Monday, September 5, 2016

செப்டம்பர் 5 .2016: கவிஞர் தணிகை

செப்டம்பர் 5 .2016: கவிஞர் தணிகை

Image result for mother teresa quotes

ஆசிரியர் தினம், டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த தினம், வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் மற்றும் அன்னை தெரஸா நினைவு நாள். மேலும் இது ஒரு விநாயகர் சதுர்த்தி என்பதும் முகூர்த்த நாள் என்பதாகவும் இதன் சிறப்பு

Image result for mother teresa quotes


மகன் மணியம் கோவையிலிருந்து முதல் ஆசிரியராக அவனுக்கு விளங்கியதால் எனக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் சொன்னான். எமது குடும்பத்தில் நிறைய ஆசிரியர்கள். முதலில் எனது தங்கையை ஆசிரியராக ஆக்கினேன். அதன் பிறகு நிறைய...சகோதரிகளின் மகள்களும் உறவுகளுமாக....ஒரு நல்ல ஆசிரியர் விருது பெற்ற உண்மையிலேயே ஒரு நல்ல ஆசிரியர் தமது உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியை செய்வதிலிருந்து பின் வாங்கி மீண்டும் நடு நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகவே பணி தொடர்வதிலிருந்தே நமது கல்வி அமைப்பு எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம். இணை வேந்தர் பதவி பல்கலைக் கழகத்தில் விலைக்கு ஏலம் விடப்படுவதாகவும் செய்திகள்.

டாக்டர் இராதாகிருஷ்ணன் ஒரு அரிய நபர். ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்து இந்த நாட்டின் உச்ச பதவியை அடைந்த மாமனிதர். அவரின் வாசகம் எப்போதுமே எனக்குப் பிடித்தது: கட்டுப்பாடில்லா விடுதலையும், ஒழுக்கமில்லா சுதந்திரமும், தியாகமிலா சாதனையும் ஒரு நாட்டை நல்வழிப் படுத்தாது என்பதே.

Image result for vo chidambaram

வ.உ. சிதம்பரனார் வாரிசுகள் கூலி வேலை பார்த்து பிழைப்பதாக அறிந்தோம் கொஞ்ச காலம் முன். கப்பலோட்டிய தமிழன் மிகவும் சின்னாபின்னப் படுத்தப் பட்டு சிதலமடைந்து மறைந்த மாமனிதம்.செக்கிழுக்க வைக்கப்பட்டு வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டு, சொத்திழந்து, கப்பல் கம்பெனி இழந்து இப்படி ஏகப்பட்ட இன்னல்கள்...யாரெல்லாம் இந்த நாட்டு மேம்பாட்டுக்கு உழைக்கிறார்களோ அவர்களுக்கு கிடைக்கும் பரிசு இப்படித்தான் இருக்கிறது இதற்கு மரணம் என்ற பரிசு பரவாயில்லை.


அன்னை தெரஸா அம்மையாருக்கு இன்று செயின்ட் என்னும் புனிதர் பட்டம் வழங்கப் படுகிறது. இனி செய்ன்ட் அன்னை தெரஸா என்று அழைக்கப் படுவார். இவர் மனித வாழ்விற்கு வந்த தெய்வம்.

நான் ஒரு முறை எழுதினேன்: ஓ! பெண்களே
                                உங்களில்
                                யாராவது
                                அன்னை தெரஸாவாகத்
                                 தயாராக இருந்தால்

                                 அவர்க்கு
                                  நான்
                                   செருப்பாகக் தயாராயிருக்கிறேன்
என...

இப்படி மாமனிதர்களை நினைவு படுத்தும் தினமான இன்று விடுமுறை எதற்காக எனில் விநாயகர் சதுர்த்தி என....இது ஒரு முகூர்த்த தினமாக மண நாளாகவும் விளங்கி இருக்கிறது.

Image result for dr.radhakrishnan

இப்படி நாலைந்து நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த ஒரே தினத்தில் நாமும் நமது கருத்துகளை பதிவு செய்கிறோம். அஞ்சலிகளையும் வணக்கத்தையும் தலை தாழ்த்தி செலுத்தி...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Image result for dr.radhakrishnan

No comments:

Post a Comment