காவிரியின் புதல்வர்கள்:கவிஞர் தணிகை
காவிரி நதி ஏறத் தாழ 800 கி.மீ ஓடி வருவதில் 64 கி.மீ தமிழக கர்நாடக எல்லைகள் இரண்டுக்கும் பொதுவாகும் பாயும் நதி 320 கி.மீ கர்நாடகாவிலும் 416 கி.மீ தமிழகத்திலும் பாய்ந்தோடி பூம்புகாரில் கடலில் கலக்கிற செய்திகள் உண்டு. அது பற்றி அல்ல இந்த பதிவு
ஒரு குடும்பத்தில் ஒரு தாய்க்கு பிள்ளைகள் பலர் இருக்கக் கூடும். அதில் மூத்த பிள்ளை அதிக நாள் பெற்றோருடன் இல்லாமல் மணம் முடித்ததும் வெளியேறிவிடுவார் குடும்பம் விட்டு. இளைய பிள்ளைகளை தேற்றி விடும் வரை அந்த பெற்றோரின் அந்த தாயின் கவனம் முழுதும் இளைய பிள்ளைகள் பால் இருக்கும் என்பது இயற்கை.
காவிரித் தாயும் அப்படித்தான்.கர்நாடக மைந்தர்களுக்கும் தமிழ்நாட்டினர்க்கும். இந்நிலையில் நதிகள், பெருநதிகள் அங்கு அதிகம் தமிழ் நாட்டுக்கு காவிரியை விட்டால் கதி இல்லை. அங்கு அணைகளும் அதிகம். இங்கு மேட்டூர் அணையை விட்டால் வேறு பெரும் அணை இல்லை.
இந்நிலையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் இன்னும் 4 வாரங்களில் காவிரி நதி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நல்ல செய்தி . ஆனால் கர்நாடகாவில் மறுபடியும் கலவரம் ஆரம்பித்து விட்டது.
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகத் தயாராக இருப்பதாக செய்திகள். சித்தாரமையா அரசுக்கு இன்னும் 2018 மே மாதம் வரை காலக்கெடு இருப்பதை குறி வைத்து பி.ஜே.பி கலவரத்தில் ஈடுபட்டு அந்த அரசை குலைக்கப் பார்க்கிறது அல்லது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நினைப்பதன் பேயாட்டம்தான் இந்த
காவிரி நதி நீர்ப் பிரச்சனையும் தமிழர்களுக்கு எதிரான சதியும்.
இந்நிலையில் பிரதமராக பதவியில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி தேவகவுடாவும் அவரது உதவாத கட்சி எம்.எல்.ஏக்களும் இராஜினாமா செய்ய இருப்பதாகவும் செய்தி. இவனை எல்லாம் பிரதமராக வைத்த இந்த நாடு உருப்படும் என்கிறீர்கள்?
எல்லாமே அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு அவர் தம் அமைதியான வாழ்க்கைக்கு பங்கம் விளைத்தபடி...
தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப் பட்டு அதிலிருந்து பயணிகள் நடந்து சென்று எல்லை கடந்து கர்நாடகா பேருந்துகள் ஏறி சென்று வருவதாக செய்தி.
ஒரு அறையில் பணியில் இருந்தபடி ஒன்றாக இருக்கும் இளைஞர்களை வீடு புகுந்து தாக்கி இருக்கிற செய்திகள், நாளை காலை நீ என் கண்ணில் பட்டால் உயிர் உடலில் தங்காது என கத்தியைக் காட்டி மிரட்ட, காலில் விழுந்து பயந்து வேலையை விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த இளைஞர்கள் கதைகள் எல்லாம் கதையாக அல்ல பெரும் சோகமாக உலவி வர இந்த நாட்டு குடிமக்கள் எந்தவித சட்ட ,நீதி முறைகளுக்கும் தர்ம பரிபாலன முறைகளுக்கும் வெளியிருந்து அநீதி செய்து வருகிறார்கள்.Like muslims and Hindu riots of Pakistan and Indians at that time of partisan of our Independence.,making lot of disturbance to public life due to firing vehicles and affecting day to day peaceful life.
ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்லும் இந்தியனின் அடிப்படைச் சட்டத்துக்கே ஊறு விளைந்திருக்கிறது. மேலும் ஒரு இடத்திலிருந்து பிழைப்புக்கக சென்றவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கால்.
இது இந்திய அரசியல் அமைப்புக்கும், நீதிக்கும், அரசமைப்பு சட்ட திட்டங்களுக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது எனவே இந்த பதர்கள் எல்லாம் விலகும் முன் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வருவது தேவையான ஒன்று. ஆனால் எந்த கட்சிக்கும் சாதகமாக இல்லாமல் 2018 மே மாதம் வரை அந்த ஆட்சி தொடர வேண்டுவதும் அவசியம்.
அப்படி எல்லாம் நடந்து விட்டால் இவர்கள் கொட்டம் அடங்கும், அடங்காவிட்டால் இவர்கள் கொட்டம் அடக்கப்பட வேண்டும். நதி நீரை இணைக்கலாம் என்று எழுதினால் உடனே ஒருவர் அது சாத்தியமான திட்டம் அல்ல என மறு மொழி சொல்கிறார். முடியாதது என்பது எதுவுமே இல்லை. செய்ய வேண்டிய நபர்கள் எவருமே அதைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் அரசியல் மாறாத விதி.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:
Post a Comment