Friday, September 16, 2016

இலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை

இலட்சுமாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் மருத்துவக் கல்லூரியின் பற்பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை




14.09.2016 அன்று புதன் கிழமை அன்று எமது முகாம் வாகனத்தில் சுமார் 9.30 மணி அளவில் புறப்பட்டோம். ஓட்டுனர் பொறுப்பு வாய்ந்த பாலமுருகன். எமது சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவு கடந்தோம். இலட்சுமாயூர் நடுநிலைப்பள்ளி வந்தது.

கல்லூரி வாகனம் சேலம் ரயில் நிலைய சந்திப்பு கடந்து வழியில் இருமருங்கும் பூக்கள் பூத்த மரங்கள் வரவேற்க சுகமான பயணம், சேலம் உருக்காலை, தோப்பூர் மின் கட்ட நிலையம் (கிரிட்) எல்லாம் தாண்டி அணைமேட்டு வளைவில் தாரமங்கலம் திரும்பு முன் இந்த இலட்சுமாயூர் நம்மை அதனுடன் இணைக்கிறது.

நகரிய சாலையிலிருந்து சில நொடிகளிலேயே திடீரென ஒரு கிராமிய மணம், கிராமத்தில் நடுநிலைப்பள்ளி 2 இடங்களிலே இடவசதிக்காக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.



முன்னால் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரும் தற்போதைய இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான பழனிவேல் அய்யா அவர்கள் அனைவரையும் கரம் கூப்பி பள்ளியின் உள் அழைத்தார். வாகனமும் உள் நிறுத்தப் பட்டது.




உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஏ.முத்து அவர்கள் மேட்டூரில் இருந்து வருவதாகச் சொன்னார்கள் தொடக்க விழாவிற்கு. பின் பணிச் சுமையின் காரணமாக அவரால் வர இயலாமல் போனது.

நாங்கள் சுமார் 10 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு சென்று  சென்ற உடனே ஒன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் வரை சுமார் 350 பேரை பார்க்க ஆரம்பித்து பற் பரிசோதனை செய்து மற்றும் பற் பாதுகாப்பு பற்றி தனித்தனியாக அறிவுரை கொடுக்க ஆரம்பித்திருந்தோம்.



பள்ளியின் மாணவ மாணவியர் பட்டியல் மிக நேர்த்தியாக தலைமை ஆசிரியர் அறிவுறுத்தலின் படி ஆசிரியர்களால் தயார் செய்யப் பட்டு எம்மிடம் அளிக்கப் பட்டிருந்தது அந்த முகாம் பணிகளை சுலபமாக்கியது

பள்ளி நல்ல சுத்தமான முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது. எல்லா மாணவர்களுக்குமே தனியார் பள்ளியை ஒத்த அளவில் நல்ல கவனம் செலுத்தப் பட்டு அடையாள அட்டையுடன் மாணவர்கள் நேர்த்தியாக இருந்தனர். மாநில அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற இந்த தலைமை ஆசிரியர் தேசிய அளவில் நல்லாசிரியர் விருது பெறும் நாள் அதிக தொலைவில் இல்லை என்றே  தோன்றுகிறது.

முகாமில் கலந்து கொண்டு பணி புரிந்த எங்கள் மருத்துவ குழுவினர்க்கு காபி, பிஸ்கட்கள் வழங்கப் பட்டன.

முகாம் நிறைவு செய்ய அனைத்து மாணவர்களையும் மைதானத்தில் கூட்டி அமரச் செய்து பல் பாதுகாப்பு, பற்சுத்தம் , பராமரிப்பு குறித்து எமது மருத்துவ குழுவை சார்ந்த மரு.துர்கா மற்றும் பயிற்சி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.



தலைமை ஆசிரியரும், நாங்களும் சேவைப்பணியில் பங்கு கொண்டமைக்கு நன்றி பரிமாறிக் கொண்டோம்.எல்லா ஆசிரிய பெருமக்களும் முகாமில் மகிழ்வுடன் பங்கு கொண்டு பாராட்டை பெற்றனர். அதற்கு முன் அவசியம் பற்சிகிச்சை செய்ய வேண்டிய பள்ளி மாணவர்களின் தேர்வுப் பட்டியல் கொண்ட 34 பேரின் பேர்கள் அடங்கியதை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தோம்.

தேவையேற்பட்டால் பெற்றோர் அனுமதியுடன் எப்போதும் மருத்துவ சிகிச்சைக்கு எமது மருத்துவக் கல்லூரிக்கு வருக என நல்வரவு கூறி, அரசினர் பள்ளி மாணவ மாணவியர்க்கு (12 வயதுக்குட்பட்டோர்க்கு) இலவச மருத்துவ சிகிச்சை தருகிறோம் என்பதையும் கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஜா.பேபிஜான், மற்றும் சமுதாயத் துறை மருத்துவர். என். சரவணன் அவர்களின் ஒப்புதல் பெற்று நீங்கள் அனைத்து சிகிச்சை பெற வேண்டிய மாணவர்களின் வருகையை ஒருங்கிணைத்தால் எமது வாகனத்திலேயே  வந்து அழைத்து சென்று மருத்துவம் செய்து கொண்டு வந்து விட்டுச் செல்லவும் தயார் என்பதையும் குறிப்பிட்டோம். முகாம் மிகவும் இனிதே நிறைவேறியது. திருப்தியுடன் கல்லூரி திரும்பி விட்டோம் மதியம் 1 மணிக்குள்.



இந்த அரிய முகாமுக்கு எங்களுக்கு அனுமதி வழங்கிய விநாயகா மிசன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர்.பேராசிரியர். ஜா.பேபி ஜான் அவர்களுக்கும் வழி நடைப்படுத்திய சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் அவர்களுக்கும் தமிழக கல்வித் துறை சேலம் மாவட்ட முதனமைக் கல்வி அலுவலர்,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய அனைவர்க்கும் அந்த இளம் பிஞ்சுகளின் சார்பாக எமது  நன்றி உரித்தாகும்.

அறிக்கை சமர்ப்பித்தல்: முகாமை ஒருங்கிணைத்த முகாம் அலுவலர்: சு. தணிகாசலம்.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment