித சிந்தனையின் ஓட்டமும், தனி மனித மேம்பாடும் இங்கு வரவே இல்லை

வினோபா சொல்கிறார்:

அடிமைகளின் தெய்வம் பணம்      என்று

மனிதரை உருவாக்குவதே கல்வி  என்று அவர் குரு காந்தி சொல்கிறார்

லால் பகதூர் காந்திக்கு வாக்கு கொடுத்து விட்டேன் எனவே எந்த அசையா சொத்தையும் வாங்கவே மாட்டேன் என உறுதி மொழி கொடுக்கிறார் நாட்டின் பிரதமராக பெரிய பொறுப்பிலிருந்த போதும்

நாட்டின் பிரதமரை உருவாக்கும் கிங்மேக்கராக இருந்த போதும் காமராசர் தமது பெற்ற தாயைக் கூட உடன் வைத்து வாழ்க்கை நடத்த முடியாது என்று சொல்லிச் சென்றார்.

திருப்பூர் குமரன் போன்றோ பிடித்த கொள்கையை கையிலிருந்து நழுவாமல் பிடித்த கொடியாய் இருந்து மண்டை பிளக்க இரத்தம் சிந்தி மாண்டுபோனபோதும் உறுதியுடன் நின்றார்கள்....

நாங்களும் இன்னும் அப்படியேதான் இருக்கிறோம்...இதுவரை இவர்களுடைய எந்தக் கட்சியிலுமே சேராமல் சாராமல் உறுப்பினராக அங்கம் வகிக்காமல்...

என்றாலும் இந்த சிஸ்டத்தை எப்படி சரி செய்யப் போகிறோம்> பார்த்தவரை எவரிடமுமே தாக்கு பிடிக்கும் திறமும், சகிப்புத் தன்மையும், தியாகமும், சீரிய உழைப்பும், நாட்டுப் பற்றும் இருப்பதாக சிறிது கூடத் தெரியவில்லை அதிலும் இப்போதும் இதன் பின் வரும் தலைமுறைகளிலும் துளியளவு கூட அடுத்தவர் நலத்தில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை...

இதெல்லாம் ஊடகத்திற்கு தெரியவில்லை .காரணம் அதன் நிலைப்பாடும் வியாபரத்தில் நிலைக்க வேண்டும் என்ற போட்டியில் இருப்பதே அதற்கு பெரிய பாடாக இருக்கிறது..

Image result for how can we set right our system in India and Tamil Nadu


எனவே இந்த சிஸ்டத்தை எப்படித்தான் சரி செய்யப் போகிறோம் என்ற கேள்வி எப்போதும் என்னுள் கனன்று கொண்டே இருக்க...கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ், காந்தி, பிடல் காஸ்ட்ரோ, ஹோசிமின் , போன்ற மாபெரும் தலைவர்கள் எல்லாம் எப்படி சாதித்தார்கள் நம்மால் ஏன் முடியவில்லை...அதற்கு உண்டான தகுதி ஏதும் நம்மிடம் இல்லையா என்ற கேள்விகளுடன் எனது நாள் நகர்ந்தபடியே இருக்கிறது எந்த மதமும் சாதியும் சாராமல்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments:

  1. நீங்கள் சேவையை மூச்சாக கொண்டவர்கள். அவர்களுடன் உங்களை ஒப்பிட வேண்டாம். மற்றவர்களுக்காக நாம் மாறவேண்டிய அவசியம் கிடையாது. சேவை என்பது எந்த இடத்தில இருந்தாலும் செய்யலாம். நாம் நாமாகவே இருப்போம். யோசிப்போம் ! ஒத்த கருத்துள்ள மனிதர்கள் சந்தியுங்கள் !. நன்றி ! வணக்கம்!!.

    ReplyDelete
    Replies
    1. thanks for your advice Suriyaa Screens.But I want service should be on the seat of Government.vanakkam. Please keep contact.

      Delete
  2. மாற்றம் வரும் நண்பரே
    நாம் நம் அளவில் உறுதியாய் மாறாமல்நி ற்போம்

    ReplyDelete