Monday, September 26, 2016

வாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.

வாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.

Image result for famous world leaders collage


உணவகத்தில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வயிறு கழுவிய ‍ஹோசிமின் வியட்நாமின் விதியை மாற்றினார் இருள் பாறைகளில் எதிரிகளுக்கு பயந்து படுத்துறங்கி, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா..ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், நேரு, லெனின் சாக்ரடீஸ் இப்படி வாழ்ந்தாரைப் பற்றி நேற்றைய இலக்கிய பயணத்தில் குறிப்பிட மறந்திருந்தேன் காரணம் காலம் எல்லாவற்றையும் சுருக்கச் சொல்லி விடுகிறது.

முள்ளும் மலரும் எழுதிய உமா சந்திரன் பேர் சமயத்தில் நினைவுக்கு எட்டவில்லை கொஞ்ச நேரம். அந்த புத்தகத்தை எவ்வளவு இலயித்துப் படித்திருப்பேன் ஆனால் இந்த தருணத்தில் அது எங்கே? மகேந்திரன்  சினிமா இயக்குனர் அதில் உள்ள காளி பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ரஜினியை வைத்து படம் எடுத்து வெற்றி ஈட்டி விட்டார். ஆனால் அந்தக் கதையும் 2 பாகங்கள் என நினைக்கிறேன். அது இந்த படத்தில் கொஞ்சம் தான் தொடப் பட்டிருந்தது. சினிமாவை விட மிக நீண்ட கதை அதில் காளி ஒரு வில்லன் .

பல நாடுகளையும் அதன் விதிகளையும் மாற்றி எழுதிய நாயகர்கள் பலர் பற்றியும் படித்து இருக்கிறேன் எனினும் இப்போது பசுமையாக நினைவில் இருக்கும் ‍‍ஹோசிமின் ஓர் ஏழை எளிய மனிதர் எப்படி ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றினார் என நினைத்தால் அது நினைவுக்கு எட்டாமலே இருக்கும்.
Image result for famous world leaders collage


பிடல் காஸ்ட்ரோவும் சேவும் மிக நல்ல நண்பர்கள். ஆனால் பிடலை பிடித்த நண்பர் சே அவர் அளித்த நிதி மந்திரி மற்றும் பணப் பரிவர்த்தக பொறுப்பையும் உதறி விட்டு இறக்கச் செல்கிறார் மறு போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு. பிடல் ஏராளமான முறை கியூபா கிளர்ச்சியில் மரணம் வரை சென்று உயிர் பிழைத்த அதிசயங்களும், அதன் பின் அரசாளும்போது அமெரிக்காவில் கொல்ல அனுப்பப் பட்ட சம்பவங்களில் இருந்து தப்பிய அதிசயங்களும் நம்ப முடியாதவையே....அவர் உயிருடன் இன்னும் இருப்பது அதற்கெலாம் சான்று.

அவரை இலங்கை  தமிழ்ப் போராளிகளை ஆதரிக்காதவர் என எனது நண்பர் ஒருவர் குற்றம் சொல்வார், தெரஸாவை தீவிரவாதிகள் கொடுத்த பணத்தைக் கூட வாங்கிக் கொண்டு செலவு செய்தார் என குற்றம் சொல்வதைப் போல...

தெரஸாவின் வாழ்க்கை வரலாற்றையும், கலாமின் வாழ்க்கையையும் நாம் எப்படி மறக்க முடியும். காந்தி பற்றி எழுதினால் இந்த பதிவு போதாது. பெர்னாட்சா எழுதிய பக்கங்கள் 15000 என்றும்  அவர் ஒரு அறிஞர் என்றும் சொல்வார், ஆனால் காந்தி எழுதிய பக்கங்களோ 60,000 இவரை வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்ந்த காலத்தில் உலகை எல்லாம் ஆள முழுத் தகுதி உடையவர்  யார் என்ற பட்டியல் பார்க்க உலகு விரும்பிய போது அதில் முதல் பேராய் மகாத்மாவையே உலக மாந்தர் தேர்ந்தெடுத்ததான சான்றுகள் உண்டு. 24 மணி நேரம் போதாத மனிதர் ஒரு நாளுக்கு. அத்தனை துறைகள். ஆனால் ஒரு எளிய மனிதர்க்கும் தவறாமல் தம் கைப்பட எழுத முனைந்தவர், பத்திரிகை நடத்தியவர், ஆஸ்ரமம் நடத்தியவர், இராட்டை நூல் நூற்பது, சமையல் செய்வது, நாட்டுக்கு போராட்ட முறையிலான உத்தி தருவது , பஜனைக்கும் பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்குவது, சிகிச்சை முறைகளுக்கு நேரம்
ஒதுக்குவது இப்படி சொல்லிக் கொண்டே போகும் வாழ்க்கை வரலாறுக்கு சொந்தமானவர் இவர் என்றால்

Image result for famous world leaders collage


நேருவின் வாழ்க்கை வரலாறு சாதரணமானதல்ல. மார்ட்டின் லூதர் கிங் உரையை இணையத்தில் புகழ் வாய்ந்த உரைகளை கேட்டுப் பாருங்கள் உங்களது உள் நாடி எழுந்து நிற்கும்.

லெனின், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அவர் தம் துணைகள் ஜென்னி, குரூப்ஸ்கயா காதல் வெற்றிகள் பொருளாதாரத் தோல்விகள்...சார்லி சாப்ளின், மைக்கேல் ஜாக்ஸன், பட்டாம்பூச்சி  பாப்பிலோன் என்ற ஒரு ஜெயில் கைதியின் வரலாறு, முகமது அலியின் ஓடிக் கொண்டே இருப்பேன் வாழ்க்கை வரலாறு, அறிஞர் அண்ணாவின் ராஜ்யசபா உரை மற்றும் அவரின் அரிய நூல்கள், பேச்சுத் தொகுப்புகள்,

Image result for famous world leaders collage

தமிழ் இலக்கிய வழியில் வந்த நூல்களும் அதை சார்ந்த கதைகளும்.. இப்படி இன்னும் என்னதான் எப்படிதான் சொல்வது
அவ்வப்போது நினவை எட்டிப் பிடிக்கும்போது எனது நினைவுக் கீற்றலைகளுடன் மீண்டும் மீண்டும் உங்களை இந்த பதிவு சந்திக்கும் என நம்புகிறேன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment