போக்குவரத்தும் பேருந்தும் பொதுமக்கள் சொத்து எனவே நஷ்டத்தை அவர்கள்தாம் ஏற்க வேண்டும்: கவிஞர் தணிகை
தமிழக முதல்வர் போக்குவரத்துக் கழகங்களும் பேருந்துகளும் பொதுமக்கள் சொத்து, எனவே நஷ்டத்தையும் அவர்கள்தாம் ஏற்க வேண்டும், என மேடையில் பேசி இருக்கிறார். எனவே இலாபம் வந்தாலும் பொதுமக்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள் என நம்புவோமாக...
இலாபமும், நஷ்டமும் வியாபாரம், தொழில் இவற்றுக்கு பொருந்தும். அவற்றிலும் இலாபம் பிரித்துக் கொடுக்கப்படும், அதை அனுபவிப்பவர்கள் தாம் நஷ்டம் வரும்போதும் சந்திக்க வேண்டும் தாங்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் போக்குவரத்து, மருத்துவம், கல்வி இவை எல்லாம் சேவை என்ற அடிப்படையில் இருப்பவை .முதல்வரின் இந்தப் பேச்சிலிருந்து இவர்கள் எலலாருமே வியாபாரம், தொழில் செய்து வந்தவர்கள்....அரசியலில் இருந்து ஆட்சி, சேவை என்றெல்லாம் செய்ய பொருத்தமானவர்களே அல்ல.
எம்.ஜி.ஆர், ஜெ கொடுத்த துறை என அவர்களை எல்லாம் இல்லாத அவர்களை எல்லாம் மக்களை ஏமாற்றத் துணைக்கழைக்கிறார்கள். விஜயபாஸ்கர் என்ற போக்குவரத்து மந்திரி மன்னிப்பு கேட்டுள்ளார். கம்யூனிஸ்ட்கள் கட்டண உயர்வுக்கு ஒத்துழைப்பேன் என்றதாக சொன்னவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் என்று சொல்கிறார். அவர்களுடையதா ஆட்சி.? நீங்கள் ஆண்டு விட்டு அவர்கள் மேல் ஏன் பழி போடுகிறீர்கள்? அவர்கள் இவ்வளவு அதிகம் கட்டண உயர்வு செய்வீர்கள் என்று ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ...எனவே எதிர்க்கிறார்கள் என்று சொல்லலாமா?
பொன் இராதாகிருஷ்ணன் என்னும் மத்திய பா.ஜ.க மந்திரி இந்த கட்டண உயர்வை ஆதரிக்கிறாராம்...மக்களே நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள்.
இவை எல்லாம் இப்படி இவர்களுக்கு அத்துபடி இதனால்தாம் ஓட்டுக்கு காசு கொடுத்து வாங்கி விலைக்கு வாங்கி வியாபாரம் நடத்தி தொழில் என்று மக்களாட்சியைக் கேலிக் கூத்தாக்கி வருகிறார்கள்....எனவே இவர்களை எல்லாம் தூக்கி எறிய வேண்டிய மக்களாகிய நீங்கள் மழுங்கிக் கிடப்பதும் மதுவில் மயங்கிக் கிடப்பதுமாய்...காலம் கழித்து பொறுப்புணராமல் இருந்து வருகிறீர் எனவே அவர்கள் காலம் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது....
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இவ்வளவுக்கும் காரணம் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும் தான்.
ReplyDeletethanks for your comment on this post sir. vanakkam.
Deleteவேதனை
ReplyDeletethanks.
Delete