Sunday, September 4, 2016

விநாயகர் சதுர்த்தி பாதிப்புகள், விளைவுகள், அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

விநாயகர் சதுர்த்தி பாதிப்புகள், விளைவுகள், அதிர்வலைகள்: கவிஞர் தணிகை

Image result for vinayagar chaturthi


 தந்தை மகேந்திர பல்லவன் தோல்விக்கு பழி வாங்கி வாதாபி கொண்டு நரசிம்ம வர்மன் சாளுக்கிய நாட்டிலிருந்து திரும்புகையில் அவனது நண்பரும் போர்ப்படைத் தளபதியுமான பரஞ்சோதி பிற்காலத்தில் சிறுத் தொண்ட நாயனார் என பெயர் பெற்றவர், கணபதி சிலை ஒன்றை எடுத்து வந்து தமிழகத்தில் பிரதிஷ்டை செய்து கணபதியை வணங்குவதை ஆரம்பித்து வைப்பதாக சரித்திரம் சொல்கிறது. சரித்திர ஆதாரத்துடன் சிவகாமியின் சபதத்தில் கல்கியும் குறிப்பிடுகிறார்.

காணபத்யம்: கணபதி வழிபாடு, மற்ற 5 வகையான சௌரம்‍‍: சூரிய,சைவம்" சிவம், வைணவம்: திருமால், கௌமாரம்:முருகன்,சக்தேயம்: சக்தி வழிபாட்டுடன் கூடி இந்து மத வழிபாடானது...

Image result for vinayagar chaturthi


கணநாதன் கணங்களுக்கு எல்லாம் தலைவர், வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை....என திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் காதலால் கூப்புவர் தம் கை என முடிக்கிற பாடல், வானாதி தேவ தேவரும் இவரை வணங்கியே தமது  செயலில் முதலாய் இவரை வைப்பதாகவும் முழு முதற்கடவுள் எனவெ இவரே எல்லாக் கோயில்களுள் புகு முன்னும் முதல் வணக்கத்துக்குரிய முதல்வனாகவும் இருப்பதாகவும், பிடிக்க வந்த சனீஸ்வரனை இன்று போய் நாளை வா என்று சொல்லியே தட்டிக் கழித்த அறிவுக் கொழுந்தாகவும்...

ஐந்து கரத்தினை....பாலும்  தெளி தேனும்...இப்படி கணபதியை , விநாயகரை வணங்குவதில் எல்லாருக்கும் ஒரு அலாதி பிரியம்...ஆனால் அப்பனுக்கே இந்தப் பிள்ளையை அடையாளம் தெரியாமல் போகவே தன் மனைவி குளித்துக் கொண்டிருப்பவளை கணவன் போய் பார்க்கும்போது காவல் காத்துக் கொண்டிருந்த தனது முதல் பிள்ளையை அடையாளம் தெரியாமல்,  மனைவியைக் காணச் சிவன் செல்ல முயல.. அப்பனைத் தெரியாமல் மகன் யாரோ  எனத் தடுக்க, யுத்தம், மகனது தலையைக் கொய்து விட்டு மனைவி பார்வதி வந்து உண்மை சொல்ல உடனே அருகிருந்த யானைத் தலையை வெட்டி( மேனகா காந்தியும் மிருக வதை தடுப்புச் சட்டமும் இல்லை அப்போது, கடவுளாய் இருந்தும் நின்று கொண்டிருப்பது தம் பிள்ளை எனத் தெரியாத கோபம், காமம் மயக்கம் கடவுளுக்கு) அப்போதே மாடர்ன் சர்ஜரி செய்து  மனித உடலுக்கு அல்லது தெய்வ உடலுக்கு மிருகத் தலையை வைத்த கதை கணபதி வரலாறு. தம்பிக்கு வள்ளியை மணமுடிக்க யானையாக வந்ததாகவும்... புராணம் கட்டுக் கதை...நம்பிக்கை பக்தி...காவிரியை காக உருவில் வந்து அகத்திய முனிவர் கமண்டலத்தில் இருந்து மீட்ட கதை, வியாச முனிவருக்கு ம‍ஹாபாரதக் கதை எழுத தம் தந்தத்தில் ஒன்றை ஒடித்து தாம் எழுதும் வேகத்துக்கு உன்னால் கதை சொல்ல முடியுமா என்ற கேட்டு எழுதிய ம‍ஹாபாரதம்...

இப்படி எங்கு எங்கு தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் இந்த கணபதி.

Image result for vinayagar chaturthi

அப்போதெல்லாம் எங்கள் வீட்டுல் 5 சகோதர சகோதரிகள் ஒரே பள்ளியில் படித்து வந்தோம். அதற்கு பின் ஒரு சகோதரியும் முன் இரு சகோதரியும், ஒரு சகோதரனும் இருந்தனர், அப்போதெல்லாம் காலையில் குளித்து முடித்து நெற்றி நிறைய திரு நீறு பூசி கையில் ஒரு சொம்பு நீருடன் அரசமரம்+ வேம்பு அடியில் இருக்கும் ( அந்த அரச மரம் ஊருக்கே பெரிய மரம், வேரும் பட்டைக்க்கும் ஆசிட் ஊத்தி வீடுகளில் வேர் போகிறது என கொஞ்சம் கொஞ்சமாக கொன்று காயவைத்து அடுப்பெரிக்க விறகுக்காக வெட்டி எடுத்துக் கொண்ட அதே குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து இப்போது ஊரில் வசூல் செய்து மேடை அமைத்து, மேலே சீட் போட்ட விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வேறு) அந்த விநாயகரை தினமும் நிதமும் கும்பிட்டே உணவுண்டு பள்ளிக்கு செல்வோம்.

பக்கத்து வீட்டு சுந்தர முதலியார் தங்கவேல் முதலியார் வீட்டுக்கு குடி வந்தவர், ஆஜானுபாகுவான தோற்றம், 6 அடிக்கும் மேலான உயரம், நல்ல குண்டு கை வீசி நடந்தால் அந்த வீதியில் வேறு யாரும் போக முடியாது...பற்கள் வாயிலிருந்து சிறிது வெளியே துருத்திக் கொண்டு தலைகாட்டும். குண்டு முகம் நல்ல தொப்பை. அழகிய குணம்...பாருங்கடா இவனை எவ்வளவு அழகா நெற்றியில் நீறு பூசி  கோவிலுக்கு சென்று அழகை பாருங்கடா, என தன் வீட்டு மக்களை திட்டுவார்,  தலையாடிக்கு தேங்காய் சுட்டால் ( பருப்பு, எள், சர்க்கரை என எல்லா திரவியங்களும் தேங்காயுள் இட்டு சுட்டு,சுடும் பழக்கம் இல்லாத எங்கள் வீட்டுக்கு பிள்ளைகள் உள்ள பெரிய குடும்பம் என மறக்காமல் அனுப்பி வைப்பார், காடயாம்பட்டி காட்டில் இருந்து எந்த வெள்ளாமை வீடு வந்தாலும் அதில் கொஞ்சம் எங்கள் வீட்டுக்கும் வந்து சேரும்.ஆனால் அவை எல்லாம் அந்த  அவருடைய 2 ஆம் மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது..,) அவர் வீடு மாறி பெரிய வீடு கட்டி வேறு வீட்டில் இறந்து கடைசி மலத்தை எடுத்து வேட்டியிலிருந்து சுத்தம் செய்யும் முன்னே நான் அவர்கள் வீட்டில் இருந்தேன்.

Image result for vinayagar chaturthi

அப்போது தொலைபேசி கிடையாது, யார் இறந்தாலும் முக்கியமானவர்களுக்கு, அந்த ஊரின் கீழ் சாதிக்காரரை வீட்டு சொல்லி அனுப்புவார்கள்...ஆனால் அன்று என்னை ஒரு நபர் பயன்படுத்திக் கொண்டார் நானும் தொளசம்பட்டி சென்று செய்தி சொன்னேன்..வீட்டுக்கு வந்ததும் எனது தந்தையிடம் அதிகம் கோபமே வராத வந்தால் சாதரணமாக போகாத‌ (சாது மிரண்டால் காடு கொள்ளாது,,,உடல் எல்லாம் கிடு கிடுவென நடுங்கும்) தந்தையிடம் செம அடி வாங்கினேன்...அன்று ஆறுபடை வீடு எனப் பெயர் வரக் காரணமான வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது...தந்தை அடித்தது மறந்து தீ விபத்தை வானளாவ கங்குகள் பறந்ததை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன்.

எவ்வளவு நேசித்திருக்கிறார் தந்தை. அவர் அடித்தது எவ்வளவு நியாயமானது. தனது மகனை என்னவாக்க எண்ணியிருந்தாரோ? எழவு சேதி சொல்ல சென்று வந்து விட்டானே? என அவரின் கோபம் நியாயம். ஆனால் சுந்தர முதலியாரை நான் அவ்வளவு நேசித்திருக்கிறேன்...எனவே சென்று வந்து விட்டேன். நான் எழவு சேதி சொல்லப் பிறந்தவனல்ல...யேசு போல இந்த உலகுக்கு ஆள் பிடிக்க வந்தவன் தான் இந்த நாட்டை இந்த உலகை மேம்படுத்த வந்தவன் தான்...ஆனால் இப்போதும் எப்போதும் அந்த செய்தியை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் கொள்வது அப்படி ஒன்றும் பெரிய குற்றமாக கருதப்படுவதில்லை. ஒரு வேளை வேறு ஊருக்கு பேருந்து ஏறி சொல்லாமல் வீட்டுக்கு கால தாமதமாக வந்ததற்காகவும் அந்த அடிகள் கிடைத்திருக்கலாம்...

விநாயகர் கதைக்கு வருவோம். இப்படி விநாயகரை கும்பிட்டதாலோ மகனுக்கு, விக்னேஷ் என்கிற கணபதி ராம சுப்ரமணியம் என்ற பெயர் வைத்தேன்? விநாயகா மிஷனில் இன்று பணி புரிகிறேன்...இதெல்லாம் வேறு விந்தைகள்.. அந்த‌ மகன் கணபதி என்கிற விக்னேஷ் கற்பக மரத்தின் அடியில் குடியிருக்க 4 ஆண்டுகள் வாடகைக்கு சென்றிருக்கிறான். விக்னேஷ் என்றால் விக்னங்கள் தீர்க்கும் ஈஸ்வரனாம்...


Image result for vinayagar chaturthi celebration

ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி நிறைய மதுபானம் விற்க காரணமாகிற மற்றொரு திருநாள்...நான் பரஞ்சோதி முனிவரைப் போல் போர்ப்படைத் தளபதியாக இல்லாமல் சேவைப்பணிக்காக பயிற்சிக் காலத்தில் ஆந்திராவெங்கும் சுற்றித் திரிந்திருக்கிறேன். முக்கிமாக ‍‍ஹைதராபாத்தில் சில விநாயக சதுர்த்திகளில் இருந்திருக்கிறேன்

ஊரடங்கு உத்தரவில்லாமல் அதாவது 144 தடை இல்லாமல் அங்கு விநாயக சதுர்த்தி நடப்பதில்லை. இதே போல மும்பை, கொல்கத்தா ஆகிய நகர்களிலும். முக்கியமாக குறிப்பாக ‍ஹைத்ராபாத் = பாக்ய நகரம் நகரம் எங்கும் முகமதிய மக்களின் தொகை அதிகம்,,,அதை சுற்றி எல்லா கிராம நகர்களிலும் இந்து மக்கள் தொகை அதிகம். அன்று எல்லா வண்டி வாகனங்களிலு இடி முழக்கத்துடன் தம் பலம் காட்ட விநாயகர் வண்டிகளில் வலம் வருவார்கள் நிறைய வன்முறை வெடிக்க‌

அதே போல இன்று தமிழகமும், மது பானம் வழிய வண்டிகளில் விநாயகர் ஊர்வலம் நடத்தும் மக்கள் ஆய் ஊய் எனக் கத்துவதும், அடுத்து வருவாரை திட்டுவதும், வம்புக்கு இழுப்பதுமாக... கீழ்த்தரமாக நடந்து கொள்வதும், சண்டையிடுவதும், மோதுவதும் வசவி அள்ளி வீசி வருவதும் நான் கண்ட உண்மைகள்...இது பக்தியா? வேறு மதங்களில் அல்லது சிறுபான்மையோர் இப்படி செய்தால் எப்படி இருக்கும்? விட்டு விடத் தோணுமா?

எல்லாமே மனிதம் சார்ந்த கதைகள், புராணங்கள், இதிகாசங்கள் இதில் உண்மை எள்ளளவும் இல்லை...ஆனால் நம்புவார் நம்பட்டும் ஆனால் அதற்காக ஆடும் ஆட்டம் அடுத்தவரை பாதிக்காமல் இருக்கட்டுமே... இதனால் எந்த மனிதரும் பாதிக்காமல் , பிறர் வாழ்க்கை சேதமாகாமல் கொண்டாடப்படட்டுமே...என்ன குடி முழுகி விடப் போகிறது ? அடுத்தவர் குடி முழுகாமல் கொண்டாடினால்?

வியாபாரிகளுக்கு நல்ல இலாபம் தரும் இப்பண்டிகைகள் பற்றி நாம் நன்கு புரிந்து கொள்வது நலம்.

ஆனால் நான் விட்டு விடாமல் இந்த ஆண்டும் மண் தொழிலாளிக்கு சாதகமாக எப்போதும் போல வழக்கம் போல ஒரு சிறு மண் விநாயகரை வாங்கி செய்ய வேண்டியதை செய்து விட்டு குளத்தில் விட்டு விடச் சொல்லி இருக்கிறேன். என்னதான் மகன் வெளியூரில் இருந்தபோதும் பழக்கத்தை நல்ல பழக்கத்தை விட்டு விடல் ஆகாது என்ற நோக்கத்தில்...

பொதுவாக பண்டிகையும், திருவிழாவும் அவரவர் சொந்த விசயம், அவரவர் சொந்த வீட்டில் வைத்து யாருக்கும் பாதிப்பில்லாமல், யாருக்கும் எந்த வித கெட்ட விளைவையும் ஏற்படுத்தாமல், எந்த வித தீய அதிர்வலைகள் ஏற்படாமலும் செய்து கொள்வது நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


வீட்டில் செய்யும் கொழுக்கட்டை, மோதகம், மாவு, சுண்டல், பொங்கல் , தேன் பாகு,அவல், பொட்டுக்கடலை உருண்டை.. இவை பற்றியும் அதன் சுவை பற்றியும் நான் எழுதவில்லை. சிறு பிள்ளைகளுக்கு இந்த சத்து எல்லாம் தேவைதான் தேவாமிர்தம்தான்.








No comments:

Post a Comment