Friday, September 30, 2016

கும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை

கும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை


 சொல்லியே ஆக வேண்டும். தொடரி என்ற பெயர் வித்தியாசமாக வைக்கப்பட்டு இருக்கிறது. தூய தமிழில் வாழ்க.
Image result for thodari

தினமும் சேலம் சந்திப்பில் பயணிகள் ரயில் நின்றவுடன் ரயில் பெட்டியிலிருந்து எஞ்சினை பிரித்தெடுப்பதைப் பார்த்து வருவதால் இந்தக் கதை என்னுள் அதன் தோல்வியை அதாவது கடைசியில் படம் கிளைமாக்ஸில் தனுஷ் செய்யும் இந்த எஞ்சின் பெட்டியிலிருந்து பிரிக்கும் வேலையை முதலில் முடித்திருந்தால் படத்துக்கு ஸ்கோப் கதை படம் ஏதும் இல்லாமலே போயிருக்கும் எனவே பொறுத்துக் கொண்டு பார்த்தேன்.

அடுத்த படம் தோனி வந்து விட்ட பிறகு 22 செப்டம்பரில் வெளி வந்த தொடரி பற்றி நான் எழுத வேண்டியுள்ளது. ஏன் எனில் முதல் நாள் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு தூக்கம் தள்ள நேற்று மீதியுள்ள ஒரு மணி 47 நிமிடப் படத்தையும் பார்த்து விட்டதால்...

இப்போதெல்லாம் யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் சரியாக சொல்லி விடுகிறார்கள். இந்தப் படம் முதல் அரை பாகம் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.

தம்பி இராமைய்யா சோபிக்கத் தவறிவிட்டார் இந்த படத்தில்.கீர்த்தி என்ற பெண் வாயைக் கிழித்து அழுவது பார்க்க முடியவில்லை.அதிகமாக நடித்திருப்பது காரணமாக இருக்கலாம்.

தனுஷ் பற்றி சொல்ல ஒன்றுமில்லை; படம் படு செயற்கையாக இருக்கிறது. இராதா ரவி பரவாயில்லை . கொடுத்த வேடத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.

சின்னி ஜெயந்த் ஏதோ பெரிய இடைவெளிக்கும் பிறகு பெரிய அளவில் பிரேக் கொடுக்க கதை எதிர்பார்ப்பு ஏற்படுத்தி கடைசியில் புஸ் ஆகிவிடுகிறது.

வெங்கடேஷ் இயக்குனர் வழக்கப்படி குதிக்கிறார். கணேஷ் வெங்கட்ராமனுக்கும் சொல்லிக் கொள்ளுமளவு பெரிய அளவில் ஒன்றும் ஸ்கோப் இல்லை.

நன்றாக இருப்பது அரசு, அமைச்சரை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என நினைத்து அந்த லூசுப் பெண்ணை பெரிய பெண் தீவிர வாதியாக கருதுவது, மீடியா முடிவது, மீடியாவில் பட்டமன்ற
இராஜா, மற்றும் தமிழறிஞரை கலாய்க்கும் செல்பேசி உரையாடல் நல்ல நகைச்சுவை...

மேலும் நல்லவையாக சொல்ல வேண்டுமென்றால், படம் அரை இறுதிக்கும் பிறகு இடைவேளைக்கும் பிறகு நல்ல வேகம். ஆங்கில படத்தில் தான் இதுவரை இது போன்ற கதை தேர்வு இருக்கும். இது இப்போது பிரபு சாலமன் படம் மூலம் தமிழுக்கும் வந்து விட்டது.

பெரிய சாதனைப் படமாக இது விளங்காது. மேலும் இந்த படத்தின் நீளம் சுமார் சற்றேறக் குறைய 3 மணி அதாவது 13 நிமிடம் குறைவாக 167 நிமிடம். பழைய படத்தைப் போல மறுபடியும் 3 மணிக்கும் மேல் படம் தந்து அனைவரையும் வெறுப்பேற்றி விடலாம் என்ற எண்ணம் தலைதூக்க விட்டிருக்கும் படம்.

ஆங்கில படத்தைப் போல செய்ய நினைத்தவர்கள், அதன் நேர அனுசரிப்பையும் கவனத்தில் கொண்டிருக்கலாம், பாலம் உடைவதும் கடைசியில் ரயில் நின்று காதலன் காதலி சேர்வதையும் நல்ல முறையில் படம் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள்.

மீடியா வரும் காட்சிகள் பெரும்பாலும் நல்ல காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

மற்றபடி பேன்ட்ரி ரயில் சமையல் பெரிய அளவில் இரசிக்கும்படியாக இல்லை. தனுஷ் ஒரு பூச்சியாக அவ்வளவாக ஒட்ட வில்லை. அதற்கு வேறு பொருத்தமாக எவரையாவது தேர்வு செய்திருக்கலாம்.

இராதா ரவி, காவலுக்கு வரும் காவல் துறை எப்படியோ பார்த்து முடித்து விட்டாயிற்று. அடுத்து தோனியை பார்க்க முயற்சிக்கிறேன் உங்களுக்காக. முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் முழு வெற்றி பெற முடியவில்லை கும்கி பிரபு சாலமன்.

இசை பெரிய அளவில் பாதிப்பேற்படுத்தவில்லை இமான். மற்றபடி வசனம் நன்றாக இருக்கிறது டெலிவரி சரியாக இல்லாததால் அதுவும் எடுபடவில்லை.சண்டைக்காட்சிகள் கூட சொல்லும்படியில்லை. அவசரகதியில் ரயில்வேகத்தில் எடுத்திருப்பார் போலும். துரிதகதியில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது ஒரு ரயிலை வைத்து கஷ்டப்பட்டு முயற்சி செய்திருக்கின்றனர். ஒரு முறை பார்க்கலாம்.

Image result for thodari


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment